
வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. முழு நீள நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, குக் வித் கோமாளி சிவாங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலான 'அப்பத்தா' அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வத் தகவலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் டிசம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.