சூட்டை தணிக்கும் இளநீர்

0
299

இளநீர் என்ற வார்த்தை யாருக்குத்தான் பிடிக்காது? எவ்வளவு இதம், என்னவொரு குளுமை. கோடை காலம் வந்துவிட்டது. தகிக்கும் வெயிலில் ஏற்படும் தாகத்தைத் தணிக்க, இளநீருக்கு மிஞ்சியது எதுவுமில்லை. பழரசங்கள் தொண்டைக்கு இதமாக இருந்தாலும், சிரமமின்றி, செலவின்றி மிகவும் தூய்மையாகக் கிடைக்கக் கூடியது இளநீரே. கோடை காலத்தில் இதைத் தேடிப் போக வேண்டிய அவசியமில்லாமல், எல்லா ஊர்களிலும் ஆங்காங்கே சாலையோரங்களில் குவிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

 

 

இயற்கை எலெக்ட்ரோலைட்டுகள்

இளநீரானது எலக்ட்ரோலைட், குளோரைடு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவற்றை அதிக அளவில் உள்ளடக்கியுள்ளது. இது இயற்கையான ஐசோடோனிக் கனிம வளத்தை மிகுதியாக கொண்டிருப்பதாலும், எலக்ட்ரோலைட் இருப்பதாலும், உடலில் நீரேற்றம் மற்றும் சகிப்பு ஆற்றலை மீட்பதற்கு பயன்படுகின்றது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் நீர் அதிகம் தேவைப்படும். கர்ப்ப காலத்தில் உண்டாகும் வறட்சியினால், நீரிழப்பு, தலைவலி, பிடிப்புகள், வீக்கம் மற்றும் சுருக்கம் உட்பட பல்வேறு சிக்கல்கள் உண்டாகும். இதனால் குறைப்பிரசவம் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

 

செரிமான உதவி

இளநீர் செரிமானத்தை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோனை உருவாக்கும். இது இரைப்பை தசையை சுருங்கச் செய்வதால் செரிமானம் தாமதமாகும். ஆனால் இளநீர் செரிமானத்தின் வேகத்தை அதிகரிக்க செய்யும்.

 

நல்ல கொழுப்பு அதிகரிப்பு

ஆராய்ச்சிகளின் படி இளநீரில் கொழுப்பும் கொலஸ்ட்ராலும் இல்லை என்றும், இது நல்ல கொழுப்பை (எச்.டி.எல்) அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

உயிர் தரும் திரவம்:

இளநீர் ‘உயிர் தரும் திரவம்’ என மருத்துவர்களால் போற்றப்படுகிறது. காலரா, வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவோர்க்கு, அவசர காலங்களில் ஊசி மூலம் இரத்தத்தில் கலக்க ‘டிரிப்ஸ்’ போல் ஏற்றப்படுகிறது. இதில் உள்ள தாதுப் பொருட்கள் உடலில் விரைந்து சென்று கலந்து, மயக்கமுற்ற நிலையிலிருப்போர்க்கு உயிர் தரும் மருந்தாகிறது. அதோடு நிறைய மருந்து, மாத்திரைகள் சாப்பிட நேரும்போது, கூட இளநீர் சாப்பிட்டால் உடலில் மருந்து பிடிபட பெரிதும் உதவுகிறது. இளநீரில் உள்ள சத்துக்கள் இளநீரிலேயே, இளசாக உள்ள காய்களின் நீர் அதிக இனிப்பு சுவையுடனும், முற்றின காய்கள் இனிப்பு குறைவாக இருப்பதையும் காணலாம். இதற்கு அதில் உள்ள ‘சுக்ரோஸி’ன் அனவே காரணம். இளசாக உள்ள போது இதில் ‘சுக்ரோஸ்’ அதிக அளவு இருக்கும். இதைத் தவிர இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து என தாதுப்பொருட்கள் கணக்கிலடங்காது அடங்கியுள்ளது. தவிர இளநீரில் வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன. தாதுப் பொருட்கள், குறிப்பாகப் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் இளநீரைப் பருகக் கூடாது. அதேபோல் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிக அளவில் அல்லது தினமும் இளநீர் பருகக்கூடாது. முற்றின தேய்காயில் உள்ள இளநீரே இவர்கள் பருக உகந்தது. இளநீரைப் பருகுவதோடு, அதில் உள்ள இளசான தேய்காய்ப் பகுதிகளையும் சாப்பிடுவது நல்லது. அதோடு சதைப் பகுதி புரதச்சத்தும் நிறைந்ததாகும்.

