நீட் தேர்வு, பாஜக, வானதி சீனிவாசன், தமிழக அரசு, NEED EXAMINATION, BJP, VANATHI SINIVASAN, TAMILNADU GOVERNMENT

"நீட் தேர்வால் எள் முனையளவுக்கு கூட பாதிப்பில்லை. நீட்தேர்வு 10 மொழிகளில் நடைபெறுவதால் பலமாநில மாணவர்கள் பலனடைந்து உள்ளனர்" கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக எம்எல்ஏ வானதிசீனிவாசன் கூறினார்.

நீட் விலக்கு சட்டம் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதனிடையே, நீட் விலக்கு தொடர்பான தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தீர்மானத்தில் பா.ஜ.க.வுக்கு உடன்பாடு இல்லை .ஒன்றிய அரசு, மாநிலங்கள் மீது நீட் தேர்வை திணித்திருப்பதாக தீர்மானத்தில் உள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போதே நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்கள். அப்போதே எங்கள் கருத்துகளை முழுமையாக பேச முடியாததால் வெளிநடப்பு செய்தோம்.

நீட் தேர்வால் இடஒதுக்கீட்டை விட அதிகமாக இடங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெற்றுள்ளனர். ஆரம்ப கட்டத்தில் நீட் தேர்வினால் சில பிரச்னைகள் இருந்ததை மறுக்கவில்லை. மாணவர்கள் கஷ்டப்படுவதாக அவர்கள் மீது பழி சுமத்தப்படுகிறது. நீட் தேர்வால் எள் முனையளவுக்கு கூட பாதிப்பில்லை. நீட்தேர்வு 10 மொழிகளில் நடைபெறுவதால் பலமாநில மாணவர்கள் பலனடைந்து உள்ளனர்" என கூறினார்.

Comments (30)

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்