அமெரிக்க பார்லிமெண்ட் கேப்பிடலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி!- அதிர்ச்சியில் ஜோ பைடன்

0
19
tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
joe biden

அமெரிக்காவில் பாராளுமன்றம் அமைந்துள்ள கேப்பிடல் கட்டிடத்திற்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரியை காரில் வந்த மர்ம ஒருவர் திடீரென்று சரமாரியாக கத்தியால் குத்தி கொன்றார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பாராளுமன்றம் அமைந்துள்ள கேப்பிடல் கட்டிடத்திற்கு வெளியே பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்க் கிழமையன்று மர்ம நபர் ஒருவர் காரில் வேகமாக வந்து போலீசார் போட்டு வைத்திருந்த தடுப்பின் மீது மோதியுள்ளார். இதில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, காரில் இருந்து வேகமாக இறங்கிய அந்த நபர் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியானர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, அந்த மர்ம நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாரை தாக்கிய மர்ம நபர் 25 வயது மதிக்க தக்க கிரீன் என்ற அமைப்பை பின்பற்றியவர் என்று தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஆகியோர் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வெள்ளை மாளிகையில் அரைக் கம்பத்தில் கொடியை பறக்கவிடுமாறு அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார்.