`இந்தியன் 2 பட்ஜெட் ரூ.150 கோடி; செலவு ரூ.236 கோடி!’- ஷங்கருக்கு தடை விதிக்க கோரி லைகா வழக்கு

0
44
tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
indian2_new 5

இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் இயக்குநர் ஷங்கர் பிற படங்களை இயக்க இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில் நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வந்தபோது, கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், உதவி இயக்குநர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக கமல், ஷங்கர், லைகா நிறுவனம் உள்ளிட்ட பலரிடம் நசரத்பேட்டை போவீசார் விசாரணை நடத்தியிருந்தனர். இதனையடுத்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக கமல், ஷங்கரும் அறிவித்திருந்தனர். லைகா நிறுவனம், ரூ.2 கோடி வழங்குவதாக அறிவித்திருந்தது.

இதனையடுத்து தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு தொடங்கப்படும் நிலையில், சட்டமன்ற தேர்தலையொட்டி கமல்ஹாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு தாமதமானது. இதனால் பொறுமையிழந்த ஷங்கர், புதிய படம் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த லைகா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அம்மனுவில்,  இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். எங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்க வேண்டும்.

இந்த  திரைப்படத்துக்கு ரூ. 150 கோடி  பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில்,  ரூ.236 கோடி  வரை செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 80 சதவீதப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. இந்தியன் 2 படத்தின் எஞ்சியுள்ள பகுதிகளை முடித்து தர வேண்டும் என இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும். இயக்குநர் ஷங்கருக்கு ரூ. 40 கோடி  சம்பளம் பேசிய நிலையில் இதுவரை ரூ. 14 கோடி கொடுத்துள்ளோம்.  எஞ்சிய ரூ. 26 கோடியை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்தத் தயாராக இருக்கிறோம் என மனுவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குநர் ஷங்கரின் விளக்கத்தைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி உயர்நீதிமன்றம், அவர் பிற படங்களை இயக்கக் கூடாது என  இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் மனு குறித்து இயக்குநர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை  வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தது.