ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. தமிழக அரசு சார்பாக ஆர்டர் செய்யப்பட்டுள்ள ஒன்றரை கோடி தடுப்பூசிகள் வந்தால் தான் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து ஆம்புலன்ஸ் எண்ணிக்கை உயர்த்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி தட்டுபாடு காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயம் செய்வதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Comments (30)

Be the first to comment

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் வரும் 7ம் தேதி பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் மிகவும் எளிதாக முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனிடையே, முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவையில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக மட்டும் 125 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 4 தொகுதிகளிலும், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஒரு தொகுதியிலும், பிற கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. நாளை நடைபெற உள்ள திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து வரும் 7ம் தேதி அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.

இதனிடையே, முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை சேலத்தில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அவர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments (30)

Be the first to comment
ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையான நோக்கம்

ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையான நோக்கம்'' என்று ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒரு நாளைக்கு 3 லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இந்த களேபரத்துக்கு மத்தியில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஸம்பா, கேன் ரிச்சர்டுசன் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ளனர். அண்மையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த ஆண்ட்ரூ டை ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

இதனிடையே, இந்தியாவுடனான நேரடி விமான சேவைக்கு மே 15ம் தேதி வரை தடை விதித்து ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், இந்தியாவில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ஐபிஎல் சிஓஓ ஹேமங்க அமின் கடிதம் எழுதியுள்ளார். அதில், "ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள் என நிர்வாகம் உறுதியளிக்கிறது. ஐபிஎல் தொடருக்கு பின் வீரர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ கவனித்துக் கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

வீரர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். இனி வீரர்களுக்கு 5 நாட்களுக்கு பதில் 2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கப்படும். ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையான நோக்கம். ஒவ்வொரு முறையும் ஜெயிப்பதற்காக விளையாடும் நீங்கள் இம்முறை மனிதநேயத்திற்காக விளையாடுகிறீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

Comments (30)

Be the first to comment
செவிலியர்கள், தமிழக அரசு, ஒப்பந்த செவிலியர்கள், ஸ்டாலின், TNNurses, TamilNadu Government, Contract Nurses, Stalin,tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,212 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டது. இரண்டு வருட ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்த பணியாளர்களாகவே தொடர்ந்தனர். இதனால் செவிலியர்கள் கடும் மனஉளைச்சலில் பணியாற்றி வந்தனர். பின்னர், அவர்களது ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. ஆனால், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கடந்த ஆட்சியில் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில், புதிதாக திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. அதன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார். இதனிடையே, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த சூழ்நிலையில், 2015-16ல் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,212 செவிலியர்களுக்கான ஒப்பந்தம் நாளையுடன் முடியவிருந்த நிலையில் அவர்களை பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பணி நிரந்தரம் செய்யப்பட்டதால் 1,212 பேருக்கான ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதிக்கு முன்னதாக 1,212 பேரும் சென்னையில் பணியில் சேர வேண்டும் என்றும் பின்னர் 1,212 பேரும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Comments (30)

Be the first to comment
ஓபிஎஸ், ஈபிஎஸ், தமிழ்நாடு, அதிமுக, தமிழக சட்டப்பேரவை தேர்தல், OPS, EPS, Tamil Nadu, AIADMK, Tamil Nadu Assembly Election,tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

“நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித்தேர் சரியாக செழுத்த அச்சாணியாக செயல்பட வேண்டிய கடமை இருக்கிறது” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன்படி தமிழக முதல் அமைச்சராக வரும் 7ம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.

இதற்கிடையே, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை அதிமுக கூட்டணி வெல்லாத நிலையில், முதல்வர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித்தேர் சரியாக செழுத்த அச்சாணியாக செயல்பட வேண்டிய கடமை இருக்கிறது.

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அதிமுக பணியாற்றும். 10 ஆண்டுகள் அதிமுக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு செய்த பணிகளை மக்கள் நன்கு அறிவார்கள். அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளனர்.

Comments (30)

Be the first to comment
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், திமுக, அதிமுக, ரஜினி, கமல், Edappadi Palanisamy, Stalin, DMK, AIADMK, Kamal, Rajini,tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், “மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை! ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!” என்று ட்வீட் செய்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் உழைத்த அனைவருக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் & வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து. தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள ஸ்டாலின், “அன்பு நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான
கமல்ஹாசன் அவர்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி!. பேரிடரிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் பணியில் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் புதிய அரசு மேற்கொள்ளும் மக்கள் நலப் பணிக்குத் துணையாகட்டும்” என்று கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஒரு எடுத்தக்காட்டாய் திகழ, திமுக கூட்டணிக்கு என் வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

Comments (30)

Be the first to comment
ஸ்டாலின், திமுக, தமிழக முதல்வர், Stalin, DMK, TNCMStalin, Tamil Nadu,tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் வரும் 7ம் தேதி பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் மிகவும் எளிதாக முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனிடையே, முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவையில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக மட்டும் 125 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 4 தொகுதிகளிலும், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஒரு தொகுதியிலும், பிற கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. நாளை நடைபெற உள்ள திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து வரும் 7ம் தேதி அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.

இதனிடையே, முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை சேலத்தில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அவர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments (30)

Be the first to comment
பில்கேட்ஸ், மெலிண்டா, மைக்ரோசாப்ட், விவகாரத்து, அமெரிக்கா, Microsoft founder, Bill Gates, Melinda Gates, divorce, USA,tamil news, international news, world news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

திருமணமாகி 27 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவியை விவாகரத்து செய்கிறார் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்.

கடந்த 1975ம் ஆண்டு பால் ஆலன் உடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கிய காலத்தில் அதன் தலைமை செயல் அதிகாரியாக பில் கேட்ஸ் செயல்பட்டார். பின்னர் அதன் தலைவர் மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளார். அந்நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டா கேட்சை சந்தித்து பில் கேட்ஸ் பின்னர் ஹவாயில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் 6 ஆண்டுகள் கழித்து, கடந்த 2000ம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. லாபநோக்கு இல்லாத இதன் வழியே கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலம் போன்ற சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸூம், அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மனைவி மெலிண்டா கேட்ஸூம் விவாகரத்து செய்யும் முடிவை கூட்டாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து பில் கேட்ஸ் தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து வரப்பட்டு உள்ளன. இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம்.

எனினும், எங்களது திருமண வாழ்வை முடித்து கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என கூறியுள்ளனர்.

Comments (30)

Be the first to comment
மதுரை அரசு,hospital

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து 10 பெட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மருந்து திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றை குணப்படுத்த ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த மத்திய அரசுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிப்பு அதிகரித்து வருவதால், ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், சென்னை கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் மக்கள் நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருந்து வாங்கிச் செல்லும் நிலை நிலவுகிறது.

