எத்தியோப்பியாவில் 30 பேர் சுட்டுக்கொலை!- துப்பாக்கி ஏந்திய கும்பல் கைவரிசை

0
23

எத்தியோப்பியாவின் மத்திய ஒரோமியா பிராந்தியத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று துப்பாக்கி ஏந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை கண்ட 50 வயதான விவசாயி கூறுகையில், ‘‘துப்பாக்கி ஏந்திய கும்பல் சரமாரியாக சுட்டது. இதை பார்த்தவர்கள் அருகில் இருந்த அரசு அலுவலத்திற்குள் புகுந்து கொண்டனர்’’ என்றார்.

மத்திய அரசாங்கத்திற்கு சவால் விடும் வகையில் இன வன்முறையை தூண்டியுள்ளது இந்த சம்பவம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.