தமிழ்நாடு,மணி செய்தி,முதன்மை செய்தி

ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. தமிழக அரசு சார்பாக ஆர்டர் செய்யப்பட்டுள்ள ஒன்றரை கோடி தடுப்பூசிகள் வந்தால் தான் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து ஆம்புலன்ஸ் எண்ணிக்கை உயர்த்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி தட்டுபாடு காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயம் செய்வதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு,அரசியல்,மணி செய்தி,முதன்மை செய்தி

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் வரும் 7ம் தேதி பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் மிகவும் எளிதாக முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனிடையே, முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவையில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக மட்டும் 125 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 4 தொகுதிகளிலும், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஒரு தொகுதியிலும், பிற கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. நாளை நடைபெற உள்ள திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து வரும் 7ம் தேதி அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.

இதனிடையே, முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை சேலத்தில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அவர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையான நோக்கம்
விளையாட்டு,முதன்மை செய்தி

ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையான நோக்கம்'' என்று ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒரு நாளைக்கு 3 லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இந்த களேபரத்துக்கு மத்தியில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஸம்பா, கேன் ரிச்சர்டுசன் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ளனர். அண்மையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த ஆண்ட்ரூ டை ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

இதனிடையே, இந்தியாவுடனான நேரடி விமான சேவைக்கு மே 15ம் தேதி வரை தடை விதித்து ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், இந்தியாவில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ஐபிஎல் சிஓஓ ஹேமங்க அமின் கடிதம் எழுதியுள்ளார். அதில், "ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள் என நிர்வாகம் உறுதியளிக்கிறது. ஐபிஎல் தொடருக்கு பின் வீரர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ கவனித்துக் கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

வீரர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். இனி வீரர்களுக்கு 5 நாட்களுக்கு பதில் 2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கப்படும். ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையான நோக்கம். ஒவ்வொரு முறையும் ஜெயிப்பதற்காக விளையாடும் நீங்கள் இம்முறை மனிதநேயத்திற்காக விளையாடுகிறீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.


செவிலியர்கள், தமிழக அரசு, ஒப்பந்த செவிலியர்கள், ஸ்டாலின், TNNurses, TamilNadu Government, Contract Nurses, Stalin,tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,முதன்மை செய்தி

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,212 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டது. இரண்டு வருட ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்த பணியாளர்களாகவே தொடர்ந்தனர். இதனால் செவிலியர்கள் கடும் மனஉளைச்சலில் பணியாற்றி வந்தனர். பின்னர், அவர்களது ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. ஆனால், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கடந்த ஆட்சியில் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில், புதிதாக திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. அதன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார். இதனிடையே, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த சூழ்நிலையில், 2015-16ல் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,212 செவிலியர்களுக்கான ஒப்பந்தம் நாளையுடன் முடியவிருந்த நிலையில் அவர்களை பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பணி நிரந்தரம் செய்யப்பட்டதால் 1,212 பேருக்கான ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதிக்கு முன்னதாக 1,212 பேரும் சென்னையில் பணியில் சேர வேண்டும் என்றும் பின்னர் 1,212 பேரும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


ஓபிஎஸ், ஈபிஎஸ், தமிழ்நாடு, அதிமுக, தமிழக சட்டப்பேரவை தேர்தல், OPS, EPS, Tamil Nadu, AIADMK, Tamil Nadu Assembly Election,tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

“நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித்தேர் சரியாக செழுத்த அச்சாணியாக செயல்பட வேண்டிய கடமை இருக்கிறது” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன்படி தமிழக முதல் அமைச்சராக வரும் 7ம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.

இதற்கிடையே, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை அதிமுக கூட்டணி வெல்லாத நிலையில், முதல்வர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித்தேர் சரியாக செழுத்த அச்சாணியாக செயல்பட வேண்டிய கடமை இருக்கிறது.

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அதிமுக பணியாற்றும். 10 ஆண்டுகள் அதிமுக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு செய்த பணிகளை மக்கள் நன்கு அறிவார்கள். அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளனர்.


எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், திமுக, அதிமுக, ரஜினி, கமல், Edappadi Palanisamy, Stalin, DMK, AIADMK, Kamal, Rajini,tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், “மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை! ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!” என்று ட்வீட் செய்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் உழைத்த அனைவருக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் & வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து. தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள ஸ்டாலின், “அன்பு நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான
கமல்ஹாசன் அவர்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி!. பேரிடரிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் பணியில் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் புதிய அரசு மேற்கொள்ளும் மக்கள் நலப் பணிக்குத் துணையாகட்டும்” என்று கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஒரு எடுத்தக்காட்டாய் திகழ, திமுக கூட்டணிக்கு என் வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.


ஸ்டாலின், திமுக, தமிழக முதல்வர், Stalin, DMK, TNCMStalin, Tamil Nadu,tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் வரும் 7ம் தேதி பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் மிகவும் எளிதாக முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனிடையே, முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவையில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக மட்டும் 125 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 4 தொகுதிகளிலும், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஒரு தொகுதியிலும், பிற கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. நாளை நடைபெற உள்ள திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து வரும் 7ம் தேதி அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.

இதனிடையே, முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை சேலத்தில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அவர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மதுரை அரசு,hospital
தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து 10 பெட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மருந்து திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றை குணப்படுத்த ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த மத்திய அரசுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிப்பு அதிகரித்து வருவதால், ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், சென்னை கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் மக்கள் நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருந்து வாங்கிச் செல்லும் நிலை நிலவுகிறது.

இந்த நிலையில், ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காரணமான திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய கம்பவுண்டர், சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே தென்மாவட்ட சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்கு பிரத்தியோகமாக சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரையில் கொரோனா சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்தநிலையில், மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 10 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, மருந்து சேமிப்பு கிடங்கு ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதிக லாபத்திற்கு கள்ள சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்வதற்காக இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா,கொரோனா வைரஸ்

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,01,187 ஆக உயர்ந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக கொரோனா உயர்ந்து வந்த நிலையில், நேற்று மட்டும் சற்று குறைந்தது. கொரோனா பாதிப்பை கண்டறிய நாடு முழுவதும் பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 17 லட்சத்து 23 ஆயிரத்து 912 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 28 கோடியே 27 லட்சத்து 03 ஆயிரத்து 789 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, இந்தியாவில் ஒரே நாளில் 3,60,960 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்றும் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,01,187 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 82.54 சதவிகிதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.12 சதவிகிதமாகவும் உள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட இந்த நோயாளிகளையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 162 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 48 லட்சத்து 17 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 29 லட்சத்து 78 ஆயிரத்து 709 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கொரோனா 2வது அலை அதிகரித்து வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி
இந்தியா,கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா 2வது அலை அதிகரித்து வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருவதால், தடுப்பூசி செலுத்தும் வயதை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு வகை தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதனை பெறுவதற்காக ‘கோவின்’ இணையதளம் அல்லது ‘ஆரோகிய சேது’ செயலி மூலமாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த நிலையில் வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு, இன்று முதல் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இதனிடையே, இணையதளம் மூலமாக முன்பதிவு செய்ய முடியவில்லை என புகார் எழுந்தது. நேற்று நள்ளிரவு முதல் பலர் முன்பதிவு செய்ய முயற்சி செய்தால், இணையதள சர்வரில் முடக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று மாலை 4 மணி முதல் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, https://www.cowin.gov.in என்ற, இணையதளத்திற்குள் சென்று, ‘ரிஜிஸ்டர் மை செல்ப்’ என்பதை அழுத்த வேண்டும். பின், மொபைல் போன் எண் பதிவு செய்து, பெயர், வயது உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் உள்ளிட்ட, அரசு அங்கீகரித்த அடையாள அட்டை எண்ணை பதிந்து, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம்
இந்தியா,முதன்மை செய்தி,கொரோனா வைரஸ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி (34) முன்னணி செய்தித்தாள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆஷிஸ் யெச்சூரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் குருக்கிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆஷிஸ் யெச்சூரி இன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது மூத்த மகன் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று காலை உயிரிழந்துவிட்டார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு நம்பிக்கையும் எனது மகனுக்கு சிகிச்சையும் அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


எந்த வித திட்டமும் இல்லாதது தான் ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை ஏற்பட காரணம். சரியான திட்டமிடல் இல்லாததே ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட காரணம்
அரசியல்,இந்தியா,முதன்மை செய்தி,ஜோதிடம்

“எந்த வித திட்டமும் இல்லாதது தான் ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை ஏற்பட காரணம். சரியான திட்டமிடல் இல்லாததே ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட காரணம். இது மத்திய அரசின் தோல்வியாகும்” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியாங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்து 16 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 21 லட்சத்து 57 ஆயிரத்து 538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 457 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 32 லட்சத்து 76 ஆயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 23 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 82 ஆயிரத்து 553 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் பல்வேறு பகுதிகள் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பூசிகள், நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “உலகில் அதிக அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நாடுகளில் இந்தியா முதன்மையானது. அப்படி இருக்கும் போது ஏன் தட்டுப்பாடு ஏற்படுகிறது?. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை நிச்சயம் ஏற்படும் என உங்கள் (மத்திய அரசு) ஆய்விலேயே தெரியவந்துள்ளது. உங்களுக்கு முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடையே 8 முதல் 9 மாதங்கள் இருந்துள்ளது. அந்த இடைவெளியை நீங்கள் (மத்திய அரசு) புறக்கணித்துவிட்டீர்கள். உங்களுக்கு நேரம் இருந்தது. இன்று 2,000 லாரிகள் மட்டுமே நாட்டின் அனைத்து பகுதிக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன. ஆக்சிஜன் நம்மிடம் உள்ளது. ஆனால், அது எங்கு தேவைப்படுகிறதோ அங்கு சென்று சேர முடியாத சூழல் உள்ளது மிகவும் துயரமான நிகழ்வாகும்.

கடந்த 6 மாதத்தில் 11 லட்சம் ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இன்று நாம் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறோம். கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மத்திய அரசு 6 கோடி கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அந்த நேரத்தில் 3 முதல் 4 கோடி இந்தியர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது ஏன்? மோசமான திட்டமிடலே நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட காரணம். எந்த வித திட்டமும் இல்லாதது தான் ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை ஏற்பட காரணம். சரியான திட்டமிடல் இல்லாததே ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட காரணம். இது மத்திய அரசின் தோல்வியாகும்” என்று கூறினார்.


தமிழ்நாடு,மணி செய்தி,முதன்மை செய்தி

ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தமிழக அரசு சார்பாக ஆர்டர் செய்யப்பட்டுள்ள ஒன்றரை கோடி தடுப்பூசிகள் வந்தால் தான் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து ஆம்புலன்ஸ் எண்ணிக்கை உயர்த்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி தட்டுபாடு காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயம் செய்வதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


அரசியல்,மணி செய்தி

கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், பல கருத்து திணிப்புகளை வென்று அதிமுக இமாலய வெற்றி பெற்றிருக்கிறது என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக ஆட்சியை பிடிக்கும் என செய்திகள் வெளியிடப்பட்டன.

இதுகுறித்து, சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கருத்துக்கணிப்புகள் எந்த காலத்திலும் எடுபடாத ஒரு விஷயம் என்றும், எந்த காலத்திலும் இல்லாத மகத்தான வெற்றியை இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் கூறியுள்ளார்.


தமிழ்நாடு,மணி செய்தி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இன்று மதியம் 2.30 மணிக்கு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் சிரமப்பட்டதோடு, வாகனங்கள் மழை நீரில் மிதந்தது.

ஒரு பக்கம் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மறுபக்கம் மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியடைய வைத்தது.


இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
விளையாட்டு,கொரோனா வைரஸ்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வீட்டிலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்தியாவில் தற்போது பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் இன்று 62,258 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தவர்களைவிட புதிய தொற்று பாதிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30, 386 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதுவரை 5.81 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் 291 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த எண்ணிக்கை 1.61 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போது வரை 4,52,647 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் எனது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா இல்லை என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்திய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விளையாடினார். இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவு உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றார். தற்போது சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில்
விளையாட்டு

சென்னையில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் சரிந்த நிலையில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இங்கிலாந்து அணிக்கு 481 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 161 ரன்களும் ரகானே 67 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மோயின் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, அஸ்வினின் மாயாஜால சுழலில் சிக்கியது. 59.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பந்து வீச்சில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை அள்ளினார். 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்தது.

3ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். எனினும் விராட் கோலி ஒருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் ரிஷப் பண்ட், ரஹானே என முன்னணி வீரர்கள் வெளியேறியதால், இந்திய அணி 86 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த அக்சர் படேலும் 7 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து 7-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய அஸ்வின், விராட் கோலிக்கு நல்ல கம்பெனி கொடுத்தார். குறிப்பாக அஸ்வின் துரிதமாக ரன் சேர்த்தார். விராட் கோலி, அஸ்வின் ஆகிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினர். விராட் கோலி 62 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் அஸ்வின் அதிரடியாக விளையாடி தனது 5வது சதத்தை நிறைவு செய்தார். இவர் 134 பந்தில் 103 ரன்கள் விளாசினார். முடிவில் இந்திய அணி 286 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. அஸ்வின் 106 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து, இங்கிலாந்து அணி 481 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து, 482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. முதல் டெஸ்ட்டில் தோல்வியை தழுவிய இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியா,விளையாட்டு

பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில 336 ரன்கள் எடுத்தது. 33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. முகமது சிராஜியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி 294 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதையடுத்து, இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷுப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினர். இந்தியா 1.5 ஓவரில் 4 ரன்கள் எடுத்திருக்கும்போது நேற்றைய 4-வது நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணியின் ஸ்கோர் 18 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 21 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். ஒரு பக்கம் புஜாரா நிலைத்து நிற்க மறுபக்கம் ஷுப்மான் கில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ரன்கள் விளாசினார். அவர் 90 பந்தில் அரைசதம் அடித்தார். இவரது அரைசதத்தாலும், புஜாராவின் நிதான ஆட்டத்தாலும் இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது 62 ஓவர்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் தேவையிருந்தது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஷுப்மான் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாராவும் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷுப்மான் கில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 132 ரன்கள் எடுத்திருந்ததது. அடுத்து வந்த ரஹானே தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாட முடிவு செய்தார். இதனால் 22 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்தியா தேனீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது, வெற்றிக்கு குறைந்தது 37 ஓவரில் 145 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. கைவசம் 7 விக்கெட் இருந்த நிலையில் இந்திய அணி தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டத்தை தொடங்கியது. ரிஷப் பண்ட், புஜாரா அபாரமாக விளையாடினர். அரைசதம் அடித்த புஜாரா 211 பந்தில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் ரிஷப் பண்ட் 100 பந்தில் அரைசதம் அடித்தார்.

புஜாரா ஆட்டமிழந்த பிறகு மயங்க் அகர்வால் களம் இறங்கினார். ஒருபக்கம் அடித்தும் விளையாட வேண்டும். அதேசமயம் விக்கெட்டும் இழக்கக் கூடாது என்ற நிலை ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்டது. மயங்க் அகர்வால் 9 ரன்னில் வெளியேற ரிஷப் பண்ட்-க்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி 8 ஓவரில் 50 ரன்கள் தேவைப்பட்டன. கம்மின்ஸ் பந்தில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கை ஊட்டினார். இதனால் கடைசி 7 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டன. 7-வது ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. இதனால் 6 ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டன. 6-வது ஓவரில் 9 ரன்கள் கிடைத்தன.

கடைசி 5 ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. 5-வது ஓவரை நாதன் லயன் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் வாஷிங்டன் சுந்தர் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி ஆட்டமிழந்தார். என்றாலும் அவர் 29 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். அடுத்து ஷர்துல் தாகூர் களம் இறங்கினார். இந்த ஓவரில் ஐந்து ரன்கள் கிடைத்தன. கடைசி 4-வது ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டன. 4-வது ஓவரை ஹசில்வுட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பண்ட் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தில் ஷர்துல் தாகூர் ஆட்டமிழந்தார். கடைசி பந்தை ரிஷப் பண்ட் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 1988க்கு பின் பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரோலியா அணி தோற்றது இல்லை என்ற சாதனையை தற்போது தகர்த்துள்ளது இந்திய அணி.

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 2-வது இடத்திற்கு முன்னேறியது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஆலன் பார்டர் – சுனில் கவாஸ்கர் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. கோப்பையை இந்திய அணி கேப்டன் ரஹானே பெற்றுக் கொண்டார். அதை பெற்றுக்கொண்ட ரஹானே நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி நடராஜன் கோப்பையை ஏந்தி நிற்க இந்திய அணி வீரர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். இந்தத் தொடரில் அறிமுகமாகி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய டி நடராஜனிடம் ரஹானே கோப்பையை ஏந்தச் சொன்னது மெய்சிலிர்க்க வைத்தது.

tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

 

இதனிடையே, வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 5 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ள பிசிசிஐ. பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆஸ்திரேலியாவில் நடந்த இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கண்டு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். வெற்றிதான் அவர்களுடைய இலக்காக இருந்ததால் அதற்கான திடமான மன உறுதியும் வெளிப்பட்டது. அணிக்கு வாழ்த்துக்கள்! உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துகள். இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது” என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆஸ்திரேலியாவில் அருமையான டெஸ்ட் தொடர் வெற்றிக்கு #TeamIndiaக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்று வெற்றிக்கு ஒவ்வொரு வீரரும் பங்களிப்பு செய்வதால் அணிப் பணியின் முக்கியத்துவத்தை இறுதிப் போட்டி எடுத்துக்காட்டுகிறது. எங்கள் இளம் வீரர்களின் அற்புதமான செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சி!” என்று கூறியுள்ளார்.


கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வருந்துகிறேன் நண்பா! திரையில் ஒளிகொண்டு சிலை செதுக்கினாய்! வாஜி வாஜி பாடலை ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்! என் எத்தனையோ பாடல்களை ரத்தினமாய் மாற்றினாய்! இதோ உனக்கான இரங்கல்பாட்டை எங்ஙனம் படம் செய்வாய்? விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்! ஒளியாய் வாழ்வாய் இனி நீ” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு,சினிமா

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை 3 மணியளவில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மரணம் அடைந்த கே.வி.ஆனந்த்தின் மருத்துவமனையில் இருந்து பெசன்ட்நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பல முன்னனி இயக்குநர்களின் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.வி.ஆனந்த், கடந்த 1995ம் ஆண்டு, ‘தென்மாவின் கொம்பத்து’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காக, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். இவரது இயக்கத்தில் வெளியான அயன், கோ, அனேகன், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி” என்று கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வருந்துகிறேன் நண்பா!
திரையில்
ஒளிகொண்டு
சிலை செதுக்கினாய்!
வாஜி வாஜி பாடலை
ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!
என்
எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்!
இதோ
உனக்கான இரங்கல்பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்?
விதவையான கேமரா
கேவிக்கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்!
ஒளியாய் வாழ்வாய்
இனி நீ” என்று கூறியுள்ளார்.


கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 2 லட்சம் ரூபாய் அபராதத்துடன் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு,சினிமா,கொரோனா வைரஸ்

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 2 லட்சம் ரூபாய் அபராதத்துடன் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நடிகர் விவேக் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வண்ணம் தடுப்பூசி போட்டுக்கொண்டு பேட்டி அளித்தார். மறுநாள் வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது திடீர் உயிரிழப்பு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டதால்தான் விவேக் உயிரிழந்தார் என்று நடிகர் மன்சூர் அலிகான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து அவர் மீது சென்னை கோடம்பாக்கம் மண்டல சுகாதார அலுவலர் பூபேஷ் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீஸார் மன்சூர் அலிகான் மீது பொது அமைதியை கெடுத்தல், தொற்கு நோயை பரப்பும் எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சர்ச்சைப் பேச்சில் சிக்கிய வழக்கில் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனுவை சென்னை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்தார். அந்த மனுவில், என்னை அறியாமல் பேசிவிட்டேன். எனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம், 2 லட்சம் அபராதம் விதித்ததோடு, இந்த தொகையை தடுப்பூசி வாங்க சுகாதாரத்துறைக்கு தர உத்தரவிட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பவோ, பதற்றத்தை ஏற்படுத்தவோ கூடாது என்றும் கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர் நிலையை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கியது.


நடிகர்கள் சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது
தமிழ்நாடு,சினிமா

நடிகர்கள் சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவில் அதிகரித்து வரும் நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லை, கோவை, திருப்பூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பெரிய நடிகர்களான சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோர் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகின்றனர்.

பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 40வது படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழகத்தில்தான் இந்த படப்பிடிப்புகள் நடந்து வந்தன. 100 பேருக்கு மேல் படப்பிடிப்பில் அனுமதிக்கப்படவில்லை. இந்த சூட்டிங்கில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.  இந்த படங்கள் அனைத்தும் 50 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் சினிமா தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த நிலையில், தற்போது பெரிய நடிகர்களின் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.


இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.
தமிழ்நாடு,சினிமா,கொரோனா வைரஸ்

இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மட்டும் நாடு முழுவதும் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,73,13,163 ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரொனா பாதிப்பின் எண்ணிக்கை நேற்றைய தினத்தில் 15 ஆயிரத்தைக் கடந்தது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவர் ஆண் தேவதை, ரெட்டசுழி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு சில தினங்களாக அசோக் நகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று காலை மூச்சுத்திணறல் அதிகமாகி உயிரிழந்தார்.

இரட்டைச்சுழி படத்தில் இயக்குநர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா இருவரையும் ஒன்றாக இயக்கிய தாமிரா, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆண் தேவதை படத்தை இயக்கியிருந்தார். சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் நடித்திருந்த அந்தப் படத்திற்கு சரியான தியேட்டர் கிடைக்காமல் 3 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் தள்ளிப்போனது. பின்னர் ஒருவழியாக வெளியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கொரோனா தொற்றால் இயக்குநர் இறந்திருப்பது தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு,மணி செய்தி

கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், பல கருத்து திணிப்புகளை வென்று அதிமுக இமாலய வெற்றி பெற்றிருக்கிறது என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக ஆட்சியை பிடிக்கும் என செய்திகள் வெளியிடப்பட்டன. இதுகுறித்து, சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கருத்துக்கணிப்புகள் எந்த காலத்திலும் எடுபடாத ஒரு விஷயம் என்றும், எந்த காலத்திலும் இல்லாத மகத்தான வெற்றியை இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் கூறியுள்ளார்.


நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சினிமா

நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த விவேக்கிற்கு கடந்த 16ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 17ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, நடிகர் விவேக் மரணமடைந்த அன்று நடிகர் விஜய் படப்பிடிப்பிறாக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றிருந்ததால் அவரால் விவேக்கின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமுடியவில்லை. இதற்கிடையில், படப்பிடிப்பு முடிந்து ஜார்ஜியாவில் இருந்து நடிகர் விஜய் நேற்று சென்னை திரும்பினார்.

இந்தநிலையில், ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய் இன்று காலை மறைந்த நடிகர் விவேக்கின் வீட்டிற்கு சென்றார். அங்கு நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை சந்தித்த நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். நடிகர் விஜய்யுடன், நடிகர் விவேக் ஏராளமான படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.


மெல்போர்னில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி
விளையாட்டு

மெல்போர்னில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 195 ரன்னில் ஆட்டம் இழந்தது.

பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. மழை பெய்ததால் முன்கூட்டியே 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. ரஹானே 104 ரன்களுடனும், ஜடேஜா 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 3 ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரஹானே 112 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஜடேஜா 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணியைவிட இந்திய அணி 131 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக நாதன் லைன், ஸ்டார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும், ஹேசில் வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். பின்னர் வந்த மார்னுஸ் 28 ரன் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்தில் வீழ்ந்தார். ஸ்மித் 8 ரன்னில் பும்ரா பந்திலும், ட்ராவிஸ் 17 ரன்னில் சிராஜ் பந்திலும், டேம் 1 ரன்னில் ஜடேஜா பந்திலும் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக மேத்யூ 40 ரன்கள் எடுத்தார். 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது இந்திய அணியை விட 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. நாளை 4வது நாள் ஆட்டம் தொடர்கிறது. முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற அதிக முனைப்பு காட்டி வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


CMSTALIN, ChiefMinisterMKStalin. முகஸ்டாலின் எனும்நான் ,முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், TNGovt
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

`முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பின்னர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அமைச்சராக பதவியேற்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அதைத்தொடர்ந்து முதல்வராக மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன் பதவி ஏற்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா இன்று எளிமையான முறையில் நடைபெற்றது. பதவிஏற்பு விழா அரங்கத்திற்கு வந்த ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து பதவி ஏற்க உள்ள அமைச்சர்களை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு பதவி பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்து வைத்தார். அப்போது, `முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, மு.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

இதையடுத்து, துரைமுருகன் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பதவி ஏற்றுகொண்டார். பின்னர் கே.என். நேரு., ஐ.பெரிய சாமி, பொன்முடி, எ.வ.வேலு. தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் உள்பட 33 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அவருடன் மநீம கட்சிகளின் நிர்வாகிகளில் ஒருவரான பொன்ராஜும் பங்கேற்றுள்ளார். அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்றள்ளார். மேலும் அவருடன் தனபால், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் அதிமுக சார்பிலும், பாஜக சார்பில் மூத்த தலைவர் இல.கணேசனும் பங்கேற்றுள்ளனர்.


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ப.சிதம்பரம், முத்தரசன், காதர் மொய்தீன், வேல்முருகன், ஈஸ்வரன், அழகிரியின் மகன் துரைதயாநிதி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.


கங்கனா ரனாவத், கொரோனா, ACtress Kangana Ranaut, Corona
சினிமா,முதன்மை செய்தி

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

யோகா செய்வது போன்ற புகைப்படத்தும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள கங்கனா ரனாவத், நான் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தேன். கடந்த சில நாட்களாக கண் எரிச்சலும் இருந்தது. இமாச்சல பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் கொரோனா பரிசோதனை செய்தேன்.

இன்று முடிவுகள் பாசிட்டிவ் என வந்துள்ளது. கொரோனா உறுதியானதும் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். நீங்கள் அச்சப்பட்டால் அது மேலும் உங்களை அச்சுறுத்தும். கொரோனாவை அழித்துவிடுவோம். இது ஒரு சிறிய காய்ச்சல் தவிர வேறு ஒன்றும் இல்லை” எனவும் பதிவிட்டுள்ளார்.


தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் 11 ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் 11 ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கின் 3-வது தளத்தில் நடைபெறுகிறது.


கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்
தமிழ்நாடு,அரசியல்

கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊடகவியலாளர்கள் பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்ப்பதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியப்பங்காற்றி வருகிறார்கள். மக்களுக்கும், அரசுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இக்காலக்கட்டத்தில் சிறப்பாக இயங்கிவரும் இவர்களது பணியினை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் (அரசு அங்கீகார அட்டை / மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை / இலவசப் பேருந்துப் பயண அட்டை போன்ற ஏதேனும் ஒரு வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்) ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத் தொகையினை உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆட்சியின்போது ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை 3 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனை தற்போது உயர்த்தி வழங்கக் கோரி பெறப்பட்ட கோரிக்கையினை கனிவோடு பரிசீலித்த முதல்வர், ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத் தொகையினை ரூபாய் 3 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று, கடந்த ஆட்சியின்போது பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டால் அவர்களது வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதனையும் உயர்த்தி வழங்கக் கோரி ஊடகவியலாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கையினைப் பரிவுடன் பரிசீலித்து, அதனை ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பத்திரிகைத் துறை மற்றும் அனைத்து ஊடகத் துறை நண்பர்களும் இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்கள் பணியினை கவனமுடன் மேற்கொள்ள முதல்வர் இத்தருணத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்" என கூறப்பட்டுள்ளது.


மணி செய்தி

Happy Birthday "MS Dhoni"


சங்கரய்யா, மார்க்சிஸ்ட், முதல்வர் ஸ்டாலின், Sankaraiah, Marxist, Chief Minister Stalin
தமிழ்நாடு,முதன்மை செய்தி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் முகத்தான், தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தாண்டிற்கான தகைசால் தமிழர்என்ற விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், சுதந்திர தினவிழாவன்று சங்கரய்யாவுக்கு இவ்விருதினை வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவுரவிக்கவுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், "தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே ஆணையிட்டிருந்தார்கள். இவ்விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத்தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.

தகைசால் தமிழர் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.சங்கரய்யா அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கவுள்ளார்" என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக அரசு அறிவித்த ரூ.10 லட்சத்தை முதல்வரின் கொரோனா நிதிக்கு தருவதாக சங்கரய்யா அறிவித்துள்ளார். "எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்ட விருதை ஏற்பதோடு முதல்வருக்கு நன்றி கூறுகிறேன். சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க கொள்கையின் அடிப்படையில் பயணம்" என்று சங்கரய்யா கூறியுள்ளார்.

கடந்த வாரம் 100வது பிறந்த நாளை கொண்டாடிய என். சங்கரய்யா, தனது கல்லூரி காலத்தில் சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்று சிறைக்கு சென்றுள்ளார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு பொறுப்பை வகித்துள்ள இவர் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.


வன்னியர் இடஒதுக்கீடு, தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றம், Vanniyar Reservation, TNGovt, Chennai High Court
தமிழ்நாடு,முதன்மை செய்தி

10.5% உள்ஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை இல்லை என்றும் ஆகஸ்ட் 2வது வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில், கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை எதிர்த்து பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பிற சமுதாயத்தினர் இதனால் பாதிக்கப்படுவர் எனவும் அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் விசாரணை அடுத்த மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தச் சட்டத்தை நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்த இருப்பதாக தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை அவசர வழக்காக முன் கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையிடப்பட்டது.

அப்போது, 10.5 % உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் எனவும், சட்டத்தை அமல்படுத்தினால் விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படுவர் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், 10.5% உள் ஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை இல்லை என்றும் ஆகஸ்ட் 2வது வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஜார்கண்ட், நீதிபதி கொலை, Jharkhand, Judge murdered
இந்தியா,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைப்பயிற்சி சென்ற மாவட்ட நீதிபதி ஆட்டோ மோதி உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்பாக் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த், ஹிராப்பூரில் தனது வீட்டிற்கு அருகில் நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார். வெறிசோடி இருந்த சாலையோரம் நடைப்பயிற்சி சென்ற அவர் மீது பின்னால் சென்ற ஆட்டோ ஒன்று மோதிவிட்டு நிற்காமல் செல்லும் காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்த நீதிபதி உத்தம் ஆனந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

அடையாளம் தெரியாததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உத்தம் ஆனந்த் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது. இதனிடையே நடைப்பயிற்சிக்கு சென்ற நீதிபதி வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் உத்தம் ஆனந்த் இறந்தது தெரியவந்தது. நீதிபதி மரணம் விபத்து என்று கருதப்பட்ட நிலையில் சாலையோரம் நடந்துசென்ற நீதிபதி மீது ஆட்டோ வலியே சென்று மோதியத்துடன் நிற்காமல் சென்றது சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நீதிபதி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. சஞ்சீவ் சிங் உதவியாளர் ரஞ்ஜீவ் சிங் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு ஜாமீன் கொடுக்க அண்மையில் நீதிபதி உத்தம் ஆனந்த் மறுத்துவிட்டார். சிறையில் உள்ள இருவரும் தாதா அமந்த்சிங் கும்பலை சேர்ந்தவர்கள். எனவே நீதிபதி மரணத்தில் இந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதில் உண்மையை வெளிக்கொண்டு வர சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு ஜார்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.


அரசியல்,முதன்மை செய்தி

சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி அதிமுக சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, சேலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறியதாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.


சினேகன், நடிகை கன்னிகா, திருமணம், கமல்ஹாசன், snehan, actress Kannika, married, Kamalhaasan
சினிமா,முதன்மை செய்தி

பாடலாசிரியர் சினேகன் - நடிகை கன்னிகா ரவி திருமணம் நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ்த் திரையுலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வரும் சினேகன் 700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். பாடலாசிரியராக மட்டுமன்றி நடிகர், அரசியல்வாதி எனப் பணிபுரிந்து வருகிறார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இளைஞர் அணி செயலாளராக இருக்கிறார் சினேகன். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

இந்த நிலையில் சினேகன், 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை கன்னிகா ரவியை இன்று திருமணம் செய்துகொண்டார். கன்னிகா ரவி 'தேவராட்டம்' உள்ளிட்ட சில படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறார். சின்னத்திரையிலும் ‘கல்யாண வீடு’ சீரியலில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இவர்கள் திருமணம் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், தமிழ் முறையில் நடந்தது. கமல்ஹாசன் தாலி எடுத்துக் கொடுக்க சினேகன் மகிழ்ச்சியுடன் கன்னிகா ரவி கழுத்தில் கட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கிரீன் பார்க் ஓட்டலில் இன்று நடந்த இவர்களது திருமணத்தில், பாரதிராஜா, பழ.கருப்பையா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


நடிகர் வேணு அரவிந்த், கொரோனா, Actor Venu Arvind, Corona
சினிமா,முதன்மை செய்தி

பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சின்னத்திரை சீரியல்கள் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகர் வேணு அரவிந்த். 1996ம் ஆண்டு ஒளிபரப்பான காஸ்ட்லி மாப்பிள்ளை, 1997ம் ஆண்டு ஒளிபரப்பான கிரீன் சிக்னல் சீரியல்கள் மூலம் பரவலாக அறியப்பட்டார். அதேபோல 1997,99 காலக்கட்டத்தில் ஒளிபரப்பான கே.பாலசந்தரின் `காசளவு தேசம்’, `காதல் பகடை’, உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் வாணி ராணி, செல்வி, சந்திரகுமாரி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவர். தவிர, முத்து எங்கள் சொத்து (1983), அந்த ஒரு நிமிடம் (1985), இனியவள் (1998), அலைபாயுதே (2000), என்னவளே (2001), நரசிம்மா (2001) வல்லவன் (2006) உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் `சபாஷ் சரியான போட்டி’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறியப்பட்டார். இது தவிர, கலைமாமணி விருது பெற்ற முதல் சின்னத்திரை நடிகர் என்ற பெருமையும் வேணு அரவிந்துக்கு உண்டு.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொரோனாவிலிருந்து மீண்டு வந்த வேணு அரவிந்துக்கு மூளையில் கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மூளையிலிருந்த கட்டி அகற்றப்பட்டது. அதையடுத்து, வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றுள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வேணு அரவிந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.