இந்த நிலையில், ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காரணமான திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய கம்பவுண்டர், சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே தென்மாவட்ட சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்கு பிரத்தியோகமாக சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரையில் கொரோனா சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்தநிலையில், மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 10 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, மருந்து சேமிப்பு கிடங்கு ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதிக லாபத்திற்கு கள்ள சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்வதற்காக இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments (30)

Be the first to comment
மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம்

மேற்கு வங்கத்தில் ஆரம்ப கட்ட நிலவரங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது. கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் நிலவரம் வெளி வந்து கொண்டிருக்கிறது.

294 உறுப்பினர் கொண்ட மேற்கு வங்க சட்டசபைக்கு கடந்த மார்ச் 27-ந் தேதி முதல் கடந்த 29-ந் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதனால் 2 மாதங்களுக்கு மேலாக மாநில தேர்தல் களம் மிகவும் கொதிநிலையில் இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலை விட அரசியல் தலைவர்களின் பேச்சுகளில் அனல் பறந்தது. இதனால் அரசியல் மோதல்கள், வன்முறைகள், தாக்குதல்கள் என பதற்றத்துக்கு பஞ்சமில்லாமல் காணப்பட்டன.

இப்படி 2 மாதங்களுக்கு மேலாக மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. அங்கு வேட்பாளர் மரணத்தால் 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. எனவே மீதமுள்ள 292 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் ஆரம்ப கட்ட நிலவரங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நிமிடத்துக்கு நிமிடம் முன்னிலை நிலவரம் மாறியது. தற்போதைய நிலவரத்தின் படி திரிணாமூல் காங்கிரஸ் 191 இடங்களிலும் பாஜக 97 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. சிபிஎம் 1 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதியில் என்ஆர்காங்கிரஸ் கூட்டணி 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளில் பாஜக கூட்டணி 84 தொகுதிகளிலும், காங்கிரஸ் 41 தொகுதிகளிலும், பிற கட்சிகள் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் சிபிஎம் 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 46 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும், பிற கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர்.

Comments (30)

Be the first to comment
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 3,645 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை அசுரவேகத்தில் பரவி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 20 மாநிலங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. மகாராஷ்டிராவிலும், டெல்லியிலும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தினந்தோறும் அறிவித்து வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் ஒரே நாளில் 3,645 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 2,04,832 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,83,76,524 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 2,69,507 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,50,86,78 ஆக உயர்ந்துள்ளது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 82.33 சதவிகிதமாகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.12 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30,84,814 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 1,06,105 பேர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments (30)

Be the first to comment
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,01,187 ஆக உயர்ந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக கொரோனா உயர்ந்து வந்த நிலையில், நேற்று மட்டும் சற்று குறைந்தது. கொரோனா பாதிப்பை கண்டறிய நாடு முழுவதும் பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 17 லட்சத்து 23 ஆயிரத்து 912 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 28 கோடியே 27 லட்சத்து 03 ஆயிரத்து 789 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, இந்தியாவில் ஒரே நாளில் 3,60,960 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்றும் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,01,187 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 82.54 சதவிகிதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.12 சதவிகிதமாகவும் உள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட இந்த நோயாளிகளையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 162 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 48 லட்சத்து 17 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 29 லட்சத்து 78 ஆயிரத்து 709 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Comments (30)

Be the first to comment
இந்தியாவில் கொரோனா 2வது அலை அதிகரித்து வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா 2வது அலை அதிகரித்து வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருவதால், தடுப்பூசி செலுத்தும் வயதை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு வகை தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதனை பெறுவதற்காக ‘கோவின்’ இணையதளம் அல்லது ‘ஆரோகிய சேது’ செயலி மூலமாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த நிலையில் வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு, இன்று முதல் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இதனிடையே, இணையதளம் மூலமாக முன்பதிவு செய்ய முடியவில்லை என புகார் எழுந்தது. நேற்று நள்ளிரவு முதல் பலர் முன்பதிவு செய்ய முயற்சி செய்தால், இணையதள சர்வரில் முடக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று மாலை 4 மணி முதல் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, https://www.cowin.gov.in என்ற, இணையதளத்திற்குள் சென்று, ‘ரிஜிஸ்டர் மை செல்ப்’ என்பதை அழுத்த வேண்டும். பின், மொபைல் போன் எண் பதிவு செய்து, பெயர், வயது உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் உள்ளிட்ட, அரசு அங்கீகரித்த அடையாள அட்டை எண்ணை பதிந்து, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Comments (30)

Be the first to comment
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி (34) முன்னணி செய்தித்தாள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆஷிஸ் யெச்சூரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் குருக்கிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆஷிஸ் யெச்சூரி இன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது மூத்த மகன் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று காலை உயிரிழந்துவிட்டார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு நம்பிக்கையும் எனது மகனுக்கு சிகிச்சையும் அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments (30)

Be the first to comment
எந்த வித திட்டமும் இல்லாதது தான் ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை ஏற்பட காரணம். சரியான திட்டமிடல் இல்லாததே ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட காரணம்

“எந்த வித திட்டமும் இல்லாதது தான் ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை ஏற்பட காரணம். சரியான திட்டமிடல் இல்லாததே ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட காரணம். இது மத்திய அரசின் தோல்வியாகும்” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியாங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்து 16 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 21 லட்சத்து 57 ஆயிரத்து 538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 457 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 32 லட்சத்து 76 ஆயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 23 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 82 ஆயிரத்து 553 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் பல்வேறு பகுதிகள் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பூசிகள், நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “உலகில் அதிக அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நாடுகளில் இந்தியா முதன்மையானது. அப்படி இருக்கும் போது ஏன் தட்டுப்பாடு ஏற்படுகிறது?. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை நிச்சயம் ஏற்படும் என உங்கள் (மத்திய அரசு) ஆய்விலேயே தெரியவந்துள்ளது. உங்களுக்கு முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடையே 8 முதல் 9 மாதங்கள் இருந்துள்ளது. அந்த இடைவெளியை நீங்கள் (மத்திய அரசு) புறக்கணித்துவிட்டீர்கள். உங்களுக்கு நேரம் இருந்தது. இன்று 2,000 லாரிகள் மட்டுமே நாட்டின் அனைத்து பகுதிக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன. ஆக்சிஜன் நம்மிடம் உள்ளது. ஆனால், அது எங்கு தேவைப்படுகிறதோ அங்கு சென்று சேர முடியாத சூழல் உள்ளது மிகவும் துயரமான நிகழ்வாகும்.

கடந்த 6 மாதத்தில் 11 லட்சம் ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இன்று நாம் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறோம். கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மத்திய அரசு 6 கோடி கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அந்த நேரத்தில் 3 முதல் 4 கோடி இந்தியர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது ஏன்? மோசமான திட்டமிடலே நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட காரணம். எந்த வித திட்டமும் இல்லாதது தான் ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை ஏற்பட காரணம். சரியான திட்டமிடல் இல்லாததே ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட காரணம். இது மத்திய அரசின் தோல்வியாகும்” என்று கூறினார்.

