அண்ணாமலை,சனாதனம்,ஆ ராசா,பாஜக,திமுக,A Rasa,annamalai,bjp,dmk

ஆ.ராசாவின் கருத்துக்கு எதிராகப் போராடிய பாஜகவினர் மீது திமுக பொய் வழக்கு போட்டு கைதுசெய்வதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிராக குரலெழுப்பிய பாஜகவினர் மீது திமுக பொய் வழக்குகள் போட்டு கைது செய்கின்றது. சமுதாயத்தில் பிரச்சினையை உருவாக்குதல் என்ற பிரிவில் (IPC Section 153) அவர்கள் மீது வழக்கு பதியப்படுகிறது. அதாவது ஆ.ராசா பேசியது பிரச்சினையை உருவாக்கும், பிளவுபடுத்தும் பேச்சு அல்ல; பாஜகவினர் பேசியதே அவ்வாறு உள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். 

இதுகுறித்து திமுக அமைச்சர்களிடம் கேட்டால் 'காது கேட்கவில்லை' என்று ஒரு அமைச்சர் கூறுகிறார். அவர் அடுத்த முறையிலிருந்து காது கேட்கும் கருவியை மாட்டிக்கொண்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், இந்தப் பிரச்சினைக்காக பாஜக போராட்டங்களில் எல்லாம் இறங்கப்போவதில்லை; மாறாக ராசா போன்ற எம்.பி. எங்களுக்கு வேண்டாம் என்று பொதுமக்களிடம் பாஜகவினர் கையெழுத்து வாங்கிவருகின்றனர்.

இதுவரை 20 லட்சம் கையெழுத்துகள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. இப்படியெல்லாம் பெரும்பான்மை சமுதாயத்தைப் பற்றி தவறாக பேசி சிறுபான்மை சமுதாயத்திலிருந்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று திமுக நினைக்கவேண்டாம். எல்லா சமுதாயத்தினரும் இதற்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாது உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் ஆ.ராசாவின் கருத்துக்கு எதிர்ப்புக்குரல் வலுத்துவருகிறது" இவ்வாறு தெரிவித்தார். 

 

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்