தமிழ்நாடு, கொலை, கொள்ளை, சிறுவர்கள், என்.சி.ஆர்.பி, Tamil Nadu, Murder, Robbery, Children, NCRP

தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்து விட்டதாக என்.சி.ஆர்.பி அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொலை வழக்குகளில் சிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த 2016-ம் ஆண்டு முதல் படிப்படியாக அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற கொலைகளில் 48 சிறார்கள் குற்றம்சாட்டப்பட்டனர். 2017-ல் 53 சிறார்களும், 2018-ல் 75, 2019-ல் 92 என அதிகரித்து 2020-ல் 104 சிறார்கள் கொலைவழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

அதாவது 2016-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த 1,603 கொலைகளில் 48 சிறார்களுக்கு தொடர்பு இருந்த நிலையில், 2020-ம் ஆண்டு 2 மடங்காக அதிகரித்துவிட்டது. கடந்த ஆண்டில் மட்டும் மாநிலத்தில் நடைபெற்ற 1661 கொலைகளில் 104 சிறார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக என்.சி.ஆர்.பி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் சிறார்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சிற்பி என்ற சிறப்பு திட்டம் நடைமுறைப்படுத்த படவிருப்பதாக மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டு தேசிய அளவில் 30,350 கொலைகள் நடந்துள்ளன. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 2.9 சதவிகித பேர் சிறார்கள், 2020-ல் நாட்டில் நிகழ்ந்த 20,133 கொலைகளில் தொடர்புடைய சிறார்கள் 2.6 சதவிகித பேர். ஆனால் தமிழகத்தில் நிலைமை வேறாக உள்ளது. இங்கு 2019-ல் 1,705 கொலைகளும், 2020-ல் 1661 கொலைகளும் நடந்துள்ளன. இதில் தொடர்புடைய சிறார்களின் எண்ணிக்கையோ 92-ல் இருந்து 104-ஆக உயர்ந்துள்ளது. அதாவது தமிழகத்தில் கொலைகள் குறைந்திருந்தாலும் அதில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையே இது காட்டுகிறது.


மற்ற செய்திகள்...
Comments (30)

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்