Comments (30)

Be the first to comment

ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தமிழக அரசு சார்பாக ஆர்டர் செய்யப்பட்டுள்ள ஒன்றரை கோடி தடுப்பூசிகள் வந்தால் தான் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து ஆம்புலன்ஸ் எண்ணிக்கை உயர்த்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி தட்டுபாடு காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயம் செய்வதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Comments (30)

Be the first to comment

கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், பல கருத்து திணிப்புகளை வென்று அதிமுக இமாலய வெற்றி பெற்றிருக்கிறது என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக ஆட்சியை பிடிக்கும் என செய்திகள் வெளியிடப்பட்டன.

இதுகுறித்து, சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கருத்துக்கணிப்புகள் எந்த காலத்திலும் எடுபடாத ஒரு விஷயம் என்றும், எந்த காலத்திலும் இல்லாத மகத்தான வெற்றியை இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் கூறியுள்ளார்.

Comments (30)

Be the first to comment

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இன்று மதியம் 2.30 மணிக்கு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் சிரமப்பட்டதோடு, வாகனங்கள் மழை நீரில் மிதந்தது.

ஒரு பக்கம் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மறுபக்கம் மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

Comments (30)

Be the first to comment
இந்தியாவில் கொரோனா பரவில் அதிகரித்து வரும் நிலையில், “ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள்

இந்தியாவில் கொரோனா பரவில் அதிகரித்து வரும் நிலையில், “ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள்” என ஐபிஎல் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒரு நாளைக்கு 3 லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இந்த களேபரத்துக்கு மத்தியில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஸம்பா, கேன் ரிச்சர்டுசன் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ளனர். அண்மையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த ஆண்ட்ரூ டை ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

இதனிடையே, இந்தியாவுடனான நேரடி விமான சேவைக்கு மே 15ம் தேதி வரை தடை விதித்து ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், இந்தியாவில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ஐபிஎல் சிஓஓ ஹேமங்க அமின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள் என நிர்வாகம் உறுதியளிக்கிறது. ஐபிஎல் தொடருக்கு பின் வீரர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ கவனித்துக் கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

வீரர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். இனி வீரர்களுக்கு 5 நாட்களுக்கு பதில் 2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கப்படும். ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையான நோக்கம். ஒவ்வொரு முறையும் ஜெயிப்பதற்காக விளையாடும் நீங்கள் இம்முறை மனிதநேயத்திற்காக விளையாடுகிறீர்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

Comments (30)

Be the first to comment
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வீட்டிலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்தியாவில் தற்போது பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் இன்று 62,258 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தவர்களைவிட புதிய தொற்று பாதிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30, 386 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதுவரை 5.81 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் 291 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த எண்ணிக்கை 1.61 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போது வரை 4,52,647 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் எனது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா இல்லை என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்திய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விளையாடினார். இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவு உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றார். தற்போது சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Comments (30)

Be the first to comment
சென்னையில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில்

சென்னையில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் சரிந்த நிலையில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இங்கிலாந்து அணிக்கு 481 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 161 ரன்களும் ரகானே 67 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மோயின் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, அஸ்வினின் மாயாஜால சுழலில் சிக்கியது. 59.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பந்து வீச்சில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை அள்ளினார். 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்தது.

3ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். எனினும் விராட் கோலி ஒருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் ரிஷப் பண்ட், ரஹானே என முன்னணி வீரர்கள் வெளியேறியதால், இந்திய அணி 86 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த அக்சர் படேலும் 7 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து 7-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய அஸ்வின், விராட் கோலிக்கு நல்ல கம்பெனி கொடுத்தார். குறிப்பாக அஸ்வின் துரிதமாக ரன் சேர்த்தார். விராட் கோலி, அஸ்வின் ஆகிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினர். விராட் கோலி 62 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் அஸ்வின் அதிரடியாக விளையாடி தனது 5வது சதத்தை நிறைவு செய்தார். இவர் 134 பந்தில் 103 ரன்கள் விளாசினார். முடிவில் இந்திய அணி 286 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. அஸ்வின் 106 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து, இங்கிலாந்து அணி 481 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து, 482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. முதல் டெஸ்ட்டில் தோல்வியை தழுவிய இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Comments (30)

Be the first to comment
பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில 336 ரன்கள் எடுத்தது. 33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. முகமது சிராஜியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி 294 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதையடுத்து, இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷுப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினர். இந்தியா 1.5 ஓவரில் 4 ரன்கள் எடுத்திருக்கும்போது நேற்றைய 4-வது நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணியின் ஸ்கோர் 18 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 21 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். ஒரு பக்கம் புஜாரா நிலைத்து நிற்க மறுபக்கம் ஷுப்மான் கில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ரன்கள் விளாசினார். அவர் 90 பந்தில் அரைசதம் அடித்தார். இவரது அரைசதத்தாலும், புஜாராவின் நிதான ஆட்டத்தாலும் இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது 62 ஓவர்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் தேவையிருந்தது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஷுப்மான் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாராவும் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷுப்மான் கில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 132 ரன்கள் எடுத்திருந்ததது. அடுத்து வந்த ரஹானே தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாட முடிவு செய்தார். இதனால் 22 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்தியா தேனீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது, வெற்றிக்கு குறைந்தது 37 ஓவரில் 145 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. கைவசம் 7 விக்கெட் இருந்த நிலையில் இந்திய அணி தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டத்தை தொடங்கியது. ரிஷப் பண்ட், புஜாரா அபாரமாக விளையாடினர். அரைசதம் அடித்த புஜாரா 211 பந்தில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் ரிஷப் பண்ட் 100 பந்தில் அரைசதம் அடித்தார்.

புஜாரா ஆட்டமிழந்த பிறகு மயங்க் அகர்வால் களம் இறங்கினார். ஒருபக்கம் அடித்தும் விளையாட வேண்டும். அதேசமயம் விக்கெட்டும் இழக்கக் கூடாது என்ற நிலை ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்டது. மயங்க் அகர்வால் 9 ரன்னில் வெளியேற ரிஷப் பண்ட்-க்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி 8 ஓவரில் 50 ரன்கள் தேவைப்பட்டன. கம்மின்ஸ் பந்தில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கை ஊட்டினார். இதனால் கடைசி 7 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டன. 7-வது ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. இதனால் 6 ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டன. 6-வது ஓவரில் 9 ரன்கள் கிடைத்தன.

கடைசி 5 ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. 5-வது ஓவரை நாதன் லயன் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் வாஷிங்டன் சுந்தர் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி ஆட்டமிழந்தார். என்றாலும் அவர் 29 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். அடுத்து ஷர்துல் தாகூர் களம் இறங்கினார். இந்த ஓவரில் ஐந்து ரன்கள் கிடைத்தன. கடைசி 4-வது ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டன. 4-வது ஓவரை ஹசில்வுட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பண்ட் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தில் ஷர்துல் தாகூர் ஆட்டமிழந்தார். கடைசி பந்தை ரிஷப் பண்ட் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 1988க்கு பின் பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரோலியா அணி தோற்றது இல்லை என்ற சாதனையை தற்போது தகர்த்துள்ளது இந்திய அணி.

