சியோமிக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் முகேஷ் அம்பானி!

0
249

மிகவும் குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளார், முகேஷ் அம்பானி. இது இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் சக்கைப்போடு போடும், சியோமி நிறுவனத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் இருக்கும் தனது ஸ்மார்ட்போன் தயாரிப்பு கூட்டணி நிறுவனங்களை அடுத்த 2 ஆண்டுகளில், 20 கோடி மலிவு விலை ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் அளவிற்கு உற்பத்தி தளத்தை மேம்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இதை பயன்படுத்தி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கும் ஜியோ போனை, இந்தியாவிலேயே தயாரித்து அதை ரூ.4000 க்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் திட்டம், இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் பல்வேறு சீன நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். சியோமி நிறுவனத்தின் ஆதிக்கம், ஜியோ ஸ்மார்ட்போன் அறிமுகத்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.