
வடிவேலு நடித்துள்ள 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் முதல் பாடலான 'அப்பத்தா' பாடல் இன்று வெளியாகிறது.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. முழு நீள நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனர் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படம் குறித்த அப்டேட்டுகள் விரைவில் ஒவ்வொன்றாக வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. 'அப்பத்தா' எனத் தொடங்கும் இப்பாடலுக்கு நடன இயக்குநர் பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இப்பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து வடிவேலு தற்சமயம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'மாமன்னன்', பி.வாசு இயக்கும் 'சந்திரமுகி 2' உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.