தமிழ்நாடு,மணி செய்தி,முதன்மை செய்தி

ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. தமிழக அரசு சார்பாக ஆர்டர் செய்யப்பட்டுள்ள ஒன்றரை கோடி தடுப்பூசிகள் வந்தால் தான் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து ஆம்புலன்ஸ் எண்ணிக்கை உயர்த்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி தட்டுபாடு காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயம் செய்வதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு,அரசியல்,மணி செய்தி,முதன்மை செய்தி

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் வரும் 7ம் தேதி பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் மிகவும் எளிதாக முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனிடையே, முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவையில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக மட்டும் 125 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 4 தொகுதிகளிலும், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஒரு தொகுதியிலும், பிற கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. நாளை நடைபெற உள்ள திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து வரும் 7ம் தேதி அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.

இதனிடையே, முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை சேலத்தில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அவர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையான நோக்கம்
விளையாட்டு,முதன்மை செய்தி

ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையான நோக்கம்'' என்று ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒரு நாளைக்கு 3 லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இந்த களேபரத்துக்கு மத்தியில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஸம்பா, கேன் ரிச்சர்டுசன் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ளனர். அண்மையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த ஆண்ட்ரூ டை ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

இதனிடையே, இந்தியாவுடனான நேரடி விமான சேவைக்கு மே 15ம் தேதி வரை தடை விதித்து ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், இந்தியாவில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ஐபிஎல் சிஓஓ ஹேமங்க அமின் கடிதம் எழுதியுள்ளார். அதில், "ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள் என நிர்வாகம் உறுதியளிக்கிறது. ஐபிஎல் தொடருக்கு பின் வீரர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ கவனித்துக் கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

வீரர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். இனி வீரர்களுக்கு 5 நாட்களுக்கு பதில் 2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கப்படும். ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையான நோக்கம். ஒவ்வொரு முறையும் ஜெயிப்பதற்காக விளையாடும் நீங்கள் இம்முறை மனிதநேயத்திற்காக விளையாடுகிறீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.


செவிலியர்கள், தமிழக அரசு, ஒப்பந்த செவிலியர்கள், ஸ்டாலின், TNNurses, TamilNadu Government, Contract Nurses, Stalin,tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,முதன்மை செய்தி

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,212 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டது. இரண்டு வருட ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்த பணியாளர்களாகவே தொடர்ந்தனர். இதனால் செவிலியர்கள் கடும் மனஉளைச்சலில் பணியாற்றி வந்தனர். பின்னர், அவர்களது ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. ஆனால், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கடந்த ஆட்சியில் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில், புதிதாக திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. அதன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார். இதனிடையே, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த சூழ்நிலையில், 2015-16ல் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,212 செவிலியர்களுக்கான ஒப்பந்தம் நாளையுடன் முடியவிருந்த நிலையில் அவர்களை பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பணி நிரந்தரம் செய்யப்பட்டதால் 1,212 பேருக்கான ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதிக்கு முன்னதாக 1,212 பேரும் சென்னையில் பணியில் சேர வேண்டும் என்றும் பின்னர் 1,212 பேரும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


ஓபிஎஸ், ஈபிஎஸ், தமிழ்நாடு, அதிமுக, தமிழக சட்டப்பேரவை தேர்தல், OPS, EPS, Tamil Nadu, AIADMK, Tamil Nadu Assembly Election,tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

“நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித்தேர் சரியாக செழுத்த அச்சாணியாக செயல்பட வேண்டிய கடமை இருக்கிறது” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன்படி தமிழக முதல் அமைச்சராக வரும் 7ம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.

இதற்கிடையே, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை அதிமுக கூட்டணி வெல்லாத நிலையில், முதல்வர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித்தேர் சரியாக செழுத்த அச்சாணியாக செயல்பட வேண்டிய கடமை இருக்கிறது.

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அதிமுக பணியாற்றும். 10 ஆண்டுகள் அதிமுக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு செய்த பணிகளை மக்கள் நன்கு அறிவார்கள். அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளனர்.


ஸ்டாலின், திமுக, தமிழக முதல்வர், Stalin, DMK, TNCMStalin, Tamil Nadu,tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் வரும் 7ம் தேதி பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் மிகவும் எளிதாக முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனிடையே, முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவையில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக மட்டும் 125 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 4 தொகுதிகளிலும், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஒரு தொகுதியிலும், பிற கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. நாளை நடைபெற உள்ள திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து வரும் 7ம் தேதி அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.

இதனிடையே, முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை சேலத்தில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அவர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பில்கேட்ஸ், மெலிண்டா, மைக்ரோசாப்ட், விவகாரத்து, அமெரிக்கா, Microsoft founder, Bill Gates, Melinda Gates, divorce, USA,tamil news, international news, world news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
உலகம்,முதன்மை செய்தி

திருமணமாகி 27 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவியை விவாகரத்து செய்கிறார் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்.

கடந்த 1975ம் ஆண்டு பால் ஆலன் உடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கிய காலத்தில் அதன் தலைமை செயல் அதிகாரியாக பில் கேட்ஸ் செயல்பட்டார். பின்னர் அதன் தலைவர் மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளார். அந்நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டா கேட்சை சந்தித்து பில் கேட்ஸ் பின்னர் ஹவாயில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் 6 ஆண்டுகள் கழித்து, கடந்த 2000ம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. லாபநோக்கு இல்லாத இதன் வழியே கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலம் போன்ற சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸூம், அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மனைவி மெலிண்டா கேட்ஸூம் விவாகரத்து செய்யும் முடிவை கூட்டாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து பில் கேட்ஸ் தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து வரப்பட்டு உள்ளன. இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம்.

எனினும், எங்களது திருமண வாழ்வை முடித்து கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என கூறியுள்ளனர்.


மதுரை அரசு,hospital
தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து 10 பெட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மருந்து திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றை குணப்படுத்த ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த மத்திய அரசுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிப்பு அதிகரித்து வருவதால், ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், சென்னை கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் மக்கள் நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருந்து வாங்கிச் செல்லும் நிலை நிலவுகிறது.

இந்த நிலையில், ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காரணமான திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய கம்பவுண்டர், சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே தென்மாவட்ட சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்கு பிரத்தியோகமாக சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரையில் கொரோனா சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்தநிலையில், மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 10 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, மருந்து சேமிப்பு கிடங்கு ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதிக லாபத்திற்கு கள்ள சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்வதற்காக இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம்
இந்தியா

மேற்கு வங்கத்தில் ஆரம்ப கட்ட நிலவரங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது. கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் நிலவரம் வெளி வந்து கொண்டிருக்கிறது.

294 உறுப்பினர் கொண்ட மேற்கு வங்க சட்டசபைக்கு கடந்த மார்ச் 27-ந் தேதி முதல் கடந்த 29-ந் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதனால் 2 மாதங்களுக்கு மேலாக மாநில தேர்தல் களம் மிகவும் கொதிநிலையில் இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலை விட அரசியல் தலைவர்களின் பேச்சுகளில் அனல் பறந்தது. இதனால் அரசியல் மோதல்கள், வன்முறைகள், தாக்குதல்கள் என பதற்றத்துக்கு பஞ்சமில்லாமல் காணப்பட்டன.

இப்படி 2 மாதங்களுக்கு மேலாக மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. அங்கு வேட்பாளர் மரணத்தால் 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. எனவே மீதமுள்ள 292 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் ஆரம்ப கட்ட நிலவரங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நிமிடத்துக்கு நிமிடம் முன்னிலை நிலவரம் மாறியது. தற்போதைய நிலவரத்தின் படி திரிணாமூல் காங்கிரஸ் 191 இடங்களிலும் பாஜக 97 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. சிபிஎம் 1 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதியில் என்ஆர்காங்கிரஸ் கூட்டணி 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளில் பாஜக கூட்டணி 84 தொகுதிகளிலும், காங்கிரஸ் 41 தொகுதிகளிலும், பிற கட்சிகள் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் சிபிஎம் 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 46 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும், பிற கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர்.


இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியா,கொரோனா வைரஸ்

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 3,645 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை அசுரவேகத்தில் பரவி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 20 மாநிலங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. மகாராஷ்டிராவிலும், டெல்லியிலும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தினந்தோறும் அறிவித்து வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் ஒரே நாளில் 3,645 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 2,04,832 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,83,76,524 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 2,69,507 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,50,86,78 ஆக உயர்ந்துள்ளது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 82.33 சதவிகிதமாகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.12 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30,84,814 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 1,06,105 பேர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா,கொரோனா வைரஸ்

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,01,187 ஆக உயர்ந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக கொரோனா உயர்ந்து வந்த நிலையில், நேற்று மட்டும் சற்று குறைந்தது. கொரோனா பாதிப்பை கண்டறிய நாடு முழுவதும் பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 17 லட்சத்து 23 ஆயிரத்து 912 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 28 கோடியே 27 லட்சத்து 03 ஆயிரத்து 789 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, இந்தியாவில் ஒரே நாளில் 3,60,960 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்றும் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,01,187 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 82.54 சதவிகிதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.12 சதவிகிதமாகவும் உள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட இந்த நோயாளிகளையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 162 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 48 லட்சத்து 17 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 29 லட்சத்து 78 ஆயிரத்து 709 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கொரோனா 2வது அலை அதிகரித்து வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி
இந்தியா,கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா 2வது அலை அதிகரித்து வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருவதால், தடுப்பூசி செலுத்தும் வயதை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு வகை தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதனை பெறுவதற்காக ‘கோவின்’ இணையதளம் அல்லது ‘ஆரோகிய சேது’ செயலி மூலமாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த நிலையில் வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு, இன்று முதல் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இதனிடையே, இணையதளம் மூலமாக முன்பதிவு செய்ய முடியவில்லை என புகார் எழுந்தது. நேற்று நள்ளிரவு முதல் பலர் முன்பதிவு செய்ய முயற்சி செய்தால், இணையதள சர்வரில் முடக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று மாலை 4 மணி முதல் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, https://www.cowin.gov.in என்ற, இணையதளத்திற்குள் சென்று, ‘ரிஜிஸ்டர் மை செல்ப்’ என்பதை அழுத்த வேண்டும். பின், மொபைல் போன் எண் பதிவு செய்து, பெயர், வயது உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் உள்ளிட்ட, அரசு அங்கீகரித்த அடையாள அட்டை எண்ணை பதிந்து, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம்
இந்தியா,முதன்மை செய்தி,கொரோனா வைரஸ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி (34) முன்னணி செய்தித்தாள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆஷிஸ் யெச்சூரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் குருக்கிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆஷிஸ் யெச்சூரி இன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது மூத்த மகன் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று காலை உயிரிழந்துவிட்டார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு நம்பிக்கையும் எனது மகனுக்கு சிகிச்சையும் அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


அரசியல்,மணி செய்தி

கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், பல கருத்து திணிப்புகளை வென்று அதிமுக இமாலய வெற்றி பெற்றிருக்கிறது என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக ஆட்சியை பிடிக்கும் என செய்திகள் வெளியிடப்பட்டன.

இதுகுறித்து, சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கருத்துக்கணிப்புகள் எந்த காலத்திலும் எடுபடாத ஒரு விஷயம் என்றும், எந்த காலத்திலும் இல்லாத மகத்தான வெற்றியை இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் கூறியுள்ளார்.


தமிழ்நாடு,மணி செய்தி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இன்று மதியம் 2.30 மணிக்கு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் சிரமப்பட்டதோடு, வாகனங்கள் மழை நீரில் மிதந்தது.

ஒரு பக்கம் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மறுபக்கம் மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியடைய வைத்தது.


இந்தியாவில் கொரோனா பரவில் அதிகரித்து வரும் நிலையில், “ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள்
விளையாட்டு,கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா பரவில் அதிகரித்து வரும் நிலையில், “ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள்” என ஐபிஎல் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒரு நாளைக்கு 3 லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இந்த களேபரத்துக்கு மத்தியில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஸம்பா, கேன் ரிச்சர்டுசன் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ளனர். அண்மையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த ஆண்ட்ரூ டை ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

இதனிடையே, இந்தியாவுடனான நேரடி விமான சேவைக்கு மே 15ம் தேதி வரை தடை விதித்து ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், இந்தியாவில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ஐபிஎல் சிஓஓ ஹேமங்க அமின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள் என நிர்வாகம் உறுதியளிக்கிறது. ஐபிஎல் தொடருக்கு பின் வீரர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ கவனித்துக் கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

வீரர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். இனி வீரர்களுக்கு 5 நாட்களுக்கு பதில் 2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கப்படும். ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையான நோக்கம். ஒவ்வொரு முறையும் ஜெயிப்பதற்காக விளையாடும் நீங்கள் இம்முறை மனிதநேயத்திற்காக விளையாடுகிறீர்கள்” என்று கூறப்பட்டுள்ளது.


இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
விளையாட்டு,கொரோனா வைரஸ்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வீட்டிலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்தியாவில் தற்போது பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் இன்று 62,258 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தவர்களைவிட புதிய தொற்று பாதிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30, 386 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதுவரை 5.81 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் 291 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த எண்ணிக்கை 1.61 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போது வரை 4,52,647 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் எனது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா இல்லை என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்திய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விளையாடினார். இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவு உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றார். தற்போது சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியா,விளையாட்டு

பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில 336 ரன்கள் எடுத்தது. 33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. முகமது சிராஜியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி 294 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதையடுத்து, இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷுப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினர். இந்தியா 1.5 ஓவரில் 4 ரன்கள் எடுத்திருக்கும்போது நேற்றைய 4-வது நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணியின் ஸ்கோர் 18 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 21 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். ஒரு பக்கம் புஜாரா நிலைத்து நிற்க மறுபக்கம் ஷுப்மான் கில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ரன்கள் விளாசினார். அவர் 90 பந்தில் அரைசதம் அடித்தார். இவரது அரைசதத்தாலும், புஜாராவின் நிதான ஆட்டத்தாலும் இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது 62 ஓவர்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் தேவையிருந்தது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஷுப்மான் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாராவும் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷுப்மான் கில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 132 ரன்கள் எடுத்திருந்ததது. அடுத்து வந்த ரஹானே தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாட முடிவு செய்தார். இதனால் 22 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்தியா தேனீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது, வெற்றிக்கு குறைந்தது 37 ஓவரில் 145 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. கைவசம் 7 விக்கெட் இருந்த நிலையில் இந்திய அணி தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டத்தை தொடங்கியது. ரிஷப் பண்ட், புஜாரா அபாரமாக விளையாடினர். அரைசதம் அடித்த புஜாரா 211 பந்தில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் ரிஷப் பண்ட் 100 பந்தில் அரைசதம் அடித்தார்.

புஜாரா ஆட்டமிழந்த பிறகு மயங்க் அகர்வால் களம் இறங்கினார். ஒருபக்கம் அடித்தும் விளையாட வேண்டும். அதேசமயம் விக்கெட்டும் இழக்கக் கூடாது என்ற நிலை ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்டது. மயங்க் அகர்வால் 9 ரன்னில் வெளியேற ரிஷப் பண்ட்-க்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி 8 ஓவரில் 50 ரன்கள் தேவைப்பட்டன. கம்மின்ஸ் பந்தில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கை ஊட்டினார். இதனால் கடைசி 7 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டன. 7-வது ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. இதனால் 6 ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டன. 6-வது ஓவரில் 9 ரன்கள் கிடைத்தன.

கடைசி 5 ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. 5-வது ஓவரை நாதன் லயன் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் வாஷிங்டன் சுந்தர் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி ஆட்டமிழந்தார். என்றாலும் அவர் 29 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். அடுத்து ஷர்துல் தாகூர் களம் இறங்கினார். இந்த ஓவரில் ஐந்து ரன்கள் கிடைத்தன. கடைசி 4-வது ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டன. 4-வது ஓவரை ஹசில்வுட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பண்ட் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தில் ஷர்துல் தாகூர் ஆட்டமிழந்தார். கடைசி பந்தை ரிஷப் பண்ட் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 1988க்கு பின் பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரோலியா அணி தோற்றது இல்லை என்ற சாதனையை தற்போது தகர்த்துள்ளது இந்திய அணி.

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 2-வது இடத்திற்கு முன்னேறியது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஆலன் பார்டர் – சுனில் கவாஸ்கர் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. கோப்பையை இந்திய அணி கேப்டன் ரஹானே பெற்றுக் கொண்டார். அதை பெற்றுக்கொண்ட ரஹானே நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி நடராஜன் கோப்பையை ஏந்தி நிற்க இந்திய அணி வீரர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். இந்தத் தொடரில் அறிமுகமாகி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய டி நடராஜனிடம் ரஹானே கோப்பையை ஏந்தச் சொன்னது மெய்சிலிர்க்க வைத்தது.

tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

 

இதனிடையே, வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 5 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ள பிசிசிஐ. பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆஸ்திரேலியாவில் நடந்த இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கண்டு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். வெற்றிதான் அவர்களுடைய இலக்காக இருந்ததால் அதற்கான திடமான மன உறுதியும் வெளிப்பட்டது. அணிக்கு வாழ்த்துக்கள்! உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துகள். இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது” என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆஸ்திரேலியாவில் அருமையான டெஸ்ட் தொடர் வெற்றிக்கு #TeamIndiaக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்று வெற்றிக்கு ஒவ்வொரு வீரரும் பங்களிப்பு செய்வதால் அணிப் பணியின் முக்கியத்துவத்தை இறுதிப் போட்டி எடுத்துக்காட்டுகிறது. எங்கள் இளம் வீரர்களின் அற்புதமான செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சி!” என்று கூறியுள்ளார்.


கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வருந்துகிறேன் நண்பா! திரையில் ஒளிகொண்டு சிலை செதுக்கினாய்! வாஜி வாஜி பாடலை ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்! என் எத்தனையோ பாடல்களை ரத்தினமாய் மாற்றினாய்! இதோ உனக்கான இரங்கல்பாட்டை எங்ஙனம் படம் செய்வாய்? விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்! ஒளியாய் வாழ்வாய் இனி நீ” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு,சினிமா

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை 3 மணியளவில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மரணம் அடைந்த கே.வி.ஆனந்த்தின் மருத்துவமனையில் இருந்து பெசன்ட்நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பல முன்னனி இயக்குநர்களின் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.வி.ஆனந்த், கடந்த 1995ம் ஆண்டு, ‘தென்மாவின் கொம்பத்து’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காக, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். இவரது இயக்கத்தில் வெளியான அயன், கோ, அனேகன், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி” என்று கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வருந்துகிறேன் நண்பா!
திரையில்
ஒளிகொண்டு
சிலை செதுக்கினாய்!
வாஜி வாஜி பாடலை
ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!
என்
எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்!
இதோ
உனக்கான இரங்கல்பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்?
விதவையான கேமரா
கேவிக்கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்!
ஒளியாய் வாழ்வாய்
இனி நீ” என்று கூறியுள்ளார்.


கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 2 லட்சம் ரூபாய் அபராதத்துடன் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு,சினிமா,கொரோனா வைரஸ்

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 2 லட்சம் ரூபாய் அபராதத்துடன் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நடிகர் விவேக் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வண்ணம் தடுப்பூசி போட்டுக்கொண்டு பேட்டி அளித்தார். மறுநாள் வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது திடீர் உயிரிழப்பு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டதால்தான் விவேக் உயிரிழந்தார் என்று நடிகர் மன்சூர் அலிகான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து அவர் மீது சென்னை கோடம்பாக்கம் மண்டல சுகாதார அலுவலர் பூபேஷ் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீஸார் மன்சூர் அலிகான் மீது பொது அமைதியை கெடுத்தல், தொற்கு நோயை பரப்பும் எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சர்ச்சைப் பேச்சில் சிக்கிய வழக்கில் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனுவை சென்னை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்தார். அந்த மனுவில், என்னை அறியாமல் பேசிவிட்டேன். எனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம், 2 லட்சம் அபராதம் விதித்ததோடு, இந்த தொகையை தடுப்பூசி வாங்க சுகாதாரத்துறைக்கு தர உத்தரவிட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பவோ, பதற்றத்தை ஏற்படுத்தவோ கூடாது என்றும் கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர் நிலையை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கியது.


நடிகர்கள் சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது
தமிழ்நாடு,சினிமா

நடிகர்கள் சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவில் அதிகரித்து வரும் நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லை, கோவை, திருப்பூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பெரிய நடிகர்களான சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோர் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகின்றனர்.

பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 40வது படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழகத்தில்தான் இந்த படப்பிடிப்புகள் நடந்து வந்தன. 100 பேருக்கு மேல் படப்பிடிப்பில் அனுமதிக்கப்படவில்லை. இந்த சூட்டிங்கில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.  இந்த படங்கள் அனைத்தும் 50 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் சினிமா தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த நிலையில், தற்போது பெரிய நடிகர்களின் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.


இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.
தமிழ்நாடு,சினிமா,கொரோனா வைரஸ்

இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மட்டும் நாடு முழுவதும் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,73,13,163 ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரொனா பாதிப்பின் எண்ணிக்கை நேற்றைய தினத்தில் 15 ஆயிரத்தைக் கடந்தது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவர் ஆண் தேவதை, ரெட்டசுழி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு சில தினங்களாக அசோக் நகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று காலை மூச்சுத்திணறல் அதிகமாகி உயிரிழந்தார்.

இரட்டைச்சுழி படத்தில் இயக்குநர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா இருவரையும் ஒன்றாக இயக்கிய தாமிரா, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆண் தேவதை படத்தை இயக்கியிருந்தார். சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் நடித்திருந்த அந்தப் படத்திற்கு சரியான தியேட்டர் கிடைக்காமல் 3 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் தள்ளிப்போனது. பின்னர் ஒருவழியாக வெளியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கொரோனா தொற்றால் இயக்குநர் இறந்திருப்பது தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு,மணி செய்தி

கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், பல கருத்து திணிப்புகளை வென்று அதிமுக இமாலய வெற்றி பெற்றிருக்கிறது என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக ஆட்சியை பிடிக்கும் என செய்திகள் வெளியிடப்பட்டன. இதுகுறித்து, சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கருத்துக்கணிப்புகள் எந்த காலத்திலும் எடுபடாத ஒரு விஷயம் என்றும், எந்த காலத்திலும் இல்லாத மகத்தான வெற்றியை இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் கூறியுள்ளார்.


நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சினிமா

நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த விவேக்கிற்கு கடந்த 16ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 17ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, நடிகர் விவேக் மரணமடைந்த அன்று நடிகர் விஜய் படப்பிடிப்பிறாக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றிருந்ததால் அவரால் விவேக்கின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமுடியவில்லை. இதற்கிடையில், படப்பிடிப்பு முடிந்து ஜார்ஜியாவில் இருந்து நடிகர் விஜய் நேற்று சென்னை திரும்பினார்.

இந்தநிலையில், ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய் இன்று காலை மறைந்த நடிகர் விவேக்கின் வீட்டிற்கு சென்றார். அங்கு நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை சந்தித்த நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். நடிகர் விஜய்யுடன், நடிகர் விவேக் ஏராளமான படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.


கொரோனா, நடிகர் பாண்டு, மரணம், சென்னை. Corona, actor Pandu, death, Chennai
தமிழ்நாடு,சினிமா,முதன்மை செய்தி

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் உயிரிழந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பின் காரணமாக நிலையில், தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான பாண்டு (74), அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டு உயிரிழந்தார். அவரது மனைவி குமுதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாண்டு- குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார். அதிமுக கொடியை வடிவமைத்ததும் பாண்டுதான்.

நகைச்சுவை குணச்சித்திர நடிகர் பாண்டு அவரது பேச்சு, சிரிப்பு மற்றும் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அவரது திடீர் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் குடும்பத்தினரிடம் காண்பிடிக்கப்பட்டு பின்னர் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவின் சோகம் மறைவதற்குள் பாண்டு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு,முதன்மை செய்தி

மளிகை, காய்கறி, டீ கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் என்ற அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகிறது. 12 மணிக்கு மேல் வெளியில் பொதுமக்கள் சுற்றினால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் அபராதம் விதிக்கவும் காவல்துறையினர் தயாராக இருக்கிறார்கள்.

தமிழகத்தில் கொரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்தையும் தாண்டி, பதிவாகி வருகிறது. இதேபோல இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுப்பதற்காக அரசு இன்று முதல் வரும் 20ம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

* அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கவேண்டும்.

* பயணிகள் ரெயில், மெட்ரோ ரெயில், தனியார் பஸ்கள், அரசு பஸ்கள் மற்றும் வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்கவேண்டும்.

* வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி பகல் 12 மணி வரை இயங்கலாம். இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.

* மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்படும்.

* மீன், இறைச்சி கடைகளில் காலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கவேண்டும்.

* டீ கடைகள் பகல் 12 மணி வரை மட்டும் செயல்படும். உணவகங்கள், டீ கடைகளில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை. உணவு விடுதிகள், ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் மெஸ் ஆகிய இடங்களில் இருந்து உணவு பார்சல்களை மட்டுமே பெற்றுக்கொள்ளமுடியும். அந்த வகையில் அங்கிருந்து காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல்களை பெற்றுக்கொள்ளலாம். விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்கவேண்டும்.

* உள்அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் செயல்படாது.

* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.

* ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள் (ஸ்பா) இயங்க தடை விதிக்கப்படுகிறது.

* அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம், ரெயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.

* ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.

* பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்படும்.

* தடையின்றி தொடர்ந்து செயல்படவேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்களில் இரவு நேர பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

* தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், இரவு நேரப் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* தரவு மையங்களில் (டேட்டா சென்டர்) பராமரிப்பு பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ளலாம்.

* கிடங்குகளில், சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* இரவு நேர ஊரடங்கின் போதும், ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் போதும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்.

அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 12 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே சுற்றினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதோடு, அபராதம் விதிக்க காவல்துறையினர் தயாராக இருக்கின்றனர்.


முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு, கொரோனா, தமிழக மக்கள், TNCMStalin, Chief Minister Stalin, Tamil Nadu, Corona, Tamil Nadu people, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நாளை பதவி ஏற்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததும் 3 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாகும். ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தை கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி முதல் செயல்படுத்த இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் நாளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். அதன் பிறகு கோட்டைக்கு செல்லும் ஸ்டாலின், முதல்வர் இருக்கையில் அமர்ந்ததும் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திடுவார் என்று தெரிகிறது. இந்த திட்டம் ஜூன் 3ம் தேதி தொடங்குவதாக இருந்தாலும் அதற்கு சில நடைமுறைகள் உள்ளதால் இப்போதே கையெழுத்திட்டால்தான் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என்பதால் அதில் கையெழுத்திடுவார் என தெரிகிறது.

தமிழகம் முழுவதும் டவுன் பஸ்களில் (நகர பேருந்து) பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அதற்கான கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திடுவார் எனவும் தெரிகிறது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையாகத் தற்போது வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்துவதுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கும் அவர் கையெழுத்திடுவார் என தெரிகிறது. இது தவிர பல்வேறு முக்கிய அறிவிப்புகளிலும் அவர் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஸ்டாலின், தமிழக அமைச்சரவை பட்டியல், அன்பில் மகேஷ், துரைமுருகன், பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், Stalin, Tamil Nadu Cabinet List, Anbil Mahesh, Thuraimurugan, Ponmudi, Anita Radhakrishnan, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து 34 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியனும், பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் நாளை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவிபிரமாணம் எடுக்க இருக்கிறார். நீண்ட கால எதிர்பார்ப்புக்கு கிடைத்த பதிலாக திமுக ஆட்சியமைக்கும் நிலையில் தற்போது அடுத்த எதிர்பார்ப்பாக மாறியிருந்தது அமைச்சரவை பற்றியதுதான். புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பெறப் போகிறார்கள்? யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்? யாருக்கு மறுக்கப்படும்? யாருக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என அடுத்தகட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டிருந்த நிலையில் தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் விவரம்.

1) மு.க.ஸ்டாலின் முதல்வர் - பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத்திறனாளிகள் நலன்.

2) துரைமுருகன் (நீர்வளத்துறை அமைச்சர்) - சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுசீட்டுடுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.

3) கே.என்நேரு (நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்) - நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்

4) இ.பெரியசாமி (கூட்டுறவுத்துறை அமைச்சர்) - கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலன்

5) க.பொன்முடி (உயர்கல்வித்துறை அமைச்சர்) - உயர்கல்வி உள்ளிட்ட தொழிற்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல்

6) எ.வ.வேலு (பொதுப்பணித்துறை அமைச்சர்) - பொதுப்பணிகள் (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)

7) எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர்) - வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக் கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத்தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு.

8) கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (வருமாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்) - வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை

9) தங்கம் தென்னரசு (தொழில்துறை அமைச்சர்) - தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் பல தமிழ்ப் பண்பாட்டுத்துறை, தொல்பொருள்

10) எஸ்.ரகுபதி (சட்டத்துறை அமைச்சர்) - சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்

11) முத்துசாமி (வீட்டு வசதித்துறை அமைச்சர்) - வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு நகரத்திட்டமிடல் நகர் பகுதி வளர்ச்சி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்

12) கே.ஆர்.பெரியகருப்பன் (ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர்) - ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள்

13) தா.மோ.அன்பரன் (ஊரகத் தொழிற்துறை அமைச்சர்) - ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்

14) மு.பெ.சாமிநாதன் (செய்தித்துறை அமைச்சர்) - செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்

15) பி.கீதா ஜீவன் ( சமூக நலன்- மகளிர் உரிமைத்துறை அமைச்சர்) - மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்

16) அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (மீன்வளம்- மீனவர் நலத்துறை மற்றும் காவல்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்) - மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் காவல்நடை பராமரிப்பு
17) ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (போக்குவரத்துறை அமைச்சர்) - போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்

18) கா.ராமச்சந்திரன் (வனத்துறை அமைச்சர்) - வனம்

19) அர.சக்கரபாணி (உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்) - உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு

20) வி.செந்தில் பாலாஜி (மின்சாரத்துறை அமைச்சர்) - மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசணடு (மொலாசஸ்)

21) ஆர்.காந்தி (கைத்தறித்துறை அமைச்சர்) - கைத்தறி மற்றும் துணிநூல், கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்

22) மா.சுப்பிரமணியன் (சுகாதாரத்துறை அமைச்சர்) - மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்

23) பி.மூர்த்தி (வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்) - வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு

24) எஸ்.எஸ்.சிவசங்கர் (பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்

25) பி.கே.சேகர்பாபு (இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்) - இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்

26) பழனிவேல் தியாகராஜன் ( நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை) - நிதித்துறை, திட்டம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள்

27) சா.மு.நாசர் (பால்வளத்துறை அமைச்சர்) - பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி

28) செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்) - சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வஃக்ப் வாரியம்

29) அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

30) சிவ.வீ.மெய்யநாதன் (சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்) - சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை

31) சி.வி.கணேசன் (தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்) - தொழிலாளர்கள் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும ஊரக வேலைவாய்ப்பு

32) த.மனோ தங்கராஜ் (தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்) - தகவல் தொழில்நுட்பத்துறை

33) மா.மதிவேந்தன் - சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

34) என்.கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்) - ஆதிதிராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்


நடிகர் பாக்யராஜ், பூர்ணிமா, கொரோனா, சாந்தனு, Actor Bhagyaraj, Poornima Bhagyaraj, Corona, Shantanu Bhagyaraj
சினிமா,முதன்மை செய்தி

இயக்குநர் கே.பாக்யராஜ், அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவரது மகன் சாந்தனு தெரிவித்துள்ளார்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகில் பல்வேறு பிரபலங்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். நேற்று நடிகர் பாண்டு உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் விவேக், மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த நிலையில், முன்னணி இயக்குநரான கே.பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவரது மகன் சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சாந்தனு தனது ட்விட்டர் பதிவில், "என் பெற்றோர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எங்கள் பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம். கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்" என்று கூறியுள்ளார்.

சாந்தனுவின் டுவீட்டைத் தொடர்ந்து, கே.பாக்யராஜ் விரைவில் பூரண நலம்பெற பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர், முகஸ்டாலின், கொரோனா நிவாரணம், மகளிர், Chief Minister Stalin, Tamil Nadu Chief Minister, Mkstalin, Corona Relief, TNWomens
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

தமிழக முதல்வராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், கொரோனா நிவாரண தொகை, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பால் விலை குறைப்பு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும் பொதுமக்களுக்கு கட்டணம் உள்பட 5 முக்கிய அரசாணைகளை பிறப்பித்துள்ளார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன், இன்று (07.05.2021) காலை தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். முதல்வராக பொறுப்பேற்றவுடன் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார். அவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையிலும் அமைந்திருக்கின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு:

கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் முதல்வர் ஸ்டாலின் கையொப்பமிட்டார்.

தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.5.2021 முதல் குறைத்து விற்பனை செய்ய முதல்வர் அரசாணை பிறப்பித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.

முதல்வர் தேர்தல் பரப்புரையின் போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், “உங்கள் தொகுதியில் முதல்வர்” என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.


CMSTALIN, ChiefMinisterMKStalin. முகஸ்டாலின் எனும்நான் ,முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், TNGovt
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

`முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பின்னர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அமைச்சராக பதவியேற்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அதைத்தொடர்ந்து முதல்வராக மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன் பதவி ஏற்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா இன்று எளிமையான முறையில் நடைபெற்றது. பதவிஏற்பு விழா அரங்கத்திற்கு வந்த ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து பதவி ஏற்க உள்ள அமைச்சர்களை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு பதவி பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்து வைத்தார். அப்போது, `முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, மு.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

இதையடுத்து, துரைமுருகன் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பதவி ஏற்றுகொண்டார். பின்னர் கே.என். நேரு., ஐ.பெரிய சாமி, பொன்முடி, எ.வ.வேலு. தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் உள்பட 33 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அவருடன் மநீம கட்சிகளின் நிர்வாகிகளில் ஒருவரான பொன்ராஜும் பங்கேற்றுள்ளார். அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்றள்ளார். மேலும் அவருடன் தனபால், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் அதிமுக சார்பிலும், பாஜக சார்பில் மூத்த தலைவர் இல.கணேசனும் பங்கேற்றுள்ளனர்.


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ப.சிதம்பரம், முத்தரசன், காதர் மொய்தீன், வேல்முருகன், ஈஸ்வரன், அழகிரியின் மகன் துரைதயாநிதி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.


வைகோ, முகஸ்டாலின், தமிழக முதல்வர் ஸ்டாலின், மதிமுக, திமுக, Vaiko, Mkstalin, Tamil Nadu Chief Minister Stalin, MDMK, DMK
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

தமிழகத்தில் பொற்கால ஆட்சி தொடங்கிவிட்டது என்று கூறியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "அனைவருடைய எதிர் பார்ப்புகளையும் விஞ்சி, ஆட்சி புரிந்து புகழ் பெறுவார்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று காலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்ற பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கின்ற ஐந்து அறிவிப்புகளும், மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருக்கின்றது. பொற்கால ஆட்சி தொடங்கி விட்டது என்ற நம்பிக்கையை விதைத்து இருக்கின்றது.

கொரோனா பாதிப்புகளை ஈடுகட்ட உதவியாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.4000 தருவதாக உறுதிமொழி கூறியபடி, முதல் தவணையாக, இந்த மாதமே ரூ 2000 வழங்குவதாக அறிவித்து இருக்கின்றார். ஆவின் பால் விலை, லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து இருப்பது, குழந்தைகளில் வயிற்றில் பால் வார்த்து இருக்கின்றது.

