`ஒரே நாளில் 1.03 லட்சம் பேருக்கு கொரோனா; 478 பேர் உயிரிழப்பு!’- இந்தியா தொடர்ந்து முதலிடம்

0
28
tamil news, india news, india news paper, national news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
corona

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இன்று கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா இருப்பதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அலை தொடர்ந்து இந்தியாவை தாக்கி வருகிறது. தினந்தோறும் இந்த கொடிய தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் நாடு முழுவதும் புதிதாக 1 லட்சத்து 03 ஆயிரத்து 249 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட ஒருநாள் அதிகபட்ச கொரோனா பாதிப்பு இதுதான் ஆகும். கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 478 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 067 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 16 லட்சத்து 82 ஆயிரத்து 136 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 7 லட்சத்து 41 ஆயிரத்து 830- பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 101- ஆக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 7 கோடியே 91 லட்சத்து 05 ஆயிரத்து 163 ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா 3வது நாளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 36 ஆயிரமும், பிரேசிலில் 31 ஆயிரமும் பாதிப்பு பதிவான நிலையில் இந்தியாவில் 1.03 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 7.81 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 16.38 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 31.86 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 24.90 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் 8.93 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.