மாவோயிஸ்டுகள் நடத்திய என்கவுன்ட்டர் – காணாமல் போன சி.ஆர்.பி.எப் வீரர்கள்!

0
42

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் என்கவுன்ட்டரில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் 21 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் கிழக்கு முதல் தென்கிழக்கு வரை பல மாநிலங்களில் உள்ள சதுப்புநிலப் பிரதேசங்களை மாவோயிஸ்ட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். குறிப்பாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளில் ஆதிக்கம் நிறைந்துள்ளன. இந்த மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்க அதிரப்படையினரும், காவல்துறையினரும் கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், சட்டீஸ்கர் மாநிலம் பிஜபூர் மற்றும் சுக்மா மாவட்டத்திற்கு இடைப்பட்ட வனப்பகுதியில், சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 5 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த 16 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உள்பட 31 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், காணாமல் போன சி.ஆர்.பி.எப் வீரர்கள் 7 பேர் உள்பட 21 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுக்மாவில் பாதுகாப்புப் படை நடத்திய என்கவுன்ட்டரில் 9 மாவோயிஸ்ட்டுகள் சுட்டிக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த ஆண்டு, சுக்மா மாவட்டத்தின் முன்பா பகுதியில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 17 பாதுகாப்பு படையினர் வீரமரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.