rajiv gandhi,jothimani mp,congress,nalini,ravichandren,murugan

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களைக் கொண்டாடுவது அநாகரிகமான செயல் என்று கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 

"ராஜீவ் காந்தி கொலையாளிகள் உச்சநீதிமன்றத்தால் நீண்டகாலம் தண்டனை அனுபவித்ததன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த கொடிய குற்றத்தில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அந்த மனிதவெடிகுண்டு ராஜீவ் காந்தியை மட்டுமல்ல பல தமிழர்களையும் பலிகொண்டு விட்டது.

குண்டுவெடிப்பில் தங்கள் உயிருக்குயிரானவர்களை பலிகொடுத்த குடும்பங்கள் இன்னும் ஆறாத காயத்தோடு இதே தமிழ்மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஊடகங்களும், சில தனிநபர்களும் கொலையாளிகளைக் கொண்டாடுவது மாபெரும் தவறு. மன்னிக்க முடியாத குற்றம்.
 
காந்தியைக் கொன்ற கோட்சேவைக் கொண்டாடுகிற ஆர்.எஸ்.எஸ் பாஜகவிற்கும், இன்று ராஜீவ் காந்தி கொலையாளிகளைக் கொண்டாடுபவர்களுக்கும் என்ன வேறுபாடு? கருணை அடிப்படையில் குற்றவாளிகள் மன்னிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் குற்றவாளிகளைக் கொண்டாடுவது அநாகரிகமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
 

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்