ஒலிம்பிக்2020, இந்தியா, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா, Olympic 2020, India, boxer Lovlina
விளையாட்டு,முதன்மை செய்தி

டோக்யோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெற்றி பெற்று பதக்கம் உறுதி செய்துள்ளார்.

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்யோவில் கடந்த 23ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 8வது நாளான இன்று மகளிர் வெல்டர்வெயிட் குத்து சண்டை காலிறுதியில் 64-69 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் மற்றும் சீன தைபேவின் சின்-சென் நியென் விளையாடினர். இந்த போட்டியில் லவ்லினா 4-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். காலிறுதியில் வெற்றியடைந்து முன்னேறியுள்ள லவ்லினா இந்தியாவுக்கு பதக்கம் ஒன்றை உறுதி செய்துள்ளார்.

ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் தோல்வி

இதனிடையே, 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் சேபிள் தோல்வி அடைந்துள்ளார். இந்த போட்டியில் 8:18.12 என்ற நேரகணக்கில் பந்தய தொலைவை கடந்து 7வது இடம் பெற்றுள்ளார். இந்த போட்டியில் கென்யாவை சேர்ந்த ஆபிரகாம் கிபிவோட் முதல் இடமும், எத்தியோப்பியாவின் வேல் கெட்னெட் 2வது இடமும் பெற்றுள்ளனர். இவர்களுடன் இத்தாலியை சேர்ந்த அகமது அப்துல்வாகித் 3வது இடம் பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். ஆகஸ்ட் 2ம் தேதி ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.


Srilanka, India, IndiaPlayars, Corona, இலங்கை, இந்திய வீரர்கள், கொரோனா
விளையாட்டு,முதன்மை செய்தி,கொரோனா வைரஸ்

இந்திய கிரிக்கெட் வீரர்களில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இலங்கையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை வென்ற இந்திய அணி, டி20 தொடரில் பங்கேற்றது. நேற்று நடந்த போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, டி-20 தொடரை இந்திய அணி இழந்தது.

இதற்கிடையே, இந்திய வீரர் குருணால் பாண்ட்யாவுக்கு கடந்த 27ம் தேதி, கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, 2 வது டி-20 போட்டி ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டது. அவரும் அவருடன் தொடர்பில் இருந்த, அவர் சகோதரர் ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா, சாஹல், கிருஷ்ணப்பா கவுதம், மனிஷ் பாண்டே, தீபக் சாஹர் ஆகிய 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால், எஞ்சியிருந்த 11 வீரர்கள் 2வது டி-20 போட்டியிலும் நேற்றைய போட்டியிலும் பங்கேற்றனர்.

இந்நிலையில், குருணால் பாண்ட்யாவை அடுத்து மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் சாஹல் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்கள் இன்று மாலை இந்தியா திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.


ஒலிம்பிக், பேட்மிண்டன், சிந்து, Olympic, Badminton, PVSindhu
விளையாட்டு,முதன்மை செய்தி

டோக்யோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஜப்பானின் டோக்யோவில் இன்று பிற்பகல் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையே பேட்மிண்டன் காலிறுதிப் போட்டி நடைப்பெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் உலக தரவரிசைப் பட்டியிலில் 7வது இடத்தில் உள்ள பி.வி.சிந்துவும், ஜப்பான் சார்பில் தரவரிசைப் பட்டியலில் 5ம் இடத்தில் உள்ள அகனே யமாகுஷியும் விளையாடினர். இந்த போட்டியில் முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் எளிதில் வென்ற பி.வி. சிந்து இரண்டாவது செட்டை வெல்ல கடுமையாக போராடினார்.

இந்த போட்டி ஜப்பானில் நடைபெறுவதால் அந்நாட்டு வீராங்கனையான யமாகுஷி இரண்டாவது செட்டை கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்தார். இதனால் பி.வி. சிந்து அடித்த கடினமான ஷாட்களையும் எளிதாக திருப்பி அடித்து பி.வி.சிந்துவுக்கு நெருக்கடி கொடுத்தார். இரண்டாவது செட்டில் 11-6 என்ற கணக்கில் பி.வி.சிந்து முன்னணியில் இருந்த நிலையில், ஒரு கட்டத்தில் 16-15 என்ற கணக்கில் யமாகுஷி முன்னிலை பெற்றார். தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடிய யமாகுஷி 20-18 என்ற கணக்கில் முன்னிலை பெற்று 2வது செட்டை கைப்பற்றும் நிலைக்கு சென்றார். ஏற்கெனவே முதல் செட்டை பி.வி.சிந்து கைப்பற்றியுள்ள நிலையில் இரண்டாவது செட்டை யமாகுஷி கைப்பற்றினால் இருவரும் மூன்றாவது செட்டை விளையாடி வெற்றியை தீர்மானிக்க வேண்டிவரும்.

முதல் இரண்டு செட்களையும் தொடர்ந்து கைப்பற்றினால் வெற்றி பெறலாம் என்பதால் பி.வி.சிந்து வழக்கமான தனது ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தி 22-20 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி அசத்தினார். இதனால் 2-0 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை யமாகுஷியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிப்பெற்றார்.


அவதூறு வழக்குகள், முதல்வர் ஸ்டாலின், Defamation case, CM Stalin
அரசியல்,முதன்மை செய்தி

அரசியல் பிரமுகர்கள் மீது போடப்பட்டுள்ள 130 அவதூறு வழக்குகளும் திரும்ப பெற்றுவதுடன், அதன் மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்து ரத்து செய்யப்படும் என்று முதல்வர் மு.கஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்தநிலையில் அரசியல் பிரமுகர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து அவதூறு வழக்குகளும் திரும்ப பெறப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2012-ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்களுக்காக, தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவர் விஜய்காந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் இளங்கோவன் மற்றும் விஜயதாரணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது போட்டபட்ட வழக்குள் திரும்ப பெறப்படுகின்றன.

மேலும், அரசியல் பிரமுகர்கள் பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் மற்றும் அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன், கணேசன், தி.மு.க.வின் கே.என்.நேரு மற்றும் நாசர், பாராளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதிமாறன், ஆர்.எஸ். பாரதி, எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் திமுக தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆகியோர் மீது சுமார் 130 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.

அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.


ஒலிம்பிக், வட்டு எறிதல், வில்வித்தை, கமல்பிரீத் கவுர், அடானுதாஸ், Kamalpreet Kaur, Atanu Das, Archery
விளையாட்டு,முதன்மை செய்தி

டோக்யோ ஒலிம்பிக்கில் மகளிர் வட்டு எறிதல் இறுதி போட்டிக்கு கமல்பிரீத் கவுர் தகுதி பெற்றுள்ளார். அதே நேரத்தில் வில்வித்தைப் போட்டியில் அடானு தாஸ் தோல்வி அடைந்தார்.

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்யோவில் கடந்த 23ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 9வது நாளான இன்று நடந்த மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் 64 மீட்டர் தூரம் வட்டு எறிந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதேபோல் இன்று நடந்த வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் அடானு தாஸ் 6-4 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானிய வீரரான டகாஹரு புருகவாவிடம் தோல்வி அடைந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த போட்டியில் அடானு தாஸ், சீன தைபேவின் டெங் யூ-செங் என்பவரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தொடர்ந்து நடந்த போட்டியில், தென்கொரியாவின் ஓ ஜின்-ஹையெக் என்பவரை 6-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

இதனால், எலிமினேசன் சுற்றுக்கு தகுதி பெற்ற அவர், இன்று நடந்த போட்டியில் தோற்று வெளியேறி உள்ளார். இதனால் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பினை அவர் இழந்துள்ளார்.


பிளஸ்2 மாணவர்கள், பிளஸ் 2 துணைத்தேர்வு, ஹால்டிக்கெட், தமிழக பள்ளிக்கல்வித்துறை, Plus 2 Students, Plus 2 Sub-Examination, Hall Ticket, Tamil Nadu School Education Department
தமிழ்நாடு,முதன்மை செய்தி

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் கொரோனா காரணமாக தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்ட நிலையில், அதில் திருப்தி இல்லாதவர்களுக்கும், தனித்தேர்வர்களாக விண்ணப்பித்தவர்களுக்கும் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

அதன்படி, அந்த துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசு வழங்கிய மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள், தனித்தேர்வர்களாக விண்ணப்பித்து தேர்வு எழுத முடியாதவர்களுக்கு துணைத்தேர்வு வரும் 6ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் (நுழைவுச்சீட்டு) 31ம் தேதி (இன்று) காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப எண் இல்லாத காரணத்தினால் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்களுடைய நுழைவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு காவல்துறை, சப்-இன்ஸ்பெக்டர் சிவன்யா, திருநங்கை, Tamil Nadu Police, Sub Inspector Sivanya, Transgender
தமிழ்நாடு,முதன்மை செய்தி

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த பி.காம் பட்டதாரியான திருநங்கை சிவன்யா சட்டம் ஒழுங்கு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டின் இரண்டாவது திருநங்கை எஸ்.ஐ.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் சிவன்யா.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியில் உள்ள பாவுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன்யா. பி.காம் பட்டப்படிப்பை முடிந்த இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் காவல்துறை பயிற்சி மையத்தில் சேர்ந்து தேர்வு எழுதி வெற்றிப்பெற்றுள்ளார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவன்யாவுக்கான பணியாணை நேற்று முன்தினம் வழங்கியுள்ளார். அவருடன் டி.ஜி. பி சைலேந்திர பாபு உடன் இருந்தார்.

இதுகுறித்து சிவன்யா கூறுகையில், “காவல் துணை ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம் எனது சந்தோஷத்திற்கு எல்லை இல்லை. இதன் மூலம் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. அதுவும் முதல்வரின் கையால் பணி நியமன ஆணையை பெற்றது கூடுதல் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்தது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்துத் தேர்வுக்காக என் மீது வீசப்பட்ட கேலி, கிண்டல்களை எல்லாம் பொருட்படுத்தாமல், போட்டித் தேர்வுக்கான தயாரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தியதால், இறுதியில் நான் கண்ட கனவை நிறைவேற்ற முடிந்தது.

கொரோன நோய்த் தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்து பொதுமுடக்கத்தால் “உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு காலதாமதம் ஏற்பட்டது வேதனையாக இருந்தாலும், நான் அமைதியை இழக்கவில்லை. எனது காவல்துறை அதிகாரி கனவு நிறைவேற்றப் பட்டிருந்தாலும் தற்போதைய காவல் துணை ஆய்வாளர் பணியைவிட காவல் கண் காணிப்பாளராக வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்காக தெர்டர்ந்து குரூப்-1 தேர்வுக்கு தயாராகி வருகிறேன். நிச்சயம் பெற்றி பெறுவேன்.

எனது வெற்றிக்கு குடும்பத்தினர் அனைவரின் ஆதரவே காரணம். என் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆதரித்தன் மூலம் இந்த வெற்றியை என்னால் பெற முடிந்தது. அரசு வேலைக்குச் செல்ல விரும்பும் திருநங்கைகளுக்கு ஒரு முன்மாதிரியாக, தமிழ்நாட்டின் முதல் திருநங்கை காவல் துணை ஆய்வாளர் பிரித்திகா யாஷினி முன்மாதிரியாக இருந்து வருகிறார். காவல்துறை பணியில் அவர் பெற்ற வெற்றி, லட்சியத்தை அடைவதில் எங்களுக்கு இருந்த அனைத்து முரண்பாடுகளையும், எதிர்த்துப் போராடுவதற்கான தைரியத்தை அளித்தது” என கூறினார்.

முன்னதாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி இந்தியாவிலேயே முதல் சப்-இன்ஸ்பெக்டராகத் தேர்வுசெய்யப்பட்ட திருநங்கை ஆவார். இதனையடுத்து தற்போது, சிவன்யா சட்டம் ஒழுங்கு பிரிவில் காவல் துணை ஆய்வாளராக தேர்வு பெற்றுள்ளார்.


சிவகாசி, பட்டாசு விபத்து, தொழிலாளர் பலி, Sivakasi, Fireworks accident, worker killed
தமிழ்நாடு,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், ஊழியர் உடல் தூக்கி வீசப்பட்டு மரத்தில் தொங்கியது. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வி.சொக்கலிங்கபுரத்தில், அய்யனார் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ஆனந்தராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். இன்று காலை ஆனந்தராஜ் பட்டாசு மருந்து நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதால் ஆனந்தராஜ் உடல் சிதறிய நிலையில் தூக்கி வீசப்பட்டார். மரத்தில் தொங்கிய ஆனந்தராஜின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெடிவிபத்து ஏற்பட்ட அறை முற்றிலுமாகத் தரைமட்டமானது. இந்த விபத்து குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஒலிம்பிக், இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஆஸ்திரேலியா, Olympic, Indian womens hockey team, Australia
விளையாட்டு,முதன்மை செய்தி

டோக்யோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணி 1-0 என்ற கணக்கில் காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்யோவில் கடந்த 23ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 11வது நாளான இன்று நடந்த மகளிர் ஆக்கி போட்டி காலிறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின.

இதில், இந்திய மகளிர் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. குர்ஜித் கவுர் கோல் அடித்து, இந்தியாவின் வெற்றிக்கு உதவியுள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் அரையிறுதிக்குள் இந்திய மகளிர் ஹாக்கி அணி நுழைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதே போல இன்று நடந்த மகளிர் 200 மீட்டர் தடகள ஓட்ட பந்தய போட்டியில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் 7வது இடம் பிடித்துள்ளார். இதனால், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பினை இழந்துள்ளார்.


தமிழ்நாடு, பள்ளிக்கூடம், அரசு பள்ளி ஆசிரியர்கள், Tamil Nadu, School, Government School Teachers
தமிழ்நாடு,முதன்மை செய்தி

சென்னையில், 4 மாத காலத்துக்குப் பின், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் இன்று பணிக்கு திரும்பினர். இதனால் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க்ப்பட்டிருந்தது. தற்போது 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்க ஆலோசித்து வரும் நிலையில், பள்ளி வளாகம், வகுப்பறைகளை தயார் செய்தல், கற்றல் – கற்பித்தல் பணிகளை தீவிரப்படுத்துதல் போன்ற பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

இதற்காக 4 மாத காலத்துக்குப் பின், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் இன்று பள்ளிகளுக்கு திரும்பினர். வரும் 6ம் தேதி முதல் வாட்ஸ் அப் வழியாக அலகுத் தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில், அதற்கான பணிகளையும் ஆசிரியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.


விஜய் மக்கள் இயக்கம், நடிகர் விஜய்,  Vijay Makkal Iyakkam, actor Vijay
தமிழ்நாடு,சினிமா,முதன்மை செய்தி

சம்பள பாக்கியை வாங்குவதற்காக நடிகர் விஜய்யை குடும்பத்துடன் சந்திக்க வந்த விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகியை பார்க்க மறுத்துவிட்டார். அவரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

விஜய் மக்கள் இயக்கத்தின் துணை செயலாளராக இருந்த குமார், 2 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டார். இந்த நிலையில் குமார் தனது குடும்பத்தினருடன் சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் வீட்டிற்கு அவரை சந்திக்க வேண்டும் எனக் கூறி சென்றுள்ளார். ஆனால் அவரை சந்திக்க விஜய் மறுத்ததாக கூறப்படும் நிலையில், அதன் பின்னரும் வீட்டின் முன்பு நின்றுள்ளார்.

இதனை அறிந்து சென்ற காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். சம்பள பாக்கியை பெறுவதற்காக விஜய்யை சந்திக்க வந்ததாக அவர் கூறியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


பாடகி கல்யாணி மேனன், இயக்குநர் ராஜீவ் மேன், Singer Kalyani Menon, Director Rajeev Menon
சினிமா,முதன்மை செய்தி

பிரபல இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயாரும் பாடகியுமான கல்யாணி மேனன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.

பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். மணிரத்னத்தின் பம்பாய், குரு, கடல் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அரவிந்த்சாமி, பிரபுதேவா, கஜோல் நடித்த மின்சாரக் கனவு, அஜித், மம்மூட்டி நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாளமயம் உட்பட சில படங்களை இயக்கியுள்ளார்.

இவருடைய தாயார் கல்யாணி மேனன். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் பல படங்களில் பின்னணி பாடியுள்ளார். சுஜாதா என்ற படத்தில், ’நீ வருவாய் என’, ’முத்து’ படத்தில் ’குலுவாளிலே முத்து வந்தல்லோ’, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில், ’ஓ மணப்பெண்ணே’, விஜய்சேதுபதியின் ‘96’ படத்தில் காதலே காதலே உட்பட தமிழ், மலையாளத்தில் சுமார் 100 படங்களுக்கு மேல் பாடியுள்ளார்.

சென்னையில் வசித்து வந்த அவர், உடல் சரியில்லாததால் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் காலமானார். மறைந்த கல்யாணி மேனனுக்கு ராஜீவ் மேனன் தவிர, கருணாகரன் மேனன் என்ற மகனும் உள்ளார். மறைந்த கல்யாணி மேனனின் இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் 2 மணிக்கு பெசன்ட் நகரில் நடைபெற இருக்கிறது.


