ஆ ராசா,சனாதனம்,இந்து ,திமுக எம்.பி. ஆ.ராசா,எடப்பாடி பழனிசாமி,a rasa,sanathanam,edappadi palanisamy,hindu religion

இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக ஆ.ராசா பேசியது கீழ்த்தரமானது என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் பொருட்டு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 19-ம் தேதி டெல்லி பயணப்பட்டார்.

இந்நிலையில், நேற்றைய தினம் டெல்லியிலிருந்து கோவை விமான நிலையம் வந்த அவர், டெல்லி பயணம் பற்றியும், திமுக எம்.பி. ஆ.ராசா அண்மையில் சனாதனம் குறித்து பேசியது பற்றியும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், "தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியும் நிலை உள்ளது. இதை தடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினோம்.

இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக ராசா பேசியது கீழ்த்தரமானது. இதற்கு அவரது கட்சி தலைவர் பதில் அளிப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால், பதில் கிடைக்கவில்லை. அ.தி.மு.க., விவகாரம் குறித்துப் பேச டெல்லி சென்றதாக சொல்வது தவறானது.

விடியா தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் தற்போது பரவி வரும் காய்ச்சலை தடுப்பது அரசின் கடமை. எளிதாக பரவும் காய்ச்சல் என மருத்துவர்கள் சொல்கின்றனர். இந்த அரசு விழிப்போடு இருந்து குழந்தைகளை காப்பதுடன், மருத்துவக் குழு ஆராய்ந்து இந்த காய்ச்சலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" இவ்வாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்