நாளை முதல், அனைத்து மகளிரும், சாதாரண கட்டணப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்; தனியார் மருத்துவமனைகளில் கொரோனா மருத்துவம் பெறுவோருக்கு ஆகின்ற செலவுகளை, முதல் அமைச்சரின் காப்பு ஈட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக அரசே செலுத்தும்; மக்கள் தெரிவிக்கின்ற குறைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுத்துச் சீர் செய்திட, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டம் தொடங்கப்படுகின்றது; அதற்குப் பொறுப்பாளராக ஒரு ஐஏஎஸ் அதிகாரி செயல்படுவார் என்ற ஐந்து அறிவிப்புகளின் மூலம், எடுத்த எடுப்பிலேயே நடுநிலையாளர்களின் மனதைக் கவர்ந்து கொண்டார். எதிரிகள் வட்டாரம் திடுக்கிட்டுப் போயிருக்கின்றது.

தமிழ்நாட்டில் ஐந்து என்பதற்கு ஒரு சிறப்பு உண்டு. நிலம், நீர், காற்று நெருப்பு, வெளி இவற்றையே இயற்கையின் அமைப்பாக வகுத்து இருக்கின்றனர். தமிழ் இலக்கியங்களில், ஐம்பெருங் காப்பியங்கள் தனிச்சிறப்பு பெற்றவை. அறிஞர் அண்ணா மறைந்தபிறகு, திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில், தி.மு.கழகத்தின் அடிப்படைக் கொள்கைகள் என, ஐந்து முழக்கங்களைக் கலைஞர் எழுப்பினார். அந்த வரிசையில், இன்றைய ஐந்து அறிவிப்புகளும் இடம் பெறுகின்றன. இனி ஐந்து ஆண்டுகளும் பொற்கால ஆட்சியாக இருக்கும் என்பதற்கு அடையாளம் இது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவருடைய எதிர் பார்ப்புகளையும் விஞ்சி, ஆட்சி புரிந்து புகழ் பெறுவார்" என்று கூறியுள்ளார்.


தமிழ்நாடு, கொரோனா, முதல்வர் ஸ்டாலின், காய்கறி கடைகள், மளிகை கடைகள், Tamil Nadu, Corona, Chief Minister Stalin, vegetable shops, grocery stores
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

தமிழகத்தில் மே 10ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நாட்களில் காய்கறி கடைகள், மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 2021 முதல் தொடர்ந்து கோவிட் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. அண்மைக் காலங்களில் இந்திய அளவில் நாளொன்றுக்கு நான்கு லட்சத்தைத் தாண்டியும் பதிவாகி உள்ளது. குறிப்பாக, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா, உத்தரப்பிரதேசம், டெல்லி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் நோய்த்தொற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் படிப்படியாக இந்த நோய்த்தொற்று, பிப்ரவரி மாதக் கடைசியில் நாளொன்றுக்கு 450 என்ற நிலை மாறி தற்பொழுது நாளொன்றுக்கு 26,000 க்கும் மேல் பதிவாகி வருகிறது. 23-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்த்தொற்று உறுதியாகும் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10 விழுக்காட்டிற்கும் மேல் உள்ளது. தமிழ்நாட்டில் 07.05.2021-ம் நாள் கணக்கீடுபடி, தற்போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.35 லட்சமாக உள்ளது. தற்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளிமாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை, மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களது பரிந்துரையின் அடிப்படையிலும், மத்திய அரசின் உள் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படியும், கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ், தற்போது 01.05.2021 முதல் தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட சில செயல்பாடுகளுக்கான தடை மற்றும் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்படுகிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, 06.05.2021 காலை 4 மணி முதல் 20.05.2021 காலை 4 மணி முடிய பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. நான் நேற்று (07.05.2021) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் நடத்திய ஆய்வுக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்தும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள் துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், 10.05.2021 காலை 4 மணி முதல் 24.05.2021 காலை 4 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கின் போது, பின்வரும் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

* மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை
தொடரும்.

* வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் இரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணியர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை (e-Registration) தொடர்ந்து செயல்படுத்தப்படும். (https://eregister.tnega.org).
இரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணிகள் சென்று வர, பயணச் சீட்டுடன் அனுமதிக்கப்படும்.

* 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள் (Big format Shops), வணிக வளாகங்கள் (Shopping Complex & Malls) இயங்க 26.04.2021 முதல் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

Dunzo போன்ற மின் வணிக நிறுவனங்கள் ((e-commerce) மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

* முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது.

* அனைத்து உணவகங்களிலும் (Restaurants/Hotels/ Mess) பார்சல் சேவை (Take away service) வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர்கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் (Hotels and Lodges) தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

* தங்கும் விடுதிகள் (Hotels and Lodges) செயல்பட அனுமதி இல்லை. எனினும், வணிக காரணங்களுக்காக தங்கும் வாடிக்கையாளர்களுக்காகவும், மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

* உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

* ஏற்கெனவே அறிவித்தபடி, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.

* மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் (Beauty Parlour, Haircutting Saloons, Spas) இயங்க தடை விதிக்கப்படுகிறது.

* அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள், பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.

* கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் செயல்பட தடை தொடர்கிறது. அதே போன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடையும் தொடர்கிறது.

* அத்தியாவசிய துறைகளான, தலைமைச் செயலகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, காவல்துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிருவாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறைகள், வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலகங்கள் தவிர, மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. துறைத் தலைவர்கள் பணியாளர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்.

* அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. விதி விலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. வீட்டில் இருந்தபடி பணியாற்றும் முறையை அவை பின்பற்றலாம்.

* அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள் / பிரார்த்தனைகள் / சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை. குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை.

* நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.

* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

* பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

* பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், கோடைக்கால முகாம்கள் ஆகியவை இயங்க அனுமதி இல்லை.

* நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சி சங்கம் / குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை.

* மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்படுவர்.

* முழு ஊரடங்கின் போது உணவு விநியோகம், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்கள் தவிர மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு அனுமதி இல்லை.

மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் போது கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

*  அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவுத் தபால் சேவை, மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், ஆக்சிஜன் வாயு எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும். வேளாண் உற்பத்திக்கு தேவையான பூச்சிக்கொல்லி, உரம், விதை விற்பனை செய்யும் கடைகள், மாட்டுத்தீவனம் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

* முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. Swiggy, Zomato போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

* அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.

* காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும்.

* நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.

* தன்னார்வலர்கள் வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள்,
நோயுற்றவர்களுக்கான சேவை வழங்குபவர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை / ஆவணங்களுடன் சென்று வர அனுமதிக்கப்படுகிறது.

* நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள்.

* நடைபெற்றுவரும் கட்டடப் பணிகள் அனுமதிக்கப்படும்.

* ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.

* அரசு ஆணை எண்.348, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 20.4.2021-ல் பட்டியலிடப்பட்டுள்ள, தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் / அலுவலர்கள் இந்நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் பேருந்துகளிலோ அல்லது சொந்த வாகனங்களிலோ இந்நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டையுடன் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

* திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 20 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை.

* தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்.

* தரவு மையங்களில் பராமரிப்பு பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* கிடங்குகளில், சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* முழு ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்களில், தீ, இயந்திரம் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* முழு ஊரடங்கின் போது, இரயில் நிலையங்களிலும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்.

* பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

* வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும். இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அக்கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

முழு ஊரடங்கு 10.05.2021 முதல் அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு, பொது மக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக 08.05.2021 (சனிக்கிழமை) மற்றும் 09.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களிலும் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் வழக்கம் போல காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் கூட்டங்களை தவிர்ப்பது உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


அன்புமணி, முகஸ்டாலின், தமிழக அரசு, திமுக, பாமக, மின்சார கட்டணம், பொதுமக்கள், கொரோனா, கொரோனா டாக்டவுன், Anbumani, Mkstalin, Tamil Nadu Government , DMK, PMK, Electricity Fee, Public, Corona, Corona Lockdown  ,tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,முதன்மை செய்தி

``தமிழக அரசு அளித்துள்ள ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனாவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள இது தான் சிறந்த வழி'' என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. இது பயனுள்ள நடவடிக்கை!

தமிழக அரசு அளித்துள்ள ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனாவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள இது தான் சிறந்த வழி. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்!

முழு ஊரடங்கு காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு நடப்பு சுழற்சிக்கான இரு மாத மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இது கடந்த காலத்தில் திமுகவும் வலியுறுத்திய கோரிக்கை தான்.

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழக்கும் முடி திருத்துவோர், வாடகை வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத் தொழில் பிரிவினருக்கும் சிறப்பு நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று கூறியுள்ளார்.


கொரோனா, கொரோனா நிவாரணம், பொதுமக்கள், முதல்வர் ஸ்டாலின், Corona, Corona relief, public, Chief Minister Stalin
தமிழ்நாடு,முதன்மை செய்தி

வரும் 10ம் தேதி முதல் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்றுகொண்டதும் தலைமைச் செயலகம் சென்ற ஸ்டாலின், பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண உதவி ரூ.4,000, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்பட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல் தவணையாக மே மாதம் ரூ.2000 வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனிடையே, வரும் 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு அமலாகும் 10ஆம் தேதி முதல் கொரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "வரும் 10ம் தேதி முதல் கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ரூ.4 ஆயிரம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்,

ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்படும். ரேஷன் கடைகள் ஊரடங்கு காலத்தில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும். இந்த திட்டத்தால் 2.07 கோடி அரிசி அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் 4,153 கோடி செலவிடப்படும். பயனாளிக்கு ரூ.2000 முறையாக போய் சேருகிறதா என்பது கண்காணிக்கும் பொறுப்பு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் முதல் ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனில் குடும்பத் தலைவரின் பெயர், நியாய விலைக் கடையின் பெயர், தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். இப்போதைக்கு அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்" என்று கூறினார்.


முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ், கொரோனா, தமிழ்நாடு லாக்டவுன், அதிமுக, திமுக, Chief Minister Stalin, OPS, Corona, Tamil Nadu Lockdown, AIADMK, DMK
தமிழ்நாடு,முதன்மை செய்தி

எளியோரின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கபட்டிருப்பதையும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையும் வரவேற்கிறேன் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இச்சூழலில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது நோய் தோற்று பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்திட பேருதவியாக இருக்கும். எளியோரின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கபட்டிருப்பதையும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையும் வரவேற்கிறேன்.

மே 10ம் தேதி முதல் தான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதாலும் இன்றும் , நாளையும் கடைகள் திறந்திருக்கும் என்பதாலும், பொதுமக்கள் அவசரம் கொள்ளாமல் கூட்டம் கூடுதலை தவிர்த்து பொறுமையாக சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம். அரசு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல ஏதுவாக வாடகை கார் மற்றும் ஆட்டோக்கள் 24 மணி நேரம் இயங்குவதே அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேலும் மினி கிளினிக்குகளில் எண்ணிக்கையும் அதில் தற்காலிக மருத்துவர்கள் நியமனத்தையும் அதிகரித்து 24 மணிநேரமும் இயங்க செய்தால் பெரிய அரசு மருத்துவமனைகளில் கூட்டம் குறையும் . நோயாளிகளின் சிரமமும் களையப்படும். கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து கோவிட் 19 தொற்றுக்கு சிகிச்சை அளித்து வருகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் அது சேவையை கௌரவிக்கும் வண்ணம் அரசு ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகை வழங்கி அவர்கள் பணியை ஊக்குவிக்க வேண்டும்.

மருத்துவமனைகளில், தடுப்பூசிகள், மருந்துகள் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்வதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். நோய்த் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து அரசு கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என பொது மக்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.


தமிழக சட்டப்பேரவை, சபாநாயகர், துணை சபாநாயகர், ஸ்டாலின், எம்எல்ஏக்கள், TamilNadu Assembly, Speaker, Deputy Speaker, Stalin, MLAs, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,முதன்மை செய்தி

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் 11 ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கின் 3-வது தளத்தில் நடைபெறுகிறது.

அன்றைய தினம் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய பேரவை உறுப்பினர்கள் பேரவையில் பதவியேற்றுக் கொள்கின்றனர். தேர்தல் வெற்றி சான்றிதழை தவறாமல் உறுப்பினர்கள் கொண்டுவர வேண்டும். சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் 12 ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் 11 ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் 11 ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கின் 3-வது தளத்தில் நடைபெறுகிறது.


தமிழ்நாடு, ஊரடங்கு, கொரோனா, முதல்வர் ஸ்டாலின், Tamil Nadu, Curfew, Corona, CM Stalin, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,முதன்மை செய்தி

தமிழகத்தில் இரண்டு வார முழு ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில் காய்கறி-மளிகை கடைகள், இறைச்சி கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் 24ம் தேதி வரையிலான 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று காலை 4 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. முழு ஊரடங்கின்போது கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் விவரம் வருமாறு:

* பெரிய கடைகள், வணிக வளாகங்கள், அதில் இயங்கும் கடைகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி-மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதியின்றி பகல் 12 மணி வரை இயங்கலாம். ஒரே சமயத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

* அதேபோல உணவுகளை டெலிவரி செய்யும் ஆன்-லைன் வணிக நிறுவன ஊழியர்களும் பகல் 12 மணி வரை மட்டுமே பணியாற்றலாம். மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

* முழு ஊரடங்கு காலத்தில் ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்கப்படாது.

* ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி உண்டு. டீக்கடைகளும் பகல் 12 மணி வரை மட்டும் செயல்படலாம். ஓட்டல்கள்-டீக்கடைகளில் உட்கார்ந்து சாப்பிட அனுமதியில்லை. ஓட்டல்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

* தலைமைச் செயலகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, காவல் துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறைகள், வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலகங்கள் தவிர, மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது.

* அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. விதி விலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

* மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான அரசு-தனியார் பஸ் போக்குவரத்து மற்றும் வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. எனவே பஸ் ஓடாது.

* அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும். ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும்.

* நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள், நடைபெற்றுவரும் கட்டிடப்பணிகள் அனுமதிக்கப்படும். ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம். திருமணத்தில் 50 பேர் பங்கேற்கலாம்.

* பெட்ரோல் - டீசல் பங்க்குகள் இயங்கும்

மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றாதோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு ஊரடங்கில் மருத்துவம், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பத்திரிகை விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறலாம் என்று தமிழக அரசின் உத்தரவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதேபோல பத்திரிகை மற்றும் ஊடக துறையினர் வழக்கம்போல பணிக்கு சென்றுவர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

காவல்துறையினர் வாகன சோதனையின்போது அடையாள அட்டையை காண்பித்து பத்திரிகையாளர்கள் தங்கு தடையின்றி செல்லலாம் என்று தமிழக அரசு உத்தரவில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் மட்டும் 10 ஆயிரம் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 200 சோதனை வாசடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


தமிழ்நாடு, ஊரடங்கு, கொரோனா, டாஸ்மாக், மதுபானம் விற்பனை, Tamil Nadu, Curfew, Corona, Tasmac, Liquor Sale
தமிழ்நாடு,முதன்மை செய்தி

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.428.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் 24தேதி வரையிலான 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி இல்லை. முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்பதால் முன்கூட்டியே தேவையான மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள மதுபிரியர்கள் விரும்பினர். இதனால் டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் மதுபிரியர்கள் ஆர்வத்துடன் குவிந்தனர்.

டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை செயல்பட்டது. இந்த கடைகளில் மதுபிரியர்கள் ஆர்வத்துடன் குவிந்து தேவையான மதுபாட்டில்களை அள்ளி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை களைகட்டியது. தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 426.24 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில், சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக 100.43 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. திருச்சி மண்டலத்தில் 82.59 கோடி ரூபாய், மதுரையில் 87.20 கோடி ரூபாய், சேலத்தில் 79.82 கோடி ரூபாய், கோவையில் 76.12 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சனிக்கிழமை ரூ.426.24 கோடி மது விற்கப்பட்ட நிலையில் ஞாயிறன்று ரூ.428.69 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

சென்னை மண்டலத்தில் ரூ.98.96 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் 97.62 கோடிக்கும். திருச்சி மண்டலத்தில் ரூ.87.65 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 76.57 கோடிக்கும், கோவை மண்டலத்தில் 67.89 கோடிக்கும் மதுபானம் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது.


பேரறிவாளன், நளினி, முதல்வர் ஸ்டாலின், வைகோ, Perarivalan, Nalini, CM Stalin, Vaiko
அரசியல்,முதன்மை செய்தி

"தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏழு பேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பித்து கோடானு கோடி தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்கும் செய்தியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழு பேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாகவே மனதளவில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர். அதுபோலவே நளினி, ரவிச்சந்தின், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய்ப்போனது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், எழுவரையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்னரும், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்தும், ஆளுநர் அந்தக் கோரிக்கையை குப்பைத் தொட்டியில் போடுவது போல் போட்டுவிட்டார்.

இந்தப் பிரச்னை குறித்து மத்திய அரசிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் மத்திய அரசிடம் கருத்துக் கேட்டதாகவும், மத்திய அரசு அதற்கு தடை போடுவதாகவும் மோசடி நாடகத்தை இதுவரை நடத்தி வந்தனர். ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கெனவே திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது. எனவே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஏழு பேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பித்து கோடானு கோடி தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்கும் செய்தியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


தமிழ்நாடு,முதன்மை செய்தி

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று 2-ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், சினிமா பிபரலங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை கூடுகிறது. இதனையடுத்து அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.

இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் தனது ட்விட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று உள்ளது. எனவே நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்புடையவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு ஆளான அமைச்சர் சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார்.


இந்த நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனக்கு கொரோனா தொற்று உள்ளது. எனவே நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்புடையவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.


