சிட்னியில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் ஹாக்ஸ்பரி ஆற்றில் ஞாயிற்றுக் கிழமை மாலை படகு ஒன்றில் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து, படகில் இருந்தவர்கள் தீயில் சிக்கினர்.
தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், படகில் சிக்கிய 8 பேரை மீட்டனர். இவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீக்காயமடைந்தவர்களில் 4 பேருக்கு 60 சதவீத அளவிற்கு தீக்காயம் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.