
சென்னையில் அரசுப் பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் நிறுத்தங்களின் பெயர்களை அறிவிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
மெட்ரோ இரயில்களில் அறிவிக்கப்படுவது போலவே அரசுப் பேருந்துகளிலும் அடுத்த நிறுத்தங்களின் பெயர்களை ஒலிபெருக்கி மூலம் பயணிகளுக்கு ஒலிபரப்பும் திட்டம் இன்று தொடங்கிவைக்கப்பட்டது. இதனை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கிவைத்தார்.
முதற்கட்டமாக சென்னையில் 150 பேருந்துகளில் இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. மேலும் 500 பேருந்துகளில் அடுத்தகட்டமாகத் தொடங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்லன. 6 ஒலிபெருக்கிகள் மூலம் பயணிகளுக்கு நிறுத்தங்களின் பெயர்கள் அந்நிறுத்தங்களுக்கு 300 மீட்டர் முன்னதாக அறிவிக்கப்படும். இதன் மூலம் அடுத்த நிறுத்தங்களைத் தெரிந்துகொண்டு பயணிகள் இறங்க தயார் நிலையில் இருக்கலாம். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பெயர்கள் அறிவிக்கப்படும்.
சென்னை பல்லவன் மாநகரப் போக்குவரத்துக்கழக அலுவலகத்திலிருந்து இத்திட்டம் துவங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் சிவசங்கருடன் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.