train,indian railway,restrictions

இரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பொழுது பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சத்தமாகப் பேசினாலோ அல்லது பாடல்கள் கேட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய இரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுவாக தொலைதூர பயணங்களை இரயில்களில் மேற்கொள்ளும் பொழுது, பயணிகள் களைப்பு ஏற்படாமல் இருக்க பாடல்கள் கேட்டுக்கொண்டோ, பேசிக்கொண்டோ, சிலர் கூச்சலிட்டுக்கொண்டோ பயணிப்பர்.

இவ்வாறு செய்யப்படும் சில செயல்கள் எல்லை மீறும்பொழுது அது சக பயணிகளுக்கு தொல்லையாக அமைந்துவிடும். இதனால் சண்டை சச்சரவுகள் ஏற்படவும் வாய்ப்புகளுண்டு.

இந்நிலையில், இவ்வாறு நிகழும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக புதுமையான ஒரு கட்டுப்பாட்டை இந்திய இரயில்வே நிர்வாகம் விதித்துள்ளது.

அதன்படி, இனி இரயிலில் பயணிக்கும்பொழுது சத்தமாக பாடல்கள் கேட்கவோ அல்லது சத்தமாக பேசவோ கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 10 மணிக்குமேல் தேவையற்ற விளக்குகள் எதுவும் எரியக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளுடன் பயணிக்கும் இரயில்வே நிர்வாக அதிகாரிகள், இரயில்வே ஊழியர்கள், பயணிச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் காவலர்கள், பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்கவேண்டி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரயில் பயணிகள் ஏதேனும் பாதிப்புகளுக்கு உள்ளானாலும், அவர்களே பொறுப்பு என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Comments

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்