 

நோய் தடுக்கும் இளநீர்:

இளநீரில் சர்க்கரை சத்து 5.5 சதவீதத்திற்கு அதிகமாகவும், சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. கோடைக்கால வியாதிகளான வயிறுக்கடுப்பு, நீர் கடுப்பு, மஞ்சள் காமாலை, அம்மைநோய், தோல் சம்பந்தமான நோய்கள் மற்றும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் இளநீருக்கு உண்டு. மற்ற இளநீரை விட செவ்விளநீரில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. சிறுநீரகம், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் தன்மையை செவ்விளநீர் பெற்றுள்ளது.

உடல் உஷ்ணத்தை பெரிதளவில் தணிக்கும் இளநீர், ஜீரண உறுப்புகள் சரியாக இயங்கத் தேவையான சூட்டை மட்டும் உடலில் தங்க வைக்கிறது. இதனால் கோடைக்காலத்தில் உடல் சூடு அதிகமாவதால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளை இளநீர் பருகுவதால் தடுக்கலாம். கோடை வெயிலில் பல தொற்று நோய்கள் உடலின் உள்உறுப்புகளையும், சருமத்தையும் பாதிக்கக் கூடும். அம்மை நோய், வயிற்றுப் போக்கு, காலரா போன்றவை ஏற்படும்போது உடலில் உள்ள சலைன் சத்தும், ஆல்பமின் சத்தும் குறையக் கூடும். இதனை சீராக்க தினமும் இளநீரை பருகுவது நல்லது. உடல் சூடு அதிகமாவதால் உடலில் உள்ள நீர் சுண்டிப்போய், சிறுநீர் கழிக்க சிலர் சிரமப்படுவர். இப்பருவத்தில்தான் சிறுநீர் தொற்றுநோய்களும் அதிகம் பரவுகிறது. இவர்கள் இளநீரைப் பருக சிறுநீர் தாராளமாகப் பிரியும். வளரும் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் இளநீர் சிறந்த டானிக். இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் சோர்வை இளநீரில் உள்ள இனிப்புத் தன்மை நீக்குகிறது.

 

நச்சு நீக்கி :

நம் உடலில் சாதாரணமாக நச்சுக்கள் தினம் சேர்கின்றன, இவையை சீர்படுத்த நம் உடல் வளம் உதவுகிறது. சற்று சோர்வாகவே எப்போதும் காணப்படுபவர்கள் தினம் இளநீரை பருகுவது நல்லது. இளநீர் உடலில் சேரும் நச்சுக்களை சீரமைக்கிறது.

 

குறைந்த இரத்த அழுத்தம்

இளநீரில் உள்ள குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிக அளவு பொட்டாசியம் இரத்த அழுத்த அளவுகளை குறைக்க வழி செய்கிறது.

புற்றுநோய் :

சில ஆய்வுகளின் படி, இளநீரில் சைட்டோகைனின்கள் இருப்பதால் முதுமை தோற்றத்தை தடுக்கவும், கார்சினோஜெனிக் மற்றும் த்ரோம்பாட்டிக்களை தடுக்கவும் உதவுகிறது. மேலும் இதிலுள்ள செலினியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராகவும் விளங்கும்.

 

தீக்காய நிவாரணி

தீக்காயங்கள் பட்ட இடத்தில் இளநீரை தடவலாம். இது தவிர அமிலத்தால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த இளநீர் வல்லமை பெற்றது.

 

எடை இழப்பு

இளநீரில் குறைவான கலோரிகள் உள்ளது, மேலும் சுலபமாக செலவிடக்கூடிய கொழுப்பு சத்துக்கள் இதில் உள்ளது. இது உங்கள் எடையை இழக்க ஒரு பெரிய அருப்பொருளாக உள்ளது.

