சென்னை, வண்ணாரப்பேட்டை, ஏழுகிணறு, போக்குவரத்து காவலர்கள், Chennai, Washermenpet, SevenWells, Traffic Police

காவல்துறை வாகனத்தை அடித்து உடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வண்ணாரப்பேட்டை டிராபிக் காவலர்கள் புகார் கொடுக்க சென்றபோது, எல்லைப் பிரச்னை காரணமாக இரண்டு பெண் இன்ஸ்பெக்டர்கள், சக காவலர்களை இரவு வரை அலைகழித்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. காவல்துறையினருக்கே இந்த நிலை என்றால் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம் என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

சென்னையில் வண்ணாரப்பேட்டையில் கடந்த 23ம் தேதி மாலையில் போக்குவரத்து காவலர்கள் ரோந்து வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். வண்ணாரப்பேட்டை காவல்துறை உதவி மையம் பூத்தில் ரோந்து கார் நின்று கொண்டிருந்தது. அப்போது, போதையில் இருந்த ஒருவர் ரோந்து காரின் பின் பக்க கண்ணாடியை கல்லைக் கொண்டு எறிந்து சுக்குநூறாக்கினார். இதையடுத்து, அந்த நபரை போக்குவரத்து காவலர்கள் பிடித்து ஏழுகிணறு காவல் நிலையத்துக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த பெண் இன்ஸ்பெக்டர், "இது எங்கள் லிமிட் கிடையாது. வண்ணாரப்பேட்டை லிமிட்" என்று கூறி போக்குவரத்து காவலர்களை அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து, அந்த நபரை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அங்கிருந்த பெண் இன்ஸ்பெக்டரும், "இது எங்கள் லிமிட் கிடையாது. ஏழுமலை லிமிட்" என்று கூறி போக்குவரத்து காவலர்களை அனுப்பிவைத்துள்ளனர். என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கியிருந்த போக்குவரத்து காவலர்களை இரண்டு இன்ஸ்பெக்டரும் அலைகழித்ததுதான் வேதனை. இந்த சம்பவம் போக்குவரத்து உயரதிகாரிக்கும் சென்று இருக்கிறது. அவரும், விடுங்கப்பா, இதபோட்டு பெரிசு படுத்தாதுங்க. நீங்களே கண்ணாடி வாங்கிப் போட்டுவிடுங்கள்" என்று அவரும் கூறிவிட்டாரு.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்துக்கே போன போக்குவரத்து காவலர்கள், பேசாமல் நாமளே கண்ணாடி வாங்கிக் போட்டுக்கொள்வோம் என்றிருந்த நிலையில், ஒரு வழியாக இரவு 10 மணிக்கு ஏழுகிணறு பெண் இன்ஸ்பெக்டர், வழக்குப்பதிவு செய்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினார். அந்த நபரின் பெயர் செல்வராஜ் என்றும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா, சின்னமூக்குடியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளார் காவல்துறையினர்.

ஏன் இப்படி சககாவலர்களே அலைகழித்தார்கள் என்று போக்குவரத்து காவலர் ஒருவரிடம் பேசியபோது, "இது காவல்துறையில் அடிக்கடி நடக்கும் பிரச்னைதான். சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யும்போது, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும். இது கூடுதல் வேலை என்பதால் எங்க லிமிட், உங்க லிமிட் என்று பிரச்னை கிளப்புகிறார்கள்" என்றார்.

எது எப்படியோ, சக காவலர்களையே, பெண் இன்ஸ்பெக்டர்கள் அலைகழித்தது அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தி இருக்கிறது. காவலர்களுக்கு இந்த நிலை என்றால், எங்களுக்கு எந்த நிலையோ என்று புலம்புகிறார்கள் வண்ணாரப்பேட்டை பொதுமக்கள்.


மற்ற செய்திகள்...
Comments (30)

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்