தமிழக சட்டப்பேரவை, எடப்பாடி பழனிசாமி, அதிமுக, ஓபிஎஸ், ஈபிஎஸ், தமிழக எதிர்க்கட்சித் தலைவர், TamilNadu Assembly, Edappadi Palanisamy, AIADMK, OPS, EPS, Tamil Nadu Opposition Leader, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
அரசியல்,முதன்மை செய்தி

தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். 3 மணி நேரம் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நடந்த கடும் வாக்குவாதத்துக்கு மத்தியில் ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்துள்ளது. 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது. இந்த நிலையில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவரை ( எதிர்க்கட்சி தலைவரை) தேர்ந்தெடுப்பதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதில் காரசார விவாதம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே நேரடி கருத்து மோதலும் ஏற்பட்டது. கட்சி அலுவலகத்துக்கு வெளியே இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதமும் நடைபெற்றது. எனவே அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதை முடிவு செய்ய முடியாமல் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்தது.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 10ம் தேதி (இன்று) மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு கட்டுப்பாட்டின்படி அரசு கூட்டங்கள் தவிர்த்து பிற கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது. எனினும் புதிய சட்டமன்றம் நாளை கூட இருப்பதால், எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை திட்டமிட்டபடி இன்று நடத்துவதற்கு அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான நா.பாலகங்கா நேற்று மனு அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், “கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடித்து தொண்டர்கள் கூட்டம் இன்றி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்படும் என்று கூறி, கூட்டத்துக்கு அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

போலீசார் தரப்பிலும் அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை அலுவகலத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. எனவே திட்டமிட்டபடி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கியது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொள்ளும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவரது தொண்டர்கள் உற்சாக கோஷமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


கங்கை அமரன்  வெங்கட்பிரபு, பிரேம்ஜி, தாய் மணிமேகலை, Gangai Amaran Venkatprabhu, Premji, Thai Manimegalai,tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
சினிமா,முதன்மை செய்தி

இயக்குநர், இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியும், வெங்கட்பிரபு, பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 69.

கங்கை அமரன் இளையராஜாவின் இளைய சகோதரர். ஒன்றாக சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தவர்கள். இளையராஜாவின் நிழலில் இருந்த கங்கை அமரன் கரகாட்டக்காரன் உள்பட பல படங்களை இயக்கினார். வாழ்வே மாயம் உள்பட பல படங்களுக்கு தனியாக இசையமைத்தார். நல்ல பாடகர், பாடலாசிரியர். அவரது மனைவி மணிமேகலை.

உடல்நலக்குறைவால் மணிமேகலை சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவு நண்பர்கள், உறவினர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

தாயாரின் மறைவால் வாடும் இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் பிரேம்ஜி அமரன் இருவரும் திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.


மன்சூர் அலிகான், கிட்னி, பில்ரோத் மருத்துவமனை, Mansour Alligan, Kidney, Billroth Hospital,tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
சினிமா,முதன்மை செய்தி

நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மரு‌த்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்டார். தொண்டாமுத்தூர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான் சொற்ப வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். மன்சூர் அலிகானுக்கு தொண்டாமூத்தூரில் வாடைக்கு கூட வீடு கொடுக்க மக்கள் முன்வரவில்லை என்று அவரே வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிட்னியில் பெரிய சைஸ் கல் அடை‌ப்பு ஏற்பட்டு மிகுந்த அவதிப்பட்டுள்ளார். இதனால் உடனடியாக ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் மன்சூர் அலிகானுக்கு கொரோனா டெஸ்ட் உட்பட அனைத்து பரிசோதனைகளும் நடைபெற்று, அறுவை சி‌கி‌ச்சைக்கு தயாராகி வருகிறார்.

நடிகர் விவேக் உயிரிழந்த சமயத்தில் கொரோனா தடுப்பூசி குறித்து அவர் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இதனால் தடுப்பூசி குறித்து அவதூறாக பேசியதாக மன்சூர் அலிகான் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்தது. பின்னர் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதத்துடன் முன்ஜாமீன் வழங்கியது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.


தமிழ்நாடு, ஐபிஎஸ் அதிகாரிகள், தமிழக அரசு, Tamil Nadu, IPS Officers, Tamil Nadu Government
தமிழ்நாடு,முதன்மை செய்தி

தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர், உளவுத்துறை ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பி.கந்தசாமி. உளவுத்துறை டிஜிபியாக ஆசியம்மாள் ஆகியோர் நியமனம் செய்துள்ளனர்.


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், காவலர் பயிற்சித்துறையில் இருந்த ஷகீல் அக்தர் சிபிசிஐடி தலைவராகவும், லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக கந்தசாமி,

சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபியாக இருந்த ரவி, சென்னை காவல்துறை நிர்வாக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உளவுத்துறை ஐஜியாக இருந்த ஈஸ்வரமூர்த்தி சென்னையின் உளவுத்துறை (உள்நாட்டு பாதுகாப்பு) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

உளவுத் துறையின் டிஐஜியாக ஆசியம்மாள், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அரவிந்தன் சிறப்புப் பிரிவு சிஐடி எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சிறப்பு நிர்வாக டிஜிபியாக இருந்த கந்தசாமி, ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மயிலாப்பூர் துணை கமிஷனராக பணியாற்றி வந்த திருநாவுக்கரசு, பாதுகாப்புப் பிரிவு சிஐடி-1 எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புப் பிரிவு சிஐடி-2 எஸ்.பி.யாக சாமிநாதன், உளவுத்துறை குற்றப்பிரிவின் எஸ்.பி.யாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கேபிமுனுசாமி, வைத்திலிங்கம், அதிமுக எம்பி, அதிமுக எம்எல்ஏ, KP Munuswamy, Vaithilingam, AIADMK MP, AIADMK MLA
அரசியல்,முதன்மை செய்தி

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்தனர்.

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியும், தி.மு.க சார்பில் முருகனும் போட்டியிட்டனர். கடந்த 2ம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமி வெற்றி பெற்றார்.

இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கமும் போட்யிட்டு வெற்றி பெற்றார். இவர்கள் இருவரும் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்கள். எம்.பி மற்றும் எம்.எல்.ஏ என இரண்டு பதவிகளை இருவரும் இருந்தனர். இதில் எந்தப் பதவியை ராஜினாமா செய்வது என்பது தான் பெரும் சிக்கலாக வந்து நின்றது. ஒருவேளை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தால் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும். இதேபோல் எம்.பி பதவியை ராஜினாமா செய்தாலும் 2 மாநிலங்களவை எம்.பி.யை அதிமுக தேர்ந்தெடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில், நாளை வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்க இருக்கும் நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக-வின் முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் இருவரும் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதால் இருவரும் எம்.பி.பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.


ஆந்திரா, திருப்பதி, ஆக்சிஜன், கொரோனா நோயாளிகள், ஜெகன் மோகன் ரெட்டி, Andhra, Tirupati, Oxygen, Corona Patients, Jagan Mohan Reddy
இந்தியா,முதன்மை செய்தி

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 30-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் குறைந்துள்ளது. இதனால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதை அறிந்த கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் உள்ளே சென்று கைகளில் கிடைத்த காகித அட்டை போன்றவற்றை பயன்படுத்தி விசிறி விட்டனர்.

இதற்கிடையில், ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்றப்பட்ட லாரி தாமதமாக மருத்துவமனை வந்து சேர்ந்தது. அதற்குள் 11 நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். மேலும், ஆக்சிஜன் இன்றி அவதிப்பட்ட 15-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 30-ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆக்சிஜன் விநியோகம் தடைப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்துவதற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார்.


மதுரை ஆவின், ஊழல், ஆவின் மேலாளர், சஸ்பெண்ட், தமிழக அரசு, Madurai Aavin, Corruption, Aavin Manager, Suspended, Tamil Nadu Government
தமிழ்நாடு,முதன்மை செய்தி

மதுரை ஆவின் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக மேலாளர் உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழல்வாதிகளுக்கு எதிராக தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மதுரை ஆவின் நிறுவனத்தில் தினமும் பால் கொள்முதல் செய்யப்பட்டு பாக்கெட்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வருவது போக தயிர், வெண்ணை, நெய் உள்ளிட்ட பல்வேறு உபபொருட்கள் தயாரிக்கப்படுகிறது. ஆவின் நிறுவனத்தின் உபபொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால், உற்பத்தி அதிகரிக்கப்பட்டு அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இதனிடையே மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்து வருவதாக, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. பால் உபபொருட்கள் விற்பனையில் கிட்டதட்ட 13.71 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

இது குறித்த புகார்கள் ஆவின் நிர்வாக இயக்குநர் நந்தகோபாலிடம் அளிக்கப்பட்டுள்ளன. இந்த புகார்களின் அடிப்படையில் சென்னை ஆவின் துணை பதிவாளட் அலெக்ஸ் தலைமையிலான அலுவலர்கள் குழு, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மதுரை ஆவின் நிறுவனத்தில் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து முதற்கட்ட விசாரணையின் முடிவில், உதவி மேலாளராக பணிபுரிந்த கிருஷ்ணன், சேகர், மேலாளர் மணிகண்டன் உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஊழல்வாதிகளுக்கு எதிராக தமிழக அரசு களையெடுத்து வரும் நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த அரசு அதிகாரிகள் தற்போது பீதியில் உள்ளனர்.


அரசு மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, தமிழக அரசு, Government Hospital, Chennai Rajiv Gandhi Government Hospital, TamilNadu Government, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,முதன்மை செய்தி

`கொரோனா பேரிடர் மற்றும் முழு ஊரடங்கை கருத்தில் கொண்டு அனைத்து அரசு மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் உள்நோயாளிகளுக்கு மூன்று வேலையும் இலவச உணவு வழங்கப்படும்' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக முதல் தவணையாக 2000 ரூபாய் ரேஷன் அட்டைகள் மூலம் வழங்கப்படுகிறது. அதற்கான டோக்கன் அளிக்கும் பணிகள் நேற்று தொடங்கின. மே 15ஆம் தேதி முதல் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளன.

இது மட்டுமல்லாமல் பல்வேறு நல வாரியங்கள் வாயிலாகவும் நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், பாதிப்பு அதிகமுள்ள சென்னையில் முக்கிய திட்டம் ஒன்றை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையில் 24 மணி நேரமும் உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு இன்று தொடங்கி வைத்தார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன் அடைவார்கள்.

அதிமுக அரசு கொண்டுவந்த திட்டம் என்றாலும் மக்கள் பசி போக்க முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் அம்மா உணவகங்கள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. கும்பகோணம் தொகுதி திமுக எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் கொரோனா பொது முடக்கத்தில் அம்மா உணவகத்தில் மக்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்குவதற்காக நகராட்சி நிர்வாகத்திடம் நிதி அளித்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவை, தமிழக சபாநாயகர், அப்பாவு, பிச்சாண்டி, திமுக, முதல்வர் ஸ்டாலின், Tamil Nadu Assembly, Tamil Nadu Speaker, Appavu, Pitchandi, DMK, Chief Minister Stalin
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு எம்எல்ஏவும், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி எம்எல்ஏவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று காலை தொடங்கியது. முன்னதாக சட்டப்பேரவை தலைவர் பதவிக்கு ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. அப்பாவு வேட்புமனு தாக்கல் செய்தார், துணைத்தலைவர் பதவிக்கு திமுக எம்.எல்.ஏ. கு. பிச்சாண்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து முதல் ஆளாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏவாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான" எனக் கூறி எம்.எல்.ஏ பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதன்பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "கடவுள் அறிய" எனக் கூறி பதவியேற்றுக் கொண்டார். இதேபோல, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற கட்சி தலைவர்கள் பதவியேற்று கொண்டனர். இதைத் தொடர்ந்து அகர வரிசைப்படி, மற்ற உறுப்பினர்களும் வரிசையாக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் பின்னர் தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் திமுக எம்எல்ஏ அப்பாவு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 12 மணியுடன் முடிவடைந்த நிலையில் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால் அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் துணை சபாநாயகராக வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ கு.பிச்சாண்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் நாளை முறைப்படி பதவியேற்கவுள்ளனர்.


புதுச்சேரி, பாஜக, என்ஆர்காங்கிரஸ், ரங்கசாமி, திருமாவளவன், திமுக, Puducherry, BJP, NRCongress, Rangasamy, Thirumavalavan, DMK, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

"சட்டத்துக்கு விரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்ற முயலும் பாஜக-வின் சதியை முறியடிக்க திமுக உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரியில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சதி நடவடிக்கையில் பாஜக இறங்கியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் முன்பாகவே நியமன எம்.எல்.ஏக்களை நியமித்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சட்டத்துக்கு விரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்ற முயலும் பாஜக-வின் சதியை முறியடிக்க திமுக உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலைக்கு வாங்கப்பட்ட நபர்களைத் தேர்தலில் நிறுத்தி 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது என்.ரங்கசாமி முதல்வராகப் பரவியேற்றிருக்கிறார்.

ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ யாரும் இன்னும் பதவியேற்கவில்லை. இதனிடையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி தானே ஆட்சி அமைக்கும் சதி முயற்சியில் பாஜக இறங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதன் ஒரு அங்கமாக பாஜகவை சேர்ந்த மூவர் அவசரம் அவசரமாக நியமன உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் பாஜகவின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. முதல்வர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கூட்டணி கட்சியென்றும் பாராமல், என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களையே விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள என்.ரங்கசாமி கொரோனா தொற்றின் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது. மக்களுடைய தீர்ப்புக்கு எதிராக அங்கே ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜகவின் சதித் திட்டத்தை முறியடிக்க புதுச்சேரியில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

புதுவையில் 6 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உடனடியாக இதில் தலையிட வேண்டும். புதுச்சேரியில் பாஜக தலைமையிலான மதவாத ஆட்சி அமையாமல் தடுக்கத் தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இத்துடன், நட்புக்குத் துரோகமிழைக்கும் பாஜகவை தோளில் சுமக்கும் என்.ஆர் காங்கிரஸ், இந்த நிலையிலாவது விழித்துக் கொள்ளவேண்டுமென்றும்; தமக்கு எதிராக நேரவிருக்கும் வரலாற்றுப் பழியைத் தவிர்த்துக்கொள்ள, தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமென்றும் சுட்டிக் காட்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு, தமிழ்நாடு தலைமைச் செயலாளர், இறையன்பு, இறையன்பு நூல், Tamil Nadu, Tamil Nadu Chief Secretary, Iraianbu, Divine Book
தமிழ்நாடு,முதன்மை செய்தி

"என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம் என்று அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன்" என தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் பணி நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களைத் தொடுத்தும் சில நூல்களை எழுதி வந்தேன். அவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை. இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக, பள்ளிக் கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன். நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்கிற உத்தரவே அது.

பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றி களங்கம் விளைவிக்கும் என்பதால்தான் இத்தகைய கடிதத்தை எழுதியிருக்கிறேன். எந்த வகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதே நோக்கம். அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்று என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை அது. அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி, என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம் என்று அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன்.

இவ்வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு அரசுக் கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


விஜய் படம், கில்கி படம், துணை நடிகர் மாறன், கொரோனா, Vijay Movie, Killi Movie, Supporting Actor Maran, Corona
சினிமா,முதன்மை செய்தி

விஜய் நடித்துள்ள கில்லி படத்தில் நடித்திருந்த துணை நடிகர் மாறன், கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வசித்து வந்தவர் திரைப்பட துணை நடிகர் மாறன் . இவருக்கு கடந்த சில நாடகளுக்கு முன் கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டது. இதையடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஏற்பட்ட நடிகர் மாறன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

2004ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான `கில்லி' திரைப்படத்தில் நடித்தவர் துணை நடிகர் மாறன். ஆதிவாசி என்ற கேரக்டரில் அந்த படத்தில் நடித்த டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் . வில்லன் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், கானா பாடல்களையும் மேடை கச்சேரிகளில் பாடி வந்துள்ளார். கொரோனா தொற்றால் திரையுலகினர் அடுத்தடுத்து மரணம் அடைவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சீனா, மக்கள் தொகை, மக்கள் தொகை கணக்கெப்பு, China, Population, Census, tamil news, international news, world news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
உலகம்,முதன்மை செய்தி

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கடந்த ஆண்டு சீனாவின் மக்கள் தொகை 1.412 பில்லியனாக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் சீனா நம்பர் ஒன்றாக இருந்து வருகிறது.

ஆனால் இந்த கணக்கெடுப்புக்கு 10 ஆண்டுகள் முன்னால் எடுத்த கணக்கெடுப்பிலிருந்து மக்கள் தொகையில் 5.38% தான் அதிகரித்துள்ளது. இது மிகவும் குறைந்த அளவு மக்கள் தொகை பெருக்கம் என்று சீனா தரப்பில் கூறப்படுகிறது.

10 ஆண்டுகளாக ஆண்டுவாரி சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.53% தான் இது 1950-ம் ஆண்டுகளின் சராசரியை விட குறைவு என்கின்றன புள்ளி விவரங்கள்.

சீனாவின் மக்கள் தொகை 2019ல், 140 கோடியாக இருந்தது. இது 2020ல், 0.53 சதவீதம் உயர்ந்து, 141.12 கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், 60 வயதிற்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 18.7 சதவீதம் அதிகரித்து, 26.40 கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் 15 - 59 வயதுள்ளோர் எண்ணிக்கை 6.79 சதவீதம் சரிவடைந்து, 89.40 கோடியாக குறைந்துள்ளது.

சீனாவில் பிறப்பு விகிதமும், 22 சதவீதம் சரிவடைந்து, 1.46 கோடியில் இருந்து, 1.20 கோடியாக குறைந்துள்ளது. அதுபோல 100 பெண்களுக்கு, 105.20 ஆண்கள் என்ற விகிதம், 105.07 ஆக சரிவடைந்துள்ளது.

கடந்த 1985ல் அறிமுகப்படுத்தப்பட்ட, 'நாம் இருவர், நமக்கு ஒருவர்' திட்டம் காரணமாக சீனாவில் மக்கள் தொகை குறைந்தது. இதனால் கவலை அடைந்த அரசு 2016ல், அத்திட்டத்தை ரத்து செய்து, 'நாம் இருவர், நமக்கு இருவர்' திட்டத்தை அமல்படுத்தியது. எனினும், சீன அரசின் பல்வேறு கெடுபிடிகள் காரணமாக, இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதில் மக்களுக்கு ஆர்வம் குறைவாகவே உள்ளது.

