eps,edappadi k palanisami,mk stalin,admk mla,dmk mla

திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் பேசி வருவதாக எடப்பாடி கே.பழனிசாமி கூறியிருந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அதுகுறித்து இபிஎஸ்-ஐ விமர்சித்துப் பேசியுள்ளார்.

மதுரையில் அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமணவிழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "திமுக எம்.எல்.ஏ.க்கள் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அவர் கட்சியின் எம்.எல்.ஏ.க்களே அவருடன் பேச மாட்டார்கள். இதில் திமுக எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் பேசுவதாக பொய் சொல்லிக்கொண்டு திரிகிறார்.

அம்மையார் ஜெயலலிதாவின் மறைவிற்குப்பிறகு அதிமுக சந்தித்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி; சட்டமன்றத் தேர்தலில் தோல்வி; உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி. அதிமுகவே தற்போது இபிஎஸ் அணி, ஒபிஎஸ் அணி என்று பிளவுபட்டுள்ளது. நீங்கள் உங்கள் கட்சியில் வகிக்கும் பதவியே தற்காலிகமானது. இதில் இன்னொரு கட்சியைப் பார்த்து விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி உள்ளதா?" இவ்வாறு பேசினார்.

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்