 

இயற்கை நீர்ப்பெருக்கிகள்

இயற்கை நீர்ப்பெருக்கியாக இருப்பதால், இளநீர் சிறுநீரை வெளியேற்றவும், சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இதிலுள்ள ஊட்டமிக்கப் பொருட்கள் உடலிலுள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றவும், பொதுவாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிறுநீர் தொற்றைத் தடுக்கவும் பயன்படுகின்றது.

நோயெதிர்ப்பு சக்தி

இளநீரில் உள்ள லாரிக் அமிலம் நோய்க்கு எதிராகப் போராட உதவுகின்றது. மேலும் இது தாய்ப்பாலின் பண்புகளான பூஞ்சை காளான், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி-வைரஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது படர்தாமரை, எச்.ஐ.வி, ஓரணு, ஜியார்டியா லாம்ப்லியா, கிளமீடியா மற்றும் ஹெலிகோபட்டர் போன்ற வைரஸ்களில் இருந்து தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றது.

 

நல்ல கொழுப்பு அதிகரிப்பு

ஆராய்ச்சிகளின் படி இளநீரில் கொழுப்பும் கொலஸ்ட்ராலும் இல்லை என்றும், இது நல்ல கொழுப்பை (எச்.டி.எல்) அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

சரும பாதுகாப்பிற்கு:

இளநீர் பருக மட்டுமல்ல, வெப்பம் அதிகமாகும்போது சருமத்தில் ஏற்படும் வியர்குரு போன்றவற்றின் மீது தடவவும் நல்ல மருந்தாகும். முகத்தின் சரும பாதுகாப்பிற்கும் இளநீர் தடவிக் கொள்வது நல்லது.

 

வெயிலுக்கு உகந்த இளநீர்:

* இளநீர் குடிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது. உடலின் நீர்சத்தை குறிப்பிட்ட அளவில் வைத்து கொள்கிறது.

* உடலில் உள்ள சத்துகளை முழுவதுமாக இயங்க செய்வதற்கும், புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்வதற்கும் உதவுகிறது.

* இளநீரில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துகள் மிகுதியாக உள்ளன. இதனால், இரத்த அழுத்தம், இருதயம் தொடர்பான பிரச்சனைகள் வரவிடாமல் தவிர்க்கிறது.

* இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளவும் இளநீர் உதவுகிறது. உடலின் நல்ல கொழுப்பை அதிகரித்து, உடல் இயக்கத்தை சீர் செய்கிறது.

* பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால், சிறுநீரகத்தில் கல் ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது.

* இளநீர் குடிக்கும் பலர், தண்ணீரை மட்டும் குடித்து விட்டு உள்ளே இருக்கும் இளசான தேங்காயை அப்படியே விட்டு விடுகின்றனர். தண்ணீருக்கு இணையான சத்து, இந்த இளம் தேங்காயிலும் உள்ளது. பலர் இந்த தேங்காய் பருப்பை சாப்பிடுவது, கொழுப்பை வரவழைத்து விடும் என நினைக்கின்றனர்.

* தேங்காய் பருப்பை அப்படியே சாப்பிடுவது, உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக, இரத்தத்தில் நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்க இது உதவுகிறது.

*சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக உடல் எடை இருப்பவர்கள், தினசரி இளநீர் அருந்தி வந்தால், விரைவில் எடை குறையும்.

*இளநீர் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.

*இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.

* இளநீர் முதியோர்களுக்கும். நோயாளிக்கும் சிறந்த ஊட்டச் சத்து பானம்.

*இளநீர் சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.

*இளநீரை உடலில் பூசிக்கொண்டால் தட்டம்மை, சின்னம்மை, பெரியம்மை, ஆகியவைகளால் ஏற்படும் உடல் அரிப் பைத் தடுக்கலாம்.

*இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொரு ட்களை அகற்ற உதவு கிறது.

*உடலில் ஏற்படும் நீர் இழப்பை சரி செய் வதற்கு இளநீரை பருகுவது நல்லது.

*இளநீரில் உள்ள உப்புத்தன்மை மற்றும் வழவழப்புத் தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு மருந்தாக உள்ளது.

*இளநீர் ஊட்டசத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

*புகையிலை மற்றும் மது போன்றவைகளினால் ஏற்படும் தீய விளைவுகளை நீக்கக்கூடிய நச்சு முறிவாக செயல் படுகிறது.