acs

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தி

தமிழ் பெருங்குடி மக்களின் தலையாய திருநாள் ‘பொங்கல் திருநாள் ஆகும்”
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி, மழை, வெயில் என்று பாராமல் வயலில் நெல்
விதைத்து, இமை மூடாமல் விளைந்த நெற்கதிரை, பாதுகாத்து தக்க நேரத்தில்
அறுவடை செய்து, நமக்கு உணவு படைக்கும் வள்ளல்களாம், உழவர் பெருமக்களின்
ஈடுயிணை இல்லாத திருநாள். ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்” என்று உழவின், உழவனின் பெருமையை உலகறிய
பறைசாற்றுகின்றார் சொல்லேர் உழவராம் திருவள்ளுவர்.


கடந்த ஆண்டு இயற்கையின் சோதனையால், தகுந்தமழை பொழியாமல்,
விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. விளை நிலங்கள் எல்லாம் வறண்டு போயின.
இன்று பிறக்கின்ற ‘தைத்திருநாள்” உழவர்களின் கண்ணீரை துடைக்கின்ற ஆண்டாக
அமைய வேண்டும். இயற்கை அன்னை, நமக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும்
தேவையான அளவு மழையை வழங்கி, நாம் தண்ணீருக்காக எவரிடத்திலும் கையேந்தி
நிற்காத தன்னிறைவுகாண அருள வேண்டும்.


உணவுப்பொருட்கள் உற்பத்தி பன்மடங்கு பெருக வேண்டும். நாட்டில் அனைத்து
வளங்களும், நலங்களும் பல்கிப் பெருக வேண்டும். இந்த இனிய பொங்கல் திருநாளில்
நாட்டு மக்கள் அனைவருக்கும் பொங்கல்திருநாள் நல்வாழ்த்துக்களையும்,
உலகப்பொதுமறையாம் திருக்குறளை நமக்கு வழங்கிய வள்ளுவப் பெருந்தகையின்
பிறந்த நாளான ‘திருவள்ளுவர்தின” நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வதாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுளார்

Comments (30)

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்