kushbu,mk stalin,bjp,dmk

மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து சென்னை அடையாறில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய குஷ்பூ, "தமிழக அரசு வேண்டுமென்றே சென்னை மழைநீர் வடிகால் பணிகளை தாமதப்படுத்துகிறது. மழைக் காலங்களில் வெள்ளம் வரும் என்று உங்களுக்குத் தெரியும் தானே? தெரிந்திருந்தும் வெயில் காலத்திலேயே இப்பணிகளை முடிக்காமல் மழைக்காலம் வருவதற்கு சற்று முன்னதாக பணிகளைத் துவக்கியதேன்?

ஏனென்றால் அப்பொழுதுதான் பணிகளை மழையால் முடிக்கமுடியவில்லை என்று கூறி மேலும் நீட்டிக்கமுடியும். இதன் மூலம் பல்வேறு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பயனடைவார்கள். காதில் பூ சுத்தும் வேலையை திமுக விடவேண்டும்" என்று கூறினார். 

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்