ஒலிம்பிக், பெல்ஜியம் இந்தியா, ஹாக்கிப் போட்டி, Tokyo 2020, Olympics, Hockey, INDvBEL
விளையாட்டு,முதன்மை செய்தி

டோக்யோ ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி அரை இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது. அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கு ஆஸ்திரேலியா அல்லது ஜெர்மனியுடன் இந்திய அணி மோத உள்ளது.

டோக்யோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அணியான பெல்ஜியத்துடன் விளையாடியது.

போட்டியின் முதல் கால் இறுதியில் பெல்ஜியம் அணியின் லுப்பர்ட் 2வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து கோல் கணக்கை துவக்கினார். இதன்பின் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்து, அதனை இந்திய அணியின் ஹர்மன்பிரீத் சிங் 7வது நிமிடத்தில் கோலாக்கினார். இதனால் போட்டி 1-1 என சமநிலை பெற்றது. அடுத்த நிமிடத்தில், இந்தியாவின் அமித் ரோகிதாஸ் அடித்த பந்து, மன்தீப் சிங்கிடம் சென்றது. அதனை அவர் கோலாக்கினார். இதனால், முதல் கால் இறுதியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

அதன்பின் 2வது கால் இறுதி நடந்தது. இதில் போட்டியின் 19வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் அலெக்சாண்டர் ஹெண்டிரிக்ஸ் அடித்த கோலால் 2-2 என ஆட்டம் சமன் பெற்றது. 2வது கால் இறுதி முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களுடன் சமநிலையில் இருந்தன. தொடர்ந்து நடந்த போட்டியில் 33வது மற்றும் 36வது நிமிடங்களில் இந்திய அணியினர், எதிரணி பகுதிக்குள் நுழைந்து அதிரடியாக விளையாடினர். எனினும் தடுப்பு அரணாக இருந்து கோல் அடிக்க விடாமல் பெல்ஜியம் அணி தடுத்தது.

இதன்பின் 39வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. எனினும், ஹர்மன்பிரீத் சிங் அடித்த பந்து கோலாகவில்லை. இந்நிலையில், போட்டியின் 49வது, 53வது மற்றும் 59வது நிமிடங்களில் பெல்ஜியம் அணி அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்தன. இதனால் போட்டி முடிவில் 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்றுள்ளது.

இறுதிப்போட்டிக்கு இந்தியா செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோல்வி அடைந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கு ஆஸ்திரேலியா அல்லது ஜெர்மனி அணியுடன் இந்திய அணி மோத உள்ளது.


Hockey, Narendra Modi, Olympics 2021, Cheer For India, இந்திய ஹாக்கி அணி, பிரதமர் மோடி
இந்தியா,விளையாட்டு,முதன்மை செய்தி

"நம்முடைய ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள் சிறந்த விளையாட்டை வழங்கினர். அவர்களால் நாடு பெருமை கொள்கிறது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டோக்யோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்திலும் உள்ள அணியான பெல்ஜியத்துடன் விளையாடியது.

இந்திய அணி லீக் சுற்றில் ஆஸ்திரேலியா தவிர மற்ற எல்லா அணிகளையும் வீழ்த்தி ‘ஏ’ பிரிவில் 2-வது இடம் பிடித்தது. அடுத்து கால்இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வெளியேற்றி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

‘பி’ பிரிவில் 4 வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடம் பிடித்த பெல்ஜியம் அணி, கால்இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. பெல்ஜியம் அணி இந்த தொடரில் இதுவரை 29 கோல்கள் அடித்து அசத்தி இருக்கிறது. இந்திய அணி, பெல்ஜியத்துக்கு எதிரான கடைசி 5 ஆட்டங்களில் 4ல் வெற்றி பெற்று இருப்பதால் நம்பிக்கை ஏற்படுத்தியது. ஆனால், இந்திய அணி தோல்வியை தழுவியது. 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்று இறுதிக்கு சென்றது.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், "வெற்றிகளும் தோல்விகளும் வாழ்வின் ஓர் அங்கம். டோக்யோ ஒலிம்பிக்கில் நம்முடைய ஆடவர் ஆக்கி அணி வீரர்கள் சிறந்த விளையாட்டை வழங்கினர். அடுத்த போட்டியில் சிறப்புடன் விளையாட வாழ்த்துகள். வருங்காலங்களிலும் சிறந்த முறையில் செயல்பட எனது வாழ்த்துகள். நமது விளையாட்டு வீரர்களால் நாடு பெருமை கொள்கிறது" என உற்சாகப்படுத்தியுள்ளார்.


மேகதாது, கர்நாடக பாஜக, தமிழக பாஜக, கமல்ஹாசன், வானதி சீனிவாசன், MeghaDadu, Karnataka BJP, Tamil Nadu BJP, Kamal Haasan, Vanathi Srinivasan
அரசியல்,முதன்மை செய்தி

"மேகதாது அணை விவகாரத்தில் பா.ஜ.க இரட்டை வேடம் போடுகிறது. போராடும் இருவருக்கும் வேறு பெயர்கள் இருந்தாலும் இரு கட்சிகளுமே மத்திய அரசின் பொம்மைகள்தான்" என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "வாக்களித்த கோவை தெற்கு மக்களுக்கு நன்றி. கோவையில் பகிரங்கமாக காசு கொடுக்க மாட்டோம் என்று சொல்லிய எங்களை வெற்றியின் மிக மிக அருகில் கொண்டு சென்ற கோவை மக்களுக்கு நன்றி தெரிவிக்கவே வந்தேன்.

பா.ஜ.க வின் கொங்குநாடு என்கின்ற கோஷத்தை அரசியல் கோஷமாக பார்க்கின்றேன். மக்கள் தேவையாக அதை பார்க்கவில்லை. அது ஒரு பெரிய கம்பெனி. ஈஸ்ட் இந்தியா கம்பெனி போன்று, நார்த் இந்தியா கம்பெனியை உருவாக்க முயல்கின்றனர். நீங்கள் ஒரு நாடு என்றால் தோளில் தூக்கி வைத்துக்கொள்வோம். வியாபாரத்திற்கு சவுரியமாக இருக்கும் என எங்கள் வளங்களை தனியாருக்கு தூக்கி கொடுக்க முயன்றால் அது (பா.ஜ.க)கம்பெனிதான். இந்த சுரண்டலுக்கு எந்த மாநிலமும் இடம் கொடுக்காது. நலத்திட்டம் என்று எதுவும் பெரிதாக இல்லை. நியாயம் சொல்லும் மையங்களை கொஞ்சம் கொஞ்சமாக மூடி வருகின்றனர். இது சினிமா தொழிலிலும் நடக்கின்றது. இதற்காகத்தான் டெல்லி சென்று வந்தேன்.

உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் சம்மந்தப்படாமல் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். கலைஞருக்கு நிறைய மக்களுக்கு மனதில் இடமிருக்கின்றது. பென்னிகுயிக் நினைவகத்தை வைத்திருக்க வேண்டும், வைத்திருக்க வலியுறுத்துவோம். இந்தியாவிலேயே அதிகமாக இரட்டை வேடம் நடித்தவன் நான், இரட்டை வேடம் போடும் நடிகர்களை நான் சட்டென்னு கண்டுபிடிப்பேன். மேகதாது விவகாரத்தில் பா.ஜ.க இரட்டை வேடம்தான் போடுகின்றது. போராடும் இருவருக்கும் வேறு வேறு பெயர்கள் இருந்தாலும் இருவருமே மத்திய அரசின் பொம்மைகள்தான்.

கொரொனா விவகாரத்தில் இந்த அரசு இயன்றதை செய்கின்றது. அது போதாது, இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இன்னும் அதிகமாக செய்யமுடியும் என்பதை அரசுக்கு நினைவுபடுத்துவோம். முழுநேர அரசியல்வாதி என எவனும் இல்லை. சாரி எவரும் இல்லை. எனது தொழில் நடிப்பு. உள்ளாட்சி தேர்தல் எனது கடமை. மக்களாட்சி மலர வேண்டும் என நினைப்பவர்கள் நாங்கள். தோல்வி வந்தால் விட்டுட்டு போயிடுவேன் என்றால் சினிமாவையும் விட்டுட்டு போயிருக்கனும். தோல்வி தந்த பாடம் அடுத்த வெற்றிக்காக அமையும் என்ற பாடம் கோவை மக்கள் கொடுத்து இருக்கின்றனர். 1500, 2000 என்ற வித்தியாசம் எல்லாம் ஒரு கணக்கே கிடையாது.

இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்க வந்த கட்சியின் தொண்டன் நான். மகேந்திரன் போன்றவர்கள் திமுகவுக்கு சென்றதால் எந்த பாதிப்பும் இல்லை. கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் தென்படவில்லை. லாபம் என்று எழுதி வைத்திருந்த போர்டை மட்டுமே பார்த்தேன்" என கிண்டல் செய்தார்.


மணி செய்தி

VALIMAI AJITH | BONY KAPOOR | ZEE STUDIOS "VALIMAI" FIRST SONG RELEASE | TODAY ONWARDS


எடப்பாடி பழனிசாமி, துரைமுருகன், கருணாநிதி, ஸ்டாலின், தமிழக அரசு, Edappadi Palanisamy, Duraimurugan, Karunanidhi, Stalin, Tamil Nadu Government
அரசியல்,முதன்மை செய்தி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத் திறப்பு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏன் பங்கேற்கவில்லை? என்ற கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத் திறப்பு விழா சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கருணாநிதிரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார். தமிழக ஆளுநர், பல்வேறு கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். ஆனால் அ.தி.மு.க இந்நிகழ்ச்சியைப் புறக்கணித்தது.

ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்வின்போது தி.மு.க புறக்கணித்ததால் கருணாநிதி படத்திறப்பில் அ.தி.மு.க பங்கேற்கவில்லை என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின்போது இதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “ஜெயலலிதா படத்திறப்பு விழாவிற்கு அ.தி.மு.க சார்பில் அழைப்பிதழ் மட்டுமே அனுப்பப்பட்டது, தொலைபேசியில் அழைக்கவில்லை. ஜெயலலிதா படத்திறப்புக்கு முறைப்படி அழைக்காததாலேயே தி.மு.க பங்கேற்கவில்லை.

ஆனால், முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் படத்திறப்பில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பியதுடன், முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி எடப்பாடி பழனிசாமிக்கு நானே தொலைபேசியில் அழைப்பு விடுத்தேன். குடியரசுத்தலைவர், ஆளுநர், சபாநாயகர் அமர்ந்திருக்கும் வரிசையில் அவர்களுக்கு அருகில் எதிர்க்கட்சித் தலைவருக்கு இருக்கை ஒதுக்கவேண்டும் என்றும், வாழ்த்துரையில் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் இடம்பெறவேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். நான் அழைப்பு விடுத்தபோது, கலந்தாலோசித்துவிட்டு முடிவு சொல்கிறேன் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, விழாவில் பங்கேற்கவில்லை என்று அவைச் செயலாளரிடம் தெரிவித்துவிட்டார்” என கூறினார்.


தமிழ்நாடு, கொங்குநாடு, மத்திய அரசு, Tamilnadu, Kongunadu, centralgovernment
இந்தியா,முதன்மை செய்தி

"தமிழ்நாடு உட்பட எந்த மாநிலத்தையும் இரண்டாக பிரிக்கக் கூடிய திட்டம் ஏதும் இல்லை" என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக பாஜகவின் கொங்குநாடு முழக்கத்துக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட எந்த ஒரு மாநிலத்தையாவது பிரிக்க கூடிய திட்டம் எதுவும் மத்திய அரசிடம் உள்ளதா என, மக்களவையில் கேள்வி எழுப்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் பாரிவேந்தனர், ராமலிங்கம், அதன் விவரங்களை அளிக்குமாறு கோரினர். மேலும், தமிழ்நாடு உட்பட வேறு எந்த மாநிலத்தையாவது இரண்டாக பிரிக்க தனிநபர் அல்லது அமைப்புகளிடம் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வந்துள்ளதா எனவும் அவர்கள் எழுத்துப் பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்தக் கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், புதிய மாநிலங்களை உருவாக்க தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து அவ்வப்போது கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு மாநிலத்தை பிரிப்பது, நாட்டின் கூட்டாட்சி அரசியலின் மீதான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், விதிமுறைகள், வலுவான காரணிகளை கருத்தில் கொண்டே மாநிலங்களை பிரிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

எனவே தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்தையும் இரண்டாக பிரிக்கக் கூடிய திட்டம் ஏதும் பரிசீலனையில் இல்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் கூறினார்.


டோக்யோ ஒலிம்பிக், ஈட்டி எறிதல், மல்யுத்தம், நீரஜ் சோப்ரா, தீபக் புனியா, ரவிக்குமார், Tokyo Olympics, Javelin Throw, Wrestling, Neeraj Chopra, Deepak Punia, Ravikumar
விளையாட்டு,முதன்மை செய்தி

டோக்யோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கும், மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் தீபக் புனியா காலிறுதிக்கும், ரவிக்குமார் அரையிறுதிக்கும் முன்னேறி உள்ளனர்.

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற்று வருகின்றன. அதில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்களில் ஒருவர் நீரஜ் சோப்ரா. இன்று காலை ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா தனது முதல் வாய்ப்பில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார். இதன்மூலம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றார். இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் ஈட்டி எறிதலுக்கான இறுதிச்சுற்று போட்டியில் அவர் கலந்து கொள்வார்.

இன்று காலை நடைபெற்ற மல்யுத்தப்போட்டியின் 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிக்கு முந்திய சுற்றில் நைஜீரிய வீரர் எகெரெகெமியை 12-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.

ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டி 57 கி எடை பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் கொலம்பிய வீரரை 13-2 கணக்கில் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 8 நாட்டின் வீரர்கள் பங்கேற்ற காலிறுதிக்கான தகுதி சுற்று போட்டியில் கொலம்பியாவின் அர்பனோவை ரவிக்குமார் எதிர்கொண்டார். அதே போல செர்பியாவின் மிகிக்கை எதிர்கொண்ட ஜப்பானின் டகஹஹி காலிறுதிக்கு முன்றேயுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காலிறுதி போட்டியில், பல்கேரியாவின் வான்கலோவை எதிர்கொண்ட ரவிக்குமார் 14-4 என்கிற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.


வெளிநாட்டு கார், நுழைவு வரி, நடிகர் விஜய், நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி சுப்பிரமணியம், Foreign car, entry tax, actor Vijay, actor Dhanush, Chennai High Court, Judge Subramaniam
சினிமா,முதன்மை செய்தி

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.

நடிகர் தனுஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இதற்கு வரியாக 60.66 லட்சம் செலுத்துவதற்கு வணிகவரித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 50 சதவீதம் வரி செலுத்தினால் தனுஷின் காரை பதிவு செய்வதற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.


இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 3.33 லட்சம் வரியாக நடிகர் தனுஷ் செலுத்தியதால், விதிமுறைகளை பின்பற்றி காரை பதிவு செய்ய ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு 2016-ம் ஆண்டு ஏப்ரலில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நாளை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பிக்க உள்ளார்.

ஏற்கெனவே நடிகர் விஜய் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தனுஷ் வழக்கிலும் உத்தரவு பிறப்பிக்கிறார்


ஒலிம்பிக், இந்தியா, குத்துச்சண்டை, வவ்லினா, பிரதமர் மோடி, Tokyo2020, OlympicGames, Lovlina Borgohain, Modi
விளையாட்டு,முதன்மை செய்தி

டோக்யோ ஒலிம்பிக் மகளிர் குத்துச் சண்டை அரையிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் தோல்வி தழுவினாலும் இந்தியாவுக்காக இன்னொரு பதக்கமாக வெண்கலம் வென்று சாதனை படைத்தார்.

அரையிறுதியில் துருக்கி வீராங்கனை சர்மெனேலி 5-0 என்று வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். ஆனால் போராடி தோல்வி கண்ட லவ்லினா வெண்கலப்பதக்கம் வென்றார். காலிறுதியில் அபார வெற்றி பெற்ற பிறகே வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா. இருந்தாலும் இவரது திறமைக்கு தங்கம் அல்லது வெள்ளி வெல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் உலக சாம்பியன் வீராங்கனையிடம் அரையிறுதியில் போராடி தோல்வி தழுவினார் லவ்லினா. இதன் மூலம் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய ஒலிம்பிக் வரலாற்று புத்தகத்தில் இடம்பெற்றார்.

இதன் மூலம் இந்தியா டோக்யோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் 2 வெண்கலம், ஒரு வெள்ளியுடன் 3 பதக்கங்கள் பெற்றுள்ளது. மீராபாய் சானு பளுத்தூக்குதல் வெள்ளி, பி.வி.சிந்து பாட்மிண்டன் வெண்கலம் ஆகியவற்றை அடுத்து லவ்லினா என்ற 3வது பெண் இந்தியாவுக்கு இன்னொரு வெண்கலம் வென்று தந்துள்ளார். வெல்ட்டர் வெய்ட் 69 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார் லவ்லினா போர்கோஹெய்ன்.

