trichy siva,mk stalin,bjp,central government

பாஜக தனது திறமையால் மத்தியில் ஆட்சிக்கு வரவில்லை என்றும், விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மத்தியில் ஆட்சி அமையும் என்றும் திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி மணவெளி தொகுதி திமுக சார்பில் மந்தைவெளி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது கூட்டத்தில் பேசிய அவர், "மத்திய பாஜக அரசு பல பயங்கரமான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதை எதிர்க்கக்கூடிய ஒரே கட்சியாக திமுக உள்ளது. ஜனநாயகத்தின் செயல்பாட்டின் தொடர்ச்சியில் என்றாவது ஒரு நாள் நீங்கள் ஆட்சியைவிட்டு விலக நேரிடும். அன்று நீங்கள் இயற்றிய ஒவ்வொரு சட்டத்திற்கும் நீங்கள் வேதனைப்படுகின்ற நாள் வெகுதூரத்தில் இல்லை.

மத்தியில் இரண்டாவது முறையாக நீங்கள் ஆட்சிக்கு வந்தது உங்களது திறமையால் அல்ல, நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளால் அல்ல. எதிர்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததுதான் பாஜக வெற்றிக்கு காரணம். தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகளை அரவணைத்து சென்றதால்தான் பாஜக டெபாசிட்டை இழந்திருக்கிறது. இந்திய அளவில் எதிர்கட்சிகள் ஒன்றிணையக்கூடிய நாள் வரும். அதனை முதல்வர் ஸ்டாலின் முன்னெடுப்பார். அப்போது ஒரு மாற்றம் வரும். அதுமட்டுமின்றி, விரைவில் புதுச்சேரியிலும் திமுக ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்