கமல்ஹாசன், இயக்குநர் ரங்கராஜன், கல்யாணராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, Kamal Haasan, Director Rangarajan, Kalyanaraman, Kadal Meengal, Gokila, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
சினிமா,முதன்மை செய்தி

கமல்ஹாசன் நடித்த கல்யாணராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, மகாராசன் படங்களை இயக்கிய ஜி.என் ரங்கராஜன் காலமானார்.

தமிழில் கமல்ஹாசன் நடித்த கல்யாண ராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா மற்றும் மகராசன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். பழம்பெரும் திரைப்பட டைரக்டரான இவருக்கு வயது 90. சென்னையில் இன்று காலை ரங்கராஜன் காலமானார்.

ஜி.என்.ரங்கராஜனின் மகன் ஜி.என்.ஆர் குமரவேலனும் திரைப்பட டைரக்டர். இவர் வாஹா, யுவன் யுவதி, ஹரிதாஸ் மற்றும் நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் தனது தந்தை மறைவு குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அதில், ’’எனது தந்தை, எனது வழிகாட்டி, எனது அன்புக்குரியவர்... இன்று காலை 8.45க்கு காலமானார். எங்கள் குடும்பத்திற்கு உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் தேவை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ரங்கராஜனின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.


NEET, TNCMStalin, Tamilnadu, TN Students, MKStalin
தமிழ்நாடு,முதன்மை செய்தி

நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டுமெனக் கோரியும், 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை செயல்முறை சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களை பாதித்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கையை இணைத்து அனுப்புவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் மாற்று சேர்க்கை நடைமுறைகள், அத்தகைய மாற்றுவழிகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அத்தகைய நியாயமான மற்றும் சமமான முறைகளைச் செயல்படுத்த எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பரிந்துரைக்குமாறு அக்குழு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களது குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 'தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம், 2021' என்ற சட்டமுன்வடிவினை நிறைவேற்றியுள்ளதாகவும், அந்தச் சட்டமுன்வடிவின் நகலையும் இக்கடிதத்துடன் இணைத்து அனுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும், மாநில அரசுகளால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் அரசியலமைப்பு அதிகார சமநிலை மீறப்படுகிறது என்பதே தங்களது நிலைப்பாடாகும் என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இது தொடர்பாக, மாநில அரசுகள் உயர் கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறும் முறையைத் தீர்மானிப்பதில் தங்கள் அரசியலமைப்பு உரிமையையும், நிலைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டுமென்று தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படும் ஆவணங்களை ஆராய்ந்து, கிராமப்புறங்களில் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதில் சிரமத்திற்கு உள்ளாவதைத் தடுக்கவும், அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் தங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க மாநில முதல்வர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டு, இந்த முக்கியமான பிரச்னையில் அனைவரது ஒத்துழைப்பையும் தான் எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விளக்கி, நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையின் மொழிபெயர்ப்பு நகலை பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் சென்று வழங்கி, இப்பிரச்னை குறித்து தமிழ்நாட்டின் நிலைப்பாட்டிற்கு அந்தந்த மாநில அரசுகளின் ஆதரவைக் கோர வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார்.


Tasmac, Tamil Nadu, Ramadas, Stalin, Village Council Meeting, Village Peoples
கட்டுரை

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று மக்கள் மட்டுமல்லாது, அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை வைத்து வருகின்றன. அந்த கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய இடத்தில் இருக்கும் ஆளும்கட்சிகள் தொடர்ந்து முடிவு எடுப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றன.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், பூரண மதுவிலக்கு வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. கோரிக்கை வைத்து போராட்டமும் நடத்தியது. ஏன் பூரண மதுவிலக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் முன் முதல் அஜந்தாவே பூரண மதுவிலக்குதான். ஆனால் அப்போதைய அ.தி.மு.க. அரசு அதை நிறைவேற்றவில்லை.

தற்போது தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. அதே மதுவிலக்கு கோரிக்கை வலுத்து வருகின்றன. அதற்கு தி.மு.க. அரசு அதிகாரபூர்வமாக எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கவில்லை. ஆனால் மதுவிலக்கு குறித்து ஏதோ முடிவை தமிழக முதல்வர் எடுப்பார் என்று இயல்பாகவே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மதுவிலக்கு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக அரசுக்கு மதுவிலக்கு தொடர்பாக சில யோசனைகளை தெரிவித்து இருக்கிறார். அதன் விவரம் வருமாறு:

மதுரை மாவட்டம், பாப்பாப்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அந்த கிராம மக்களின் குறைகளைக் கேட்டு, அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருக்கிறார். கிராம சபைக் கூட்டத்தில் முதல்வரே நேரில் பங்கேற்றிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டின் வரலாற்றில் கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் ஒருவர் கலந்துகொண்டது இதுவே முதல் முறை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. காந்தியடிகளின் பிறந்த நாளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், கிராம சுயராஜ்ஜியம் குறித்தும், கிராமங்களின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்தும் பேசியிருக்கிறார்.

இதை கிராமங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நல்ல தொடக்கமாகக் கருதலாம். அதே நேரத்தில் கிராமங்களுக்கு, தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான அதிகாரமும், தேவையற்ற தீமைகளை கிராமங்களுக்குள் அனுமதிக்கவிடாமல் தடுக்கும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். அதுவே உண்மையான கிராம சுயராஜ்ஜியமாகும். ஒட்டுமொத்தத் தமிழகமும், குறிப்பாக கிராமப்புறங்கள், இன்றைய நிலையில் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய பிரச்சினை மதுதான்.

நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை

மதுவின் தீமைகள் குறித்தும், அதனால் இன்றைய தலைமுறை சீரழிந்து வருவது குறித்தும் ஆயிரமாயிரம் முறை கூறிவிட்டேன். ஆனாலும், மதுவின் தீமையிலிருந்து தமிழ்நாடு இன்னும் மீளவில்லை. அதற்கான முயற்சிகளை எடுக்க ஆட்சியாளர்கள் மனதளவில் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. மதுவால் சீரழிந்த குடும்பங்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை. கிராமங்களுக்குச் சென்றால் 10 வீடுகள் கொண்ட தெருவில் குறைந்தது 2 அல்லது 3 குடும்பங்களாவது மதுவால் பாதிக்கப்பட்டு சீரழிந்தவையாக இருக்கும். கொரோனா காலத்தில் குடும்பங்களின் வருவாய் குறைந்தாலும், குடிப்பதற்கான செலவுகள் குறையவில்லை. அதனால், பல லட்சக்கணக்கான குடும்பங்கள், குறிப்பாகக் குழந்தைகளும், பெண்களும் பசியால் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

மதுவின் தீமைகளை தினமும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் கிராமப்புறங்களில் வாழும் பெண்கள்தான். கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அரசே மது விற்பனை செய்வதாகக் கூறும் அரசு நிர்வாகங்கள், இது தொடர்பான நிலைப்பாட்டை இறுதி செய்வதற்கு முன்பாக கிராமப்புற பெண்களின் மனநிலையையும், கருத்துகளையும் அறிய வேண்டும். அதுதான் உண்மையான மக்களாட்சித் தத்துவம் ஆகும். அதற்கான மிகச்சிறந்த வாய்ப்பை தமிழக அரசுக்கு கிராம சபைகள் வழங்குகின்றன.

மராட்டிய மாநிலத்தில் ‘1949-ம் ஆண்டின் பம்பாய் மதுவிலக்குச் சட்டத்தின்'படி மது விற்பனை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, ஏதேனும் ஒரு நகர வார்டிலோ அல்லது கிராமத்திலோ மதுக்கடைகள் தேவையில்லை என அங்குள்ள பெண்களில் 25 சதவீதம் பேர் மனு அளித்தால் அதனடிப்படையில் அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். நகரப்பகுதிகளாக இருந்தால் வட்ட அளவிலும், ஊரகப் பகுதிகளாக இருந்தால் கிராம அளவிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். அதில் பங்கேற்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மதுக்கடைகளுக்கு எதிராக வாக்களித்தால், உடனடியாக அங்குள்ள மதுக்கடைகள் மூடப்படும்.

அதுமட்டுமின்றி, அந்தப் பகுதியில் மதுக்கடைகளை மீண்டும் திறக்க முடியாது. இதேபோன்ற நடைமுறையைத் தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும் என 12 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். இந்த யோசனையை சென்னை உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. மதுக்கடைகளை மூட ஆணையிட வலியுறுத்தித் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘‘மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்துவிட்டது. இனிவரும் தலைமுறைகளையாவது காப்பாற்ற வேண்டும். மதுக்கடைகளுக்கு எதிராக கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை மதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் அறிவுறுத்தினர். மக்களின் கருத்துகள் மீதும், உயர் நீதிமன்றத்தின் மீதும் மரியாதை வைத்துள்ள தமிழக அரசு இந்த யோசனையையும் மதித்துச் செயல்படுத்த முன்வர வேண்டும்.

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் போதெல்லாம், அதை முனை மழுங்கச் செய்வதற்காக அரசுத் தரப்பில் செய்யப்படும் பிரசாரம், ‘‘மதுக்கடைகளை மூடிவிட்டால் நலத்திட்டங்களுக்கான நிதி எங்கிருந்து வரும்?'' என்பதுதான். அது மிகவும் தவறு. மதுவைக் கொடுத்து குடும்பங்களைச் சீரழித்துவிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்குவதால் யாருக்கும் எந்தப் பயனும் ஏற்படாது. அதுமட்டுமின்றி, மதுக்கடைகளை மூடினால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கான மாற்றுத் திட்டங்களை பாமக தெரிவித்திருக்கிறது.

இந்த விஷயத்தில் தொடர்ந்து ஆக்கப்பூர்வ ஆலோசனை வழங்கவும் பாமக தயாராக உள்ளது. இவற்றையெல்லாம் கடந்து மக்களாட்சியில் மக்களின் விருப்பமே முக்கியமாகும். எனவே, கிராமப்பகுதிகளில் மதுக்கடைகள் வேண்டாம் என்று குறிப்பிட்ட அளவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், உடனடியாக கிராம சபைகளைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கைக்கு செவிசாயிக்கும் விதமாக முதல்வர் மதுவிலக்கு குறித்து முதல்கட்ட ஆலோசனை ஒன்றை தொடங்கி இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அது தொடர்பாக சில அதிகாரிகளை அழைத்து பேசியதோடு, அதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து ஆராயவும் முதல்வர் சொல்லி இருக்கிறார் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது. முதல்வரின் இந்த நடவடிக்கை என்பது, ராமதாஸ் சொல்வது போல, அதிக பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் கிராமத்தில் உள்ள மதுக்கடைகளை மூடலாம் என்ற முடிவுக்கு முதல்வர் வந்து இருக்கிறார் என்றே தெரிகிறது.


பேருந்து நிலையம் மற்றும் இயக்கப்படும் பேருந்துகளின் விவரம்
தமிழ்நாடு,முதன்மை செய்தி
அக்டோபர் 14 மற்றும் 15 ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக 12, 13ஆம் தேதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து வெளியாகி உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
கொரானா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்காக வருகின்ற ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு 12.10.2021 மற்றும் 18.10.2021 ஆகிய நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற கீழ்கண்ட தடப்பேருந்துகள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது இயக்கப்பட்டது போன்று கீழ்கண்ட அட்டவணைபடி இயக்கப்படும் மற்றும் இதர பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
 
பேருந்து நிலையம் மற்றும் இயக்கப்படும் பேருந்துகளின் விவரம் பின்வருமாறு :-
 
* தாம்பரம் இரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள்: திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள், மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
* பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள்: வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஒசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
* கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள்:| மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி 09), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரூ பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
எனவே பயணிகள் மேற்கூறிய பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும். பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 

பா.ஜ.க,குஷ்புவுக்கு
சென்னை,முதன்மை செய்தி

சென்னை:

பா.ஜ.க.வில்  இணைந்த பிறகு நடிகை குஷ்புவுக்கு பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் பா.ஜ.க  சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

முன்னணி நட்சத்திரமாக இருப்பதால் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த மாநில தலைவர் எல்.முருகன் மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

அதேபோல் தோல்வியை தழுவிய அண்ணாமலை கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த வரிசையில் குஷ்புக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்தநிலையில் குஷ்புக்கு புதிய பொறுப்பாக ‘சிறப்பு அழைப்பாளர்’ என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பதவி எதுவும் இல்லாமல் இருந்த எச்.ராஜாவுக்கும் சிறப்பு அழைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு அழைப்பாளர்களாக இருப்பவர்கள் கட்சியின் தேசிய அளவில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் பதவி எதுவும் இல்லாமல் இருந்தார். இல.கணேசன், டாக்டர் தமிழிசை வரிசையில் அவரும் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு கவர்னர் ஆக்கப்படலாம் என்று கருதப்பட்டது. ஆனால் பொன்.ராதாகிருஷ்ணன் கட்சி பணியில் ஈடுபடுவதையே விரும்பினார். எனவே அவருக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


ரஜினி, தாதா சாகேப் பால்கே விருது. விஜய் சேதுபதி, பார்த்திபன், தேசிய விருது, Rajini, DadaSaheb Phalke Award. Vijay Sethupathi, Parthiban, National Award
சினிமா,முதன்மை செய்தி

நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இந்த விருந்தினை வழங்கினார்.

இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2019ம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மொத்தம் 7 விருதுகளை தமிழ்த்திரையுலகம் வென்றுள்ளது. இந்த விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

சிறந்த தமிழ்ப்படமாக வெற்றிமாறன் இயக்கிய 'அசுரன்' திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டது. விருதை தயாரிப்பாளர் எஸ். தாணு பெற்றார். அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்கு விருது வழங்கி வெங்கையா நாயுடு கவுரவித்தார்.

நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய் மற்றும் தனுஷ் முறையே இந்தி திரைப்படம் 'போன்ஸ்லே' மற்றும் தமிழ் திரைப்படமான 'அசுரன்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

நடிகை கங்கனா ரனாவத் 'மணிகர்னிகா ஜான்சி ராணி' மற்றும் 'பங்கா' படங்களுக்காக சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.

சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.

விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது டி. இமான் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு அளவு 7 படத்திற்கு ஜூரி சிறப்பு விருது வழங்கப்பட்டது.

ஒத்த செருப்பு திரைப்படத்துக்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிக்கலவை விருது வழங்கப்பட்டது.

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷாலுக்கு கிடைத்து உள்ளது.


நடிகர் விஜய், சென்னை உயர்நீதிமன்றம், கார் வழக்கு, Actor Vijay, Chennai High Court, car case
தமிழ்நாடு,சினிமா,முதன்மை செய்தி

இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் என்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகியபோது அந்த வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து காரை இறக்குமதி செய்தபோது இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரியை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், கடந்த முறை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அவர் அதனை தள்ளுபடி செய்து நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்றும் பல கருத்துக்களை தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், மீண்டும் இன்று நீதிபதிகள் புஷ்பா, சத்தியநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய் சார்பில் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன், விஜய்க்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்க வேண்டும். தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் புண்படுத்தும் வகையில் இருந்தது. இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்து குற்றவாளி போல காட்டியுள்ளது. வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்ல வேண்டிய அவசியமில்லை.

தொடர்ந்து நுழைவு வரி செலுத்தவில்லை, வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும் தேவையற்ற கருத்து. நிலுவை வரித்தொகையான ரூ.32.30 லட்சத்தை ஆகஸ்ட் 7ம் தேதி செலுத்திவிட்டோம். கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சிப்பது தேவையற்றது. தன்னை தேச விரோதியாக கூறுவது தவறு" " என வாதிட்டார். இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், கருத்துக்களை நீக்கக்கோரும் விஜய் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.


ரஜினிகாந்த், காவேரி மருத்துவமனை, லதா ரஜினிகாந்த், Rajinikanth, Kaveri Hospital, Lata Rajinikanth
தமிழ்நாடு,சினிமா,முதன்மை செய்தி

ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். அதே நேரத்தில், ரஜினிக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சையில் டாக்டர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, குணம் அடைந்து பின்னர் சென்னை திரும்பினார். சில நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு, மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து கொடுத்தார். அதன் பிறகு அமெரிக்கா சென்று அங்குள்ள மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். அங்கு சில நாட்கள் அவர் தங்கி இருந்துவிட்டு சென்னை வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற ரஜினிகாந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுக்கொண்டு சென்னை திரும்பினார். அண்ணாத்த படத்தின் பிரத்யேக காட்சி ரஜினிகாந்துக்காக நேற்று சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டது. படத்தை குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் சென்று பார்த்தார்.

அவர் குடும்பத்தினருடன் சென்றிருந்த படமும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் நேற்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் திடீரென்று அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் நேற்றிரவு பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் உடல்நிலை குறித்து திரையுலகினரும், ரசிகர்களும் விசாரிக்க தொடங்கினர். இதுகுறித்து ரஜினிகாந்த் குடும்பத்தினர் கூறும்போது, ‘ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார். இது வழக்கமான சாதாரண மருத்துவ பரிசோதனை தான். விரைவில் வீடு திரும்புவார்' என்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று பகல் 12.30 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கி நடந்தே தான் மருத்துவமனைக்குள் சென்றிருக்கிறார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், அவருடைய கணவரும் சென்றனர்.

இதனிடையே, ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது உறவினர் ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.ஜி மகேந்திரன், ரஜினியின் உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளது. ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார். நிச்சயம் அண்ணாத்த திரைப்படம் வெளியாகும்போது வீட்டில் இருப்பார். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து எனக்கு தெரியாது. தீபாவளிக்கு படம் வெளியாகும் போதும் ரஜினியும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து இருப்பார். உறவினர் என்ற முறையில் அவரை பார்த்து நலம் விசாரிக்க வந்தேன்" என்று கூறினார்.

ரஜினியின் உடல் நலம் பற்றி ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினி நலமாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்தை டாக்டர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என டாக்டர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சையில் டாக்டர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


தனுஷ், வேலையில்லா பட்டதாரி, சென்னை உயர்நீதிமன்றம், Dhanush, Velaiyilla Pattathari, Chennai High Court
சினிமா,முதன்மை செய்தி

நடிகர் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் மீது மேல் நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடிகர் தனுஷ் தயாரித்து நடித்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது திரையில் இடம்பெறவேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறாததால் பட தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு புகையிலை கட்டுபாட்டுக்கான மக்களமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே இதே விவகாரம் தொடர்பாக மனுதாரர் தொடர்ந்த பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்துதல் சட்டப்படி அமைக்கப்பட்ட குழு மூலம் படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ், இயக்குநர் வேல்ராஜ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அதன் மீது மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என ஒன்றிய, மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரியும், மேற்கொண்டு எந்த தவறும் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாக பட நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, புகையிலை மிக மோசமான சுகாதார பாதிப்பை தரும் பொருள். புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புக்கு ரூ.13,500 கோடி செலவிடப்படுகிறது என தெரிவித்தார். அதுமட்டுமின்றி இந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார்.


