`சிறந்த நடிகர் தனுஷ்; சிறந்த படம் அசுரன்!’- தேசிய விருதை அறிவித்தது மத்திய அரசு

0
46
tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
dhanush asuran

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் நடித்த தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டுக்கான தேசிய விருதை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, சிறந்த தமிழ் படமாக அசுரனும், சிறந்த நடிகராக தனுஷூம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறந்த நடிகருக்கான விருதை ஹிந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் உடன் தனுஷ் பகிர்ந்து கொள்கிறார்.

மணிகர்னிகா, பங்கா படங்களில் நடித்த கங்கனா ரணாவத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்த்திபன் இயக்கம், நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்வாசம் படத்தில் பாடல்களுக்கான இசையமைப்பாளர் டி.இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
vijay sethupathi Super deluxe

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்த செருப்பு திரைப்படத்தில் சிறந்த ஒலிப்பதிவுக்காக ரசூல் பூக்குட்டிக்கு தேசிய விருதும், மகரிஷி என்ற தெலுங்கு படத்திற்காக ராஜூசுந்தரத்திற்கு சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.டி.கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷால் சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கன்னடத்தின் அவனே ஸ்ரீமன் நாராயணா படத்திற்காக சிறந்த சண்டை பயிற்சியாளராக விக்ரம் மோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நானி நடிப்பில் வெளியான ஜெர்சி படத்திற்கு சிறந்த தெலுங்கு படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.