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 2-வது இடத்திற்கு முன்னேறியது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஆலன் பார்டர் – சுனில் கவாஸ்கர் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. கோப்பையை இந்திய அணி கேப்டன் ரஹானே பெற்றுக் கொண்டார். அதை பெற்றுக்கொண்ட ரஹானே நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி நடராஜன் கோப்பையை ஏந்தி நிற்க இந்திய அணி வீரர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். இந்தத் தொடரில் அறிமுகமாகி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய டி நடராஜனிடம் ரஹானே கோப்பையை ஏந்தச் சொன்னது மெய்சிலிர்க்க வைத்தது.

tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

 

இதனிடையே, வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 5 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ள பிசிசிஐ. பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆஸ்திரேலியாவில் நடந்த இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கண்டு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். வெற்றிதான் அவர்களுடைய இலக்காக இருந்ததால் அதற்கான திடமான மன உறுதியும் வெளிப்பட்டது. அணிக்கு வாழ்த்துக்கள்! உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துகள். இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது” என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆஸ்திரேலியாவில் அருமையான டெஸ்ட் தொடர் வெற்றிக்கு #TeamIndiaக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்று வெற்றிக்கு ஒவ்வொரு வீரரும் பங்களிப்பு செய்வதால் அணிப் பணியின் முக்கியத்துவத்தை இறுதிப் போட்டி எடுத்துக்காட்டுகிறது. எங்கள் இளம் வீரர்களின் அற்புதமான செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சி!” என்று கூறியுள்ளார்.

Comments (30)

Be the first to comment
கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வருந்துகிறேன் நண்பா! திரையில் ஒளிகொண்டு சிலை செதுக்கினாய்! வாஜி வாஜி பாடலை ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்! என் எத்தனையோ பாடல்களை ரத்தினமாய் மாற்றினாய்! இதோ உனக்கான இரங்கல்பாட்டை எங்ஙனம் படம் செய்வாய்? விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்! ஒளியாய் வாழ்வாய் இனி நீ” என்று கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை 3 மணியளவில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மரணம் அடைந்த கே.வி.ஆனந்த்தின் மருத்துவமனையில் இருந்து பெசன்ட்நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பல முன்னனி இயக்குநர்களின் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.வி.ஆனந்த், கடந்த 1995ம் ஆண்டு, ‘தென்மாவின் கொம்பத்து’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காக, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். இவரது இயக்கத்தில் வெளியான அயன், கோ, அனேகன், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி” என்று கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வருந்துகிறேன் நண்பா!
திரையில்
ஒளிகொண்டு
சிலை செதுக்கினாய்!
வாஜி வாஜி பாடலை
ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!
என்
எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்!
இதோ
உனக்கான இரங்கல்பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்?
விதவையான கேமரா
கேவிக்கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்!
ஒளியாய் வாழ்வாய்
இனி நீ” என்று கூறியுள்ளார்.

Comments (30)

Be the first to comment
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 2 லட்சம் ரூபாய் அபராதத்துடன் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 2 லட்சம் ரூபாய் அபராதத்துடன் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நடிகர் விவேக் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வண்ணம் தடுப்பூசி போட்டுக்கொண்டு பேட்டி அளித்தார். மறுநாள் வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது திடீர் உயிரிழப்பு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டதால்தான் விவேக் உயிரிழந்தார் என்று நடிகர் மன்சூர் அலிகான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து அவர் மீது சென்னை கோடம்பாக்கம் மண்டல சுகாதார அலுவலர் பூபேஷ் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீஸார் மன்சூர் அலிகான் மீது பொது அமைதியை கெடுத்தல், தொற்கு நோயை பரப்பும் எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சர்ச்சைப் பேச்சில் சிக்கிய வழக்கில் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனுவை சென்னை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்தார். அந்த மனுவில், என்னை அறியாமல் பேசிவிட்டேன். எனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம், 2 லட்சம் அபராதம் விதித்ததோடு, இந்த தொகையை தடுப்பூசி வாங்க சுகாதாரத்துறைக்கு தர உத்தரவிட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பவோ, பதற்றத்தை ஏற்படுத்தவோ கூடாது என்றும் கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர் நிலையை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கியது.

Comments (30)

Be the first to comment
நடிகர்கள் சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது

நடிகர்கள் சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவில் அதிகரித்து வரும் நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லை, கோவை, திருப்பூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பெரிய நடிகர்களான சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோர் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகின்றனர்.

பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 40வது படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழகத்தில்தான் இந்த படப்பிடிப்புகள் நடந்து வந்தன. 100 பேருக்கு மேல் படப்பிடிப்பில் அனுமதிக்கப்படவில்லை. இந்த சூட்டிங்கில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.  இந்த படங்கள் அனைத்தும் 50 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் சினிமா தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த நிலையில், தற்போது பெரிய நடிகர்களின் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Comments (30)

Be the first to comment
இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.

இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மட்டும் நாடு முழுவதும் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,73,13,163 ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரொனா பாதிப்பின் எண்ணிக்கை நேற்றைய தினத்தில் 15 ஆயிரத்தைக் கடந்தது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவர் ஆண் தேவதை, ரெட்டசுழி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு சில தினங்களாக அசோக் நகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று காலை மூச்சுத்திணறல் அதிகமாகி உயிரிழந்தார்.

இரட்டைச்சுழி படத்தில் இயக்குநர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா இருவரையும் ஒன்றாக இயக்கிய தாமிரா, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆண் தேவதை படத்தை இயக்கியிருந்தார். சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் நடித்திருந்த அந்தப் படத்திற்கு சரியான தியேட்டர் கிடைக்காமல் 3 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் தள்ளிப்போனது. பின்னர் ஒருவழியாக வெளியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கொரோனா தொற்றால் இயக்குநர் இறந்திருப்பது தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments (30)

Be the first to comment

கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், பல கருத்து திணிப்புகளை வென்று அதிமுக இமாலய வெற்றி பெற்றிருக்கிறது என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக ஆட்சியை பிடிக்கும் என செய்திகள் வெளியிடப்பட்டன. இதுகுறித்து, சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கருத்துக்கணிப்புகள் எந்த காலத்திலும் எடுபடாத ஒரு விஷயம் என்றும், எந்த காலத்திலும் இல்லாத மகத்தான வெற்றியை இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் கூறியுள்ளார்.

Comments (30)

Be the first to comment
நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த விவேக்கிற்கு கடந்த 16ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 17ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, நடிகர் விவேக் மரணமடைந்த அன்று நடிகர் விஜய் படப்பிடிப்பிறாக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றிருந்ததால் அவரால் விவேக்கின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமுடியவில்லை. இதற்கிடையில், படப்பிடிப்பு முடிந்து ஜார்ஜியாவில் இருந்து நடிகர் விஜய் நேற்று சென்னை திரும்பினார்.

