பென் என்ற குறுங்கோளில் இருந்து பாறைத் துகள்களை பூமிக்கு எடுத்துவர நாசா திட்டம்!!!

0
264

பென் என்ற குறுங்கோளில் இருந்து பாறைத் துகள்களை பூமிக்கு எடுத்துவர திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

பூமியிலிருந்து 334 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பென்னு-வை ஆய்வு செய்வதற்கு நாசா ஏற்கனவே நைட்டிங்கேல் என்ற விண்கலத்தை அனுப்பியது. தற்போது பென்னுவைச் சுற்றி வரும் நைட்டிங்கேலை அதன் வடக்குப் பகுதியில் அடுத்த மாதம் 20ம் தேதியன்று தரையிறக்க நாசா முடிவு செய்துள்ளது.

விண்கலத்தில் உள்ள ஓஸிரிஸ் ரெக்ஸ் (OSIRIS-REX) என்ற இயந்திரக் கரங்கள் மூலம் பென்னுவின் பாறைகள் மற்றும் தூசுக்களை எடுத்து பூமிக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும்,இதன் மூலம் கிரகங்கள் எவ்வாறு உருவாகின என்பது தெரியவரும் எனவும் நாசா கூறியுள்ளது.