சீனாவில் 2025ம் ஆண்டுக்கு பின், மக்கள் தொகை வளர்ச்சி இருக்காது எனக் கூறப்படுகிறது. 2050ல், அமெரிக்காவை விட முதியோர் பராமரிப்பு அதிகமாகவும், வேலை செய்யும் ஆற்றல் உள்ள இளைஞர்களின் பங்கு குறைவாகவும் இருக்கும் என ஆய்வொன்று தெரிவிக்கிறது. இதையொட்டி சீன அரசு, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய கொள்கைகளை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது.


கொரோனா, டாக்டர்கள் மரணம், தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், செவிலியர்கள், Corona, Doctors Death, Tamil Nadu Government, CMStalin, Nurses
தமிழ்நாடு,முதன்மை செய்தி

கொரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இரண்டாம் அலையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்" என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்றும் அரும்பணியில், கடந்த ஓராண்டாக மருத்துவர்களும், செவிலியர்களும் இதரப் பணியாளர்களும் அயராது அரும்பணியாற்றி வருகின்றனர்.

இப்பணியில் தமது உயிரைத் துச்சமென மதித்து களப்பணியாற்றிய சில மருத்துவர்கள் தமது இன்னுயிரையும் தியாகம் செய்துள்ளனர். இது ஈடுசெய்யப்பட முடியாத பெரும் தியாகம் என்பதை உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்தம் குடும்பத்தாருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், கொரோனா சிகிச்சைப் பணியாற்றியபோது அத்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் ரூபாய் தொகையை இழப்பீடாக வழங்கிட முடிவு செய்துள்ளது.

மேலும், அல்லும் பகலும் நமது அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், ஆய்வுக்கூடப் பணியாளர்கள், சி.டி. ஸ்கேன் பணியாளர்கள், அவசர மருத்துவ ஊர்திப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் வகையில், கொரோனா தொற்றுக்கான சிகிச்சை மற்றும் அச்சிகிச்சை சார்ந்த பணிகளில் ஈடுபட்ட மேற்கூறிய அலுவலர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி கொரோனா தொற்றின் இரண்டாம் அலைக் காலமான, ஏப்ரல், மே, ஜூன் -மூன்று மாத காலத்திற்கு, மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இதரப் பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்” என கூறியுள்ளார்.


பாஜக, திமுக, ரங்கசாமி, துரைமுருகன், புதுச்சேரி, பாஜக எம்எல்ஏக்கள், BJP, DMK, Rangasamy, Duraimurugan, Puducherry, BJP MLAs
தமிழ்நாடு,முதன்மை செய்தி

``தங்கள் கூட்டணியின் தலைவராக இருக்கும் முதல்வரைக்கூட கலந்து பேசாமல் எம்எல்ஏக்கள் நியமனத்தை மத்திய அரசு செய்து பாஜகவின் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்தியிருப்பது எதேச்சதிகாரமானது" என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்டாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது.

சட்டப்பேரவை ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த நடவடிக்கைக்குத் திமுகவின் சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன். '30 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டதுதான் புதுச்சேரி சட்டப்பேரவை' எனத் தெளிவாக இருக்கின்ற நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இந்த நியமன எம்எல்ஏ-க்கள் மூலம் 33 ஆக உயர்த்தி, மக்கள் அளித்த தீர்ப்பை மாசுபடுத்த முனைவது வேதனைக்குரியது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுச்சேரி சட்டப்பேரவைக்கு இன்னும் சபாநாயகர் தேர்வு செய்யப்படவில்லை. புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை.

அதற்குள்ளாக தங்கள் கூட்டணியின் தலைவராக இருக்கும் முதல்வரைக் கூட கலந்து பேசாமல் இப்படியொரு நியமனத்தை மத்திய அரசு செய்து பாஜகவின் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்தியிருப்பது எதேச்சதிகாரமானது.

புதிதாக அமைந்திருக்கும் ஆட்சியின் ஸ்திரத்தன்மையை இந்த நியமன எம்எல்ஏக்களின் பலத்தை வைத்துச் சீர்குலைத்து, கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக செய்யும் முயற்சியே அது என்ற சந்தேகம் புதுச்சேரி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

எனவே, மத்திய பாஜக அரசு இந்த மூன்று நியமன எம்எல்ஏக்கள் நியமனத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், நியமன எம்எல்ஏக்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஆரம்பத்திலேயே ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியைக் கைவிட்டு, புதுச்சேரி மக்களின் நலனிலும், மாநிலத்தில் நிலவும் கொரோனா பரவலைத் தடுத்திட வேண்டிய நடவடிக்கைகளிலும் ஒன்றிய பாஜக அரசு கவனம் செலுத்திட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


கொரோனா, சென்னை மாநகராட்சி, கொரோனா மருந்து, கொரோனா நோயாளிகள், Corona, Chennai Corporation, Corona Medicine, Corona Patients, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,முதன்மை செய்தி

கொரோனா அறிகுறி இருப்பவர்கள் குப்புறப்படுத்து ஓய்வெடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கொரோனா அறிகுறி இருப்பவர்கள் குப்புறப்படுத்து ஓய்வெடுக்க வேண்டும். 2 மணி, 4 மணி நேரம் இடைவெளியுடன் அதிகபட்சம் 16 மணி நேரம் வரை குப்புறப்படுக்கலாம். கடின உடல் உழைப்பை தவிர்த்து வீட்டில் தனியறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 'டாக்டர்கள் பரிந்துரைப்படி ivermectin, Azithromycin, ranitidine மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

ivermectin மாத்திரையை (12 மி.கி. ஒரு முறை) 3 நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். 3 நாள் அஜித்ரோமைசின் மாத்திரை (500 மி.கி.), 5 நாள் வைட்டமின் சி (500 மி.கி.) உட்கொள்ளுங்கள்.

5 நாள் ஜின்க் (50 மி.கி.)5 நாள் ranitidine மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். பாரசிட்டமால் 500 மிகி மாத்திரைகளை ஒரு நாளைக்கு நான்கு முறை உட்கொள்ள வேண்டும்.

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் போதிய நீர்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இணை நோய்கள் இருந்தால் அதற்கான மாத்திரைகள் தொடர்ந்து எடுக்க வேண்டும்.

தொடர்ச்சியான காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் மருத்துவமனை செல்ல வேண்டும். கொரோனா தொடர்பான உதவிகளை பெற, 044 25619263, 25384520, 46122300 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்" என கூறப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரா, மனைவி மரணம், கொரோனா, கணவன் தற்கொலை, மகள் தற்கொலை, Maharashtra, wife death, corona, husband suicide, daughter suicide
இந்தியா,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

கொரோனா பாதிப்பால் மனைவி உயிரிழந்ததால் மன உளைச்சலில் இருந்த கணவன் தனது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

மகாராஷ்டிர் மாநிலம் மும்பையின் கண்டிவாலி பகுதியை சேர்ந்தவர் ஜிஜேந்திர பஹ்டிகர் (36). இவருக்கு மாதவி என்ற மனைவியும், 6 வயது நிரம்பிய மகளும் இருந்தனர். இந்த நிலையில், மனைவி மாதவி கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஜிஜேந்திர பஹ்டிகர் வேறு ஒரு பெண்ணை மறுதிருணம் செய்து கொண்டார். ஆனால், தனது முதல் மனைவி மாதவி உயிரிழந்ததை நினைத்து அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். அதை வெளிக்காட்டாமல் அவர் தொடர்ந்து வேலைக்கு செல்வது உள்ளிட்ட தனது வழக்கமான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில், மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஜிஜேந்திர பஹ்டிகர் குழந்தையுடன் கண்டிவாலி பகுதியில் இருந்து சற்று தொலைவில் உள்ள கௌவ்தன் பகுதியில் உள்ள தனது மற்றொரு வீட்டில் தங்க செல்வதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் சில மணி நேரங்கள் கழித்து உறவினர்களும், பக்கத்து வீட்டின் அருகில் வசித்தவர்களும் ஜிஜேந்திர பஹ்டிகரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், ஜிஜேந்திரன் தனது செல்போனை எடுக்கவே இல்லை. இதனால், சந்தேகமடைந்த உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து கௌவ்தன் பகுதியில் உள்ள ஜிஜேந்திராவின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் வீடு பூட்டப்பட்டிருப்பதை கண்டு சந்தேகமடைந்தனர். உடனடியாக, அந்த வீட்டின் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஜிஜேந்திர பஹ்டிகரும் அவரது 6 வயது குழந்தையும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இருவரின் உடலையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை ஆய்வு செய்த மருத்துவர்கள் தூக்கில் தொங்கிய இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஜிஜேந்திர பஹ்டிகர் தனது 6 வயது மகளை தூக்கில் தொங்கவிட்டுவிட்டு தானும் தூக்கில் தொங்கியுள்ளார். மனைவி மாதவி உயிரிழந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஜிஜேந்திர தனது மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார் என்பது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், மகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட ஜிஜேந்திர பஹ்டிகர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் அவரது தாயாருக்கு கடிதம் ஒன்றை எழுதிவைத்துள்ளார். அந்த கடிதத்தில், வாழ்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்தேன். ஆனால், என்னால் முடியவில்லை என்று எழுதியுள்ளார். மேலும், தனது மகளை விட்டுச்செல்ல விரும்பாததால் அவரையும் தன்னுடன் கூட்டிச்செல்வதாக எழுதி வைத்துள்ளார்.


ஸ்டெர்லைட், தூத்துக்குடி, ஆக்சிஜன், நெல்லை அரசு மருத்துவமனை, Sterlite, Thoothukudi, Oxygen, Nellai Government Hospital
தமிழ்நாடு,முதன்மை செய்தி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி துவங்கப்பட்டது. முதற்கட்டமாக 4.8 டன் ஆக்சிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. 

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சுழல் மாசவடைதாக கூறி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை காலவரையின்றி மூடப்பட்டது.


இந்தநிலையில் நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கேட்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டு ஆலை திறக்கப்பட்டது.

தற்போது இந்த ஆக்சிஜன் உற்பத்தி பணியில், 320 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை ஓட்டம் நிறைவடைந்து உற்பத்தி தொடங்கி தற்போது விநியோகப் பணிகளும் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 5,000 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜன் விநியோக பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். ஆக்சிஜன் நிரப்பிய முதல் டேங்கர் லாரி போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

இந்த ஆக்சிஜன் தமிழ்நாடு மெடிக்கல் கார்ப்பரேஷன் சென்னை மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக உற்பத்தி செய்யப்படும் ஆட்சியில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


லோன் கடன், முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, ரிசர்வ் வங்கி ஆளுநர், கொரோனா லாக்டவுன், EMI, Loan, Chief Minister Stalin, Prime Minister Modi, Reserve Bank Governor, Corona Lockdown
தமிழ்நாடு,முதன்மை செய்தி

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்றிருக்கும் கடன்களுக்கு EMI செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்கக் கோரி பிரதமர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ``தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட உள்ள முழு ஊரடங்கைச் செயல்படுத்துவது குறித்து, தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9.05.21 அன்று முதல்வர் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், ’சிறு குறு தொழில்நிறுவனங்கள், ஆட்டோரிக்ஷா, கால்டாக்சி, வாகனம் வைத்திருப்போர் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை (EMI) கட்டுவதற்கும் காலநீட்டிப்பு வழங்குவது குறித்து ஒன்றிய அரசு மற்றும் மத்திய ரிசர்வ் வங்கியிடம் வலியுறுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, அவர்களுடைய கடன் சுமையைக் குறைக்கும் வகையில், 6 மாத காலத்திற்கு அவகாசம் வழங்கிட வேண்டும் என்றும், இந்தக் காலத்திற்கு வட்டி ஏதும் வசூலிக்கப்பட கூடாது என்றும், தொழிலாளர்களிடமிருந்து மாதந்தோறும் வசூலிக்கப்படும் வருங்கால வைப்புநிதி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதித் தொகையை ஆறு மாதங்களுக்கு பிடித்தம் செய்திடக் கூடாது என்றும் வலியுறுத்தி, பிரதமருக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெட்ரோல், டீசல், சிலிண்டர், மத்திய அரசு, மாநில அரசு, தமிழக அரசு, பாமக, அன்புமணி, எரிபொருள் விலை, Petrol, Diesel, Cylinder, Central Government, State Government, Tamil Nadu Government, Pmk, Anbumani, Fuel Prices
அரசியல்,முதன்மை செய்தி

``கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடிக் கொண்டு இருக்கும் நிலையில், அதை உணராமல் எரிபொருள் விலைகளை உயர்த்துவது சிறிதும் நியாயமற்றது" என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் நடப்பு மாதத்தில் எட்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடிக் கொண்டு இருக்கும் நிலையில், அதை உணராமல் எரிபொருள் விலைகளை உயர்த்துவது சிறிதும் நியாயமற்றது.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.93.84 ஆக உள்ளது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து ரூ.87.49 &க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 92.43 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 85. 75 ஆகவும் இருந்தன. அதன்பின் கடந்த 2-ஆம் தேதி தொடங்கி இன்று வரையிலான 11 நாட்களில் மொத்தம் 8 முறை எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன. மே மூன்றாம் தேதி மட்டும் பெட்ரோல், டீசல் விலைகள் தலா 8 காசுகள் குறைக்கப்பட்டன. இம்மாதத்தில் மட்டும் 8 நாட்களில் பெட்ரோல் விலை 1.41 ரூபாயும், டீசல் விலை 1.74 ரூபாயும் அதிகரித்திருக்கின்றன.

2021-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்து வருகின்றன. ஜனவரி மாதம் முதல் தேதியில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெரும்பான்மையான நாட்களில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஒரு சில நாட்கள் விலைக் குறைப்பு செய்யப்பட்டது. அதனால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில், மே மாதத் தொடக்கத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இன்று வரை பெட்ரோல் விலை 7.33 ரூபாயும், டீசல் விலை 8.28 ரூபாயும் அதிகரித்திருக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அத்துடன் நின்று விடாது. எரிபொருள் விலை உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும். பொது மக்களின் போக்குவரத்து செலவும் அதிகரிக்கும். இவற்றை ஏழை - நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. ஏற்கெனவே வாழ்வாதார இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இந்த விலை உயர்வால் மேலும் பாதிக்கப்பட்டு வறுமையின் கோரப்பிடிக்குள் தள்ளப்படுவார்கள்.

பெட்ரோல், டீசல் விலைகள் மீது மத்திய, மாநில அரசுகள் மிக அதிக அளவில் வரிகளை விதிப்பது தான் விலை உயர்வுக்கு காரணமாகும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.90 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 31.80 ரூபாயும் கலால் வரியாக மத்திய அரசு வசூலிக்கிறது. தமிழக அரசு அதன் பங்குக்கு பெட்ரோல் விலை மீது 34 விழுக்காடும், அதாவது ஒரு லிட்டருக்கு ரூ.23.80, டீசல் விலை மீது 25 விழுக்காடும், அதாவது 17.75 ரூபாயும் மதிப்பு கூட்டு வரியாக வசூலிக்கிறது. ரூ. 30க்கும் குறைவான அடக்கவிலை கொண்ட பெட்ரோலையும், டீசலையும் சராசரியாக ரூ.90க்கும் கூடுதலான விலைக்கு விற்பனை செய்வது எந்த வகையிலும் நியாயமல்ல. எரிபொருள் விலைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைக்க அவற்றின் மீதான வரிகளைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இது அவசரத் தேவை.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில்,‘‘ திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும்; சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியமாக வழங்கப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதை நிறைவேற்றுவதற்கு மிகவும் சரியான நேரம் இது தான். இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதால் தமிழக அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு எதுவும் ஏற்பட்டு விடாது. மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி, மத்திய அரசின் கலால் வரியில் மாநில அரசின் பங்கு ஆகியவற்றைச் சேர்த்து தமிழக அரசுக்கு பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 37.61 ரூபாயும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 31.10 ரூபாயும் வருவாயாக கிடைக்கிறது. இதில் முறையே ரூ.5, ரூ.4 குறைப்பது பாதிப்பை ஏற்படுத்திவிடாது.

அதுமட்டுமின்றி கடந்த ஓராண்டில் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.20க்கும் கூடுதலாக உயர்ந்துள்ளன. அதன் மூலமாக மட்டுமே தமிழக அரசுக்கு லிட்டருக்கு ரூ.5க்கும் அதிகமாக கூடுதல் வருமானம் கிடைத்திருக்கும். அதனால் தமிழக அரசு வருவாய்ப் பற்றாக்குறை என்று காரணம் கூறாமல் பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.5 குறைக்க வேண்டும்; மத்திய அரசும் கலால் வரியை அதே அளவுக்கு குறைக்க வேண்டும். தமிழக அரசு கூடுதலாக சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்க வேண்டும். அதன்மூலம் மக்கள் சுமையை ஓரளவாவது குறைக்க முன்வர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.


ரஜினிகாந்த், கொரோனா தடுப்பூசி, கோவிஷீல்டு, கொரோனா வைரஸ், Rajinikanth, Corona Vaccine, Covshield, Corona Virus, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,சினிமா,முதன்மை செய்தி

அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த வருட இறுதியில் ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இருப்பினும் குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, ரஜினிக்கு வேறு வகையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கடந்த மாதம் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் 8ம் தேதி தனி விமானத்தில் சென்னையிலிருந்து ஹைதரபாத்துக்குச் சென்றார் ரஜினி. கடந்த 10ம் தேதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் நேற்று ஹைதராபாத்தில் இருந்து, தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.

இதனிடையே, ரஜினிகாந்த் இன்று தனது வீட்டில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியான கோவி ஷீல்டை போட்டுக் கொண்டுள்ளார். அவர் ஊசி போட்டுக் கொண்ட படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்த ரஜினியின் இளையமகள் செளந்தர்யா, ”நமது தலைவர் தடுப்பூசி போட்டுக் கொண்டார். கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போரை ஒன்றாக எதிர்த்துப் போராடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கமல்ஹாசன், சந்தோஷ் பாபு, பத்மபிரியா, மக்கள் நீதி மய்யம், Kamalhaasan, Santhosh Babu, Padmapriya, Makkal Needhi Maiam, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
அரசியல்,முதன்மை செய்தி

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, பத்மபிரியா விலகுவதாக அறிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபும், மதுரவாயல் தொகுதியில் பத்மபிரியாவும் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.


