ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!- `தலைவா’ என வாழ்த்திய பிரதமர் மோடி

0
34
tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
rajini

திரைத்துறையில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு இன்று திடீரென அறிவித்துள்ளது.

1975ல் தனது திரைப்பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் மூடிசூடா மன்னனாக விளங்கி வருகிறார். நடிகர் ரஜினி, தமிழ், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து, திறமையை காட்டியுள்ளார். தமிழ் சினிமா உலகில் கொடி கட்டி பறக்கும் அவருக்கு, பத்ம பூஷண், பத்ம விபூஷன், சாதனையாளர் விருது உள்ளிட்ட மத்திய அரசு விருதுகள் ரஜினிக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று அறிவித்துள்ளார். இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக ரஜினிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜவடேகர் கூறினார். மேலும், தமிழக தேர்தலுக்கும் இந்த விருது அறிவிப்புக்கும் தொடர்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது ரஜினிக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ரஜினிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி போனில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்களது நடிப்பு திறமைக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம் என்றும் மேலும் பல விருதுகளை பெற வேண்டும் எனவும் ரஜினியை முதல்வர் வாழ்த்தியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்” என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு, தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது!. நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்!” என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைமுறைகளாக பிரபலமான, ஒரு சிலரின் பணிகள் பெருமை கொள்ளலாம், மாறுபட்ட பாத்திரங்கள் மற்றும் அன்பான ஆளுமை … அது ரஜினிகாந்த் உங்களுக்காக ஜி. தலைவாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.