அஜித்குமார்,துணிவு,ஹெச்.வினோத்,போனி கபூர்,ajith kumar,thunivu first look poster

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'துணிவு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. நீண்ட நாள் தயாரிப்பாக, பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், அதே கூட்டணியுடன் அஜித்குமார் அடுத்த படத்திலும் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வலம்வந்துகொண்டிருந்தது. அதையடுத்து 'AK61' பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகி படப்பிடிப்பு நடைபெற்றுவந்தது.

இந்நிலையில், நேற்று 'AK61' படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாலை 6.30 மணிக்கு அதனை வெளியிட்டது படக்குழு. 'துணிவு' என்று பெயருடன் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. 

Image

கையில் மிலிட்டரி ரக துப்பாக்கியுடன் நாற்காலியில் அஜித் சாய்ந்து அமர்ந்திருக்கும்படியாக வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. படத்தின் டைட்டில் அமைப்பு, ரூபாய் நோட்டு போன்ற எழுத்தின் வடிவமைப்பில் அமைந்திருந்ததால் ஒருவேளை வங்கிக்கொள்ளை சார்ந்த கதையமைப்புடன் இப்படம் இருக்குமோ என்ற ஊகங்களும் ரசிகர்களிடையே மேலோங்கியுள்ளது. 

'AK61' படத்திற்கு 'துணிவே துணை' என்று பெயர் வைக்கப்படலாம் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பு கசிந்த நிலையில், என்னதான் போஸ்டர் பெருவாரியான ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவரும் நிலையிலும், 'துணிவு' என்று வைக்கப்பட்டுள்ள பெயர் அஜித் ரசிகர்களில் ஒரு பகுதியினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக பார்க்கப்படும் அஜித்குமார் நடிக்கும் படங்களின் பெயர் மாஸ் பிம்பங்களைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு வீரம், வேதாளம், விவேகம், வலிமை போன்ற டைட்டில்களால் நிறைவுபெற்ற அளவிற்கு 'துணிவு' என்ற பெயரால் நிறைவுபெறவில்லை என்பதே ரசிகர்கள் வலைதளங்களில் பதிவிடும் கருத்துகளின் வெளிப்பாடாக உள்ளது. அண்மையில், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு 'வாரிசு' எனப் பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்