கரூர் கலெக்டர், மாற்றுத்திறனாளிகள், ஜோதிமணி, காங்கிரஸ், Karur Collector, Disabled, Jyoti Mani, Congress

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை கண்டித்து ஜோதிமணி எம்.பி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியருக்கு அவர் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்படும் நிதி தொகுதியிலுள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த கூட்டம் கரூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக நடத்தப்படவில்லை என்றும், மேலும் கூட்டம் நடத்த வலியுறுத்தியும் இதுவரை கூட்டம் நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி எம்.பி இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தரையில் அமர்ந்து மனுவை வாங்கி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டாத நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே, ஜோதி மணி தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் எனது கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6800 கிராமங்களில் 6300 கிராமங்களுக்கு போய் மக்களை சந்தித்திருக்கிறேன். உதவி கேட்டு மனு கொடுத்த ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையை கண்டு அதிர்ந்துபோனேன். தேவை இருக்கிறது என்று தெரியாமலா இந்த திட்டத்தை கேட்டு வாங்கியிருப்பேன்?

ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்த மறுக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளதா? எதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் இப்படியொரு பதில் கடிதம் கொடுக்கிறார்?. ஒன்றிய அரசின் திட்டமானாலும், தமிழக அரசின் திட்டமானாலும் அடிப்படையில் மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படுவதுதான். கரூருக்கு ஒன்றிய அரசின் திட்டம் இப்பொழுது தேவையில்லை என்று எதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முடிவுக்கு வந்தார்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

 


மற்ற செய்திகள்...
Comments (30)

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்