அரையிறுதி முதல் சுற்றில் துருக்கி வீராங்கனை புசெனாஸ் சர்மெனேலி 5 ஜட்ஜ்களிடமிருந்தும் 10 புள்ளிகள் பெற லவ்லினா 9 புள்ளிகள் பெற்று நெருக்கமாக வந்தார். இரண்டாவது சுற்றிலும் அதே போல் சர்மெனேலி 5 ஜட்ஜ்களிடமிருந்து 10 புள்ளிகள் பெற லவ்லினா 9 புள்ளிகள் பெற்று நெருங்கி வந்து தோற்றார். அடுத்த சுற்றில் துருக்கி வீராங்கனை சர்மெனேலி மீண்டும் 10 புள்ளிகளை அனைத்து ஜட்ஜ்களிடமிருந்து பெற லவ்லினா 9,9,9, 8,8 என்று பெற்று பின் தங்கினார். இதனையடுத்து 0-5 என்று தோல்வி தழுவினாலும் வெண்கலம் வென்றார் லவ்லினா.

லவ்லினா போர்கோஹெய்ன் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த போட்டியை காண்பதற்காக அம்மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் 20 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, லவ்லினாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினாவிற்கு வாழ்த்துகள். குத்துச்சண்டையில் லவ்லினா பெற்ற வெற்றி இந்தியர்களை மேலும் ஊக்கப்படுத்தும். போட்டியில் லவ்லினாவின் உறுதித்தன்மை போற்றத்தக்கது" என கூறியுள்ளார்.


ராஜீவ் காந்தி, பேரறிவாளன், ஜனாதிபதி, ரகுபதி, தமிழக அரசு, Rajiv Gandhi, Perarivalan, President, Raghupathi, Tamil Nadu Government
தமிழ்நாடு,முதன்மை செய்தி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக, குடியரசுத் தலைவர் முடிவை அறிவிக்காதபோது, அதுகுறித்து மாநில அரசு முடிவு எடுக்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று தொடங்கியது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 26-ம் தேதி கடைசி நாளாகும். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விண்ணப்பம் விநியோகத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், தமிழ்நாடு அரசு முடிவெடுத்து, ஆளுநருக்கு அனுப்பியதாகவும், ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், குடியரசு தலைவர் முடிவை தெரிவிக்காதபோது, அந்த முடிவை தமிழ்நாடு அரசு முடிவெடுக்க முடியாது என்றும், 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத்தலைவரிடம் முதலமைச்சர் கடிதம் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


டோக்யோ ஒலிம்பிக், இந்திய ஹாக்கி, பிரதமர் மோடி, ஜனாதிபதி, ஸ்டாலின், Tokyo Olympics, Indian Hockey, PM Modi, President, Stalin
விளையாட்டு,முதன்மை செய்தி

41 ஆண்டுகளுக்கு பிறகு டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் இந்தியா பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய ஹாக்கி அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டோக்யோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய அணி நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியிடம் 2-5 என்கிற கோல் கணக்கில் தோல்வியுற்றது. கடந்த 41 ஆண்டுகளாக பதக்கம் வெல்லாமல் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதே போல அரையிறுதிக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய ஜெர்மனி அணி தோல்வியடைந்தது. இதனையடுத்து ஜெர்மனியை எதிர்த்து இந்தியா கடுமையாக போராடி 5-4 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் 41 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இந்திய இந்த வெற்றிக்கு தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். இந்திய ஆடவர் ஆக்கி அணி பெற்ற வெற்றி ஹாக்கியில் புதிய சகாப்தத்தை உருவாக்கி உள்ளது. விளையாட்டில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய அணியின் வெற்றி உந்து சக்தியாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "வரலாற்று! ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் நாள். வெண்கலத்தை வீட்டிற்கு கொண்டு வந்த எங்கள் ஆண்கள் ஆக்கி அணிக்கு வாழ்த்துகள். இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த நாட்டின் குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் நிறைவேற்றி உள்ளனர். எங்கள் ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது" என கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "41 வருட காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. ஆண்கள் ஹாக்கியில் 12 வது ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். நான் உறுதியாக நம்புகிறேன், டோக்யோ 2020ல் இந்த வெற்றியுடன், இந்திய ஹாக்கி அணி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது" என கூறியுள்ளார்.


இயக்குநர் சேரன், ஆனந்தம் விளையாடும் வீடு படப்பிடிப்பு, Director Cheran, Aanantham vilayaadum veedu shooting
சினிமா,முதன்மை செய்தி

`ஆனந்தம் விளையாடும் வீடு' என்ற படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர் சேரன் காயமடைந்தார். அவருக்கு தலையில் எட்டு தையல் போடப்பட்டுள்ளது.

இயக்குநர் சேரன், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிக்கும் படம், ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. நந்தா பெரியசாமி இயக்குகிறார். ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பாக தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரிக்கும் இந்தப் படத்தில், கவுதம் கார்த்திக் ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார்.

இவர், நடிகை ஜீவிதா- டாக்டர் ராஜசேகர் தம்பதியின் மகள். மேலும் சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, சினேகன், நமோ நாராயணன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இத்திரைப் படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்தபோது இயக்குநர் சேரன், கால் தடுமாறி விழுந்தார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டன. இருந்தும் படப்பிடிப்பை ரத்து செய்யாமல் தொடர்ந்து தனது காட்சிகளை சேரன் நடித்துக் கொடுத்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.


நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி சுப்பிரமணியம், சொகுசு கார் வரி விலக்கு, Actor Dhanush, Chennai High Court, Judge Subramaniam, luxury car tax exemption
சினிமா,முதன்மை செய்தி

வாங்கும் சோப்பில் கூட தினக்கூலி தொழிலாளர்கள் வரி கட்டுகிறார்கள் என்று கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன், சொகுசு கார் இறக்குமதிக்கு வரிவிலக்கு கோரிய வழக்கில் நடிகர் தனுஷுக்கு சரமாரி கேள்வி எழுப்பினார்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து, நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் மேல்முறையீடு செய்து, விதிக்கப்பட்ட அபராதத்திற்கு தடை பெற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகர் தனுஷும், கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட ரூ.60.66 லட்சம் நுழைவு வரியை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நடிகர் விஜய் வழக்கை விசாரித்த அதே நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மக்கள் வரி பணத்தில் போடப்பட்ட சாலையில்தான் காரை ஓட்ட போகிறீர்கள் என்று குறிப்பிட்ட நீதிபதி, வெளிநாட்டில் இருந்து கார் வாங்கியதற்காக வானிலா பறக்க முடியும் என்று காட்டமாக கேட்டார். வாங்கும் சோப்பில் கூட தினக்கூலி தொழிலாளர்கள் வரி கட்டுகிறார்கள் என்றும், அவர்கள் வரிவிலக்கு கேட்டு வழக்கு போடுகிறார்களா? எனவும் நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.

50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் சாதாரண ஆட்கள் கூட வரி செலுத்துகிறார்கள் என தெரிவித்த நீதிபதி, ஹெலிகாப்டர் கூட வாங்கி கொள்ளுங்கள், ஆனால் குறிப்பிட்ட காலத்தை கடந்து வரிகட்டாமல் இருப்பதை ஏற்க முடியாது என்று கண்டித்தார்.

மீதி வரித்தொகை செலுத்த தயாராக இருப்பதாக, நடிகர் தனுஷ் தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்ட நிலையில், எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பது குறித்த விவரங்களை வணிக வரித்துறையினர் இன்று மதியம் 2.15 மணிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.


அதிமுக, மதுசூதனன், ஓபிஎஸ், ஈபிஎஸ், Madhusudhanan, ADMK, OPS, EPS
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார். அவரது மறைவுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில் தற்போது அவைத்தலைவராக இருந்தவர் மூத்த தலைவர் மதுசூதனன். கடந்த சில ஆண்டுகளாகவே இவரது உடல்நிலையில் சில பிரச்னைகள் இருந்தன. 80 வயதான மதுசூதனன், இதற்காகக் கடந்த காலங்களில் தொடர்ந்து சிகிச்சை பெற்றே வந்துள்ளார்.

இந்தச் சூழலில் கடந்த ஜூலை மாதம் மதுசூதனனுக்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை திடீரென மோசமானது, மேலும் வென்டிலேட்டர் உதவியுடனும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மதுசூதனன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி இரு அணிகளாக பிரிந்தது. ஜெயலலிதா அணியிலிருந்த மதுசூதனன் 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக அமைச்சராகவும் ஆனார். மதுசூதனுக்கு கைத்தறி துறை இலாகா வழங்கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவின் அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார் மதுசூதனன்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக மீண்டும் இரண்டாக பிரிந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்ற முதல் மூத்த உறுப்பினர் மதுசூதனன்.


மதுசூதனன், ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ், Madhusudhanan, Stalin, OPS, EPS
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

மறைந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோருக்கு முதல்வர் ஆறுதல் கூறினார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுசூதனன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுசூதனனின் உடல் மருத்துவமனையில் இருந்து அதிகாலையில், தண்டையார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. உறவினர்கள் மரியாதை செலுத்திய பின்னர், பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் வந்த, முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுசூதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது உறவினர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் ஆறுதல் கூறினார். அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அப்போது அமைச்சர் சேகர் பாபு கண்கலங்கினார். மதுசூதனனின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.


மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகம், செமஸ்டர் கட்டணம், Students, Anna University, Semester Fees
தமிழ்நாடு,முதன்மை செய்தி

செமஸ்டர் கட்டணத்தை வரும் 18-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தொலைதூரக்கல்வியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொலைதூரக்கல்வியில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் நடப்பு செமஸ்டருக்கான கல்விக் கட்டணம் ரூ.12,500-ஐ வரும் 18-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். 18-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாதவர்கள் ரூ.200 அபராதத்துடன் ரூ.12,700-ஐ 25-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அப்போதும் கட்டணத்தை செலுத்தாவிட்டால், 31-ம் தேதிக்குள்ளாக ரூ.13,200-ஆக கட்ட வேண்டும். மாற்றுத் திறனாளிகள் ரூ.9,500 செலுத்தினால் போதுமானது. மேலும், கல்விக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தினால் போதுமானது என அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய ஹாக்கி அணி, ஜனாதிபதி, பிரதமர் மோடி, ஸ்டாலின், ஒலிம்பிக், Indian hockey team, President, Prime Minister Modi, Stalin, Olympics
விளையாட்டு,முதன்மை செய்தி

"இந்திய மகளிர் ஹாக்கி அணி, சிறப்பாக விளையாடி அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்துள்ளனர்" என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடி இங்கிலாந்து அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது.

இந்தியா 3 கோல்கள் அடித்த நிலையில், இங்கிலாந்து 4 கோல் அடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இப்போட்டியில் முதல் பாதியில் இந்தியா முன்னிலை பெற்று வந்த நிலையில், இரண்டாம் பாதியில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்திய மகளிர் ஹாக்கி அணி, சிறப்பாக விளையாடி அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்துள்ளனர் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், "இந்திய மகளிர் ஹாக்கி அணி களத்தில் சிறந்து விளங்கியது. இந்திய மகளிர் ஹாக்கி அணி, சிறப்பாக விளையாடி அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்துள்ளனர். உங்களை நினைத்து நாங்கள் பெறுமை கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், "ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டோம். ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் வீராங்கனைகள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தினர். பதக்கத்தை இழந்தாலும் மகளிர் அணியின் திறமையான ஆட்டம், பலரையும் ஊக்குவிக்கும். இந்திய அணியின் சிறப்பான செயல்திறனை எப்போதும் நினைவில் கொள்வோம்" என தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், "இந்திய மகளிர் ஹாக்கி அணியின் ஆட்டம் பதக்கம் பெற்ற பிறரின் முயற்சிகளுக்கு சற்றும் குறைவில்லாதது. முதன்முறையாக ஒலிம்பிக்கின் அரையிறுதிவரை இந்தியாவை கொண்டுசென்றதற்காகவும் இறுதிவரை போராடியதற்காகவும் பாராட்டுகள்” என கூறியுள்ளார்.


சென்னை, அமைந்தகரை, போலீஸ், Chennai Aminthakarai
தமிழ்நாடு,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

சென்னை அமைந்தகரையில் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி 3வது தெருவில் ரமேஷ் (49) என்பவர் வசித்து வந்தார். திருமணமாகாத நிலையில் தனியாக வசித்து வந்ததோடு 2 வருடங்களாக உறவினர்களுடன் தொடர்பில் இல்லாமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் அவர் சகோதரர் மகேஷ், ரமேஷை பார்க்க சென்றபோது, அவர் வீட்டில் இல்லாததால் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தார். அப்போது துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அங்கு ரமேஷ் எலும்புக்கூடு ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அது ரமேஷின் எலும்புக்கூடு என தெரியவந்தது.

இதுகுறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விரைந்து வந்து, எலும்புக்கூடை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பினர். மேலும் ரமேஷ் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.


கருணாநிதி நினைவு தினம், முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, திமுக, Karunanidhi Memorial Day, Chief Minister Stalin, Kanimozhi, DMK
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

50 ஆண்டுகள் திமுக தலைவராகவும், 19 ஆண்டுகள் தமிழக முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அவரது 3-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில் நடத்த திமுக நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா 3-வது அலைபரவல் எச்சரிக்கை காரணமாகவும், கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாலும் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளைத் தவிர்த்து அவரவர் வீடுகள் முன்பு கருணாநிதி படம் வைத்து அஞ்சலி செலுத்துமாறு நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், கருணாநிதி நினைவு தினமான இன்று காலை சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம், ஆழ்வார்பேட்டை இல்லம் ஆகிய இடங்களிலும் கருணாநிதி படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.


கருணாநிதி நினைவு தினம், உதயநிதி ஸ்டாலின், திமுக, Karunanidhi Memorial Day, Udayanithi Stalin, DMK
அரசியல்,முதன்மை செய்தி

"இளைஞரணி செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது" என்று தாத்தா கருணாநிதியின் நினைவு நாளையொட்டி உதயநிதி ஸ்டாலின் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 3வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிரணிச் செயலாளர் கனிமொழி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் தாத்தாவின் நினைவு நாளையொட்டி உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெரியார் காட்டிய கொள்கை திசையில் பயணித்து தமிழ்நாட்டின் உரிமைகளையும் , அடையாளத்தையும் பத்திரப்படுத்தித் தந்த பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் அவர் தம்பி முத்தமிழறிஞரின் நினைவு தினமான இன்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து மரியாதை செய்தோம்.

தன் போராட்ட பெருவாழ்வு மூலம் கோடான கோடி தமிழ் மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, தன் அண்ணனின் பக்கத்தில் ஓய்வெடுக்கும் சமூகநீதி சூரியன் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் அவரின் 3ம் ஆண்டு நினைவு தினமான இன்று மலர்தூவி மரியாதை செய்தோம். வாழ்க கலைஞரின் புகழ்.

இளைஞரணி செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது. அவர் வழியில் நம்மை இயக்கும் மாண்புமிகு முதல்வரின் கரம்பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம்" என்று உருக்கமாக கூறியுள்ளார்.


இந்திய கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், ஜனாதிபதி, பிரதமர் மோடி, சச்சின், Aditi Ashok, Indian golf Player, Sachin, PMModi
விளையாட்டு,முதன்மை செய்தி

டோக்யோ ஒலிம்பிக் மகளிர் கோல்ஃப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அஷோக் அதிர்ச்சி தோல்வியடைந்தாலும் ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் டோக்யோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் நிறைவு பெற உள்ளது. இதில் தற்போது நடைபெற்று வரும் மகளிருக்கான கோல்ப் தனிநபர் போட்டியில் மொத்தம் 4 சுற்றுகள் நடைபெறும். இதில் 3-வது சுற்று நிறைவில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் 201 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தார்.

இன்று காலை அதிதி அசோக் பங்கேற்ற 4-வது சுற்று போட்டி தொடங்கியது. அப்போது மழை குறுக்கீட்டால் போட்டி பாதிக்கப்பட்டது. மோசமான வானிலையால் போட்டி நிறுத்தப்படும் முன்பாக 3-வது இடத்தில் அதிதி அசோக் இருந்தார். இந்த நிலையில் தனிநபர் ஸ்ட்ரோக் ப்ளே பிரிவு போட்டியில் அதிதி அசோக் நான்காவது இடம் பிடித்து தோல்வியடைந்தார். இப்போட்டியில் 60 பேர் பங்கேற்ற நிலையில், அமெரிக்க வீராங்கனை நெல்லி கோர்டா முதலிடம் பிடித்தார். அதிதி அசோக்குக்கு பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தோல்வியடைந்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் கோல்ஃப்பில் இந்தியர்கள் யாரும் இதுவரை பதக்கத்தை பெறவில்லை.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பதிவில், 'நன்றாக விளையாடினீர்கள் அதிதி அசோக்! இந்தியாவின் இன்னொரு மகள் தன் முத்திரையை பதிக்கிறாள். இன்றைய வரலாற்று சாதனைகளால் இந்திய கோல்ஃபிங்கை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளீர்கள்" என்று வாழ்த்தியுள்ளார்.

பிரதர் மோடி தனது ட்விட்டர் பதிவில், நன்றாக விளையாடினீர்கள் அதிதி. உங்களது அபார திறமையையும் முயற்சியையும் காட்டியுள்ளீர்கள். பதக்கத்தை தவறி விட்டாலும் இந்தியாவை ஒளிரச் செய்துவிட்டீர்கள். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது ட்விட்டர் பதிவில், ''அற்புதமான முயற்சி அதிதி. பதக்கத்தை தவறவிட்டாலும் சாதித்துவிட்டீர்கள்" என்று பாராட்டியுள்ளார்.