கர்நாடகா, நடிகர் புனித் ராஜ்குமார், பிரதமர் மோடி, ஸ்டாலின், Karnataka, Actor Puneeth Rajkumar, Prime Minister Modi, MKStalin
சினிமா,முதன்மை செய்தி

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் (46) மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது, அனைவரிடத்திலும் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி: கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புனித் ராஜ்குமார் என்ற திறமையான நடிகரை விதி நம்மிடமிருந்து பிரித்துவிட்டது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா: கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் வயதிலேயே புனித் ராஜ்குமார் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது. புனித் ராஜ்குமார் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்; அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல் என்று எடியூரப்பா குறிப்பிட்டிருக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கன்னட நடிகர் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகின் சகாப்தமான ராஜ்குமாரின் மகனான புனித் ராஜ்குமார், எனது குடும்பத்துடன் நல்லுறவு கொண்டவர். புனித் ராஜ்குமாரின் இழப்பு, தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

கனிமொழி எம்.பி.: மக்களின் மனம் வென்ற கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவு பெரும் இழப்பு என்று கனிமொழி எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார். புனித் ராஜ்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

புனித் ராஜ்குமார் மறைவுக்கு சிரஞ்சீவி, பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பிரித்வி ராஜ், ஹன்சிகா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நஸ்ரியா, சோனு சூட், ஆர்யா, விஷால், ராதிகா சரத்குமார், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர். தமன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர்.கே.சுரேஷ், நந்திதா ஸ்வேதா, பார்வதி திருவோத்து, கார்த்திக் ராஜு ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதேபோல் மகேஷ்பாபு, நிவின் பாலி, ஸ்ராதா ஸ்ரீநாத், ஆதிக் ரவிசந்திரன், விஷ்ணு விஷால், மனோபாலா, நிக்கி கலராணியும் தங்களது இரங்கலை பதிவு செய்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: ``அன்புத் தம்பி புனித் ராஜ்குமாரின் மரணச் செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கன்னடத் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.


தொடர்ந்து சரத்குமார், போனி கபூர், மஞ்சிமா மோகன், சந்தீப் கிஷான், விக்ரம் பிரபு, நாசர், மம்முட்டி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனர். துல்கர் சல்மான், ரகுல் பிரீத் சிங், ஷ்ரேயா கோஷல், சாந்தினி, கவுதமி, வைபவ், குஷ்பு, பார்வதி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் ராம் சரண், அருண் விஜய், ஈஷா ரெபா, அனுஷ்கா, ஜூனியர் என்.டி.ஆர்., சுனைனா, ஆர்.ஜே.பாலாஜி போன்றவர்களும் புனித் ராஜ்குமார் மறைவு குறித்து தங்களது இரங்கலை பதிவு செய்திருக்கின்றனர்.


ஷாருக்கான், ஆர்யன்கான், போதை பொருள் வழக்கு, ஜாமீன், Shah Rukh Khan, Aryan Khan, drug case, bail
இந்தியா,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

மும்பையில் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கைதான ஆர்யன் கான் 28 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்து, தற்போது ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் சிறையிருந்து தற்போது வெளியே வந்துள்ளார்.

மும்பையில் சொகுசு கப்பலில் ரேவ் பார்ட்டி எனப்படும் போதை விருந்து நடைபெறுவதாக தகவலறிந்த மும்பை போதை பொருள் தடுப்பு இயக்குநர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் அதே கப்பலில் பயணிகள் போல் சென்றுள்ளனர். கப்பல் நடுக்கடலை நெருங்கியபோது பார்ட்டி தொடங்கியுள்ளது. அதில் பயணித்தவர்கள் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதையடுத்து போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். பிடிபட்டவர்களில் பல பேர் மும்பை திரையுலகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அதில், குறிப்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கானும் ஒருவர். பின்னர் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் ஆர்யன் கானை சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த 28 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்த ஆர்யன் கானுக்கு நேற்று முன்தினம் ஜாமீன் கிடைத்த நிலையில் ஆர்யன் கான் தற்போது சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். தனது பாதுகாவலர்களுடன் மகனை ஷாருக்கான் அழைத்துச் சென்றார்.


ஜெய்பீம், திருமாவளவன், நடிகர் சூர்யா, jaibhim, Surya, Thirumavalavan
அரசியல்,சினிமா,முதன்மை செய்தி

``உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும்'' என்று விசிக தலைவர் திருமாவளவனின் பாராட்டுக்கு பதில் அளித்துள்ளார் நடிகர் சூர்யா.

ஜெய்பீம் படத்தில் சமூக அக்கறைகொண்ட கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். விசிக தலைவர் திருமாவளவன் தனது பாராட்டு கடிதத்தில் கலை நாயகன் சூரியாவின் தொழில் அறம் போற்றுதலுக்கு உரியது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்திற்கு நடிகர் சூர்யா பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், மதிப்பிற்குரிய தொல் திருமாவளவனுக்கு வணக்கம். தங்கள் வாழ்த்தும் பாராட்டும் மன நிறைவை அளித்தன. மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும் தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தாங்கள் குறிப்பிட்டதைப் போல, தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மன நிறைவை தந்துள்ளது. பாதிக்கப்படும் மக்களின் பிரச்னைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய் பீம் திரைப்படத்தின் நோக்கம். கவனப்படுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி" என்று கூறியுள்ளார்.


ஜெய்பீம், சூர்யா, அன்புமணி, பாரதிராஜா, Surya, Anbumani, Bharathiraja, Jaibhim
அரசியல்,சினிமா,முதன்மை செய்தி

"சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே" என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அன்புமணிக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், "இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத காலகட்டத்தில் ஒரு களப் போராளியாக, படைப்பாளியாக நின்று திரைப்பதிவாக்கம் செய்த உரிமையில் உங்களுக்கு உங்கள் பாரதிராஜா எழுதுகிறேன். திரைத்துறை என்பது எல்லாவற்றையும் பேசக்கூடியது. கல்வி, காதல், மோகம், சரி, தவறு, சமூக சீர்திருத்தம் இப்படி மனித வர்க்கம் சந்திக்கும் எல்லா நிகழ்வுகளையும் படம்பிடித்து மக்களிடமே முன் வைக்கும் ஒரு இயங்குதளம்.
பெரும்பாலும் சினிமா என்ற இயங்குதளம் மக்களை நல்வழிப்படுத்தவே முயற்சிக்கும். அதனால்தான் கதாநாயகன் நல்லவனாக சித்தரிக்கப்படுகிறான். பல சமூக, அரசியல் மாற்றங்களின் பங்களிப்பாக சினிமா இருந்திருக்கிறது.

