ks alagiri,rajiv gandhi,nalini,ravichandren,murugan,supremecourt,dmk,mk stalin

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களை வெளியே நடமாட விடக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமாகக் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய முருகன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் கடந்த நவ.11-ம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக சிறையிலிருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மற்ற 6 பேரும் அதே காரணத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். 

இந்நிலையில், கொலை வழக்கில் விடுதலையானவர்களை வெளியில் நடமாட விடக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், "25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்றால், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, எத்தனையோ இஸ்லாமிய இளைஞர்கள், வழக்கு கூட பதியப்படாமல் சிறையில் இருக்கிறார்களே... அவர்களையும் விடுதலை செய்ய வேண்டுமல்லாவா? அவர்களுக்கும் வாழ்க்கை கொடுங்களேன்... அவர்களையும் சமூக நீரோட்டத்தில் கலக்க விடுங்கள். அது என்ன ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளுக்கு ஒரு நீதி, இஸ்லாமியர்களுக்கு ஒரு நீதியா?" என்று கோபமாகப் பேசினார். 

மேலும், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையானதை திமுக வரவேற்பது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, "திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் அனைத்து விவகாரங்களுக்கும் அழுத்தம் தரமுடியாது. காங்கிரசுக்கும் திமுகவுக்கும் பல முரண்பாடுகள் உள்ளன. மதச்சார்பற்ற கூட்டணி என்ற அடிப்படையில் இரண்டு கட்சிகளும் இணைந்துள்ளோம்" என்று பதிலளித்தார். 

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்