கரூர், புதுக்கோட்டை, அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்வு, தமிழக பள்ளிக் கல்வித்துறை, Karur, Pudukottai, Government School Students, NEED Exam, Tamil Nadu School Education Department
தமிழ்நாடு,முதன்மை செய்தி

நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது என்றும் கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஒரு அரசுப்பள்ளி மாணவர் கூட விண்ணப்பிக்கவில்லை என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நடப்பு கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி அகில இந்திய அளவில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்நிலையில் சி.பி.எஸ்.இ மற்றும் மாநில படத்திட்டத்தில் படித்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. அதனைத் தொடர்த்து மருத்துவப் படிப்பிற்கு சேருவதற்கான நீட் தேர்வு எழுத மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது. இதுவரை 6,412 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 505 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

ஆகஸ்ட் 10ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது. கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஒரு அரசுப்பள்ளி மாணவர் கூட விண்ணப்பிக்கவில்லை. நீட் தேர்வு எழுதி வெற்றிபெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு உள்ள நிலையிலும், மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது நினைவில் கொள்ளத்தக்கது.


நார் சிதைவு நோய், குமாரபாளையம், சிறுமி மித்ரா, Fiber degenerative disease, Kumarapalayam, child Mitra
தமிழ்நாடு,முதன்மை செய்தி

முதுகு தண்டுவட நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 2வயது சிறுமிக்கு 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசியை மருத்துவர்கள் செலுத்தினர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்- பிரியதர்ஷினி தம்பதியின் 2 வயது மகள் மித்ராவிற்கு அரிய வகை நோய்களில் ஒன்றான முதுகு தண்டுவட நார் சிதைவு நோய் தாக்கியது. இந்த நோயினை குணப்படுத்த ஸோல்ஜென்ஸ்மா (ZOLGENSMA) எனும் மருந்தினை பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய 6 கோடி ரூபாய் வரியுடன் சேர்த்து 22 கோடி ரூபாய் தேவைப்பட்டது. இதனையடுத்து கடந்த ஒரு மாத காலமாக, சமூகவலைதளங்களிலும், பல்வேறு தரப்பினரிடம் நிதி சேகரிக்கப்பட்டு 16 கோடி ரூபாயை சேர்த்தனர். இதையடுத்து, இந்த மருந்திற்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இதை ஏற்ற மத்திய அரசு தடுப்பூசிக்கான இறக்குமதி வரியை ரத்து செய்தது. இதனையடுத்து வெளிநாட்டிலிருந்து ஸோல்ஜென்ஸ்மா (ZOLGENSMA) என்கிற தடுப்பூசியை மருத்துவர்கள் இறக்குமதி செய்தனர். இதனையடுத்து பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபபட்டுள்ள சிறுமி மித்ராவிற்கு மருத்துவர்கள் வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தினர். தொடர்ந்து மருத்துவர்கள் சிறுமி மித்ராவை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு உதவிய அனைத்து தரப்பினருக்கும், சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.


அதிமுக ஆட்சி நிதிநிலை, தமிழக அரசு வெள்ளை அறிக்கை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,  Tn Government, TN Finanace, Pazhanivel Thiyagarajan, Financial Report
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

"தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் பொது சந்தா கடன் மட்டும் ரூ.2,63,976 ஆக இருக்கிறது" என அதிமுக ஆட்சிக்கால நிதிநிலையின் வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 2001-ம் ஆண்டு வெள்ளை அறிக்கையானது, சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று வெளியிடப்பட்டது. ஆனால், இந்த முறை பொது வெளியில் பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்காக தலைமைச் செயலகம் வந்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அங்கு 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பழனிவேல் தியாகராஜன், "முழு வெளிப்படைத்தன்மையுடன் அரசு நடந்து கொள்வதை அடையாளப்படுத்துவதே வெள்ளை அறிக்கை என்பது. தமிழகத்தின் நிதிநிலையை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்றுக்கு முன்பே தமிழகத்தின் வருமானம் சரியத் தொடங்கிவிட்டது. 2020-21ம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளது. அதிமுக ஆட்சியில் 2011-16ல் வருவாய் பற்றாக்குறை ரூ.17,000 கோடியாக இருந்தது. 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை இல்லை. தமிழக அரசுக்கு வருமானம் மிகவும் சரிந்துவிட்டது. வருமானம் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி அதிகரித்துவிட்டது. 2020-21 இடைக்கால பட்ஜெட்டின்படி தமிழகத்தின் கடன் சுமை ரூ.5,70,189 கோடி. தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் பொது சந்தா கடன் மட்டும் ரூ.2,63,976 ஆக இருக்கிறது. தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி அதிகரித்துவிட்டது. தமிழக அரசின் கடந்த சுமை ரு.5.24 லட்சம் கோடியாக உள்ளது.

டான்ஜெட்கோ, போக்குவரத்து கழகங்கள் கடன் பெற ரூ.91 ஆயிரம் கோடிக்கு கடன் பெற அரசு உத்தரவாதம் தந்தது. முந்தைய திமுக ஆட்சியில் 13.89 சதவிகிதமாக இருந்த வருமானம், அதிமுக ஆட்சியின் இறுதியில் 4.65 சதவிகிதமாக சரிந்துள்ளது. தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ.92,305 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மொத்த உற்பத்தி 8.7 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த ஆட்சியில் மாநில வரிவருவாயில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 11.4 சதவிகிதமாக உயர்ந்திருந்தது. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில மாநில வரி வருவாய் 4.4 சதவிகிதமாக சரிந்துள்ளது" என்று கூறினார்.


பப்ஜி மதன், சென்னை போலீஸ் கமிஷனர், சென்னை உயர்நீதிமன்றம், Babji Madan, Chennai Police Commissioner, Chennai High Court
தமிழ்நாடு,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி 'பப்ஜி' மதன் தொடர்ந்த வழக்கில் சென்னை காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூடியூப் சேனல்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் கடந்த ஜூலை 5-ம் தேதி குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பப்ஜி மதன் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், "தனது செயல்பாடுகளால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படவில்லை. எனவே என்னை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதன் தொடர்ந்த வழக்கு குறித்து தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.


டி.டி.வி.தினகரன், வெள்ளை அறிக்கை, அதிமுக, எடப்பாடி பழனிசாமி, TTVDhinakaran, ADMK, EPS
அரசியல்,முதன்மை செய்தி

"வரியை உயர்த்துவதற்கு பதிலாக முந்தைய ஆட்சியாளர்கள் முறைகேடாகவும் தவறாகவும் செலவழித்ததாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.ஒரு லட்சம் கோடியை அதற்கு காரணமானவர்களிடமிருந்து மீட்டெடுக்கும் வேலையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்" என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "தமிழக அரசின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையில் சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற தொனியிலான அம்சங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் கவலை அளிக்கிறது.

அப்படி ஒரு முடிவினை தி.மு.க அரசு மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், அது கடும் கண்டனத்திற்குரியது. கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சூழல்களால் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவை சந்தித்திருக்கும் மக்கள், அதிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் வரி உயர்வு, கட்டண உயர்வு என்பதெல்லாம் 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல' அமைந்துவிடும். அதற்குப் பதிலாக முந்தைய ஆட்சியாளர்கள் முறைகேடாகவும் தவறாகவும் செலவழித்ததாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ. ஒரு லட்சம் கோடியை அதற்கு காரணமானவர்களிடமிருந்து மீட்டெடுக்கும் வேலையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். அப்படி செய்யாமல் வெறுமனே அறிக்கை கொடுத்ததோடு மட்டும் நின்றுவிட்டால், பழைய 60:40 பங்கீட்டு பாசத்தில் தி.மு.க அரசு இப்படி நடந்து கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது.

எனவே, யாரோ சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் தலையிலும் நிதிச்சுமையை ஏற்ற தமிழக அரசு முயற்சிக்கக்கூடாது. மக்களுக்கு பாதிப்பில்லாமல் நிதி நிலையைச் சீரமைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.


எஸ்.பி.வேலுமணி, அதிமுக, லஞ்ச ஒழிப்புத்துறை, SP Velumani, AIADMK, Corruption Eradication Department
அரசியல்,முதன்மை செய்தி

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் ஏற்கெனவே முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தற்போது எஸ்.பி.வேலுமணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அரசு ஒப்பந்தங்களை பெற்றுக் கொடுப்பதாக கூறி ரூ.1.20 கோடி மோசடி செய்ததாக வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரையடுத்து கோவை குனியமுத்தூரில் உள்ள வேலுமணி வீடு, கோடம்பாக்கத்தில் உள்ள அவரது நண்பரின் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிகாலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குனியமுத்தூர் வீட்டில் 5 பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டுள்ளது. கோவையில் 35 இடங்களிலும், சென்னையில் 15, திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 1 இடம் என மொத்தம் 53 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 9ம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.


நீட் தேர்வு, மாணவர்கள், நீட் விண்ணப்பம், NEED Exam, Students, NEED Application
தமிழ்நாடு,முதன்மை செய்தி

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாளாகும். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு நாளை முதல் 14ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் மே மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தாமதமாக நடந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருந்த காரணத்தினால் தாமதமாகவே நடைபெற உள்ளது.


அதன்படி, செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு 155 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 198 நகரங்களாக அதிகரித்து இருக்கிறது. இதேபோல், நகரங்களில் தேர்வு மையங்களும் அதிகரிக்கப்பட இருக்கின்றன.

இந்த நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 13ம் தேதி முதல் https://ntaneet.nic.in/என்ற இணையதளத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே கடந்த 6ம் தேதி விண்ணப்பதிவு செய்ய கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் ஆகஸ்ட் 10ம் தேதி (இன்று) வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது. அந்தவகையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாளாகும்.

அதன் தொடர்ச்சியாக விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு நாளை முதல் 14ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை பயன்படுத்தி தேர்வர்கள் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.


அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் வேல்ராஜ், ஆளுநர், Anna University Vice Chancellor Velraj, Governor
தமிழ்நாடு,முதன்மை செய்தி

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் ஆர். வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா ஓய்வு பெற்றதையடுத்து, புதிய துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதையடுத்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் உள்பட 3 பேர் கொண்ட தேடல் குழு அமைக்கப்பட்டது.

துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த 160 பேரில், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 5 பேர் உள்பட தகுதி வாய்ந்த 10 பேரை தேடல் குழு இறுதி செய்தது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். பதவிக்காலம் முடிந்து சூரப்பா ஓய்வு பெற்றதை தொடர்ந்து டாக்டர் வேல்ராஜ் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலை. துணைவேந்தராக வேல்ராஜ், 3 ஆண்டுகள் பதவி வகிப்பார் என தெரிவித்துள்ளார்.


கேஸ் இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பு, இந்தியன் ஆயில் நிறுவனம், Gas connection, cooking gas connection, Indian Oil Company
இந்தியா,முதன்மை செய்தி

மிஸ்டு கால் கொடுத்தால் புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கும் சேவையை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, நாடெங்கிலும் உள்ள விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் புதிய சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்த இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா, மூத்த குடிமக்களுக்கும் ஊரகப் பகுதிகளைச் சார்ந்தவர்களுக்கும் இந்தத் திட்டம் நன்மை பயக்கும் எனத் தெரிவித்தார். மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தே இரட்டை இணைப்பு பெறும் வசதியையும் வைத்யா தொடங்கி வைத்தார்.


கோவாக்சின், கோவிஷீல்டு, வேலூர் சிஎம்சி, மத்திய அரசு, ஐசிஎம்ஆர், Covaxin, Covishield, Vellore CMC, Central Government, ICMR
இந்தியா,முதன்மை செய்தி,கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்துவதற்கான ஆய்வுக்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான ஆய்வுக்கு தற்போது மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளது.

இந்த ஆய்வினை தமிழ்நாட்டில் வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வு மூலம் கொரோனாவுக்கு எதிரனாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இதில் 300 தன்னார்வலர்கள் பங்கேற்கிறார்கள்.

முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் 18 பேருக்கு முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு 6 வார இடைவெளிக்கு பின்னர் 2வது தவனையாக கோவாக்சின் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதில் இருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. வெவ்வேறு நிறுவனங்களின் இரு தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதன் மூலம் ஏற்படும் மாற்றங்களை கண்டறியவே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இரு வேறு தடுப்பூகளை இணைத்து பயன்படுத்துவதற்காக ஆய்வுகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


ஏடிஎம் சென்டர், வங்கிகள், ரிசர்வ் வங்கி, ஆர்பிஐ, ATM Center, Banks, Reserve Bank, RBI
இந்தியா,முதன்மை செய்தி

அக்டோபர் 1 முதல் வங்கி ஏடிஎம்களில்ஒரு மாத காலத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக பணம் நிரப்பப்படவில்லை என்றால் தொடர்புடைய வங்கிக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கிகள் தங்களது ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்படாமல் இருக்கும் சூழலை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக ஏடிஎம்களில் பணம் நிரப்பபடாததற்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் ஏடிஎம்களில் ஒரு மாத காலத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக பணம் நிரப்பப்படாமல் இருந்தால் தொடர்புடைய வங்கிக்கு ரூ.10,000 அபராதமாக விதிக்கப்படும்.

ஏடிஎம்களில் பணம் இல்லாததால் ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் இருக்கும் நேர அளவை கணக்கில் எடுத்துக் கொள்ளும் அடிப்படையிலும் பணம் இல்லாததால் மக்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாவதை தடுக்கும் பொருட்டும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது" என தெரிவித்துள்ளது.


ராஜேந்திர சோழன் பிறந்தநாள், முதல்வர் ஸ்டாலின், Rajendra Chola Birthday, Chief Minister Stalin
தமிழ்நாடு,முதன்மை செய்தி

``மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படும்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். முதலாம் இராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டடக்கலைகளின் அழகிய தொகுப்பாகவும், வாழும் வரலாறாகவும் விளங்குகிறது. அண்மையில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உலகப் புராதன பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பினைக் கண்டுகளித்திட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமர்சையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் கொண்டாடப்படுகிற இவ்விழாவினை அரசு விழாவாகக் கொண்டாட அப்பகுதிவாழ் மக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் சார்பில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இக்கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டுள்ளார். தற்பொழுது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக, வரும் ஆண்டு முதல் இந்த விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்" என கூறப்பட்டுள்ளது.


நடிகை மீரா மிதுன், சென்னை போலீஸ் சம்மன், வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, Actress Meera Mithun, Chennai Police Summon, Vanni Arasu, VCK
சினிமா,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட மீரா மிதுனை விசாரணைக்கு நாளை ஆஜராகும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அண்மையில் பட்டியலின மக்கள் தொடர்பாகவும் திரைத்துறையில் பணியாற்றும் பட்டியலின மக்கள் தொடர்பாக ஆபாசமாகவும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “ திரைப்பட நடிகை மீரா மிதுன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவை பார்த்தேன். அதில் பட்டியலின மக்களை மிக கேவலமாக திட்டி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பட்டியலின சமூகத்தையே மிக கேவலமாகவும், மோசமான வார்த்தைகளாலும் திட்டியது மட்டுமல்லாமல் திரைப்பட துறையில் இருந்தே பட்டியலின சமூகத்தை வெளியேற்ற வேண்டும் என்று கூறி வீடியோ பதிவிட்டார். எனவே மீரா மிதுன் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி நடிகை மீரா மிதுன் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 153- கலகம் செய்ய தூண்டி விடுதல், 153(ஏ)(1)(ஏ) - சாதி, மத, இன தொடர்பாக விரோத உணர்ச்சியை தூண்டி விடுதல், 505(1)(பி) - பொதுமக்களின் அமைதியை குலைக்கும் வகையில் பயமுறுத்தல், அச்சம் ஏற்படுத்துதல், 505(2) - பொதுமக்களிடையே தவறான தகவலை பரப்பி தீங்கு இளைத்தல் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகள் என மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுனுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சம்மன் கொடுத்துள்ளது. நாளை காலை 10 மணிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் நடிகை மீரா மிதுன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.


ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட், இஸ்ரோ, சிவன்,  ஈ.ஓ.எஸ்-03 செயற்கைகோள், GSLV F-10 Rocket, ISRO, Sivan, EOS-03 Satellite
இந்தியா,முதன்மை செய்தி

ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளின் பயணம் தோல்வியில் முடிந்தது. ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்புக்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்-03 என்ற செயற்கைகோளை தயாரித்தது. இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் நடைபெற்று வந்தன.

இதனை ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் பொருத்தி, இன்று காலை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.


ராக்கெட்டுக்கு உந்து சக்தியாக உள்ள எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. தொடர்ந்து ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 14 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று பிற்பகல் 3.43 மணிக்கு தொடங்கியது. முன்னதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். தொடர்ந்து ‘கவுண்ட்டவுனை’ முடித்து கொண்டு இன்று காலை ராக்கெட் விண்ணை நோக்கி சீறிபாய்ந்தது.

இந்நிலையில் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் கிரையோஜெனிக் எஞ்ஜின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்று அவர் கூறினார்.


