thirumavalavan,supremecourt,EWS,10% reservation

பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அச்சமயம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளும் கண்டனக்குரல்களை எழுப்பின. பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு சமூகநீதிக்கு எதிரானது என்று கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து இச்சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், அவ்வழக்குகளுக்கான தீர்ப்பு 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வின் கீழ் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்படுத்தப்பட்டோருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பீலா திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோரும், செல்லாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், ரவீந்திர பட் ஆகியோரும் தீர்ப்பு வாசித்தனர். 3:2 என்ற விகித அடிப்படையில் பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பு இறுதித்தீர்ப்பாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர், "பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூகநீதி கோட்பாட்டுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளுக்கும் எதிரானது. இது உச்ச அநீதி. இதனை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்