ஒமிக்ரான், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் போட்டி, Omicron, India, South Africa, Cricket

 

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தற்போது நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டிகள் விளையாடி வரும் இந்திய அணி வரும் 17-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் விளையாட இருந்தது.

இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் போட்டிகள் எப்போது நடைபெறும் என பின்னர் அறிவிக்கப்படுவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்