kovai news,kovai toilet news,seithi.com news,double toilet issue

கோவை மாநகராட்சியின் ஒரு பொதுக்கழிப்பிடத்தில் இரண்டு கழிப்பிடங்கள் அருகருகே ஒரே கழிவறையில் கதவுகள் கூட இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள நிகழ்வு பொதுமக்களிடையே நகைப்புக்குள்ளாகியுள்ளது.

கோவை மாவட்டம் 70-வது வார்டு ராஜீவ் காந்தி நகர், அம்மன்குளம் பகுதியிலுள்ள வித்யா நிகேதன் பள்ளியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அதிமுக ஆட்சியின்போது பொதுக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.

இதில் அவலம் என்னவென்றால், ஒரு கழிவறைக்கு ஒரு கழிப்பிடம் என்று இல்லாமல் ஒரே கழிவறையில் இரண்டு கழிப்பிடங்கள், அதுவும் கதவு கூட இல்லாமல் கட்டப்பட்டுள்ளது தான். இதுகுறித்த தகவல் வெளியான நிலையில், இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே நகைப்பை ஏற்படுத்திவருகிறது.

சிலர் இதை Couple's Toilet என்று கேப்ஷன்களை இட்டும், முகம் சுளித்தவாரும் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர். இதைத்தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கவேண்டும், என்பதும், கழிப்பறை சீர்செய்யப்படவேண்டும் என்பதுமே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது. 

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்