ராகுல் காந்தி, காங்கிரஸ், ட்விட்டர் கணக்கு, Rahul Gandhi, Congress, Twitter account
இந்தியா,முதன்மை செய்தி

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் இறந்த சிறுமியின் பெற்றோருடன் எடுத்துக்கொண்ட படத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது விதி மீறல் என கூறி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் புகார் கொடுத்த நிலையில் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை தொடர்ந்து செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட ஐவரின் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ட்விட்டர் கணக்கை பூட்டி விட்டால் இந்தியாவுக்காக நடத்தும் போராட்டத்தை காங்கிரஸ் நிறுத்திக்கொண்டுவிடும் என பிரதமர் கருதுவதாகவும், மத்திய அரசின் நெருக்கடி காரணமாகத்தான் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியின் கணக்க முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களின் 5 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே காங்கிரஸ் கட்சியினரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அழுத்தம் கொடுத்து ட்விட்டரோ, மத்திய அரசோ எங்களை ஒன்றும் செய்ய முடியாது என காங்கிரஸ் ஐடி பிரிவின் தலைவர் ரோகன் குப்தா கூறியுள்ளார்.


கொரோனா, சுதந்திர தினம், கிராம சபை கூட்டம், Corona, Independence Day, Village Council Meeting
தமிழ்நாடு,முதன்மை செய்தி

கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

1994 தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, கிராம சபைக் கூட்டங்களை ஒவ்வொரு ஊராட்சியிலும் கூட்ட வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள ஊராட்சிகளில் குடியரசு தினமான ஜனவரி 26, உழைப்பாளர் தினம் மே 1, சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, காந்தி பிறந்தநாள் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும்.

அன்றைய தினம் கிராமத்தின் வரவு -செலவு கணக்குகள் முன்வைக்கப்படுவதோடு, மக்கள் தங்கள் பகுதி கோரிக்கையையும் வலியுறுத்துவார்கள். எனினும் கொரோனா பரவல் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்திருந்தது.

இந்த நிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் பிரவீன் நாயர், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், கிராம சபைக் கூட்டம் நடைபெறாததை உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


சமீஹா பர்வீன், மத்திய அரசு, சென்னை உயர்நீதிமன்றம், இந்திய விளையாட்டுக் கழகம், Samika Parveen, Central Government, Chennai High Court, Sports Club of India
விளையாட்டு,முதன்மை செய்தி

தகுதி போட்டியில் தகுதி பெற்றும் பெண் என்பதால் சமீஹா பர்வீன் புறக்கணிக்கப்பட்டாரா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், இவ்விவகாரம் தொடர்பாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாளைக்குள் பதில் தராவிடில் நேரடியாக உத்தரவிட நேரிடும் என எச்சரித்துள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம். கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சமீஹா பர்வீன் (18). இவர் ஏழு வயதாக இருக்கும் போது ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக காது கேட்கும் திறனையும் பேசும் திறனையும் இறந்துவிட்டார். இதற்காக சொந்த வீட்டை கூட விற்று சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது குடும்பத்தினர் கடையாலுமூடு பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.

இந்த நிலையில் தடகள விளையாட்டில் ஆர்வம் கொண்ட சமீஹா பர்வீன், பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் வெற்றி பெற்று வந்தார். கடந்த 2017, 2018, 2019ல் நடைபெற்ற தேசிய தடகள போட்டிகளில் 9 தங்கம் உட்பட 12 பதக்கங்களை வென்றுள்ளார். இதனையடுத்து, போலந்து நாட்டில் இம்மாதம் இறுதியில் நடைபெறவிருக்கும் சர்வதேச செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான டெப் அத்லெடிக்ஸ் தடகளப் போட்டிகளில் பங்கேற்க சமீஹா பர்வீன் தேர்வாகி உள்ளார் என தமிழ்நாடு அசோசியேஷன் இருந்து கடந்த ஜூலை 16ம் தேதி அவருக்கு கடிதம் வந்துள்ளது. அதில் டெல்லியில் ஜூலை 22ல் நடைபெறும் தகுதி தேர்வில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பர்வீன் டெல்லிக்கு சென்று தகுதி தேர்வில் பங்கேற்று அதிக புள்ளிகள் பெற்று தகுதி பெற்றார். ஆனால் டெல்லியிலிருந்து போட்டிக்குத் தேர்வான மற்றொரு மாணவி ஒருவர் தகுதி இழந்ததால், சமீஹா பர்வீனை போட்டிக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் முடிவு எடுத்தனர். இந்தியாவிலிருந்து இவர் மட்டுமே பெண்கள் பிரிவில் தகுதி பெற்றுள்ளார். ஒரு பெண்ணை மட்டும் அழைத்துச் செல்வது சிரமம் என இந்திய விளையாட்டுக் கழகம் முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு கவுன்சில் அதிகாரிகள் போன் மூலம் தெரிவித்தனர். இதனால் சமீஹா பர்வீனும், அவரது பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த ஏழு ஆண்டுகளாகப் பல வேதனைகளை அனுபவித்த நிலையில் போட்டியில் கலந்துகொள்ள முடியாத சூழலால் கடும் வேதனையில் இருக்கிறோம் என்றும் உலக சாம்பியன் ஆக வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில், சொல்ல முடியாத அளவிற்கு சமீஹா பர்வீன் சிரமங்களை எதிர்கொண்டார் எனவும் சமீஹா பர்வீனின் தாய் சலாமத் கூறினார்.

இதனையடுத்து இந்திய விளையாட்டுக் கழகத்தின் இம்முடிவை எதிர்த்து சமீஹா பர்வீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தகுதிப்போட்டியில் தகுதி பெற்றும், பெண் என்பதால் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவிடாமல் தடுப்பதா? என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இவ்விவகாரம் தொடர்பாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாளைக்குள் பதில் தராவிடில் நேரடியாக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார்.


தோனி, நடிகர் விஜய், Dhoni, Actor Vijay
சினிமா,விளையாட்டு,முதன்மை செய்தி

சென்னையில் நடந்துவரும் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பில் நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார் கிரிக்கெட் வீரர் தோனி. இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள இருவரது ரசிகர்கள் ‘தளபதி - தல’ சந்திப்பு எனக் கூறி கொண்டாடி வருகின்றனர்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. அதனையடுத்து, சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர்.

இந்த நிலையில், தற்போது சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றது. மீண்டும் தற்போது கோகுலம் ஸ்டூடியோவில் நடந்துவரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் நடிகர் விஜய்.

அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸுடன் செல்ல சென்னை வந்துள்ள தோனி, ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு நடைபெறும் கோகுலம் ஸ்டூடியோவில் விளம்பர படப்பிடிப்புக்காக கலந்துகொண்டுள்ளார். இந்த சமயத்தில், விஜய்யை தோனி உற்சாகமுடன் சந்தித்து உரையாடியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக்கொண்டிருக்கின்றன.


இந்திய ஹாக்கி வீராங்கனை, வந்தனா, மார்க்சிஸ்ட், சு.வெங்கடேசன், Indian hockey player, Vandana, Marxist, Su.Venkatesh
தமிழ்நாடு,முதன்மை செய்தி

டோக்யோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனை வந்தனா கட்டாரியாவை மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெங்கடேசன், “ஒலிம்பிக் விளையாட்டுகள் மூலமாக சர்வதேச அரங்கில் இந்திய கொடியை பறக்க விட்டு திரும்பியிருக்கிறார்கள் ஹாக்கி பெண் வீரர்கள். வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், இதயங்களை அள்ளி வந்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுத்தர உழைத்த பெண்களில் ஒருவருக்கு இங்கு கிடைத்த வெகுமதி சாதிரீதியான இழிவு.

வந்தனா கட்டாரியா இந்தியாவின் ஒலிம்பிக் நம்பிக்கை. தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் ஹாட்ரிக் அடித்த முதல் இந்திய பெண். காலிறுதி போட்டியில் பங்கேற்கும் தகுதியை இந்தியா பெற வழி வகுத்த ஆட்டம் அது. ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியின் பொருட்டு, தந்தையின் இறுதி சடங்குக்கு செல்லாமல் விட்ட வந்தனாவுக்கு கிடைத்ததெல்லாம் சாதி துவேஷம். அவரைப் போன்ற தலித் பெண்கள் இடம் பெற்றதால்தான் தோல்வி என்று கொக்கரித்தது ஒரு கூட்டம்.

குடும்பத்தைவிட நாடு முக்கியம் என்று நினைத்து பயிற்சியில் பங்கெடுத்த வந்தனா ஒரு பக்கம், தேசத்தை விட சாதி உயர்வானது என்று நினைத்து தோல்வியை வெடி வைத்து கொண்டாடிய கீழ்த்தரமான கூட்டம் இன்னொரு பக்கம். இதில் இந்தியா எந்த பக்கம் நிற்க வேண்டும்? குற்றவாளிகளை கைது செய்ததோடு மட்டும் நிற்காமல், இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த உங்கள் பக்கம்தான் நிற்கிறோம் என்கிற வலிமையான செய்தியை இந்தியா சொல்லியிருக்க வேண்டாமா? விளையாட்டுத்துறை அமைச்சர் நேரில் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.

நாடாளுமன்ற உறுப்பினராகவும், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையிலும் இன்று வந்தனா கட்டாரியாவை உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவார் மாவட்டத்தில் ரோஷ்னாபாத் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். நான் சார்ந்திருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பிலும் எனது சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

அவர் இந்தியாவுக்கு தேடித்தந்த மகத்தான பெருமைக்கு நன்றி சொல்லி திரும்பியிருக்கிறேன். அவருடனான உரையாடல் மிகுந்த மனநிறைவை தந்தது. அவர் இன்னும் பெரிய உச்சங்களை தொடுவார் என்கிற நம்பிக்கையை தந்தது. வந்தனா, இந்தியாவின் மகள். அவரது வெற்றி இந்த தேசத்தின் வெற்றி. இதுதான் வந்தனாவுக்கு நான் சொன்ன சேதி. வாழ்த்துகள் வந்தனா!. காலம் உங்கள் கைகளில்" என தெரிவித்துள்ளார்.


ஆப்கானிஸ்தான், ராணுவம், தலிபான், காந்தகார், Afghanistan, Army, Taliban, Kandahar
உலகம்,முதன்மை செய்தி

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகள் தலிபான்களுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. காந்தகாரை தலிபான்கள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டு போர் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அரசுப்படைக்கு ஆதரவாக அமெரிக்கா தனது படைகளை நிறுத்தி வைத்திருந்தது. சுமார் 20 ஆண்டுகளாக அங்கு முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் அனைத்து படைகளும் அங்கிருந்து வெளியேறிவிடும் என கூறப்பட்டுள்ளது.

இதனால், அங்கு நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. தலிபான்கள் தங்களது தாக்குதல்களை அதிகப்படுத்தி ஆப்கானிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரண்டு மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபுலை கைப்பற்ற அதி தீவிரமாக முன்னேறி வருகின்றன தலிபான் படைகள். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான காந்தகாரை தலிபான்கள் கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ்நாடு பட்ஜெட், பழனிவேல் தியாகராஜன், Palanivel Thiagarajan, budget, TNBudget 2021
அரசியல்,முதன்மை செய்தி,கட்டுரை

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்படும்.
* தேனி, நாகையில் சிப்காட் அமைக்கப்படும்.
* கோவையில் ரூ.225 கோடியில் பாதுகாப்பு கருவி உற்பத்தில் பூங்கா அமைக்கப்படும்.
* புதிய கனிமவள கொள்கை மூலம் அரசின் வருவாய் அதிகரிக்கப்படும்.
* விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின்படி பொங்கலுக்கு 1.81 கோடி சேலை, வேட்டிகள் வழங்கப்படும்.
* இலவச பள்ளி சீருடைகளுக்காக ரூ.409 கோடி ஒதுக்கீடு.
* 100 கோயில்களில் ரூ.100 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெறும்.
* அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் புதுப்பிக்கப்படும்.


* மகளிர், மாற்றுத் திறனாளிகள் இலவச பயணத்திற்காக ரூ.750 கோடி டீசல் மானியம்.
* தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது; 2,500 மெகாவாட் மின்சாரம் மின் சந்தையிலிருந்து வாங்கப்படுகிறது.
* தனித்துவமான மாநில கல்விக்கொள்கையை வகுக்க, கல்வியாளர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.
* பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.32,599 கோடி நிதி ஒதுக்கீடு.
* உயர்கல்வித் துறைக்கு ரூ.5,369 கோடி நிதி ஒதுக்கீடு.
* மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க அறிக்கை தயார் செய்யப்படும்.
* தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதிநிலைமை சீரமைக்கப்படும்.
* மின்சாரத்துறைக்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு.
* 413 கல்வி நிறுவனங்களுக்கு தலா 40 கையடக்க கணினிகள்; இதற்காக ரூ.13.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இந்த ஆண்டு 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
* வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் கல்லூரி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.
* முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.509 கோடி வந்துள்ளது; அதில் ரூ.241 கோடி செலவிடப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 8 லட்சம் தடுப்பூசிகள் தேவையுள்ள நிலையில் 2.4 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
* செம்மொழி தமிழ் விருது ரூ.10 லட்சம் பரிசுத்தொகையுடன் ஆண்டு தோறும் ஜூன் 3ம் தேதி (கருணாநிதி பிறந்த நாள்) வழங்கப்படும்.
* உலக அளவில் போற்றப்படும் தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப் படும்.
* தொழில் நுட்ப புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படும். சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.4,807 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* நில விவகாரங்கள், கொள்முதல் பிரச்னைகள் தொடர்பான அனைத்து முக்கிய வழக்குகளும் முனைப்புடன் கண்காணிக்கப்படும்.
* 1921ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேரவை நிகழ்வுகள் குறித்த அனைத்து ஆவணங்களும் கணினி மயமாக்கப்படும்.
* அரசின் உள்தணிக்கை அமைப்பு முறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
* 2.05 லட்சம் ஹெக்டேர் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது; பொது நிலங்கள் குறித்த சிறப்பான மேலாண்மைக்கு மேம்படுத்தப்பட்ட அரசு நில மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்.

* 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். தினசரி ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்வு.
* சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.3 கோடி மீண்டும் வழங்கப்படும்.
* குக்கிராமங்களை மேம்படுத்த ரூ.1,200 கோடி செலவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
* சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் வழங்கப்படும்.
* 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.
* அனைத்து நகரங்களிலும் திடக்கழிவு மேலாண்மை ஏற்படுத்தப்படும்.
* திருச்சியில் புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் ஏற்படுத்தப்படும்.
* மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும்.
* நகரங்களில் 30 மீட்டர் இடைவெளியிட்டு தெருவிளக்குகள் அமைக்கப்படும்.
* நீர்நிலைகளை மீட்டெடுக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு.
* நமக்கு நாமே திட்டத்தில் சிறப்பான பங்களிப்பவர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்.

* சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்
* ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
* சிவகளை, கொடுமணல், கீழடி பகுதிகள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.
* அகழாய்வு பணிகளுக்காக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
* நிலம் கையகப்படுத்தும் முறைகள் எளிமையாக்கப்படும்.
* தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு.
* தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும்
* மீனவர் நலனுக்காக ரூ.1,149 கோடி ஒதுக்கீடு.
* பாசன திட்டங்களுக்காக ரூ.6,607 கோடி நிதி ஒதுக்கீடு.
* மீன்வளத் துறைக்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு

* காடுகளை மேம்படுத்த தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு உருவாக்கும்.
* ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்.
* கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இணைய வழியில் கண்காணிக்கப்படும்.
* ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் நிறுவப்படும்.
* ரூ.2,000 கோடியில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்.
* குக்கிராமங்களில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்.
* கிராமப்புறங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதை உறுதி செய்வோம்.
* 1,622 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை சேவை வழங்கப்படும்; ரூ.400 கோடியில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்.
* கிருஷ்ணா நதிநீரை சென்னை நீர் தேக்கங்களுக்கு குழாய் மூலம் கொண்டு வர சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
* சீர்மிகு நகர திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு; அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கீடு
* சென்னை பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்.

* கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் வடிகால் அமைக்க ரூ.80 கோடி ஒதுக்கீடு
* நகர்ப்புற ஏழைகளுக்காக நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்படும்.
* பொது சொத்து பராமரிப்பு பணிக்காக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
* குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி நிதி ஒதுக்கீடு; குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை அமைப்பதில் அரசு உறுதி.
* CMDA போன்று மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரிலும் நிறுவப்படும்; தமிழ்நாடு வீட்டு வசதித்துறை, உலக வங்கியின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்படும்.
* நகர்ப்புற ஏழைகளுக்காக நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்படும்
* நெடுஞ்சாலை துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு; புறவழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளுக்கு புறவழிச்சாலைகள் ஏற்படுத்தப்படும்.
* 623 கோடியில் 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
* மகளிர், மாற்றுத் திறனாளிகள் இலவச பயணத்திற்காக ரூ.750 கோடி டீசல் மானியம்


பெட்ரோல், தமிழக அரசு, தமிழக பட்ஜெட், TN Budget, EBudget, TN Budget 2021,Petrol
தமிழ்நாடு,முதன்மை செய்தி

பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியில் ரூ.3 குறைக்கப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

சட்டமன்றத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைப்போம் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் மே மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. எப்போதும் இல்லாத அளவாக 1,00 ரூபாயைத் தாண்டி தற்போது விற்பனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே தேர்தல் வாக்குறுதியான பெட்ரோல், டீசல் விலையை தமிழ்நாடு அரசு குறைக்கவில்லை என்று கூறி அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் திமுகவுக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தின. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது.

