Google News Tamil

Latest News|Bollywood News|India News|World News Today|News Headlines|Breaking News Headlines|News Today|Breaking News Today|Bollywood|Cricket| Business|Politics Seithy Today

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உயிரிழந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் இறுதி சடங்கு நிகழ்வுக்கு அக்டோபர் 13ம் தேதி வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக கடந்த 14ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எழுபது வயதைக் கடந்த அமைச்சர் துரைக்கண்ணுக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எனவே நுரையீரல் பாதிப்புகளை சரிசெய்ய அமைச்சர் துரைக் கண்ணுக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், காவேரி மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். அதிகப்படியான உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டும் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.