இந்தநிலையில், ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய் இன்று காலை மறைந்த நடிகர் விவேக்கின் வீட்டிற்கு சென்றார். அங்கு நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை சந்தித்த நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். நடிகர் விஜய்யுடன், நடிகர் விவேக் ஏராளமான படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Comments (30)

Be the first to comment
மெல்போர்னில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி

மெல்போர்னில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 195 ரன்னில் ஆட்டம் இழந்தது.

பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. மழை பெய்ததால் முன்கூட்டியே 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. ரஹானே 104 ரன்களுடனும், ஜடேஜா 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 3 ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரஹானே 112 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஜடேஜா 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணியைவிட இந்திய அணி 131 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக நாதன் லைன், ஸ்டார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும், ஹேசில் வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். பின்னர் வந்த மார்னுஸ் 28 ரன் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்தில் வீழ்ந்தார். ஸ்மித் 8 ரன்னில் பும்ரா பந்திலும், ட்ராவிஸ் 17 ரன்னில் சிராஜ் பந்திலும், டேம் 1 ரன்னில் ஜடேஜா பந்திலும் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக மேத்யூ 40 ரன்கள் எடுத்தார். 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது இந்திய அணியை விட 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. நாளை 4வது நாள் ஆட்டம் தொடர்கிறது. முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற அதிக முனைப்பு காட்டி வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments (30)

Be the first to comment
கொரோனா, நடிகர் பாண்டு, மரணம், சென்னை. Corona, actor Pandu, death, Chennai

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் உயிரிழந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பின் காரணமாக நிலையில், தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான பாண்டு (74), அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டு உயிரிழந்தார். அவரது மனைவி குமுதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாண்டு- குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார். அதிமுக கொடியை வடிவமைத்ததும் பாண்டுதான்.

நகைச்சுவை குணச்சித்திர நடிகர் பாண்டு அவரது பேச்சு, சிரிப்பு மற்றும் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அவரது திடீர் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் குடும்பத்தினரிடம் காண்பிடிக்கப்பட்டு பின்னர் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவின் சோகம் மறைவதற்குள் பாண்டு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments (30)

Be the first to comment

மளிகை, காய்கறி, டீ கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் என்ற அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகிறது. 12 மணிக்கு மேல் வெளியில் பொதுமக்கள் சுற்றினால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் அபராதம் விதிக்கவும் காவல்துறையினர் தயாராக இருக்கிறார்கள்.

தமிழகத்தில் கொரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்தையும் தாண்டி, பதிவாகி வருகிறது. இதேபோல இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுப்பதற்காக அரசு இன்று முதல் வரும் 20ம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

* அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கவேண்டும்.

* பயணிகள் ரெயில், மெட்ரோ ரெயில், தனியார் பஸ்கள், அரசு பஸ்கள் மற்றும் வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்கவேண்டும்.

* வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி பகல் 12 மணி வரை இயங்கலாம். இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.

* மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்படும்.

* மீன், இறைச்சி கடைகளில் காலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கவேண்டும்.

* டீ கடைகள் பகல் 12 மணி வரை மட்டும் செயல்படும். உணவகங்கள், டீ கடைகளில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை. உணவு விடுதிகள், ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் மெஸ் ஆகிய இடங்களில் இருந்து உணவு பார்சல்களை மட்டுமே பெற்றுக்கொள்ளமுடியும். அந்த வகையில் அங்கிருந்து காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல்களை பெற்றுக்கொள்ளலாம். விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்கவேண்டும்.

* உள்அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் செயல்படாது.

* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.

* ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள் (ஸ்பா) இயங்க தடை விதிக்கப்படுகிறது.

* அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம், ரெயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.

* ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.

* பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்படும்.

* தடையின்றி தொடர்ந்து செயல்படவேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்களில் இரவு நேர பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

* தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், இரவு நேரப் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* தரவு மையங்களில் (டேட்டா சென்டர்) பராமரிப்பு பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ளலாம்.

* கிடங்குகளில், சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* இரவு நேர ஊரடங்கின் போதும், ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் போதும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்.

அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 12 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே சுற்றினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதோடு, அபராதம் விதிக்க காவல்துறையினர் தயாராக இருக்கின்றனர்.

Comments (30)

Be the first to comment
முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு, கொரோனா, தமிழக மக்கள், TNCMStalin, Chief Minister Stalin, Tamil Nadu, Corona, Tamil Nadu people, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நாளை பதவி ஏற்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததும் 3 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாகும். ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தை கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி முதல் செயல்படுத்த இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் நாளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். அதன் பிறகு கோட்டைக்கு செல்லும் ஸ்டாலின், முதல்வர் இருக்கையில் அமர்ந்ததும் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திடுவார் என்று தெரிகிறது. இந்த திட்டம் ஜூன் 3ம் தேதி தொடங்குவதாக இருந்தாலும் அதற்கு சில நடைமுறைகள் உள்ளதால் இப்போதே கையெழுத்திட்டால்தான் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என்பதால் அதில் கையெழுத்திடுவார் என தெரிகிறது.

தமிழகம் முழுவதும் டவுன் பஸ்களில் (நகர பேருந்து) பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அதற்கான கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திடுவார் எனவும் தெரிகிறது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையாகத் தற்போது வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்துவதுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கும் அவர் கையெழுத்திடுவார் என தெரிகிறது. இது தவிர பல்வேறு முக்கிய அறிவிப்புகளிலும் அவர் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (30)

Be the first to comment
ஸ்டாலின், தமிழக அமைச்சரவை பட்டியல், அன்பில் மகேஷ், துரைமுருகன், பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், Stalin, Tamil Nadu Cabinet List, Anbil Mahesh, Thuraimurugan, Ponmudi, Anita Radhakrishnan, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து 34 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியனும், பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் நாளை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவிபிரமாணம் எடுக்க இருக்கிறார். நீண்ட கால எதிர்பார்ப்புக்கு கிடைத்த பதிலாக திமுக ஆட்சியமைக்கும் நிலையில் தற்போது அடுத்த எதிர்பார்ப்பாக மாறியிருந்தது அமைச்சரவை பற்றியதுதான். புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பெறப் போகிறார்கள்? யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்? யாருக்கு மறுக்கப்படும்? யாருக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என அடுத்தகட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டிருந்த நிலையில் தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் விவரம்.

1) மு.க.ஸ்டாலின் முதல்வர் - பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத்திறனாளிகள் நலன்.

2) துரைமுருகன் (நீர்வளத்துறை அமைச்சர்) - சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுசீட்டுடுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.

3) கே.என்நேரு (நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்) - நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்

4) இ.பெரியசாமி (கூட்டுறவுத்துறை அமைச்சர்) - கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலன்

5) க.பொன்முடி (உயர்கல்வித்துறை அமைச்சர்) - உயர்கல்வி உள்ளிட்ட தொழிற்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல்

6) எ.வ.வேலு (பொதுப்பணித்துறை அமைச்சர்) - பொதுப்பணிகள் (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)

7) எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர்) - வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக் கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத்தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு.

8) கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (வருமாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்) - வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை

9) தங்கம் தென்னரசு (தொழில்துறை அமைச்சர்) - தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் பல தமிழ்ப் பண்பாட்டுத்துறை, தொல்பொருள்

10) எஸ்.ரகுபதி (சட்டத்துறை அமைச்சர்) - சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்

11) முத்துசாமி (வீட்டு வசதித்துறை அமைச்சர்) - வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு நகரத்திட்டமிடல் நகர் பகுதி வளர்ச்சி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்

12) கே.ஆர்.பெரியகருப்பன் (ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர்) - ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள்

13) தா.மோ.அன்பரன் (ஊரகத் தொழிற்துறை அமைச்சர்) - ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்

14) மு.பெ.சாமிநாதன் (செய்தித்துறை அமைச்சர்) - செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்

15) பி.கீதா ஜீவன் ( சமூக நலன்- மகளிர் உரிமைத்துறை அமைச்சர்) - மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்

16) அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (மீன்வளம்- மீனவர் நலத்துறை மற்றும் காவல்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்) - மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் காவல்நடை பராமரிப்பு
17) ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (போக்குவரத்துறை அமைச்சர்) - போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்

18) கா.ராமச்சந்திரன் (வனத்துறை அமைச்சர்) - வனம்

19) அர.சக்கரபாணி (உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்) - உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு

20) வி.செந்தில் பாலாஜி (மின்சாரத்துறை அமைச்சர்) - மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசணடு (மொலாசஸ்)

21) ஆர்.காந்தி (கைத்தறித்துறை அமைச்சர்) - கைத்தறி மற்றும் துணிநூல், கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்

22) மா.சுப்பிரமணியன் (சுகாதாரத்துறை அமைச்சர்) - மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்

23) பி.மூர்த்தி (வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்) - வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு

24) எஸ்.எஸ்.சிவசங்கர் (பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்

25) பி.கே.சேகர்பாபு (இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்) - இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்

26) பழனிவேல் தியாகராஜன் ( நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை) - நிதித்துறை, திட்டம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள்

27) சா.மு.நாசர் (பால்வளத்துறை அமைச்சர்) - பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி

28) செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்) - சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வஃக்ப் வாரியம்

29) அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

30) சிவ.வீ.மெய்யநாதன் (சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்) - சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை

31) சி.வி.கணேசன் (தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்) - தொழிலாளர்கள் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும ஊரக வேலைவாய்ப்பு

32) த.மனோ தங்கராஜ் (தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்) - தகவல் தொழில்நுட்பத்துறை

33) மா.மதிவேந்தன் - சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

34) என்.கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்) - ஆதிதிராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்

Comments (30)

Be the first to comment
நடிகர் பாக்யராஜ், பூர்ணிமா, கொரோனா, சாந்தனு, Actor Bhagyaraj, Poornima Bhagyaraj, Corona, Shantanu Bhagyaraj

இயக்குநர் கே.பாக்யராஜ், அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவரது மகன் சாந்தனு தெரிவித்துள்ளார்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகில் பல்வேறு பிரபலங்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். நேற்று நடிகர் பாண்டு உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் விவேக், மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த நிலையில், முன்னணி இயக்குநரான கே.பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவரது மகன் சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சாந்தனு தனது ட்விட்டர் பதிவில், "என் பெற்றோர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எங்கள் பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம். கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்" என்று கூறியுள்ளார்.

சாந்தனுவின் டுவீட்டைத் தொடர்ந்து, கே.பாக்யராஜ் விரைவில் பூரண நலம்பெற பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Comments (30)

Be the first to comment
முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர், முகஸ்டாலின், கொரோனா நிவாரணம், மகளிர், Chief Minister Stalin, Tamil Nadu Chief Minister, Mkstalin, Corona Relief, TNWomens

தமிழக முதல்வராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், கொரோனா நிவாரண தொகை, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பால் விலை குறைப்பு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும் பொதுமக்களுக்கு கட்டணம் உள்பட 5 முக்கிய அரசாணைகளை பிறப்பித்துள்ளார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன், இன்று (07.05.2021) காலை தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். முதல்வராக பொறுப்பேற்றவுடன் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார். அவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையிலும் அமைந்திருக்கின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு:

கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் முதல்வர் ஸ்டாலின் கையொப்பமிட்டார்.

தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.5.2021 முதல் குறைத்து விற்பனை செய்ய முதல்வர் அரசாணை பிறப்பித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.

முதல்வர் தேர்தல் பரப்புரையின் போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், “உங்கள் தொகுதியில் முதல்வர்” என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

Comments (30)

Be the first to comment
CMSTALIN, ChiefMinisterMKStalin. முகஸ்டாலின் எனும்நான் ,முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், TNGovt

`முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பின்னர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அமைச்சராக பதவியேற்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அதைத்தொடர்ந்து முதல்வராக மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன் பதவி ஏற்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா இன்று எளிமையான முறையில் நடைபெற்றது. பதவிஏற்பு விழா அரங்கத்திற்கு வந்த ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து பதவி ஏற்க உள்ள அமைச்சர்களை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு பதவி பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்து வைத்தார். அப்போது, `முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, மு.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

இதையடுத்து, துரைமுருகன் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பதவி ஏற்றுகொண்டார். பின்னர் கே.என். நேரு., ஐ.பெரிய சாமி, பொன்முடி, எ.வ.வேலு. தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் உள்பட 33 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அவருடன் மநீம கட்சிகளின் நிர்வாகிகளில் ஒருவரான பொன்ராஜும் பங்கேற்றுள்ளார். அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்றள்ளார். மேலும் அவருடன் தனபால், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் அதிமுக சார்பிலும், பாஜக சார்பில் மூத்த தலைவர் இல.கணேசனும் பங்கேற்றுள்ளனர்.


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ப.சிதம்பரம், முத்தரசன், காதர் மொய்தீன், வேல்முருகன், ஈஸ்வரன், அழகிரியின் மகன் துரைதயாநிதி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

Comments (30)

Be the first to comment
வைகோ, முகஸ்டாலின், தமிழக முதல்வர் ஸ்டாலின், மதிமுக, திமுக, Vaiko, Mkstalin, Tamil Nadu Chief Minister Stalin, MDMK, DMK

தமிழகத்தில் பொற்கால ஆட்சி தொடங்கிவிட்டது என்று கூறியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "அனைவருடைய எதிர் பார்ப்புகளையும் விஞ்சி, ஆட்சி புரிந்து புகழ் பெறுவார்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று காலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்ற பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கின்ற ஐந்து அறிவிப்புகளும், மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருக்கின்றது. பொற்கால ஆட்சி தொடங்கி விட்டது என்ற நம்பிக்கையை விதைத்து இருக்கின்றது.

