Kamalhassan,bus service,MKStalin,DMK,MNM

அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டால் ஊழலைத் தடுக்க முனையவேண்டுமே தவிர பேருந்து சேவையைத் தனியார் மயமாக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவையை தனியார் மூலம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும், முதல்கட்டமாக சென்னையில் 1,000 வழித்தடங்களிலும், மாநிலம் முழுவதும் 25 சதவீத வழித்தடங்களிலும் தனியார் மூலம் பேருந்துகளை இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுக்கு ரூ.42000 கோடி நஷ்டம் ஏற்பட்டு, கடும் நிதிச்சுமையால் தவிப்பதாகவும், இதனால் இம்முடிவை மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது. ஊழலைத் தடுத்து, நிர்வாகச் சீரமைப்பு மூலம் நிதிநிலையைச் சரிசெய்ய வேண்டுமே தவிர, தனியார்வசமாக்க முயற்சிக்கக் கூடாது.

பேருந்து சேவை தனியார்வசமானால், சிறிய கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவை இல்லாத நிலை உருவாகும். அதுமட்டுமின்றி, பேருந்துக் கட்டணமும் அதிகமாகும். மக்களுக்கான சலுகைகளும் பறிபோகும். எனவே, போக்குவரத்துக் கழகத்தை தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்