இந்த நிலையில், கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த டாக்டர் மகேந்திரன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதோடு, கமல்ஹாசன் மீது சரமாரி குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்திலிருந்து முக்கிய தலைவர்களில் ஒருவரான தலைமை அலுவலக பொதுச் செயலாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு விலகியுள்ளார். கட்சியின் செயல்திட்டங்கள், தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க பெரிதும் உறுதுணையாக இருந்த சந்தோஷ்பாபு பதவி விலகியுள்ளது மக்கள் நீதி மய்யம் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சந்தோஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில்” தனது விலகலுக்கு சொந்தக்காரணம் என்று தெரிவித்துள்ளார். கமலுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் பாபுவைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தில் வேட்பாளராக போட்டியிட்ட சமூக ஆர்வலர் பத்மபிரியாவும் விலகியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு, என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும். என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


கொரோனா வைரஸ், மாஸ்ஸ், முகக்கவசம், அமெரிக்கா, கொரோனா தடுப்பூசி, Corona virus, mass, mask, USA, corona vaccine, tamil news, international news, world news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
உலகம்,முதன்மை செய்தி

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் பெரும்பாலான இடங்களில் முகக்கவசம் அணிய கட்டாய தேவையில்லை என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவில் கடந்த ஆண்டு கோரத்தாண்டம் ஆடியது. லட்சக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதனால், அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் பெருமளவில் குறைந்துள்ளது.


அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 46 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, 15 கோடியே 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை 11 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா தடுபூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டு விட்டது. இதற்கிடையில், கொரோனா பரவலை தடுப்பதில் முக்கியமானதாக கருத்தப்படும் முகக்கவசம் அணிதல் அமெரிக்காவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்வோம் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது.

இந்தநிலையில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் பொது இடங்களில் முக்ககவசம் அணிய கட்டாயத்தேவையில்லை என்று அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. மேலும், 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளான மருத்துவமனைகள், பொது போக்குவரத்து, விமானங்கள், விமான நிலையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் வீடுகள் இல்லாத தங்கும் இடங்களில் தொடர்ந்து முக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஒன்றிய, மாநில, உள்ளூர், எல்லைக்குட்பட்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ள பகுதிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு இருக்கும் பட்சத்தில் அந்த உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்றும் அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியை இன்னும் செலுத்திக்கொள்ளாதவர்கள், இரண்டு டோஸ்களையும் முழுமையாக செலுத்திக்கொள்ளாதவர்கள், ஒரு டோஸ் மட்டுமே செலுத்திக்கொண்டவர்கள், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்தி இரண்டு வாரங்கள் நிறைவடையாதவர்கள் கட்டாயம் முகக்கவசம் தொடர்ந்து அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓபிஎஸ், ஓபிஎஸ் சகோதரர், பாலமுருகன் மரணம், அதிமுக, OPS, OPS brother, Balamurugan death, AIADMK, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று திடீரென மரணம் அடைந்தார்.

முன்னாள் துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகன் புற்றுநோயால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து நேற்று இரவு வீடு திரும்பினார். இந்நிலையில், திடீரென்று இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஓ.பாலமுருகன், ஓ.ராஜா, ஓ.சுந்தர் என மூன்று தம்பிகள் உள்ளனர். இதில் ஏற்கெனவே அண்ணன் இறந்துவிட்டார். இவருக்கு நான்கு சகோதரர்கள் உள்ள நிலையில் தற்பொழுது இதில் இரண்டாவது தம்பியான பாலமுருகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்று காலை இயற்கை உயிரிழந்தார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தம்பியின் குடும்பத்தினருக்கு அதிமுக மற்றும் அனைத்து கட்சித்தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், “அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.பாலமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் மரணமடைந்திருப்பதை அறிந்து வேதனையுற்றேன். தகவல் அறிந்ததும் ஓ.பன்னீர் செல்வம் அவர்களை தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். பாலமுருகன் அவர்களை இழந்து வாடும் பன்னீர் செல்வம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அதிமுக ஒருங்கிணைப்பாளர் அண்ணன்  ஓ.பன்னீர்செல்வம்  அவர்களின் இளைய சகோதரர் ஓ.பாலமுருகன் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். ஓ.பாலமுருகன் அவர்களை இழந்துவாடும் அண்ணன்  திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார். 


ஸ்டெர்லைட், ஆக்சிஜன், அரசு மருத்துவமனை, தமிழக அரசு, தூத்துக்குடி, Sterlite, Oxygen, Government Hospital, TamilNadu Government, Thoothukudi, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,முதன்மை செய்தி

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி 3 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழலில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதி கோரியிருந்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டதன் பேரில், தமிழக அரசும் அனுமதி அளித்தது.

இதையடுத்து கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் இரவு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. அங்கு உற்பத்தியான ஆக்சிஜனை வெளியில் கொண்டு செல்வதற்கு வசதியாக பிரத்யேக டேங்கர் லாரிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று காலை 7 மணி அளவில் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி தொடங்கியது.

ஸ்டெர்லைட் கண்காணிப்பு குழு தலைவரும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருமான செந்தில்ராஜ் இதனை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக்சிஜன் நிரப்பிய முதல் டேங்கர் லாரி போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து புறப்பட்டுச் சென்றது. முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் ஆக்சிஜன், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திடீரென ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் தயாரிப்புக் கூடத்தில் உள்ள குளிர்விப்பான் இயந்திரம் (cooler) பழுதடைந்ததால், நள்ளிரவு முதல் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது குளிர்விப்பான் இயந்திரத்தைப் பழுது நீக்கும் பணியில் அங்குள்ள பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இயந்திரத்தை சரி செய்து, மீண்டும் உற்பத்தியை தொடங்க 2 முதல் 3 நாட்கள் வரை ஆகும் என்பதால், அடுத்த 3 நாட்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படும் என ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


ரஜினிமகள் செளந்தர்யா, அஜித், முதல்வர் பொது நிவாரண நிதி, கொரோனா நிதியுதவி, Rajini daughter  Soundarya Rajinikanth, Ajith, Chief Minister General Relief Fund, Corona Funding
தமிழ்நாடு,சினிமா,முதன்மை செய்தி

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா 1 கோடி ரூபாயும், நடிகர் அஜித் 25 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்றை எதிர்கொள்வதற்காக தாராளமாக நிதி அளிக்கலாம் என்று கொடையாளா்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக திரைப்பிரபலங்கள் பலர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சிவகுமார், நடிகர் அஜித் உள்ளிட்டோர் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர்.

இந்தநிலையில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் இருவரும், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கொரோனா தடுப்பு பணிக்காக ஒரு கோடி ரூபாயை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர்.

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார். வங்கி பரிவர்த்தனை மூலமாக கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ. 25 லட்சம் நிதி அனுப்பியுள்ளார்.


கொரோனா, பொதுமக்கள், தமிழ்நாடு, முதல்வர் ஸ்டாலின், திமுக, Corona, Public, Tamil Nadu, Chief Minister Stalin, DMK, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

"முதல்வர் என்ற மாபெரும் பொறுப்பைத் தோள்களில் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நானும் உடன்பிறப்புகளைப் போலவே களத்தில் இருப்பேன்" என்று தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டு மக்கள் அளித்த தெளிவான தீர்ப்பினால் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்துள்ளது. கழகக் கூட்டணியில் இடம்பெற்ற தோழமைக் கட்சியினர் சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இந்த வெற்றி மகிழ்ச்சிக்குரியது என்றாலும் கொண்டாட்டத்திற்குரியதாக அமையவில்லை. காரணம், கரோனா இரண்டாவது அலை பரவலின் தாக்கத்தால் இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலவே தமிழ்நாடும் பேரிடரை எதிர்கொண்டுள்ளது.

நாளுக்கு நாள் நோய்த்தொற்று எண்ணிக்கை உயர்வதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் பெரும் கவலையை அளிக்கிறது. அது மக்கள் மனங்களில் அச்சத்தை விளைவிக்கின்ற காரணத்தால், ஆட்சிப் பொறுப்பேற்கும் முன்பாகவே அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தி, மக்களை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும் வேகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. என் சிந்தை முழுவதும் இந்த எண்ணமே நெற்றிச் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது.

மே 7-ஆம் நாள், நம் தலைமையில் அமைந்த அரசு போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், உயரதிகாரிகளும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள் - செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறையினரும் மக்கள் நலன் காப்பதில் அயராமலும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றி வருகின்றனர்.

முதல்வர் என்ற முறையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் எழுதிய கடிதத்தில், நாள்தோறும் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்திற்குத் தேவை என்பதை வலியுறுத்திக் கேட்டிருந்தேன். பிரதமர் விரைந்து அனுப்பிய பதிலில், உடனடியாக 419 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகத்திற்குத் தருகிறோம் என உறுதியளித்தார். இது நம் தேவைக்கு ஏற்ப முழுமையான அளவு இல்லையெனினும், மாநில அரசின் கோரிக்கைக்கு உடனடியாக செவிமடுத்துச் செயலாற்றியுள்ளார் பிரதமர். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தேவைப்படும் அளவிலான ஆக்சிஜனையும் விரைந்து அனுப்பிட ஆவன செய்வார் என நம்புகிறேன்.

தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, துறை சார்ந்த உயரதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர். தனியார் அமைப்புகளும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி உதவுகின்றன. சில தினங்களுக்கு முன்பு, டி.வி.எஸ் மோட்டார் - சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் சீனிவாசன் சர்வீசஸ் அறக்கட்டளை 18 கோடி ரூபாய் மதிப்பிலான 1600 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி, மக்களின் உயிர் காத்திட உதவியுள்ளது.

உதவிக்கரம் நீட்டுவதில் உடன்பிறப்புகளான நீங்கள் எப்போதுமே முன்கள வீரர்களாக நிற்பவர்கள். கொரோனா முதல் அலையின்போது தொடர்ச்சியான ஊரடங்கினால் எளிய மக்களும் - மருத்துவ உதவி தேவைப்படுவோரும் நெருக்கடிக்குள்ளான நிலையில், திமுகழகத்தின் சார்பில் 'ஒன்றிணைவோம் வா' என்ற செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. உதவி எண் வழங்கப்பட்டு, அதற்கு வரும் அழைப்புகளின் அடிப்படையில் தமிழகம் தழுவிய அளவில் கழகத்தினர் ஆற்றிய அரும்பணி பலருக்கும் பேருதவியாக இருந்தது.

கழக மருத்துவர் அணி சார்பிலும் முழுமையான அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவ முகாம்கள், முகக்கவசம் - சானிடைசர் வழங்குதல், ஏழைகளுக்கு உணவு வழங்குதல், வீடு தேடிச் சென்று உதவுதல் எனக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி ஒன்றிய - நகர - பேரூர் கிளைக்கழகச் செயலாளர்கள், கழகத்தின் ரத்த நாளங்களாக விளங்கும் உடன்பிறப்புகள் என அனைவருமே தங்களை இப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர்.

தங்களுக்கு நோய்த்தொற்று ஆபத்து இருந்தும் இயன்ற அளவு பாதுகாத்துக் கொண்டு, மற்றவர்களுக்கு உதவிய தொண்டுள்ளத்தை உங்களில் ஒருவனான நான் என்றும் மறக்க மாட்டேன். மக்கள் பணியில் நம் கழகத்தின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும் - சட்டப்பேரவை உறுப்பினருமான சகோதரர் ஜெ.அன்பழகன் தன் இன்னுயிர் ஈந்ததை யாரால்தான் மறக்க முடியும்! அந்த அளவுக்குப் பேரிடர் காலத்தில் கழகத்தின் களப்பணி அமைந்திருந்தது.

சட்டப் பேரவைத் தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, கொரோனா இரண்டாவது அலை குறித்த எச்சரிக்கையினை மருத்துவர்கள் தெரிவித்தபோதும், 'ஆட்சி அமையட்டும்' என்று காத்திராமல், ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் தொண்டாற்றுவதே திமுகழகத்தின் முதல் பணி என்ற அடிப்படையில், உங்களில் ஒருவனான நான் வைத்த வேண்டுகோளை ஏற்று கபசுரக் குடிநீர் - முகக்கவசம் - சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கி கழகத்தினர் மேற்கொண்ட பணிகள் பொதுமக்களுக்குப் பாதுகாப்பானதாக இருந்ததுடன், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

நம் அரசு அமைந்தபிறகு, கொரோனா பரவலைத் தடுப்பதற்கும் பேரிடரிலிருந்து மக்களை மீட்பதற்கும் தெளிவான - உறுதியான முயற்சிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிவாரணமாக இரண்டு தவணைகளில் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன், ரெம்டெசிவர் மருந்து, படுக்கை வசதி என கொரோனா கால நடவடிக்கைகளைச் சரிசெய்து, மக்களின் உயிர் காக்கும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுடன் கழகத்தின் சார்பில் 'ஒன்றிணைவோம் வா' செயல்திட்டத்தை மீண்டும் தொடங்கி, மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுடன், நாடாளுமன்ற மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்களும், கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும், செயல்வீரர்களும், கழகத் தொண்டர்களும் களப்பணியாற்றி இந்தப் பேரிடர் நேரத்தில் மக்களின் அடிப்படை - அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

1967-ஆம் ஆண்டு முதன்முதலாக தி.மு.கழக ஆட்சி பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் அமைந்தபோது, 'சீரணித் தொண்டர் படை' என்ற அமைப்பை உருவாக்கினார். மக்களுக்கு உதவிடும் வகையிலும் அரசுக்குத் துணையாக இருந்திடும் வகையிலும் செயல்படுவதே சீரணித் தொண்டர் படையின் பணியாக இருந்தது. அத்தகையப் படையினரைப் போலப் பேரிடர் காலத்தில் கழகத்தினர் மக்களுக்கு உறுதுணையாக இருந்து பணியாற்ற வேண்டும்.

கரோனா பாதிப்பிலிருந்து தமிழகத்தை மீட்க, மக்கள் இயக்கமாகச் செயல்படுவோம் என ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதன் முதற்கட்டமாக, கழகத்தினர் களப்பணியாற்றிட வேண்டுகிறேன். குறிப்பாக, சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கழகத்தினர், தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் பக்கம் உறுதியாக நிற்கவேண்டிய காலகட்டம் இது. அனைத்துக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களிடமும் இதே வேண்டுகோளை முன்வைத்துள்ளேன்.

திமுகவினர் எப்போதும் போல களப்பணியாற்றுவதுடன், நம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகக் கூடுதல் பொறுப்புடனும் - தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் எனவும், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து உதவிகளை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். முதல்வர் என்ற மாபெரும் பொறுப்பைத் தோள்களில் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நானும் உடன்பிறப்புகளைப் போலவே களத்தில் இருப்பேன்.

களப்பணியாற்றுவோம்; கண்ணீரைத் தடுப்போம். ஒன்றிணைவோம் வா... பேரிடர் காலத்தை வென்றிடுவோம் வா" என குறிப்பிட்டுள்ளார்.


தனியார் ஆம்புலன்ஸ், கட்டணம், தமிழக அரசு, கொரோனா நோயாளிகள், Private Ambulance, Fee, Government of Tamil Nadu, Corona Patients, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,முதன்மை செய்தி

கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் இஷ்டத்துக்கு பணத்தை வசூலித்து வந்த நிலையில், தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையால் நாளுக்கு நாள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பணியில் ஆம்புலன்ஸுகள் முக்கிய பங்கு வகுக்கின்றன. இரண்டாம் அலை கொரோனா பாதிப்பால் அதிகரித்து வரும் நோயாளிகளை கூட்டி வருவதற்கான ஆம்புலன்ஸுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸ்களில் நோயாளிகளை ஏற்றிச் செல்ல அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் தனியார் ஆம்புலன்ஸுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், சாதாரண ஆம்புலன்ஸ்களில் முதல் 10 கி.மீ.க்கு ரூ. 1500, கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 25 நிர்ணயம்.

ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் முதல் 10 கி.மீ.க்கு ரூ. 2000, கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.50 நிர்ணயம்.

வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் முதல் 10 கி.மீ.க்கு ரூ. 4000, கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 100 நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு, டீ கடை, கொரோனா, முழு ஊரடங்கு, கொரோனா லாக்டவுன், தமிழக அரசு, Tamil Nadu, Tea Shop, Corona, Full Curfew, Corona Lockdown, TNGovt. TamilNadu
தமிழ்நாடு,முதன்மை செய்தி

தமிழகத்தில் முழு ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, தேநீர் கடைகள், நடைபாதை காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள்உச்சம் அடைந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 10ம் தேதி முதல் வருகிற 24ம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. எனினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால், ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி மதியம் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

* டன்சோ போன்ற மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

* ஏ.டி.எம்., பெட்ரோல் டீசல் பங்க்குகள் ஆகியவை எப்போதும் போல செயல்படும்.

* ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.

* பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகை, பலசரக்கு, காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்குமாறும், மேற்சொன்ன பொருட்கள் வாங்க அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்.

* காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது, காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

* டீ கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது டீ கடைகள் இயங்க அனுமதி இல்லை.

* மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்படும்.

* வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.

* அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும். இ-பதிவு முறை 17ம் தேதி காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும். (https://eregister.tnega.org)

* ஏற்கெனவே அறிவித்தவாறு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும். ஏற்கெனவே அறிவித்தவாறு முழு ஊரடங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் (16 மற்றும் 23ம் தேதி) அமல்படுத்தப்படும்.

* மீன் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால், இந்த கடைகளைப் பல்வேறு இடங்களுக்கு பரவலாக மாற்றம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதன்படி தமிழகத்தில் முழு ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.


செவ்வாய் கிரகம், சீனா, விண்கலம், Mars, China, spacecraft
உலகம்,முதன்மை செய்தி

சீனாவின் தியான்வென்-1 விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. சீன விண்கலம் ஒன்று செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியிருப்பது சாதனையாக கருதப்படுகிறது.

