“போய் வா தம்பி”- எஸ்.பி.பிக்கு நடிகர் சிவகுமார் இரங்கல்

0
256
sivakumar-spb

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார்.  அவரின் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் சிவகுமார் எஸ்.பி.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக
எத்தனை ஆயிரம் பாடல்களை
எத்தனை மொழிகளில் பாடிய
உன்னதக்கலைஞன் !
மூச்சுக்காற்று முழுவதையும்
பாடல் ஓசையாக மாற்றியவன் !
இமயத்தின் உச்சம் தொட்டும்
பணிவின் வடிவமாக
பண்பின் சிகரமாக
இறுதி உரையிலும்
வெளிப்படுத்தியவன்…
இதுவரை மக்களுக்கு
பாடியது போதும்
இனி என்னிடம் பாட வா
என்று இறைவன்
அழைத்துக் கொண்டான்!
போய் வா தம்பி! என அவர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.