எட்டு ஊருக்கு குழம்பு மணக்க கரம் மசாலா செய்யறதை கத்துக்க வாங்க!

0
310

கறிக் குழம்பு , பிரியாணி, குருமா இப்படி வாய்க்கு ருசியான உணவுகளை மணக்க வைக்கும் அதிசயம் கரம் மசாலாவுக்கு உண்டு. கரம் மசாலாவை ரெடிமேடாக வாங்கி பயன்படுத்துவதைக் காட்டிலும், வீட்டிலேயே அரைத்து காற்று புகாத டப்பாக்களில் வைத்துக்கொண்டால் இன்னும் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

தேவையான பொருள்கள் –

  1. பெருஞ்சீரகம் (சோம்பு) – 100 கிராம்
  2. பட்டை – 10 கிராம்
  3. கிராம்பு – 10 கிராம்
  4. அன்னாசிப்பூ – 10 கிராம்
  5. ஏலக்காய் – 10 கிராம்                                                                                                                                             செய்முறை 
    1. எல்லா பொருள்களையும் வெயிலில் 2 மணி நேரம் காய வைத்துக் கொள்ளவும்.
    2. அல்லது அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் எல்லா பொருள்களையும் போட்டு கிளறி ஆற விடவும்.
    3. நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் திரிக்கவும்.
    4. பிறகு பேப்பரில் பரப்பி வைக்கவும். சூடு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். கரம் மசாலா பொடியை பிரியாணி, குருமா வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.