சூரப்பா, அண்ணா பல்கலைக்கழகம், தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றம், Surappa, Anna University, TamilNadu Government, Chennai High Court

அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகாரில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டுமென தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா இருந்த போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதைய அதிமுக அரசு அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. கலையரசன் விசாரணையை எதிர்த்து சூரப்பா தொடர்ந்த வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் மேல்நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது.

கலையரசன் ஆணைய அறிக்கையும் கடந்த விசாரணையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு மீண்டும் நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநரே சூரப்பா விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார். அதற்கான ஆணையத்தின் அறிக்கையை ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாகவும் கூறினார். இதையடுத்து விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்