கொரோனா பாதிப்புகளை ஈடுகட்ட உதவியாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.4000 தருவதாக உறுதிமொழி கூறியபடி, முதல் தவணையாக, இந்த மாதமே ரூ 2000 வழங்குவதாக அறிவித்து இருக்கின்றார். ஆவின் பால் விலை, லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து இருப்பது, குழந்தைகளில் வயிற்றில் பால் வார்த்து இருக்கின்றது.

நாளை முதல், அனைத்து மகளிரும், சாதாரண கட்டணப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்; தனியார் மருத்துவமனைகளில் கொரோனா மருத்துவம் பெறுவோருக்கு ஆகின்ற செலவுகளை, முதல் அமைச்சரின் காப்பு ஈட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக அரசே செலுத்தும்; மக்கள் தெரிவிக்கின்ற குறைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுத்துச் சீர் செய்திட, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டம் தொடங்கப்படுகின்றது; அதற்குப் பொறுப்பாளராக ஒரு ஐஏஎஸ் அதிகாரி செயல்படுவார் என்ற ஐந்து அறிவிப்புகளின் மூலம், எடுத்த எடுப்பிலேயே நடுநிலையாளர்களின் மனதைக் கவர்ந்து கொண்டார். எதிரிகள் வட்டாரம் திடுக்கிட்டுப் போயிருக்கின்றது.

தமிழ்நாட்டில் ஐந்து என்பதற்கு ஒரு சிறப்பு உண்டு. நிலம், நீர், காற்று நெருப்பு, வெளி இவற்றையே இயற்கையின் அமைப்பாக வகுத்து இருக்கின்றனர். தமிழ் இலக்கியங்களில், ஐம்பெருங் காப்பியங்கள் தனிச்சிறப்பு பெற்றவை. அறிஞர் அண்ணா மறைந்தபிறகு, திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில், தி.மு.கழகத்தின் அடிப்படைக் கொள்கைகள் என, ஐந்து முழக்கங்களைக் கலைஞர் எழுப்பினார். அந்த வரிசையில், இன்றைய ஐந்து அறிவிப்புகளும் இடம் பெறுகின்றன. இனி ஐந்து ஆண்டுகளும் பொற்கால ஆட்சியாக இருக்கும் என்பதற்கு அடையாளம் இது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவருடைய எதிர் பார்ப்புகளையும் விஞ்சி, ஆட்சி புரிந்து புகழ் பெறுவார்" என்று கூறியுள்ளார்.

Comments (30)

Be the first to comment
தமிழ்நாடு, கொரோனா, முதல்வர் ஸ்டாலின், காய்கறி கடைகள், மளிகை கடைகள், Tamil Nadu, Corona, Chief Minister Stalin, vegetable shops, grocery stores

தமிழகத்தில் மே 10ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நாட்களில் காய்கறி கடைகள், மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 2021 முதல் தொடர்ந்து கோவிட் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. அண்மைக் காலங்களில் இந்திய அளவில் நாளொன்றுக்கு நான்கு லட்சத்தைத் தாண்டியும் பதிவாகி உள்ளது. குறிப்பாக, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா, உத்தரப்பிரதேசம், டெல்லி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் நோய்த்தொற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் படிப்படியாக இந்த நோய்த்தொற்று, பிப்ரவரி மாதக் கடைசியில் நாளொன்றுக்கு 450 என்ற நிலை மாறி தற்பொழுது நாளொன்றுக்கு 26,000 க்கும் மேல் பதிவாகி வருகிறது. 23-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்த்தொற்று உறுதியாகும் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10 விழுக்காட்டிற்கும் மேல் உள்ளது. தமிழ்நாட்டில் 07.05.2021-ம் நாள் கணக்கீடுபடி, தற்போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.35 லட்சமாக உள்ளது. தற்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளிமாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை, மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களது பரிந்துரையின் அடிப்படையிலும், மத்திய அரசின் உள் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படியும், கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ், தற்போது 01.05.2021 முதல் தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட சில செயல்பாடுகளுக்கான தடை மற்றும் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்படுகிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, 06.05.2021 காலை 4 மணி முதல் 20.05.2021 காலை 4 மணி முடிய பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. நான் நேற்று (07.05.2021) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் நடத்திய ஆய்வுக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்தும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள் துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், 10.05.2021 காலை 4 மணி முதல் 24.05.2021 காலை 4 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கின் போது, பின்வரும் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

* மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை
தொடரும்.

* வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் இரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணியர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை (e-Registration) தொடர்ந்து செயல்படுத்தப்படும். (https://eregister.tnega.org).
இரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணிகள் சென்று வர, பயணச் சீட்டுடன் அனுமதிக்கப்படும்.

* 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள் (Big format Shops), வணிக வளாகங்கள் (Shopping Complex & Malls) இயங்க 26.04.2021 முதல் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

Dunzo போன்ற மின் வணிக நிறுவனங்கள் ((e-commerce) மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

* முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது.

* அனைத்து உணவகங்களிலும் (Restaurants/Hotels/ Mess) பார்சல் சேவை (Take away service) வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர்கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் (Hotels and Lodges) தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

* தங்கும் விடுதிகள் (Hotels and Lodges) செயல்பட அனுமதி இல்லை. எனினும், வணிக காரணங்களுக்காக தங்கும் வாடிக்கையாளர்களுக்காகவும், மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

* உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

* ஏற்கெனவே அறிவித்தபடி, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.

* மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் (Beauty Parlour, Haircutting Saloons, Spas) இயங்க தடை விதிக்கப்படுகிறது.

* அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள், பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.

* கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் செயல்பட தடை தொடர்கிறது. அதே போன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடையும் தொடர்கிறது.

* அத்தியாவசிய துறைகளான, தலைமைச் செயலகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, காவல்துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிருவாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறைகள், வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலகங்கள் தவிர, மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. துறைத் தலைவர்கள் பணியாளர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்.

* அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. விதி விலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. வீட்டில் இருந்தபடி பணியாற்றும் முறையை அவை பின்பற்றலாம்.

* அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள் / பிரார்த்தனைகள் / சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை. குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை.

* நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.

* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

* பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

* பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், கோடைக்கால முகாம்கள் ஆகியவை இயங்க அனுமதி இல்லை.

* நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சி சங்கம் / குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை.

* மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்படுவர்.

* முழு ஊரடங்கின் போது உணவு விநியோகம், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்கள் தவிர மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு அனுமதி இல்லை.

மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் போது கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

*  அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவுத் தபால் சேவை, மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், ஆக்சிஜன் வாயு எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும். வேளாண் உற்பத்திக்கு தேவையான பூச்சிக்கொல்லி, உரம், விதை விற்பனை செய்யும் கடைகள், மாட்டுத்தீவனம் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

* முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. Swiggy, Zomato போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

* அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.

* காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும்.

* நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.

* தன்னார்வலர்கள் வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள்,
நோயுற்றவர்களுக்கான சேவை வழங்குபவர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை / ஆவணங்களுடன் சென்று வர அனுமதிக்கப்படுகிறது.

* நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள்.

* நடைபெற்றுவரும் கட்டடப் பணிகள் அனுமதிக்கப்படும்.

* ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.

* அரசு ஆணை எண்.348, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 20.4.2021-ல் பட்டியலிடப்பட்டுள்ள, தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் / அலுவலர்கள் இந்நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் பேருந்துகளிலோ அல்லது சொந்த வாகனங்களிலோ இந்நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டையுடன் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

* திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 20 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை.

* தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்.

* தரவு மையங்களில் பராமரிப்பு பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* கிடங்குகளில், சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* முழு ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்களில், தீ, இயந்திரம் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* முழு ஊரடங்கின் போது, இரயில் நிலையங்களிலும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்.

* பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

* வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும். இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அக்கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

முழு ஊரடங்கு 10.05.2021 முதல் அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு, பொது மக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக 08.05.2021 (சனிக்கிழமை) மற்றும் 09.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களிலும் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் வழக்கம் போல காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் கூட்டங்களை தவிர்ப்பது உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Comments (30)

Be the first to comment
அன்புமணி, முகஸ்டாலின், தமிழக அரசு, திமுக, பாமக, மின்சார கட்டணம், பொதுமக்கள், கொரோனா, கொரோனா டாக்டவுன், Anbumani, Mkstalin, Tamil Nadu Government , DMK, PMK, Electricity Fee, Public, Corona, Corona Lockdown  ,tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

``தமிழக அரசு அளித்துள்ள ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனாவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள இது தான் சிறந்த வழி'' என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. இது பயனுள்ள நடவடிக்கை!

தமிழக அரசு அளித்துள்ள ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனாவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள இது தான் சிறந்த வழி. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்!

முழு ஊரடங்கு காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு நடப்பு சுழற்சிக்கான இரு மாத மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இது கடந்த காலத்தில் திமுகவும் வலியுறுத்திய கோரிக்கை தான்.

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழக்கும் முடி திருத்துவோர், வாடகை வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத் தொழில் பிரிவினருக்கும் சிறப்பு நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று கூறியுள்ளார்.

Comments (30)

Be the first to comment
கங்கனா ரனாவத், கொரோனா, ACtress Kangana Ranaut, Corona

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

யோகா செய்வது போன்ற புகைப்படத்தும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள கங்கனா ரனாவத், நான் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தேன். கடந்த சில நாட்களாக கண் எரிச்சலும் இருந்தது. இமாச்சல பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் கொரோனா பரிசோதனை செய்தேன்.

இன்று முடிவுகள் பாசிட்டிவ் என வந்துள்ளது. கொரோனா உறுதியானதும் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். நீங்கள் அச்சப்பட்டால் அது மேலும் உங்களை அச்சுறுத்தும். கொரோனாவை அழித்துவிடுவோம். இது ஒரு சிறிய காய்ச்சல் தவிர வேறு ஒன்றும் இல்லை” எனவும் பதிவிட்டுள்ளார்.

Comments (30)

Be the first to comment
கொரோனா, கொரோனா நிவாரணம், பொதுமக்கள், முதல்வர் ஸ்டாலின், Corona, Corona relief, public, Chief Minister Stalin

வரும் 10ம் தேதி முதல் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்றுகொண்டதும் தலைமைச் செயலகம் சென்ற ஸ்டாலின், பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண உதவி ரூ.4,000, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்பட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல் தவணையாக மே மாதம் ரூ.2000 வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனிடையே, வரும் 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு அமலாகும் 10ஆம் தேதி முதல் கொரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "வரும் 10ம் தேதி முதல் கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ரூ.4 ஆயிரம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்,

ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்படும். ரேஷன் கடைகள் ஊரடங்கு காலத்தில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும். இந்த திட்டத்தால் 2.07 கோடி அரிசி அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் 4,153 கோடி செலவிடப்படும். பயனாளிக்கு ரூ.2000 முறையாக போய் சேருகிறதா என்பது கண்காணிக்கும் பொறுப்பு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் முதல் ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனில் குடும்பத் தலைவரின் பெயர், நியாய விலைக் கடையின் பெயர், தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். இப்போதைக்கு அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்" என்று கூறினார்.

Comments (30)

Be the first to comment
முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ், கொரோனா, தமிழ்நாடு லாக்டவுன், அதிமுக, திமுக, Chief Minister Stalin, OPS, Corona, Tamil Nadu Lockdown, AIADMK, DMK

எளியோரின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கபட்டிருப்பதையும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையும் வரவேற்கிறேன் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இச்சூழலில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது நோய் தோற்று பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்திட பேருதவியாக இருக்கும். எளியோரின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கபட்டிருப்பதையும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையும் வரவேற்கிறேன்.

மே 10ம் தேதி முதல் தான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதாலும் இன்றும் , நாளையும் கடைகள் திறந்திருக்கும் என்பதாலும், பொதுமக்கள் அவசரம் கொள்ளாமல் கூட்டம் கூடுதலை தவிர்த்து பொறுமையாக சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம். அரசு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல ஏதுவாக வாடகை கார் மற்றும் ஆட்டோக்கள் 24 மணி நேரம் இயங்குவதே அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேலும் மினி கிளினிக்குகளில் எண்ணிக்கையும் அதில் தற்காலிக மருத்துவர்கள் நியமனத்தையும் அதிகரித்து 24 மணிநேரமும் இயங்க செய்தால் பெரிய அரசு மருத்துவமனைகளில் கூட்டம் குறையும் . நோயாளிகளின் சிரமமும் களையப்படும். கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து கோவிட் 19 தொற்றுக்கு சிகிச்சை அளித்து வருகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் அது சேவையை கௌரவிக்கும் வண்ணம் அரசு ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகை வழங்கி அவர்கள் பணியை ஊக்குவிக்க வேண்டும்.

மருத்துவமனைகளில், தடுப்பூசிகள், மருந்துகள் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்வதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். நோய்த் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து அரசு கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என பொது மக்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Comments (30)

Be the first to comment
தமிழக சட்டப்பேரவை, சபாநாயகர், துணை சபாநாயகர், ஸ்டாலின், எம்எல்ஏக்கள், TamilNadu Assembly, Speaker, Deputy Speaker, Stalin, MLAs, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் 11 ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கின் 3-வது தளத்தில் நடைபெறுகிறது.

அன்றைய தினம் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய பேரவை உறுப்பினர்கள் பேரவையில் பதவியேற்றுக் கொள்கின்றனர். தேர்தல் வெற்றி சான்றிதழை தவறாமல் உறுப்பினர்கள் கொண்டுவர வேண்டும். சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் 12 ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.

Comments (30)

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்