வேளாண் சட்டம், மக்களவை, வேளாண் ரத்து சட்டம், நாடாளுமன்றம், farm bill, Lok Sabha, Farm Laws Repeal Bill 2021

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேறியது.

ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் தீவிரமானதைத் தொடர்ந்து, 3 சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என ஒன்றிய அரசு அறிவித்து இருந்தது .

இதுதவிர, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது, வேலையில்லா திண்டாட்டம், புதிய வகை வைரசால் மீண்டும் கொரோனா பீதி அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமாக்க வேண்டுமென விவசாயிகள் 6 புதிய கோரிக்கைகள் விடுத்திருப்பது என பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று காலை கூடியது.

இன்றைய முதல் நாள் கூட்டத்தொடரிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து செய்யும் மசோதாவை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து வேளாண் சட்ட ரத்து மசோதாவை விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும் வேளாண் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே வேளாண் சட்டங்கள் ரத்து செய்யும் மசோதா, நிறைவேற்றப்படுவதற்கு முன், எந்தவொரு விவாதத்தையும் அனுமதிக்கும் வகையில், அமைதி காக்கும்படி எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார்.

Comments (30)

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்