பல வாழ்க்கைப் படைப்புகள் நம் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அது மக்கள் முன்னிலையில் வைக்கப்படும்போது உண்மை எது? தவறு எது? எனத் தெரிந்தே அவர்கள் அதை வரவேற்றோ, புறந்தள்ளியோ வருகின்றனர். அப்படி ஒரு படைப்பாக வரவேற்கப்பட்டதே "ஜெய்பீம்". அன்பு பிள்ளைகள் சூர்யா-ஜோதிகாவால் தயாரிக்கப்பட்டு தம்பி ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த படம். கடந்த கால சம்பவங்களைப் படமாக்கும் போது, அதை படமாகப் பார்த்துவிட்டு சமூக மாற்றத்திற்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். அதில் பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும். இன்றைய எளியோர்களின் சமத்துவ அதிகாரத்திற்காக அன்றே பேசியது நாங்கள்தான்.

அன்று என் படம் "வேதம் புதிது" முடக்க முயற்சித்தபோது புரட்சித்தலைவர் உடன் நின்றார். அந்த படைப்பு எத்தகைய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியது? அது போன்றதொரு படைப்புதான் "ஜெய் பீம்" படமும். இதை படைப்பாக மட்டுமே பார்க்க முயன்றால் நீங்களும், உங்கள் தந்தையும் போராடும் அதே எளியவர்களுக்கான போராட்டம்தான் இது. தம்பி சூர்யாவைப் பொருத்தவரையில் யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவரல்ல. கல்வி, எளியவர்களுக்கான உதவி என நகர்ந்துகொண்டிருப்பவர். ஒரு இயக்குநரின் சேகரிப்பிற்கு தன்னையும், தன் நிழலையும் தந்து உதவியுள்ளவர். அவருக்கு எல்லோரும் சமம். யாரையும் ஏற்ற இறக்கத்தோடு கண்காணிப்பவரல்ல. தன்னால் எங்கேனும் ஒரு மாற்றம் நிகழுமா? எனப் பார்ப்பவர். அவரை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிப்பதும், அவர் மீதான வன்மத்தையும் வன்முறையை ஏவிவிடுவதும் மிகத்தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.

ஒரு படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டுவிடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளைக் கொண்டுவர உதவும். சினிமாவைவிட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே. நடுவண் அரசு, மாநில அரசு, சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்னைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும். எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை. இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வம்படியாக திணித்தோ, திரித்தோ அப்படத்தில் எந்த கருத்துருவாக்கமும் செய்யவில்லை.

நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை எப்போதும் செவிகொடுத்து கேட்கும் மனநிலையில் உள்ள மனிதனுடன் ஏன் தேவையற்ற வார்த்தைப் போர்?. ஒரு அலைபேசியில் முடிந்திருக்க வேண்டியதும் சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டித் தீர்க்க வேண்டியதுமான இப்பிரச்னையை எதிர்காற்றில் பற்றியெரியும் நெருப்புத் துகளாக்கியது ஏன் எனப் புரியவில்லை. எதுவாக இருந்தாலும், எங்களோடு பேசுங்கள். சரியென்றால் சரிசெய்துகொள்ளும் நண்பர்கள் நாங்கள். எப்போதும் நட்போடு பயணப்படுவோம்" என்று கூறியுள்ளார்.


ரஜினிகாந்த், அண்ணாத்த, Annaatthe, rajinikanth
சினிமா,முதன்மை செய்தி

ரஜினிகாந்தின் `அண்ணாத்த' படம் 13 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.225 கோடி வசூலித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த, பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாத்த திரைப்படம் 4ம் தேதி திரைக்கு வந்தது. விஸ்வாசம் படத்திற்கு பின் டைரக்டர் சிறுத்தை சிவா தற்போது ரஜினி நடித்த அண்ணாத்த படத்தை இயக்கி இருந்தார். ரஜினியுடன் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்து இருந்தார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார்.

`அண்ணாத்த' உலகம் முழுவதும் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளில் மட்டும் 1100 திரையரங்குகளில் வெளியாகி தமிழில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் கோலாகலமாக திரைக்கு வந்த `அண்ணாத்த' பல விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், `அண்ணாத்த' படம் 13 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.225 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக்ஸ் ஆபிஸ் முதல் வாரம் ரூ.202.47 கோடி வசூல் செய்துள்ளது. இதுவரை மொத்தம் 225.79 கோடி வசூல் செய்துள்ளது அண்ணாத்த.


நடிகை சினேகா, மோசடி புகார், தனியார் நிறுவனம், Actress Sneha, fraud complaint, private company
சினிமா,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

அதிக வட்டி தருவதாக நம்ப வைத்து 26 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக தனியார் சிமெண்ட் நிறுவன உரிமையாளர்கள் மீது நடிகை சினேகா புகார் அளித்துள்ளார்.

பிரபல தமிழ் நடிகையான சினேகா, சென்னை அடுத்த கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் சந்தியா, சிவராஜ், கவுரி ஆகியோர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக நம்பிக்கை தரும் விதத்தில் பேசினர். 26 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினர்.

இதனை நம்பி 25 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலமாகவும், 1 லட்சம் ரூபாயை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து வழங்கினேன். முதலீடு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு வட்டி தொகை கேட்ட போது அதனை தர மறுத்து தன்னை மிரட்டினர்" என்று கூறியுள்ளார். இந்த பணமோசடி புகார் குறித்து கானாத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வேளாண் சட்டம், பிரதமர் மோடி, கங்கனா ரனாவத், Kangana Ranaut, FarmLaws, PMModi
சினிமா,முதன்மை செய்தி

“சோகமான, வெட்கக்கேடான, முற்றிலும் நியாயமற்றது. ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மாற்றாக வீதிகளில் இருப்பவர்கள் சட்டங்களை இயற்ற தொடங்கியுள்ளனர். அப்படியிருக்கும் சூழலில் இதுவும் ஒரு ஜிகாதி தேசம் தான்" என்று பிரதமர் மோடியை நடிகை கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார்.


நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டி விவசாயிகள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி எல்லையில் தற்காலிகமாக முகாம் அமைத்து போராட்டத்தை தொடர்ந்து அகில இந்திய விவசாயிகள் நடத்தி வந்தனர். இந்த நிலையில், பிரதமர் மோடி, தனது அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக இன்று அறிவித்தார். இதையடுத்து, இந்த சட்டத்தை எதிர்த்த பலரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டத்தை வாபஸ் பெற்றது குறித்து நடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில், “சோகமான, வெட்கக்கேடான, முற்றிலும் நியாயமற்றது. ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மாற்றாக வீதிகளில் இருப்பவர்கள் சட்டங்களை இயற்ற தொடங்கியுள்ளனர். அப்படியிருக்கும் சூழலில் இதுவும் ஒரு ஜிகாதி தேசம் தான். இதை இப்படி விரும்பிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.


சிவசங்கர், தமிழ் சினிமா, நடன இயக்குநர், Sivasankar, Tamil Cinema, Dance Master
சினிமா,முதன்மை செய்தி

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாரடைப்பால் காலமானார்.

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்த சிவசங்கர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்குதுட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இவர் கொரோனா தொற்று காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும் அவரது மனைவி, மூத்தமகன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கும் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பதாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். 800க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சிவசங்கர், ‘மகாதீரா’ படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடன இயக்குநர் சிவசங்கர் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்


கமல்ஹாசன், கொரோனா, மருத்துவமனை, மக்கள் நீதி மய்யம், Kamalhaasan, Corona, Hospital, Makkal Needhi Maiam
அரசியல்,முதன்மை செய்தி

``கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாகப் பரவும் தகவலில் உண்மையில்லை'' என்று மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் கமல்ஹாசன் விரைந்து குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த், கமலிடம் தொலைபேசியில் பேசி, அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார். கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக ஒரு தகவல் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அத்துடன் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவும் அந்தத் தகவலில் உண்மையில்லை என்று மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில், ''தலைவர் மருத்துவமனையிலிருந்து இன்னும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. ஆனால், நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார். வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் கால் அறுவை சிகிச்சை முடிந்து தலைவர் வீடு திரும்பியபோது வெளியான புகைப்படம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா, நடிகர் வடிவேலு, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை, Corona, Actor Vadivelu, Porur Ramachandra Hospital
சினிமா,முதன்மை செய்தி,கொரோனா வைரஸ்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நடிகர் வடிவேலு நலமுடன் இருப்பதாக ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு, தன்னுடைய புதிய படத்திற்காக, இயக்குநர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோருடன் லண்டனுக்கு இந்த மாத தொடக்கத்தில் சென்றிருந்தார்.

அங்கு 10 நாட்கள் தங்கிய பின்பு, தமிழகம் திரும்பிய அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, ஒமிக்ரான் தொற்றுக் கூடிய அறிகுறிகள் இருப்பதாக கூறி, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் கடந்த 23ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது. நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என கூறப்பட்டுள்ளது.


allu arjun atlee rashmika mandhana
சினிமா

நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் அட்லீ விரைவில் இயக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ’ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜூன். ராஷ்மிகா மந்தனாவுடன் இவர் நடித்து, அண்மையில், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான ’புஷ்பா’ திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ ப்ரசாத் இசையில் இப்படத்திற்காக உருவான ’வாயா சாமி’, ’ஒ சொல்றியா மாமா’, ’ஸ்ரீ வள்ளி’ உள்ளிட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்து வருகின்றன. இதையடுத்து அல்லு அர்ஜுனின் சினிமா மார்க்கெட் உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கும் அடுத்த புதிய படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளதாகவும், மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சில தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் ஒப்பந்தமாகியுள்ள அல்லு அர்ஜுன், அவற்றை முடித்துவிட்டு இதில் நடிக்கத் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் அட்லீ தற்சமயம் இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் ஒன்றை இயக்கிவருவது அனைவரும் அறிந்ததே. அப்படத்தின் வேலைகள் முடிந்தவுடன் இவர்களின் கூட்டணியில் இப்புதிய திரைப்படத்தின் வேலைகள் துவங்கலாம் என சினிமா வட்டாரம் ஆருடம் கூறுகிறது.

ஏற்கனவே, தெறி, மெர்சல், பிகில் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக நடிகர் விஜயுடன் அட்லீ இணையவிருப்பதாகக் கிசுகிசுக்கப்பட்டுவந்த நிலையில், வெளியாகியிருக்கும் இப்புதிய செய்தி ரசிகர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.


rrr bahubali rajamouli
சினிமா

பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்பட வெளியீடு கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, அப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி-1 மற்றும் பாகுபலி-2 ஆகிய படங்களின் மாபெரும் வெற்றிக்குப்பிறகு பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’.

சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு மற்றும் கொமராம்பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி சுமார் 400 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பாகுபலி திரைப்படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் மரகதமணி இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

இவ்வாறாக தொடர்ந்து தாமதமாகிவந்த இப்படம், ஒருவழியாக கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதன் டீசர் மற்றும் ட்ரைலர் ஒன்றன் பின் ஒன்றாக வெளியானது.

இந்நிலையில் திடீரென அதிகரித்த கொரோனா மற்றும் புதிதாக இணைந்துள்ள ஒமிக்ரான் ஆகியவற்றின் பரவல் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 100% இருக்கைகள் மீண்டும் 50%-ஆகக் குறைக்கப்பட்டன. இதனால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


thalapathi 66,vijay,vamsi,dil raju
சினிமா

தெலுங்கு பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் ’தளபதி 66’ படத்தின் கதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு சினிமா பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இத்தகவலைத் தொடர்ந்து கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமா விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராகவிருப்பதாகக் கூறப்படும் இப்படத்தை, வம்சியின் சொந்த தயாரிப்பு  நிறுவனமான ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா’ நிறுவனத்தின் கீழ் தில் ராஜு மற்றும் சிரிஷ் இருவரும் இணைந்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

விஜய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும், கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ’தளபதி 66’ படத்தின் கதையமைப்பு குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தகவல் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து அவர், ”தளபதி 66 திரைப்படம், பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போல ஒரு நல்ல ஃபீல் குட் கதையாக நடிகர் விஜய்க்கு அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக ஆகிய திரைப்படங்கள் நடிகர் விஜயின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களாகப் பார்க்கப்படும் நிலையில், இத்தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.


sivakarthikeyan,don,priyanga mohan
சினிமா,முதன்மை செய்தி

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து தயாராகியுள்ள ‘டான்’ திரைப்படத்தின் வெளியீட்டுத்தேதி குறித்த அதிகாரப்பூர்வத் தகவலை அறிவித்துள்ளது படக்குழு.

