Chennai Weather

Time: Wed 07:22:am
Date: 29th September, 2021
Mist
27.99°C27.99°C
Humidity: 69 %
Wind: 2.57 km/h

வீடியோக்கள்

விளையாட்டு

30k

`நான் உணர்ச்சிவசப்படுகிறேன்!'- தொழிலதிபரை மணந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை நெகிழ்ச்சி

தனது காதலரான தொழிலதிபர் டோனி ஐருக்கை  திருமணம் செய்துகொண்டார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப்.

ருமேனியா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப். 29 வயதான ஹாலெப் 2017-19ம் ஆண்டு கால கட்டத்தில் 64 வாரங்களில் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்துள்ளார். தற்போது தரவரிசையில் 11வது இடத்தில் இருக்கும் ஹாலெப், 2018ம் ஆண்டு பிரஞ்ச் ஓபன், 2019ம் ஆண்டு விம்பிள்டன் என 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

அண்மையில் நடந்த யுஎஸ் ஓபன் தொடரில் 4வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். இந்நிலையில் தனது காதலரான தொழிலதிபர் டோனி ஐருக்கை திருமணம் செய்துகொண்டார். தனது சொந்த ஊரான கான்ஸ்டன்டாவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு ஹாலெப் கூறுகையில், ``நான் உணர்ச்சிவசப்படுகிறேன். இவை கிராண்ட்ஸ்லாம் வென்றதைவிட வித்தியாசமான உணர்ச்சி, இது எனது தனிப்பட்ட பகுதி, இது மிகவும் முக்கியமான படியாகும். அது நடப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார். திருமண படங்களை ஹாலெப் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ் #CoronaVirus

அரசியல்

Latest News

கட்டுரை

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா..! கே.எஸ்.அழகிரியின் குமுறல்; பின்னணி என்ன?

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்ததில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிருப்தியில் உள்ளன.

குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தி.மு.க. வழங்கிய இடங்கள் போதுமானதாக இல்லை, இருந்தாலும் அதனை ஏற்று தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று வெளிப்படையாகவே தெரிவித்தார். மேலும் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒதுக்கப்பட்ட இடங்களில் திருப்பி அடையவில்லையாம்.

அதேபோன்று, தி.மு.க. கூட்டணியில் உள்ள முக்கிய பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியும் தங்களுடைய அதிருப்பதியை வெளிப்படையாகவே தெரிவித்து இருக்கிறது. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி பிரபல பண்பலை வானொலியின் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் நீட் தேர்வு விவகாரம், தமிழக ஆளுநர் நியமனம், தி.மு.க. ஆட்சி குறித்து மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.

குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தல் குறித்து அவர் கூறியுள்ள கருத்து தமிழக அரசியல் அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 'ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தான் ஜனநாயகத்தின் உண்மையான ஆணிவேர். கட்சிகளின் இமேஜை தாண்டி மக்கள் செல்வாக்கு பெற்றவர்களே இத்தேர்தலில் இங்கு ஜெயிக்க முடியும். உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்லாமல் எந்த தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைப்பதில்லை. உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து கட்சிகளுமே தனித்தே போட்டியிட வேண்டும். கூட்டணி தேவையில்லை என்ற தோனியில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், ‘நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு சரியான திசையில்தான் சென்று கொண்டிருக்கிறது. சட்டப்படி நீட் தேர்வு ரத்தாகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதேசமயம் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்ற தி.மு.க.வின் கோரிக்கையில் காங்கிரஸுக்கு உடன்பாடு இல்லை. கல்வி தொடர்ந்து பொது பட்டியலில் இருந்தால்தான் மத்திய அரசின் நிதி உதவிகள் மாநில அரசுகளுக்கு கிட்டும்’ என்று அழகிரி தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

தொடந்து பேசிய அவர், ‘கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 23 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது. கூட்டணி இட ஒதுக்கீடு, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளின்போது தி.மு.க. தங்களை சரிவர நடத்தவில்லை என்று பகிரங்கமாக தெரிவித்திருந்த அழகிரி, அறிவாலயத்தின் இந்த அணுகுமுறை காங்கிரஸுக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக அழகிரி அப்போது கூறினார்.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தேவையில்லை என்று அவர் கூறியுள்ள கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வருகிறதா என்று கேள்வியையும் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்