gayatri raghuram,daisy saran,surya siva,annamalai

பாஜகவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் குறிவைக்கப்பட்டதாகவும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் மக்களுக்காக பணியாற்றி அவர்களிடம் சென்றடைவேன் என்றும் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் உருக்கமாகப் பதிவிடுள்ளார்.

பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா - சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் ஆகியோர் இடையேயான ஆபாச செல்போன் உரையாடல் தமிழக பாஜகவில் அதீத புகைச்சலைக் கிளப்பிவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் ஆடியோ வைரலான நிலையில், அக்கட்சியின் தமிழக பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம், சூர்யா சிவா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனிடையே, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் காயத்ரி ரகுராம் அதிரடியாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்நிலையில், கட்சியில் தான் கடந்த 2 ஆண்டுகளாகவே குறிவக்கப்படுவதாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

"என்னை வெளியேற்ற விரும்பியவர்கள், அவர்கள் விரும்பியதை அடைய நான் அவர்களுக்கு போதுமான இடத்தை அளித்துள்ளேன். ஆம்! நான் நீண்ட காலமாக சுயமாக என்னை அழித்துக்கொண்டிருந்த நிலையில் இருந்தேன். என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று விரும்புபவர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் முன்னிலையில் சீதாவின் அக்னி பரீட்சையைப் போன்று பாஜக மீதான விசுவாசத்தை நிரூபிப்பதில் எனக்கு கவலையில்லை.

பாஜகவில் சுதந்திரமாக பணியாற்ற விரும்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் குறிவைக்கப்பட்டேன், நான் தொடர்ந்து குறிவைக்கப்பட்டதால் பெரும்பாலான இரவுகளில் நான் சரியாக தூங்கவில்லை. திமுக, விசிக மற்றும் இப்போது வலதுசாரி ஆதரவாளர்களால் நான் தொடர்ந்து கேலிக், கிண்டல்களால் தாக்கப்பட்டேன்.

ட்விட்டரில் இருப்பவர்களை விட, போட்டியில் இருப்பவர்களுக்கு உண்மை தெரியும். பொறுப்பில் இருப்பவர்களுக்கு உண்மை தெரியும். இந்த முறைகேடுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் எனது பணியின் மூலம் என்னை நிரூபித்துமக்களிடம் சென்றடைவேன். அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வேலை செய்ய அனுமதியுங்கள்.

நமது தலைசிறந்த தலைவர்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் பலர் இத்தகைய இடைவெளிகளை சந்தித்துள்ளனர். காலம் என்னை குணப்படுத்தும். இந்த நேரத்தை ஆன்மீக ரீதியிலும் ஆக்கப்பூர்வமாகவும் மக்களைச் சென்றடைய பயன்படுத்துவேன்" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்