தமிழக சட்டமன்ற தேர்தலில் 71.79 சதவிகிதம் வாக்குகளும், புதுச்சேரியில் 80.09% சதவிகிதம் வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. மேற்குவங்கத்தில் 3-வது கட்ட தேர்தலும், அசாமில் 3-வது இறுதிகட்ட தேர்தலும் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சம். இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சம் பேர். பெண்கள் 3 கோடியே 19 லட்சம் பேர். இதுதவிர 3-ம் பாலினத்தவர் 7192 பேர் உள்ளனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்கெல்லாம் வாக்களிக்கும் ஆர்வத்தில் வாக்காலர்கள் குவியத்தொடங்கினர். மாநிலம் முழுவதும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையில் இருந்தே ஆர்வமாக வந்து ஓட்டு போட்டார்கள். இதனால் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.
11 மணி நிலவரப்படி அதிக பட்சமாக நாமக்கல்லில் 28.33 சதவீதமும், குறைந்தப்பட்சமாக நெல்லையில் 20.98 சதவீதமும் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் மதியம் 1 மணி நிலவரப்படி 34.21 சதவீத வாக்குகள் பதிவானது.
தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.61% வாக்குப்பதிவாகி உள்ளது. மதியம் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 41.79% வாக்குகள் பதிவாகி உள்ளது.குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 32.29% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் அதிகாரி தெரிவித்தனர். மதியம் 3 மணி நிலவரப்படி 53.55% வாக்குகள் பதிவானது. 5 மணி நிலவரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அளித்த பேட்டியில், மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது இரவு 7 மணிவரை அனைவரும் வாக்களிக்கலாம். நாமக்கல் மாவட்டத்தில் அதிக பட்சமாக 70. 79 சதவீதமும், நெல்லை மாவட்டத்தில் 50.05 சதவீதமும் பதிவாகி உள்ளது என கூறினார்.
இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது வாக்குப்பெட்டிகள் சீ்ல் வைக்கப்பட்டது. இதன் பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் வாக்கு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 71,79 சதவிகிதம் வாக்குப் பதிவாகியுள்ளது. இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் தோராயமாக 80.09 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. நள்ளிரவு 12 மணி அல்லது 1 மணிக்கு அதிகாரப்பூர்வ வாக்கு சதவிகித விவரம் தெரியவரும். வாக்கு சதவிகிதம் நன்றாக இருந்தாலும் நள்ளிரவு மாற வாய்ப்புள்ளது. தேர்தல் தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்.
தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவிகிதமும், சென்னை மாவட்டத்தில் 59.40 சதவிகிதமும், திருவள்ளூர் மாவட்டத்தில் 68.73 சதவிகிதமும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 62.77 சதவிகிதமும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 69.47 சதவிகிதமும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 74.23 சதவிகிதமும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 75.63 சதவிகிதமும், விழுப்புரம் மாவட்டத்தில் 75.51 சதவிகிதமும், சேலம் மாவட்டத்தில் 75.33 சதவிகிதமும், நாமக்கல் மாவட்டத்தில் 77.91 சதவிகிதமும், அரியலூர் மாவட்டத்தில் 77.88 சதவிகிதமும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 62.77 சதவிகிதமும், தர்மபுரி மாவட்டத்தில் 77.23 சதவிகிதமும், தென்காசி மாவட்டத்தில் 63.33 சதவிகிதமும், ஈரோடு மாவட்டத்தில் 72.82 சதவிகிதமும், நீலகிரி மாவட்டத்தில் 69.24 சதவிகிதமும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 66.98 சதவிகிதமும், திண்டுக்கல் மாவட்டத்தில் 74.04, கரூர் மாவட்டத்தில்77.60 சதவிகிதமும். திருச்சி மாவட்டத்தில் 71.38 சதவிகிதமும், பெரம்பலூர் மாவட்டத்தில் 77.08 சதவிகிதமும், கடலூர் மாவட்டத்தில் 73.67 சதவிகிதமும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 69.62 சதவிகிதமும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 74.66 சதவிகிதமும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 74.36 சதவிகிதமும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 72.17 சதவிகிதமும், திருவாரூர் மாவட்டத்தில் 74.90 சதவிகிதமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 74.47 சதவிகிதமும், சிவகங்கை மாவட்டத்தில் 68.49 சதவிகிதமும், மதுரை மாவட்டத்தில் 68.14 சதவிகிதமும், தேனி மாவட்டத்தில் 70.47 சதவிகிதமும், விருதுநகர் மாவட்டத்தில் 72.52 சதவிகிதமும், தூத்துக்குடி மாவட்டத்தில் 70.00 சதவிகிதமும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 69.16 சதவிகிதமும், திருநெல்வேலி மாவட்டத்தில் 65.16 சதவிகிதமும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 68.41 சதவிகிதமும், திருப்பூர் மாவட்டத்தில் 67.48 சதவிகிதமும், வேலூர் மாவட்டத்தில் 72.31 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.