உலக அளவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் வல்லரசு நாடுகள், விண்வெளியிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட நீண்ட காலமாகவே முயற்சித்து வருகின்றன. ஆரம்ப காலத்தில் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நாடுகளின் கவனம் பின்னர் செவ்வாய் கிரகத்தின் பக்கம் திரும்பியது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்காக பல கோடிகளை செலவிட்டு குறிப்பிடத்தக்க சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளன. சந்திரயான் விண்கலத்தின் மூலம் நிலவில் நீர் இருந்ததற்கான ஆதாரத்தை இந்தியா கண்டறிந்தது, விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

அந்த வகையில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 விண்கலமானது, கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 6 சக்கரங்களைக் கொண்ட ‘ரோவர்’ கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும்.

இந்த நிலையில் தற்போது செவ்வாய்கிரகத்தில் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கி உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

மேலும் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐந்து கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. ஏற்கனவே சீனா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளது. அதே போல நிலவை ஆய்வு செய்வதற்கும் விண்கலங்களை அனுப்பி அதில் வெற்றி கண்டுள்ளது. இந்நிலையில் தற்போது சீன விண்கலம் ஒன்று செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.


விசிக பொருளாளர், கொரோனா, முகமது யூசுப், திருமாவளவன், ஸ்டாலின், சீமான், VCK Treasurer, Corona, Mohammad Yousuf, Thirumavalavan, Stalin, Seeman
அரசியல்,முதன்மை செய்தி

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் முகமது யூசுப் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப்புக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, யூசுப் சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி முகமது யூசுப் காலமானார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியில், "வி.சி.க பொருளாளர் முகமது யூசுப் கொரோனாவால் இறந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன்; தகவல் அறிந்ததும் அன்புச் சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்" என்று கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டரில், “விசிக மாநில பொருளாளர் முகமது யூசுப் அவர்கள் காலமானார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. என்னைக் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டவர். என்மீது மாசிலா அன்பை பொழிந்தவர். மீண்டு வருவார் என நம்பியிருந்தேன். மனம் பதைக்கிறது. ஈடு செய்ய இயலாத பேரிழப்பு. அவருக்கு செம்மாந்த வீரவணக்கம்” என்று பதிவிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளரும் அன்பிற்குரிய சகோதரருமாகிய மு.முகமது யூசுப் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். எந்நிலையிலும் நிதானமாகப் பெருந்தன்மையாக எல்லோர் மீதும் அன்பு செலுத்தி வாழ்ந்த சகோதரரின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. அன்புச்சகோதரர் முகமது யூசுப் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்ணன் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட விசிக உறவுகள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்" என்று கூறியுள்ளார்.


ரெட்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன், தமிழக அரசு, கொரோனா, முதல்வர் ஸ்டாலின், Redtacivir, Oxygen, TNGovt, TamilNadu, Corona, CMStalin
தமிழ்நாடு,முதன்மை செய்தி

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்குவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களின் உயிர் காக்கும் பெரும் பொறுப்பை முதன்மை கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு. அதற்கு நேர் எதிராகச் செயல்படுபவர்களின் போக்கை கடுமையான நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

உலகளாவிய அளவிலும், குறிப்பாக இந்திய ஒன்றியத்திலும் கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி வளையத்தில் இருந்து தமிழகமும் தப்பிக்கவில்லை. நாள்தோறும் அதிகரித்து வரும் நோய்த் தொற்று எண்ணிக்கையையும், இறப்புகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்களுக்கான இந்த அரசு இரவு பகல் பாராது செயல்பட்டு வருகிறது. மேலும் இப்பணியில் அனைவரும் அவரவர் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கேற்ப, நல்லோர் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கி வருகிறார்கள்.

எளிய மக்கள்கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைத் தாண்டி, அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை விழுங்கி, மக்களின் உயிரைக் காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். அதேநேரத்தில், சில சமூக விரோதிகள் ரெம்டெசிவர் மருந்துகளைப் பதுக்கி, கள்ளச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். அதுபோலவே, ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் வருகின்றன. பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும்.

தடுப்பூசி இறக்குமதி, ரெம்டெசிவர் மருந்து விநியோகம், ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தல், கட்டுப்பாட்டு மையங்கள் வாயிலாக உடனுக்குடன் சிகிச்சைக்கான ஏற்பாடு என தமிழக அரசு தொய்வின்றி தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீதும் அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வரும் நிலையில், அதற்கு மாறாக, ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்குவோர் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.


தமிழ்நாடு,முதன்மை செய்தி

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தினார்.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக வலு பெற்றதை தொடர்ந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.


இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது. இந்த சூழலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை புயலாக உருவானது. இந்த புயலுக்கு தக்தே என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதை டவ் தே என உச்சரிக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. இது மியான்மர் நாடு வைத்த பெயர் ஆகும். தக்தே என்பது மியான்மரில் உள்ள ஒரு பல்லி இனம் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ் தே புயல் காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி தமிழகத்தின் கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் வருவாய் பேரிடர் மேலாண்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


கொரோனா வைரஸ், மத்திய அரசு, விஞ்ஞானி ஷஜீத் ஜமால், Corona virus, Central government, scientist Shajeed Jamal
இந்தியா,முதன்மை செய்தி

கொரோனா வேகமாக பரவலாம் என்று எச்சரிக்கை விடுத்தபோதும் அந்த பரவலை தடுக்க மிகப்பெரிய அளவில் எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்க மத்திய அரசு முன்வரவில்லை மூத்த அறிவியல் விஞ்ஞானி ஷஜீத் ஜமால், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல், வைரசின் மாறுபாடுகளை கண்டறிதல் மற்றும் வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்சகோக் (INSACOG) என பெயரிடப்பட்டுள்ள அந்த குழுவின் மூத்த அறிவியல் விஞ்ஞானியாக வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் பிரபலமான வைராலஜி நிபுணர் ஷஜீத் ஜமால் செயல்பட்டுவந்தார்.

இதற்கிடையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு சரிவர செயல்படவில்லை என்று ஷஜீத் ஜமால் விமர்சனம் செய்தார். இது தொடர்பாக, பிரபல வெளிநாட்டு செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் செய்தி நாதளில் எழுதிய கட்டுரையில், கொள்கை ரீதியிலான முடிவுகள் எடுப்பதில் ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்ததாக மத்திய அரசை விமர்சித்து எழுதியிருந்தார். மத்திய அரசின் கொரோனா கையாளு முறை, குறைந்த அளவிலான பரிசோதனைகள், தடுப்பூசி தட்டுப்பாடு போன்றவை குறித்தும் அவர் விமர்சித்திருந்தார்.

இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி செல்லும் போது இருக்கும் தரவுகளை மட்டும் வைத்துக்கொண்டு முடிவுகளை எடுப்பது மற்றொரு பாதிப்பு’ என தெரிவித்திருந்தார். மேலும், கடந்த 3-ம் தேதி ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், கொரோனாவின் புதிய வகை தொற்று தொடர்பாக மார்ச் மாத தொடக்கத்திலேயே மத்திய அரசில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு விஞ்ஞானிகள் குழுவான இன்சகோக் (INSACOG) எச்சரிக்கை விடுத்தது.

அந்த மூத்த அதிகாரிகள் பிரதமர் மோடியின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பவர்கள். ஆனால், அந்த எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது என்று அந்த விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றிருந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு விஞ்ஞானி (ஷஜீத் ஜமால்) கூறியுள்ளார் என்று செய்தி வெளியானது.

கொரோனா வேகமாக பரவலாம் என்று எச்சரிக்கை விடுத்தபோதும் அந்த பரவலை தடுக்க மிகப்பெரிய அளவில் எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்க மத்திய அரசு முன்வரவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் முகக்கவசம் அணியாமல் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். தேர்தல் பிரசார கூட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது வைரஸ் பரவலை அதிகரிக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானி ஷஜீத் ஜமால் குழுவில் இடம்பெற்றிருந்த விஞ்ஞானிகள் தெரிவித்ததாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் மத்திய அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கண்டறிதல் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இருந்து மூத்த அறிவியல் விஞ்ஞானியான வைராலஜி நிபுணர் ஷஜீத் ஜமால் ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய அரசின் ஆலோசனை குழுவில் இருந்து ராஜினாமா செய்ததற்கான காரணத்தை அவர் தெரிவிக்காத போதும் அரசுடனான கருத்து மோதலே இதற்கு காரணம் என்று பல்வேறு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இருந்து மூத்த விஞ்ஞானி ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா உயிரிழப்பு, இறுதிச்சடங்கு, ஆந்திரா, ஜெகன் மோகன் ரெட்டி, Corona Death, Funeral, Andhra, Jagan Mohan Reddy, tamil news, india news, india news paper, national news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
இந்தியா,முதன்மை செய்தி

கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அல்லது உறவினர்கள் தகனங்களை கண்ணியமாக நடத்த முடியாமல் போன பல சம்பவங்களைத் தொடர்ந்து கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்காக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் இதுவரை மொத்தம் 14,32,596 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை 9,372 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அதிகமாக 1,094 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் 864 பேரும், கிழக்கு கோதாவரி மற்றும் குண்டூர் மாவட்டங்களில் தலா 838 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு கண்ணியமான இறுதி சடங்குகளை நடத்தும் வகையில் இறுதிச் சடங்குகளை நடத்த ஆந்திர மாநில அரசு குடும்பத்திற்கு ரூ .15,000 அறிவித்துள்ளது. கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அல்லது உறவினர்கள் தகனங்களை கண்ணியமாக நடத்த முடியாமல் போன பல சம்பவங்களைத் தொடர்ந்து இந்த முடிவை மாநில அரசு எடுத்து உள்ளது.

இந்த தொகை இறுதி சடங்கு கட்டணமாக இருக்கும் என்று கூறி, COVID-19 நோயாளிகளின் இறுதி சடங்குகளுக்கு முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி ரூ .15,000 அறிவித்தபோது, 2020 ஜூலை மாதம் வெளியிடப்பட்ட உத்தரவுகளின் தொடர்ச்சியாக சமீபத்திய உத்தரவுகள் உள்ளன.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த நிவாரணத் தொகையை வழங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கொரோனா உயிரிழப்புக்கும் இந்த நிவாரண நிதி அளிக்கப்படும். மே 16 ம் தேதி, ஆந்திர மாநில அரசின் முதன்மை செயலாளர் அனில் குமார் சிங்கால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


கொரோனா, மாவட்டங்கள், தமிழ்நாடு, இபாஸ், பொதுமக்கள், Corona, Districts, Tamil Nadu, epass, Public, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,முதன்மை செய்தி

தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிப்பதற்கு ‘இ-பதிவு' முறை கட்டாயம் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு ‘இ-பதிவு' முறை (http://eregister.tnega.org) அமல்படுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 13ம் தேதி நடைபெற்ற அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு ஏற்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த 15ம் தேதி அமலுக்கு வந்தது.

இந்த உத்தரவில், 'திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்ற மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் மேற்கொள்ள ‘இ-பதிவு’ முறை கட்டாயம். இது இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இருந்து யார், யார் வருகிறார்கள்? என்பதை கண்காணித்து, அதனடிப்படையில் கொரோனா பரவலை தடுப்பதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமாக இருந்த நேரத்தில் ‘இ-பாஸ்’ நடைமுறை கொண்டு வரப்பட்டது. ‘இ-பாஸ்’ வாங்க சிரமமான நிலை இருந்தது. ஆனால் இடைத்தரகர்கள் தலையீட்டால், ‘இ-பாஸ்’ நடைமுறை குளறுபடியானது. இதனால் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகினர். எனவே தற்போது ‘இ-பதிவு’ என்ற எளிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

'இ-பதிவு' செய்வதற்கு தமிழக அரசின் http://eregister.tnega.org என்ற இணையதளத்துக்குள் நுழைய வேண்டும். அதில் தங்களுடைய செல்போன் எண்ணை குறிப்பிட வேண்டும். அருகில் ‘கேப்ட்சா' எண் இருக்கும். அதனை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் மூலம் ஓ.டி.பி. எண் வரும். இந்த எண்ணை பதிவு செய்தால் ‘இ-பதிவு' காலம் திறக்கும். அதில் பயண தேதி, பயணம் செய்பவர்களின் பெயர், வாகன எண், எங்கிருந்து எங்கே பயணம், எதற்காக பயணம் ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும்.

பயணம் செய்வதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் (உதாரணம், திருமணத்துக்கு செல்ல வேண்டும் என்றால் திருமண பத்திரிகையை அளிக்க வேண்டும்). ஆதார், ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட் ஆகிய 5 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும். அதன்பின்னர் பயணம் செய்வதற்கு அனுமதி கிடைக்கும். ரயில் மூலம் வரும் பயணிகள் ரயில் டிக்கெட் நகல், ரயில் எண், பெட்டி, புறப்படும்- வந்து சேரும் இடம் மற்றும் 5 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும். ரயில் நிலையம் வருவதற்கு மட்டுமே இந்த பாஸ் செல்லுபடியாகும் என்றும், ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் புறப்பட்டு செல்லும் இடங்களுக்கு வாகனத்தின் விவரங்களை குறிப்பிட்டு இந்த பாசை புதுப்பிக்க வேண்டும் என்றும் இ-பதிவு இணையதளத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலின், கொரோனா நிவாரணம், Rajinikanth, MK Stalin Corona Relief Fund, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
அரசியல்,சினிமா,முதன்மை செய்தி

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் ரஜினிகாந்த், ``கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும்'' என்று கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் கொரோனாவில் இரண்டாவது அலை காரணமாக தொற்று பரவல் அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் அரசு சந்தித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள், வாய்ப்புள்ளவர்கள் தாமாக முன்வந்து முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முதல்வர் வைத்த கோரிக்கையை ஏற்று கோடிக்கணக்கான ரூபாய் முதல், தங்களால் இயன்ற நிதி வரை கோடீஸ்வரர்கள், பெரும் நிறுவனங்கள், அரசியல், சினிமா, வெளிநாடுவாழ் தமிழர்கள், ஆசிரியர் அமைப்பினர், கடைநிலை ஊழியர்கள், குழந்தைகள் என பலதரப்பட்டவர்களும் நிதி அளித்து வருகின்றனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரூ.1 கோடியும், தனது ஒரு மாத ஊதியத்தையும் வழங்கினார். அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் தொகுதி நிதியை வழங்குவதாக அறிவித்திருந்துள்ளனர்.

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா, முதல்வர் மு.க.ஸ்டாலினை கடந்த 14ம் தேதி சந்தித்து ஒரு கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியை வழங்கினார். இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தார். தனது பங்களிப்பாக கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்தை முதல்வரிடம் வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த், “கொரோனா எனும் உயிர்க்கொல்லி நோயை ஒழிக்க தமிழக அரசாங்கம் கொண்டுவந்த கட்டுப்பாடுகளைப் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். அப்போதுதான் கொரோனா எனும் நோயை ஒழிக்க முடியும். இது பொதுமக்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்” என்று கூறினார்.


இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மனைவி,  நடிகர் நிதிஷ் வீரா, கொரோனா, தமிழ் திரையுலகம், Director Arunraja Kamaraj wife, actor Nitish Veera, Corona, Tamil film industry
சினிமா,முதன்மை செய்தி

பிரபல இயக்குனர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி மற்றும் நடிகர் நிதிஷ் வீரா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

கொரோனா வைரஸ் தினம் தினம் பல உயிர்களை பறித்து வருகிறது. கொரோனா இரண்டாவது அலைக்கு திரைப்பிரபலங்களும் அதிகளவில் இறந்து வருகின்றனர். கடந்த ஆண்டு பின்னணி பாடகர் எஸ்.பி.பி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.


இந்நிலையில் தற்போது இரண்டாவது அலை பலரையும் காவு வாங்கி வருகிறது. இதன்படி கே.வி.ஆனந்த், பாண்டு, பாடகர் கோமகன், நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் என கொரோனாவால் உயிரிழந்த திரைப்பிரபலங்களின் பட்டியல் நீள்கிறது.
புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா (45) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். முன்னதாக கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான நிதிஷ், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.30 மணி அளவில் உயிரிழந்தார். நிதிஷ் வீரா. தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

நடிகர் நிதிஷ் வீராவின் கொரோனா மரணம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, ராஜா ராணி, மான் கராத்தா, மரகத நாணயம், க/பெ.ரணசிங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் அருண் ராஜா காமராஜா, பீசா, ஜிகர்தண்டா, காக்கி சட்டை, தெறி, கபாலி, காலா, மாஸ்டர், தர்பார் போன்ற பல படங்களில் பாடலாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். பல படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.

கோலமாவு கோகிலா படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த நிலையில், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் 2018ல் வெளிவந்த கனா படத்தில் இயக்குநராக அறிமுகமானார். இதனிடையே, அருண் ராஜா காமராஜின் மனைவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பந்தட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் சிகிச்சையில் இருந்து வந்த அருண்ராஜா காமராஜாவின் மனைவி நள்ளிரவு சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து அருண்ராஜா மனைவியின் மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கைது, சிபிஐ, மம்தா பானர்ஜி, மேற்கு வங்கம், Ministers, MLAs, Arrested, CBI, Mamata Banerjee, West Bengal, tamil news, india news, india news paper, national news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
அரசியல்,இந்தியா,முதன்மை செய்தி

நாரதா லஞ்ச வழக்கு தொடர்பாக அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தில், தன்னையும் கைது செய்யுமாறு சி.பி.ஐ அதிகாரிகளிடம் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் உள்ள நாரதா இணையதளம் 2016ஆம் ஆண்டு ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது. அதில் போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆதரவாக நடந்து கொள்வதற்குப் பணம் பெற்றனர். இந்தக் காட்சியை நாரதா நிறுவனம் ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் வெளிக்கொண்டு வந்தது.


