Google Tamil News

“பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்” என்று குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. குஜராத்தின் கெவாடியா நகரில் வடிவமைக்கப்பட்டு உள்ள ஒற்றுமைக்கான சிலை மீது பிரதமர் மோடி பால் ஊற்றி, மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடந்தன. மேலும், பாதுகாப்பு படை வீரர்களின் ராணுவ அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இதன் பின்னர் பேசிய மோடி, சுற்றுலாவை இந்த பகுதியில் ஊக்குவிக்கும் வகையில் சபர்மதி ஆற்றங்கரையில் இருந்து கெவாடியா வரை கடல் வானூர்தி சேவை தொடங்கி வைக்கப்படும் என்றார்.

கொரோனா வைரஸூக்கு எதிரான போரில் சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட போராளிகளை 130 கோடி இந்தியர்களும் ஒன்றாக கவுரவித்தனர் என்று கூறிய மோடி, இந்நேரத்தில் கூட்டு ஆற்றலை நாடு நிரூபித்த விதம் இதற்கு முன் நடந்திராத ஒன்றாகும் என்றார்.

காஷ்மீர் இன்று, வளர்ச்சிக்கான புதிய பாதையில் பயணிக்கிறது என்றும் வடகிழக்கில் மீண்டும் அமைதியை கொண்டு வருவதிலும் அல்லது அங்கே வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் ஒற்றுமைக்கான புதிய பரிமாணங்களை நாடு நிலைநாட்டியுள்ளது என்றும் மோடி தெரிவித்தார்.