சிங்கப்பூர், மலேசியா, விமான சேவை, மத்திய அரசு, முதல்வர் ஸ்டாலின், Singapore, Malaysia, Airlines, Federal Government, Chief Minister Stalin

சிங்கப்பூர், மலேசியாவிற்கு கோவிட் கால விமான போக்குவரத்திற்கான ஒப்பந்தத்தை செய்ய வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், "சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன், கோவிட் கால விமான போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்யவில்லை. இதனால், அந்நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழகத்திற்கு வர விரும்பும் நேரங்களில், நேரடி விமான சேவையில்லை. இதனால், துபாய், தோகா மற்றும் கொழும்பு மார்க்கமாக மாற்றுப்பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளதால், பல்வேறு பிரச்னைகளுடன், அதிக விமானக்கட்டணங்களை செலுத்த வேண்டி உள்ளது.

அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு தற்காலிக விமான சேவைகளை வழங்க, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுடன் இடையே, தற்காலிக கோவிட் கால விமான போக்குவரத்து ஏற்பாடுகள் ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.


மற்ற செய்திகள்...
Comments (30)

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்