‘டாக்டர்’ திரைப்படத்தை அடுத்து இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டான்’. டாக்டரைத் தொடர்ந்து, இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். லைக்கா நிறுவனமும் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி, ஆர்ஜே. விஜய், எஸ்ஜே. சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கல்லூரி வாழ்க்கையை பின்புலமாகக் கொண்டு தயாராகியுள்ள இப்படத்தின் ‘முதல் பார்வை’ போஸ்டர் அண்மையில் வெளியானது. மேலும் அனிருத் இசையில் இப்படத்திலிருந்து வெளியான ‘ஜலபுல ஜங்கு’ பாடல் படுவைரலாகி பலரையும் ஆட்டம் போட வைத்துவருகிறது.

இந்நிலையில், ‘டான்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. அதன்படி, ‘டான்’ திரைப்படம், மார்ச் 25-ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்ததை அடுத்து, டான் திரைப்படம் மீது ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர். மேலும் வெளியீட்டுத் தேதி அறிவிப்பை அடுத்து, டீசர் மற்றும் ட்ரைலர் குறித்த அறிவிப்பும் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


mysskin,vijay sethupathy,pisasu 2
சினிமா,முதன்மை செய்தி

‘பிசாசு 2’ திரைப்படத்தை அடுத்து இயக்குநர் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் இறுதியாக 2020-ல் சைக்கோ திரைப்படம், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் வெளியானது. இதையடுத்து அவர் இயக்கத்தில் ஆண்ட்ரியா, ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா நடிப்பில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ திரைப்படம் வெளியீடுக்காகக் காத்திருக்கிறது.

‘பிசாசு 2’ திரைப்படத்தில், விஜய் சேதுபதியின் விருப்பத்திற்கிணங்க அவருக்கு ஒரு சிறு காதாபத்திரத்தை வழங்கியிருந்தார் இயக்குநர் மிஷ்கின். இதை அவரது நேர்காணல் ஒன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், விஜய் சேதுபதியை முதன்மைக் கதாபாத்திரமாய் வைத்து மிஷ்கின் தனது அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல் ஒன்று வெளியாகி வலம்வந்துகொண்டிருக்கிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் வெளியாகவில்லை.

மிஷ்கினுடன் நடிகர் விஜய் சேதுபதிக்கு நல்ல நெருக்கம் நட்பு ரீதியாக ஏற்பட்டுள்ளதை அடுத்துதான், அவர் கேட்கவே மறுப்பு தெரிவிக்காமல் ‘பிசாசு 2’ திரைப்படத்தில் அவருக்கு ஒரு சிறு வேடம் வழங்கினார் மிஷ்கின். இந்நிலையில் இவர்களின் புதிய திரைப்படம் குறித்த தகவல் பெரும்பாலும் உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.


budget,centralgovt,nirmala sitaraman
இந்தியா,முதன்மை செய்தி

2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் வாசிக்கத் துவங்கியதை அடுத்து, அவரது உரையின் சில முக்கிய குறிப்புகள்:

 1. அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
 2. எல்.ஐ.சி பொதுப்பங்கு வெளியீடு விரைவில் நடைபெறும்.
 3. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முக்கியத்துவம் வழங்கப்படும்.
 4. மேக் இன் இந்தியா திட்டம் மூலம் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்.
 5. அடுத்த நிதியாண்டில் 22,000 கி.மீ. சாலை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.
 6. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் 400 இரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
 7. எண்ணெய் வித்துகள், சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
 8. இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும்.
 9. 2023-க்குள் 2,000 கி.மீ. தொலைவுக்கு இரயில்வே கட்டமைப்பு உருவாக்கப்படும்.
 10. 44,000 கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

vijay,nelson dilipkumar,beast
சினிமா,முதன்மை செய்தி

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’ திரைப்படம், பெரும்பாலான படவேலைகள் முடிந்து தமிழ்ப்புத்தாண்டிற்கு திரைக்கு வருவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘டாக்டர்’ திரைப்படத்தை அடுத்து, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. விஜய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் பூஜா ஹேக்டே அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் ரெடின் கிங்ஸ்லீ முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துள்ள நிலையில், அதன் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளிலும் படக்குழு மும்முரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘பீஸ்ட்’ திரைப்படத்தை ஏப்ரலில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது, தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அல்லது அம்மாதத்தின் வேறு ஏதேனும் தேதியில் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘டாக்டர்’ திரைப்படம், மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதித்தது. டார்க் காமெடி எனும் நகைச்சுவை உத்தியைப் பயன்படுத்தி உருவாகியிருந்த ‘டாக்டர்’ திரைப்படம் ரசிகர்களுக்கு சிரிப்பு விருந்தாக அமைந்தது.

இதையடுத்து தான் ‘விஜய் – நெல்சன் திலீப்குமார்’ கூட்டணி பற்றிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் குதூகலித்துக்கிடக்கின்றனர். இந்நிலையில், ‘பீஸ்ட்’ குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


ameer,vetrimaran
சினிமா,முதன்மை செய்தி

தமிழில் நீண்ட இடைவெளிக்குப்பின் வெற்றிமாறன் திரைக்கதையில் புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார், முன்னாள் இயக்குநரும், இன்னாள் நடிகருமான அமீர்.

தமிழ் சினிமாவில் ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். அதைத் தொடர்ந்து ராம் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர், பருத்திவீரன் திரைப்படம் மூலம் கொண்டாடப்பட்டார். அதைத் தொடர்ந்து யோகி என்ற படத்தை இயக்கிய அமீரின் இயக்கத்தில், இறுதியாக ஆதி பகவன் திரைப்படம் வெளியானது.

அமீர் இறுதியாக இயக்கிய இரண்டு படங்களும் அவ்வளவாக வரவேற்பைப் பெறாத நிலையில், நடிப்பில் கவனம் செலுத்தத் துவங்கினார் அமீர். அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை திரைப்படத்தில் இவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் பெருமளவில் பேசப்பட்டது.

