`முதல் டெஸ்ட்டில் இந்தியா படுதோல்வி; பேட்டிங் கில் சொதப்பிய வீரர்கள்!’- ஆஸி வீரர்கள் அசத்தல்

0
153
tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
Kohli

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 3வது நாளிலேயே டெஸ்ட் போட்டி முடிந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. கேப்டன் கோலி 74 ரன்னிலும், புஜாரா 43 ரன்னிலும், ரஹேனா 42 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலியா அணி தொடங்கியது. இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 191 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அந்த அணியின் வீரர் டிம் 73 ரன்கள் விளாசினார். மார்னஸ் 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். அஸ்வின் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை விளையாடியது. முதல் இன்னிங்ஸில் சொதப்பிய பிரித்தீவ் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 2வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன் எடுத்துள்ளது. அகர்வால் 5 ரன்னிலும் பும்ரா ரன் ஏதும் இல்லாமலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 62 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இன்று காலை 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. பும்ரா 2 ரன்னில் வெளியேற பின்னர் வந்த புஜாரா டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து, அகர்வால் 9 ரன்னிலும், ரஹானே ரன் எதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தார். கேப்டன் கோலி 4 ரன்னில் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார். சகா 4 ரன்னில் வெளியேற, அஸ்வின் டக்அவுட் ஆனார். முகமது சமிக்கு அடிப்பட்டதால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 36 ரன்னுக்கு 2வது இன்னிங்ஸில் ஆட்டம் இழந்தது. 89 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 90 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா அணிக்கு நிர்ணயித்தது.

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் கும்மின்ஸ் 4 விக்கெட்டும், ஜோஸ் 5 விக்கெட்டும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க வீரர் மேத்யூ, ஜோஸ் களமிறங்கி வெற்றியை உறுதி செய்தனர். மேத்யூ 33 ரன்னிலும் மார்னஸ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஜோஸ் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 2 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 93 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெல்போனில் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.

மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறக்க உள்ள நிலையில் இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்க மாட்டார். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளதால் சிவந்த முகத்துடன் அவர் தாயகம் திரும்புகிறார்.