முகக் கவசம்,200 ரூபாயிலிருந்து 500 ,பொது இடங்களில்

பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராத தொகை ரூ.200- யில் இருந்து ரூ.500- ஆக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு கொரோனா தடுப்பு வழிக்காட்டுதல் நெறிமுறைகளை அறிவித்துள்ளது. பொதுவெளியில் வருபவர்கள் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

கொரோனா நடைமுறைகளை கடைப்பிடிக்காத பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள், போலீஸார் தலா ரூ.200 அபராதம் வசூலித்து வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில் முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (30)

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்