நிதிநிலை அறிக்கையை வாசித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியில் ரூ.3 குறைக்கப்படுகிறது என்று தெரிவித்தார். அத்துடன், பெட்ரோல் மீதான வரி குறைப்பால், அரசுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் கூறினார். இதன்மூலம் தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது என்று நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் அறிவித்துள்ளார். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கு விற்கப்படும் நிலையில் நாளை முதல் விலை குறைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.


Vaiko, TNBudget, Stalin, TNGovt, DMK, வைகோ, தமிழக பட்ஜெட், ஸ்டாலின், தமிழக அரசு, திமுக
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

"பொற்கால ஆட்சிக்கான திறவுகோலாக நிதிநிலை அறிக்கை அமைந்து இருக்கின்றது. வரவேற்கின்றோம்; பாராட்டுகின்றோம்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து இருக்கின்றார். 10 ஆண்டுக் கால அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, கடன் சுமை, நிதி நிர்வாக சீர்கேடுகள் அனைத்தையும் சீரமைக்கும் பெரும் பொறுப்பு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசுக்கு ஏற்பட்டு இருக்கின்றது.

கடந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ள ரூ.58962.68 கோடி வருவாய் பற்றாக்குறைக்கு வழி தேடியாக வேண்டும். நிதிப் பற்றாக்குறை 92529.43 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துவிட்டது. இத்தகைய நெருக்கடியான நிலைமையில், தி.மு.க. அரசு தாக்கல் செய்துள்ள வரவு செலவுத் திட்ட அறிக்கையில் பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து இருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் அதனால் ஏற்படும் 1160 கோடி ரூபாய் வருவாய் இழப்பைத் தாங்கிக் கொள்ள முன்வந்திருக்கும் அரசுக்குப் பாராட்டுகள்.

வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கு, 77.88 விழுக்காடு ஒதுக்கீடு செய்து இருப்பதும், மருத்துவம் மற்றும் குடும்ப நலன் துறைக்கு 2020-21 ஆம் நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட கூடுதலாக ரூ.3070 கோடி ஒதுக்கீடு செய்து இருப்பதும் வரவேற்கத்தக்கது. கொரோனா பேரிடர் இன்னும் நீடிக்கும் நிலையில், இத்துறைக்கு 18933.20 கோடி ரூபாயும், முதல்வரின் விரிவான காப்பீட்டுத் துறைக்கு 1046.09 கோடி ரூபாயும் அனுமதிக்கப்பட்டு இருப்பது தி.மு.க. அரசின் மக்கள் மீதான நலனை உணர்த்துகின்றது.

உணவு மானியத்திற்கு ரூ.8437.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டதைவிட ரூ.1937.57 கோடி கூடுதல் ஆகும். நீர்வளத்துறைக்கு ரூ.6607.17 கோடி ஒதுக்கி, தமிழ்நாடு நீர்வளத் தகவல் மேலாண்மை அமைப்பு ரூ.30 கோடியில் உருவாகவும், ரூ.610 கோடி செலவில் உலக வங்கி உதவியுடன் நீர் நிலைகளைச் சீரமைத்துப் புதுப்பிக்கவும், மேட்டூர், அமராவதி, பேச்சிப்பாறை போன்ற அணைகளின் நீர்த்தேக்கக் கொள்ளளவை உயர்த்தவும் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், இந்த அரசின் நீர் மேலாண்மை மீதான அக்கறையைக் காட்டுகின்றது.

தமிழ்நாட்டின் தொழிற்புரட்சிக்கு வித்திடும் வகையில் ஐந்து ஆண்டுகளில் 45 ஆயிரம் ஏக்கர் நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும், புதிதாக 9 மாவட்டங்களில் சிப்காட் தொழிற்பேட்டைகளும், 4 இடங்களில் தகவல் தொழிலநுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்பதும் பாராட்டுக்கு உரியது. திருவள்ளூர் மாவட்டம் மாநல்லுரில் மின் ஊர்திகள் பூங்கா, காஞ்சிபுரம் ஒரகடத்தில் மருத்துவக் கருவிகள் பூங்கா, தூத்துக்குடியில் பன்னாட்டு அறைகலன் பூங்கா, ராணிப்பேட்டையில் தோல் பொருட்கள் பூங்கா, மணப்பாறை, தேனி, திண்டிவனத்தில் உணவுப் பூங்கா, சென்னையில் நந்தம்பாக்கம், காவனூரில் நிதிநுட்ப நகரங்கள் போன்ற அறிவிப்புகள் மகிழ்ச்சி தருகின்றன. இதனால் தொழிற்துறை வளர்ச்சி பெறும்; வேலைவாய்ப்புகள் பெருகும்.

சென்னை - குமரி 8 வழிச் சாலையால், தென் மாவட்டங்களில் தொழில்வளம் பெருகும்; பயணிகள் போக்குவரத்து மேம்படும்; நேரம் சேமிக்கப்படும்; ஊர்தி மோதல்கள் குறையும்; பாதுகாப்பான பயணமாக அமையும். தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது மெய் அல்ல என்பதைத் தெரிவித்து இருக்கும் நிதி அமைச்சர், 2500 மெகாவாட் மின்சாரம் மின் சந்தையில் கொள்முதல் செய்துதான் சமாளிக்கப்பட்டு வருவதை வெளிப்படையாகக் கூறி இருக்கின்றார். அடுத்த பத்து ஆண்டுகளில் 17980 மெகாவாட் மின்சாரம் ஆக்கும் திறனைக் கூடுதலாக பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு ஸ்டாலின் அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

கடும் நிதி நெருக்கடியில் இருந்தாலும் வேளாண் இலவச மின்சாரம், வீட்டு மின்சார மானியத்திற்கு ரூ.19872.77 கோடி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது. அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை குடிசைகள் அற்ற மாநிலமாக ஆக்குவதற்குத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதும், 79,395 மிகவும் பின்தங்கிய கிராமங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்கவும், 1.27 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை காணப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. நகர்ப்புற வளர்ச்சிக்கான பல திட்டங்கள் வரவு - செலவுத் திட்ட அறிக்கையில் வெளிப்பட்டுள்ளன.

பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்துவதில் அரசு உறுதி பூண்டுள்ளது. மகளிருக்கான மகப்பேறு விடுப்பு 12 மாதம் அளித்து இருப்பதும், அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணத்தை உறுதி செய்து இருப்பதும் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் ஆகும். ஒன்றிய பா.ஜ.க. அரசின் வரி பங்கீட்டில் பாரபட்சம், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை வழங்காமல் இருப்பது போன்றவற்றை எதிர்கொள்ள, கூட்டாட்சி நிதி வடிவம் ஒன்றை உருவாக்க ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம், மாநிலத்தின் உரிமைக் கொடியை திமுக அரசு உயர்த்திப் பிடிக்கின்றது.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, மின்னணு கொள்முதல், அனைத்துத் துறைகளிலும் முழுமையாகக் கணினி மயம் போன்ற அறிவிப்புகள் மூலம், ஊழல் அற்ற நேர்மையான திறன் மிகுந்த அரசு நிர்வாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்து இருக்கின்றார். மொத்தத்தில் பொற்கால ஆட்சிக்கான திறவுகோலாக நிதிநிலை அறிக்கை அமைந்து இருக்கின்றது. வரவேற்கின்றோம்; பாராட்டுகின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.


Madurai Adheenam, OPS, CMStalin, Seeman, மதுரை ஆதீனம், ஓபிஎஸ், ஸ்டாலின், சீமான்
தமிழ்நாடு,முதன்மை செய்தி

மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பத்து நாட்களுக்குப் பிறகு 293-வது பீடாதிபதிக்கு முடி சூட்டப்படும் என பிற ஆதீன மடாதிபதிகள் கூறியுள்ளனர்.

மதுரை ஆதீனத்தின் 292-வது குருமகா சச்சிதானந்தமாக இருந்து வந்த 77 வயதான அருணகிரிநாதர், நேற்று இரவு காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை முதல் சிகிச்சைபெற்று வந்த மதுரை ஆதீனத்தின் 292-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்.

இதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக நள்ளிரவில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள மதுரை ஆதீன மடத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆதீனத்தின் உடலுக்கு கோவை காமாட்சிபுர ஆதீனம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம், இளைய மதுரை ஆதீனம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினா்

இதனையடுத்து அவரது மடத்தின் உட்புறத்தில் உடலானது சித்ராசனத்தில் அமர்ந்த நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று மதியம் ஆதீனத்தின் உடல் நான்கு மாசி வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. அதன் ஆதீனம் மறைந்ததையடுத்து, அவரின் உடலுக்கு பிற ஆதீன மடாதிபதிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மதுரை ஆதீனத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வந்திருந்த திருவாவடுதுறை ஆதீனம் பேசுகையில், "மதுரை மாநகரில் முனிச்சாலை அருகே மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் மதியம் மூன்று மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பத்து நாட்களுக்குப் பிறகுதான் 293-வது பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகளுக்கு முடி சூட்டப்படும்" என்றார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை காமாட்சிபுர ஆதீனம், "தமிழகம் முழுவதும் உள்ள ஆதீனங்கள் அனைவரும் இன்று அவருக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்கள். பத்து நாட்கள் தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் சமாதிக்கு அபிஷேகம் செய்யப்படும், அதற்குப் பிறகு புதிய ஆதீனத்திற்கு பட்டம் சூட்டப்படும்" என்றார். பின் செய்தியாளர்கள் நித்யானந்தா குறித்த கேள்விகளை கேட்க வேண்டாம் என இரு ஆதீனங்களும் கேட்டுக்கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டின் தொன்மையான சைவ மடங்களில் ஒன்றான மதுரை ஆதின மடத்தின் 292-வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் அவர்கள் நேற்றிரவு முக்தியடைந்த செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த துயரமும் அடைந்தேன். ஆன்மீகப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "வீரசைவ நெறிநின்று தமிழர் மெய்யியலை உலகமெங்கும் கொண்டுசேர்க்கும் பெரும்பணியில் ஈடுபட்டிருந்தபோதும் தமிழையும், தமிழ்நாட்டு மக்களையும் இருகண்கள் என நேசித்து வாழ்ந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் மறைவுவென்பது தமிழ்த்தேசியத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும்" என்று தெரிவித்துள்ளார்.


Agri Budget,TNBudget2021, MRKPanneer selvam, CMMKStalin, Fram Budget, வேளாண் பட்ஜெட், NelJayaraman
தமிழ்நாடு,முதன்மை செய்தி

"பனை வெல்லத்தை ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று வேளாண்துறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக, வேளாண் பட்ஜெட், இப்போது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்து தன்னிறைவு பெற்றவையாக மாறுவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

* நடப்பு ஆண்டில் 2500 கிராமங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். கிராமத்தில் தரிசு நிலங்களை சாகுபடி நிலமாக மாற்றுதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரியசக்தி பம்பு செட்கள் அமைத்தல், பால் உற்பத்தியைப் பெருக்குதல் இந்த திட்டம் மூலம் செயல்படுத்தப்படும்.

* கிராம அளவிலான வேளாண் தொகுப்புத் திட்டம், மானாவாரி நில மேம்பாடு, தரிசு நில மேம்பாடு, இயற்கை வேளாண்மை, மழைநீர் சேகரிப்பு ஆகிய துறைகள் நிதிநிலை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

* தென்னை, கரும்பு, பருத்தி, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு இடம் பெற வழி வகை செய்யப்படும்

* தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்; 10 லட்சம் ஹெக்டர் இருபோக சாகுபடி பரப்பு 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கப்படும்.

* வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கென்று தனி பிரிவு உருவாக்கப்படும்.

* படித்த இளைஞர்கள், சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, ஊரக இளைஞர் திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற திட்டம் செயல் படுத்தப்படும்.

* பாரம்பரிய நெல் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு.

* வேளாண் சாகுபடி பரப்பு 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கப்படும்.

* உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 லட்சம் மெட்ரிக் டன் என்ற இலக்கை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

* அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு தார் பாய்கள் வழங்கப்படும்; இந்த திட்டம் 52.2 கோடி செலவில் ஒன்றிய – மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

* உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 லட்சம் மெட்ரிக் டன் என்ற இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

* பனை மரங்களை அதிகரிக்க 76 லட்சம் பனை விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.

* பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்.

* பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்படும்.

* ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்.

* ஒரு குவிண்டால் நெல் சன்னரகம் ரூ.2,060 ஆகவும், சாதாரண ரகம் ரூ.2,015 ஆகவும் கொள்முதல் செய்யப்படும். இதன்மூலம் 6 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்.

* ’சிறுதானிய இயக்கம்’ கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

* விவசாயிகள், பயிறு வகைகளை வரப்புகளில் வளர்க்கவும், ஊடுபயிராக வளர்க்கவும் மானியம் அளித்து ஊக்கப்படுத்தப்படும்.

* திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறனுள்ள பருத்தி விதை நீக்கும் இயந்திரம் நிறுவப்படும்.

* இத்திட்டம் ரூ.45 கோடி ஒன்றிய – மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப் படும்.

* நடப்பாண்டில், துவரை, உளுந்து, பச்சைப் பயறு போன்ற வகைகளை 61,000 மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்ய திட்டம்.

* சந்தை விலை குறையும்போது ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பருத்தி கொள் முதல் செய்ய நடவடிக்கை.

* சென்னையில் வேளாண் அருங்காட்சியகம், தஞ்சையில் தென்னை மதிப்பு கூட்டு மையம் அமைக்கப்படும்.

* பனை வெல்லத்தை ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


மிளகு, பலா, பொன்னி அரிசி, வேளாண் பட்ஜெட், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், Pepper, Jack fruit, Ponni Rice, Agriculture Budget, MRK Panneerselvam
தமிழ்நாடு,முதன்மை செய்தி

"தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், "தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்படும் என்றார்.

சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் 30 நடமாடும் காய்கறி அங்காடிகள் வாங்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40% மானியம் அல்லது 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறிய அமைச்சர், ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய 2 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றார்.

தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை என்றும் கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசி போன்ற சிறப்பு விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் அதற்கென தனி அமைப்பு ஒன்று வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், மீன் பதப்படுத்துதலுக்கு நாகை, தேங்காய்க்கு கோவை, வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறுதானியங்களுக்கு விருதுநகர் என 5 தொழில் கற்கும் மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கு என ஆராய்ச்சி மையம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும். இதற்கென ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறினார்.


தமிழக அரசு, அர்ச்சகர், முதல்வர் ஸ்டாலின், Tamil Nadu Government, Priest, Chief Minister Stalin
தமிழ்நாடு,முதன்மை செய்தி

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் 58 பேரை அர்ச்சகராக நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி ஆணை வழங்கினார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் சென்னையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,சாந்தலிங்க மருதாசல அடிகள்,குமரகுருபர சுவாமிகள் சிரவை ஆதீனம், ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுகி சிவம் மற்றும் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், கே என் நேரு, சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோயில் பணியார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கடந்த 2.10.70ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். எனினும் பல்வேறு சட்டப் வழக்குகள் காரணமாக இந்த சட்டத்தை அப்போது திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை. பெரியாரின் ஆசையாக இந்த திட்டத்தை கருணாநிதி குறிப்பிட்டார். பெரியார் உயிரோடு இருக்கும்போது இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்றும் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்றும் இதனை கருணாநிதி எப்போதும் குறிப்பிடுவார். தற்போது 51 ஆண்டுகள் கழித்து பெரியாரின் கனவையும் கலைஞரின் சட்டத்தை நிறைவேற்றியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்றத்தில் இருந்து இந்து அறநிலையத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, தமிழில் அர்ச்சனை ஆகிய நடவடிக்கைகளுடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் வரலாற்று சாதனையையும் திமுக சாத்தியமாக்கியுள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Actress Meera Mithun, Cyber Crime Police, நடிகை மீரா மிதுன், காவல்துறை போலீஸ், கேரளா
சினிமா,முதன்மை செய்தி

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுனை கேரளாவில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்மையில் பட்டியலின மக்கள் தொடர்பாகவும் திரைத்துறையில் பணியாற்றும் பட்டியலின மக்கள் தொடர்பாக ஆபாசமாகவும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “ திரைப்பட நடிகை மீரா மிதுன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவை பார்த்தேன். அதில் பட்டியலின மக்களை மிக கேவலமாக திட்டி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பட்டியலின சமூகத்தையே மிக கேவலமாகவும், மோசமான வார்த்தைகளாலும் திட்டியது மட்டுமல்லாமல் திரைப்பட துறையில் இருந்தே பட்டியலின சமூகத்தை வெளியேற்ற வேண்டும் என்று கூறி வீடியோ பதிவிட்டார். எனவே மீரா மிதுன் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி நடிகை மீரா மிதுன் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 153- கலகம் செய்ய தூண்டி விடுதல், 153(ஏ)(1)(ஏ) - சாதி, மத, இன தொடர்பாக விரோத உணர்ச்சியை தூண்டி விடுதல், 505(1)(பி) - பொதுமக்களின் அமைதியை குலைக்கும் வகையில் பயமுறுத்தல், அச்சம் ஏற்படுத்துதல், 505(2) - பொதுமக்களிடையே தவறான தகவலை பரப்பி தீங்கு இளைத்தல் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகள் என மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் நேரில் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் காவல்துறையினரிடம் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து, அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவரது செல்போன் நம்பரை வைத்து தனிப்படையினர் கேரளாவில் இன்று கைது செய்துள்ளனர். அவரை சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.