மனுஸ்மிருதி,ஜோதிமணி,ஆ.ராசா,காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி,jothimani,a rasa,congress mp jothimani

சுயமரியாதை உள்ள எந்த சமூகமும் மனுநீதியை ஏற்காது என்று காங்கிரஸ் கரூர் எம்.பி. ஜோதிமணி ட்விட்டரில் காரசாரமான பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

சனாதனம் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா அண்மையில் பேசியது பல்வேறு அதிர்வலைகளை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகள் ராசாவின் கருத்துக்கு எதிராக போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே சமயம், மனுஸ்மிருதியில் உள்ளதையே ஆ.ராசா சுட்டிக்காட்டியுள்ளதாக பலரும் அவருக்கு ஆதரவாகப் பேசியும் வருகின்றனர். இந்நிலையில், மனுநீதி எனப்படும் மனுஸ்மிருதியை சுயமரியாதை உள்ள எந்த சமூகமும் ஏற்காது என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "பாஜகவின் வேதப்புத்தகம் பகவத்கீதை அல்ல. மனுநீதியே. மனுநீதி பெண்களை பிறபடுத்தப்பட்ட, தலித் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களை இழிவுபடுத்துவது. அடிமைகளாக கட்டமைப்பது. சுயமரியாதையும், கண்ணியமும் மிகுந்த எந்த சமூகமும் மனுநீதியை ஏற்கமுடியாது. மனுநீதியும், பாஜகவும் மனிதகுல விரோதிகள்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்