2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக நாரதா விவகாரம் விஸ்வரூபமெடுத்ததால் மம்தா தேர்தலில் தோல்வி அடைவார் என்று பேசப்பட்டது. ஆனால், எதிர்ப்புகளையும், அதிருப்திகளையும் மீறி மம்தா பானர்ஜி தேர்தலில் வென்றார். இந்த நாரதா வீடியோ டேப் விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் நடந்தபோது அமைச்சராக இருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிர்ஹத் ஹக்கீம், சுப்ரஜா முகர்ஜி, மதன் மித்ரா, சோவன் சாட்டர்ஜி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தது.

இதனைத்தொடர்ந்து இந்த 4 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க மேற்கு வங்க ஆளுநர் தனகரிடம் சிபிஐ அனுமதி கோரியிருந்தது. அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்திருந்தார். இந்தநிலையில் நாரதா டேப் வெளியான வழக்கில் மேற்கு வங்கள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 4 பேரை சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்தவுடன் முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் கொல்கத்தா நிஜாம் பேலசில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்குச் சென்றனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் சி.பி.ஐ அலுவலகம் முன் திரண்டதால் பெரும் பதற்றமான சூழல் நிலவியது . இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அங்கு பதற்றம் நிலவியதால் காவல்துறையினர் தடியடி நடத்தினர். சி.பி.ஐ அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

அங்கு சி.பி.ஐ அதிகாரிகளிடம் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்ந்த மூத்த தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை நீங்கள் எப்படி கைது செய்யலாம். அவர்கள் சரியான நடைமுறை இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளனர். முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்” என்று ஆவேசமாக கூறினார்.

இதனிடையே, மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் இந்த சம்பவம் குறித்தும் சட்டம் ஒழுங்கு நிலைமையை சீரமைக்கை கோரியும் வங்க அரசை வலியுறுத்தி கேட்டு கொண்டார். சிபிஐ அலுவலகத்தில் கல் வீசிய சம்பவங்கள் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜியின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதற்கிடையில், கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த சபாநாயகர் பிமான் பானர்ஜி அளித்த பேட்டியில், அமைச்சர்களையும், எம்எல்ஏவையும் விசாரிக்கப் போகிறோம், கைது செய்யப்போகிறோம் என்பது குறித்து எனக்கு எந்தவிதமான கடிதமும் சி.பி.ஐ. அமைப்பிடம் இருந்து வரவில்லை. என்னிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை.

எந்தக் காரணத்தின் அடிப்படையில் கவர்னரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் சென்றார்கள் எனத் தெரியவில்லை. அப்போது சபாநாயகர் பதவியும் காலியாக இல்லை. நானும் அலுவலகத்தில்தான் இருந்தேன். ஆளுநர் இதுபோன்று அனுமதி அளித்ததும் சட்டவிரோதம். ஆளுநர் அனுமதியின் பெயரில் எம்.எல்.ஏ.க்களைக் கைது செய்ததும் சட்டவிரோதம்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே கைது செய்யபப்ட்ட திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா, சோவன் சாட்டர்ஜி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளனர்.


எழுத்தாளர் ராஜநாராயணன், முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, ரவிக்குமார், Writer Rajanarayanan, Chief Stalin, Kanimozhi, Ravikumar
தமிழ்நாடு,முதன்மை செய்தி

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் (99) வயது முதிர்வு மற்றும் உடல்நிலை பாதிப்பால் காலமானார். லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்படும் அவரது உடல் நாளை மாலை கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்படுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "'கரிசல் குயில்' கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்! கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்! அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். குடும்பத்தினர் - வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!" என தெரிவித்துள்ளார்.

திமுக எம்பி கனிமொழி, "எழுத்தாளர் திரு.கி.ரா அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். தூத்துக்குடி மாவட்டம் ,இடைச்செவல் கிராமத்தில் பிறந்த அவர், கரிசல் மண்ணின் கதைகளை அவர்களின் மொழியில் எழுதியதுடன், கரிசல் வட்டார அகராதியைத் தொகுத்ததன் மூலம், வட்டார மொழிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திட உழைத்தவர். பழகுவதற்கு இனியவர். அவரை நான் பல முறை சந்தித்த போதெல்லாம் அவரது தெளிந்த சிந்தனையையும், நகைச்சுவை உணர்வையும் கண்டு வியந்திருக்கிறேன். சென்ற முறை பாண்டிச்சேரி சென்ற போது அவரையும் அவரது மனைவி கணவதி அம்மையாரையும் நேரில் சந்தித்து மகிழ்ந்தேன். இப்போது இருவருமே நம்மிடையே இல்லை. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த எம்பி ரவிக்குமார், "கி ரா அண்மைக் காலமாக உற்சாகத்தோடு இயங்கிவந்த செய்திகளைப் பார்க்கிறபோதெல்லாம் அவரைப் போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வரவேண்டும் என நினைப்பேன். ஆனால் ஊர் ஊராகத் திரியும் நம்மால் அவருக்கு கொரோனா தொற்று வந்துவிடக்கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வில் போகாமல் தவிர்த்துவிடுவேன். இரண்டொரு மாதங்களுக்கு முன்பு அவர் நோய்வாய்ப்பட்டபோது ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்று அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துவிட்டு வந்தேன். கடந்த இரண்டு மூன்று நாட்களாக மீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லை. நேற்று முன்தினம் நண்பர் சமஸ் தொடர்புகொண்டு யாரேனும் மருத்துவரை அவரது வீட்டுக்குச் சென்று பார்க்கச்சொல்ல முடியுமா எனக் கேட்டார். கொரோனா நெருக்கடியில் ஏதும் செய்ய முடியவில்லை. ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கும் இயலாத நிலை.

சற்றுமுன்னர்தான் அவரது மறைவுச் செய்தி கிடைத்தது. அதை உறுதிசெய்துகொள்ள பேராசிரியர் பஞ்சாங்கம் அவர்களுக்கு போன் செய்தேன். அவர் சென்னையில் இருப்பதாகச் சொன்னார். ‘100 வரை இருப்பார்னு நெனச்சேன். ஜூன் வந்தால் 99 பிறக்கிறது’ என்றார். நீண்டகாலம் வாழ்ந்திருந்த தமிழ் எழுத்தாளர் அவராகத்தான் இருப்பார். அதுவும் கடைசி நாள்வரை நினைவு தப்பவில்லை. அதுதான் மிகப்பெரிய கொடுப்பினை.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கி ரா வும் நானும் பல விஷயங்களைப்பற்றி உரையாடினோம். அது பேட்டி அல்ல உரையாடல் என்றுதான் சொல்லவேண்டும். அதை இளவேனிலை வைத்து வீடியோவாகப் பதிவு செய்தார். இன்னும் பலரோடும் அப்படி உரையாடி பதிவு செய்தார் எனக் கேள்விப்பட்டேன். தனது மறைவுக்குப் பிறகுதான் அவற்றை வெளியிடவேண்டும் என அவர் கூறிவிட்டார். அவரது மறைவுச் செய்தி கிடைத்ததும் கி ரா வுக்கும் மரணம் வருமா என ஒரு கணம் மனம் திகைத்தது. படைப்பாளிக்கு ஏது மரணம்? என எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன். மற்ற நாட்களாக இருந்திருந்தால் நாளை ஆயிரம் ஆயிரமாய்த் திரண்டிருப்பார்கள். லாக் டவுன் காலத்தில் பாரதிக்கு நேர்ந்தது போல சிலபேர் மட்டும் சூழ்ந்திருக்க அவரது இறுதிப்பயணம் நடக்கவேண்டும் என இயற்கை விதித்துவிட்டது போலும்" என கூறியுள்ளார்.


மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, டவ்தேவ் புயல், Maharashtra, Gujarat, Karnataka, Tauktae Cyclone, rain, tamil news, india news, india news paper, national news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
இந்தியா,முதன்மை செய்தி

மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களை `டவ்தே’ புயல் புரட்டி போட்டுள்ளது. புயலால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி பகுதியையொட்டிய பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. கேரளா, கர்நாடகத்திலும் பலத்த மழை பெய்தது. இதற்கிடையே புயல் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. இந்த புயல் மும்பை கடல் பகுதி வழியாக சென்று மே 18ம் தேதி (இன்று) குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது. இந்த புயல் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்தது. புயலை எதிர்கொள்ள குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன. மேலும் பேரிடர் மீட்பு படையினர், முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

இந்தநிலையில் அதி தீவிரபுயல் நேற்று அதிகாலை மேலும் தீவிரமடைந்தது. புயல் வேகமாக நகர தொடங்கியது. இதன் காரணமாக ஒருநாள் முன்னதாகவே நேற்று இரவு 9 மணி அளவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை நெருங்கியது. முன்னதாக மும்பை கடல் பகுதியில் 145 கி.மீ. தொலைவில் புயல் நகர்ந்து சென்றது. இதன் காரணமாக மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே மழை பெய்ய தொடங்கியது. மும்பையில் நேற்று 120 கி.மீ. வேகம் வரை சூறை காற்று வீசியது. இடைவிடாத மழையும் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நாட்டின் நிதி தலைநகர் மும்பை நிலைகுலைந்து போனது.

பி.கே.சி.யில் அமைக்கப்பட்டு இருந்த கொரோனா மெகா தடுப்பூசி மையம் காற்றில் பறந்தது. சி.எஸ்.எம்.டி. ரயில் நிலைய பிளாஸ்டிக் கூரைகளும் தூக்கி வீசப்பட்டன. காட்கோபரில் மின்சார ரயில் மீது மரம் விழுந்தது. டோம்பிவிலியிலும் தண்டவாள உயரழுத்த மின்கம்பி மீது மரம் முறிந்து விழுந்தது. பல இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளநீரில் மூழ்கின. இதனால் அத்தியாவசிய பணியாளர்களுக்காக இயக்கப்படும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. நாள் முழுவதும் மோனோ ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாந்திரா-ஒர்லி கடல் மேம்பாலம் மூடப்பட்டது. மேலும் மும்பை விமான நிலையமும் பல மணி நேரம் மூடப்பட்டது. எனவே மும்பை நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதபோல மும்பை அருகே உள்ள இதர கடலோர மாவட்டங்களிலும் சுழன்று அடித்த காற்றுடன், கனமழையும் கொட்டி தீர்த்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது. புயல் காரணமாக மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் மாயமானர்கள். மேலும் பெண் ஒருவர் மரம் விழுந்தும், வாலிபர் ஒருவர் மின்கம்பம் சாய்ந்தும் பலியானார்கள். மராட்டியத்தில் மொத்தம் 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.

குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும்போது, மணிக்கு 155 முதல் 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டு இருந்தது. சூறை காற்று சுழன்று அடித்ததால் குஜராத்தை ‘டவ்தே’ புயல் சின்னாபின்னமாக்கியது. அங்கு கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று, பேய் மழை காரணமாக பல இடங்கள் சேதம் அடைந்தது. ஏராளமான மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்தன.

கோவா மாநிலத்திலும் புயலுக்கு பலத்த மழை பெய்தது. யூனியன் பிரதேசமான டாமன் டையூவும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. ‘டவ்தே’ புயல் காரணமாக கர்நாடகத்தில் 121 கிராமங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. அந்த மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் 8 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகத்தில் புயலுக்கு 14 பேர் பலியாகி உள்ளனர். தற்போது பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.


கொரோனா, குழந்தைகள், பெற்றோர்கள், ஆந்திரா, ஜெகன் மோகன் ரெட்டி, Corona, Children, Parents, Andhra, Jagan Mohan Reddy, tamil news, india news, india news paper, national news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
இந்தியா,முதன்மை செய்தி

"கொரோனாவில் பாதிக்கப்பட்டு தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ஆந்திர அரசு சார்பில் ரூ.10 லட்சம் வங்கியில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்படும்" என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் உக்கிரம் தன் கோரமுகத்தைக் காட்டி வருகிறது, மத்திய, மாநில அரசுகள் போராடிக் கட்டுப்படுத்த ஒன்று மாற்றி ஒன்று என்று நடவடிக்கைகளை மேற்கொண்டு முயற்சிகள் செய்து வருகின்றனர்.


இந்தநிலையில் நிறுவனங்கள், ஸ்தாபனங்கள், தனிமனிதர்கள், வெளிநாடுகள் என்று உதவிகள் குவிந்து வருகின்றன. இதில் பெரும் சோகம் என்னவெனில் தாய் தந்தை இருவரையும் குழந்தைகள் பறிகொடுத்து அனாதைகளாகி வருவது அதிகரித்து வருகிறது. இது குறித்து ஊடகங்கள் விழிப்புடன் செயல்பட்டு தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இதனையடுத்து மாநில, மத்திய அரசுகளும் கொரோனாவினால் அநாதையான குழந்தைகள் தொடர்பாக திட்டங்களை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் அனாதைகளான குழந்தைகள் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.10 லட்சம் டெபாசிட் அறிவித்துள்ளார்.

பெற்றோரை இழந்த ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் செலுத்தப்படும் இந்த வைப்புத் தொகையின் மூலம் கிடைக்கும் மாதாந்திர வட்டி மூலம் குழந்தையின் பாதுகாவலர் எடுத்துக்கொண்டு குழந்தையை பராமரிக்க வேண்டும்.

இது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா 2-வது அலையால் குழந்தைகளின் நிலை பாதுகாப்பற்ற சூழலுக்குச் சென்றுள்ளது, அதிகமான பாதிப்பை குழந்தைகள்தான் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் தாய், தந்தையை இழந்து குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆந்திர மாநில அரசு குழந்தைகளின் நலனுக்காக புதிய திட்டத்தை அறிவிக்கிறது. இதன்படி, கொரோனாவில் பாதிக்கப்பட்டு தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ஆந்திர அரசு சார்பில் ரூ.10 லட்சம் வங்கியில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்படும். இந்த தொகையின் மூலம்கிடைக்கும் வட்டியை குழந்தையை பராமரிக்கும், வளர்க்கும் பாதுகாவலர் எடுத்துக்கொண்டு, அந்த குழந்தையை கவனிக்க வேண்டும்.

ஆதரவற்ற நிலைக்குச் சென்ற குழந்தையை அடையாளம் கண்டு அவர்களின் பெயரில் இந்த வைப்புத் தொகையை செலுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு ஏற்படும் பிளாக் ஃபங்கஸ் தொற்றால் ஆந்திராவில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கையை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.


தமிழ்நாடு, ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி, ஸ்டாலின், Tamil Nadu, Oxygen, Corona Vaccine, Stalin, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,முதன்மை செய்தி

``கொரோனா தடுப்பூசி உற்பத்தி, ஆக்ஸிஜன் உற்பத்திக்கான உள்கட்டமைப்புகள் விரைவில் நிறுவப்படும்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 33 ஆயிரத்து மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொரோனா நிலவரம் தடுப்பூசி, ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து பிரதமர் மோடி 9 மாநில பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 46 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனையில் நடத்தினார். ஆலோசனையில் மாநில முதல்வர்கள், அதிகாரிகள், சுகாதாரச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க தமிழகத்தில் தடுப்பூசி மருந்து உற்பத்தி நிலையங்களை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகளை தமிழகத்தில் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழில் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்காணும் அத்தியாவசிய பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும், உதவிகளையும் அளிக்கும். குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன், டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் ஆலைகளை நிறுவ வரும் 31-ம் தேதிக்குள் விருப்பக் கருத்துகளை அளிக்க வேண்டும். இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் விருப்ப கருத்துகள் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி, ஆக்ஸிஜன் உற்பத்திக்கான உள்கட்டமைப்புகள் விரைவில் நிறுவப்படும்" என தெரிவித்துள்ளார்.


இந்திய மல்யுத்த வீரர் சுசில் குமார், கொலை வழக்கு, டெல்லி போலீஸ், Indian wrestler Sushil Kumar, murder case, Delhi Police, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
விளையாட்டு,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர் சுசில் குமார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று டெல்லி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுசில் குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுசில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுசில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.


பல காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாகர் தன்கட் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, காவல்துறையினர் கொலைவழக்கு பதிவு செய்து மல்யுத்த வீரர் சுசில் குமாரைத் தேடி வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக சுசில் குமாரை அரியானா, உத்தரகாண்ட் எனப் பல்வேறு மாநிலங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, மல்யுத்த வீரர் சுசில் குமார் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.

அதேபோல இந்த வழக்கில் தேடப்பட்டுவரும் மற்றொரு நபரான அஜய் குறித்துத் தகவல் அளித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே டெல்லி உயர்நீதிமன்றம் மல்யுத்த வீரர் சுசில் குமாருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதற்கிடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி, சுசில் குமார் தரப்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.


தமிழ்நாடு, கொரோனா நிவாரணம், முதல்வர் ஸ்டாலின், ரேஷன் கார்டு, Tamil Nadu, Corona Relief, Chief Minister Stalin, Ration Card, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,முதன்மை செய்தி

தமிழகத்தில் புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரண நிதியாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதன் முதல் தவணையாக தற்போது ரூ.2,000 ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த நிவாரணம் சென்று சேரும் வகையில் தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், ரூ.4153.39 கோடி செலவில், மே 2021 மாதத்தில் 2,07,66,950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2,14,950 புதிய அரிசி குடும்ப அட்டைகளை பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களின் வாழ்வாதாரத்திற்கும் மேற்கூறிய உதவியை வழங்கிடும் வகையில், ரூ.42.99 கோடி செலவில் மே 2021 மாதத்தில் ரூ.2,000 நிவாரணத் தொகையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விஜயகாந்த், மியாட் மருத்துவமனை, தேமுதிக, Vijayakant, Miad Hospital, DMDK, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அதிகாலையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளளார். விஜயகாந்த் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கருத்தப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் நிலை அண்மை காலமாக பாதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விஜயகாந்த்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கம்பீர குரலில் ஜொலித்த விஜயகாந்த் தற்போது பேச முடியாத நிலைக்கு சென்றுவிட்டார். அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.

இதனிடையே, திடீர் மூச்சுத்திணறல் காரணமாக, அதிகாலை 3:30 மணியளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடா்ந்து அவரது உடல்நிலையை மருத்துவா்கள் கண்காணித்து வருகின்றனர்.


இந்நிலையில், வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.