பருத்திவீரன் போன்ற ஒரு படத்தை கொடுத்த அமீர், படங்களை இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தியதை சினிமா ரசிகர்கள் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தான், அமீர், வெற்றிமாறன் திரைக்கதையில் புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இதில் கதை மற்றும் திரைக்கதை குறித்த பணிகளுக்காக தங்கம் என்பவரும் இணைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், “திரைப்படம் என்பது தனிப்பட்ட ஒருவரின் பார்வை தான். ஆனால் அதில் இன்னொருவரின் பார்வையும் சேரும்போது திரைப்படம் மேலும் அழகாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இவர்களின் கூட்டணியில் உருவாகவுள்ள இப்படத்தின் பிற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமீரின் அனைத்து படங்களிலும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளதால், இப்படத்திலும் யுவன் பணியாற்றுவார் என்று எண்ணப்படுகிறது.


rajinikanth,ilayaraja
சினிமா,முதன்மை செய்தி

இசை ஞானி இளையராஜா தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக ‘அசத்தல்’ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ‘அண்ணாத்த’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அண்மையில் வெளியானது. எதிர்பார்த்ததைப்போல் வசூலில் சாதனை புரிந்த அண்ணாத்த, விமர்சன ரீதியாக கலவையான கருத்துக்களைப் பெற்றது.

இந்நிலையில், ‘அண்ணாத்த’ படத்திற்குப் பிறகான தனது அடுத்த படத்தை சூப்பர் டூப்பர் ஹிட் படமாக கொடுத்தே ஆகவேண்டிய சூழலில் இருக்கும் ரஜினிகாந்த், பல இயக்குநர்களுடன் இணைந்து கிசுகிசுக்கப்படுகிறார்.

முதலாக, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்று கூறப்பட்டது. பின், ரஜினியை வைத்து பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ள கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்று ஆருடம் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த கூட்டணி எதுவும் இறுதியாகாமலிருந்து வந்த நிலையில், ரஜினி இசைஞானியை சந்தித்ததாகவும், அவர் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க ரஜினி ஆர்வத்துடன் இருப்பதாகவும், இதையடுத்து அவர்கள் இருவரும் புதிய படத்தில் இணைந்து பணியாற்றவிருப்பதாகவும் தகவல்கள் பரவிவருகின்றன.

இசை ஞானி இசையில் ரஜினிகாந்த் நடித்து இறுதியாக ‘வீரா’ திரைப்படம் வெளியானது. அதோடு, கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரும் இணைவதாகக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இவர்கள் இணையும் புதிய படம் உறுதியானால் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு அதை விடவும் பெரிய நற்செய்தி எதுவும் இருக்காது என்பது நிதர்சனம்.


சினிமா,முதன்மை செய்தி

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர்169’ திரைப்படம் குறித்த அறிவிப்பு நேற்றைய தினம் வெளியான நிலையில், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியாகி வசூல் சாதனை புரிந்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தைத் தொடர்ந்து, அவர் எந்த இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று எல்லோரிடத்திலும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தேசிங் பெரியசாமி, ரஜினியின் ஹிட் காம்போ இயக்குநரான ‘கே.எஸ்.ரவிக்குமார்’, அண்ணாத்த-வைத் தொடர்ந்து மீண்டும் சிறுத்தை சிவா என பல்வேறு இயக்குநர்களுடன் இணைத்துப் பேசப்பட்டுவந்த நிலையில், அனைத்துக்கும் முற்றுப்புள்ளிவைக்கும் அறிவிப்பாக வெளியாகியுள்ளது ‘தலைவர்169’ அறிவிப்பு.

அதன்படி, விஜயை வைத்து ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கிவரும்  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதிமாறன் தயாரிக்கிறார்.

இது குறித்த அறிவிப்பு பலரையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது. ஏற்கனவே ‘நெல்சன் – விஜய்’ கூட்டணி எவ்வாறு இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகைத்துக்கிடக்கும் நிலையில், ‘சூப்பர் ஸ்டார் -,நெல்சன்’ காம்போ மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளைத் தூண்டியுள்ளது.

ஸ்டைல் சமாச்சாரங்களில் பின்னிப்பெடலெடுக்கும் சூப்பர் ஸ்டார், நகைச்சுவையிலும் லேசுபட்டவர் அல்ல. நெல்சன் திலீப்குமார் ‘டார்க் ஹியூமர்’ என்ற நகைச்சுவை பாணிக்காகவே ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ படங்களில் பேசப்பட்டு பிரபலமானவர்.

இந்நிலையில் இவர்களின் கூட்டணி எத்தனை நகைச்சுவை கலந்து இருக்கப்போகிறது என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே சமயம், ரஜினிக்கான நெல்சன், மாஸ் விஷயங்களில் கவனம் செலுத்தி, தனது நகைச்சுவை பாணியில் ஏதேனும் மாறுதல்களை மேற்கொள்வாரா என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.

‘தலைவர்169’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் அல்லது மே-யில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ameer,vetrimaran,yuvan shankar raja,iraivanmigapperiyavan
சினிமா,முதன்மை செய்தி

வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோரின் கதையமைப்பில் அமீர் இயக்கும் புதிய படத்திற்கு ‘இறைவன் மிகப்பெரியவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். அதைத் தொடர்ந்து ராம் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர், பருத்திவீரன் திரைப்படம் மூலம் கொண்டாடப்பட்டார். தொடர்ந்து ‘யோகி’ என்ற படத்தை இயக்கிய அமீரின் இயக்கத்தில், இறுதியாக ‘ஆதி பகவன்’ திரைப்படம் வெளியானது.

அமீர் இறுதியாக இயக்கிய இரண்டு படங்களும் அவ்வளவாக வரவேற்பைப் பெறாத நிலையில், நடிப்பில் கவனம் செலுத்தத் துவங்கினார் அமீர். அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை திரைப்படத்தில் இவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் பெருமளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் தான், நீண்ட இடைவெளிக்குப்பின் அமீர், வெற்றிமாறன் திரைக்கதையில் புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியானது. மேலும் இதில் கதை மற்றும் திரைக்கதை குறித்த பணிகளுக்காக தங்கம் என்பவரும் இணைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் பெயர் அடங்கிய போஸ்டர் ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது படக்குழு. அதன்படி அமீர், வெற்றிமாறன் கூட்டணியின் புதிய படத்திற்கு ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை ஜாஃபர் தயாரிக்கிறார். அமீரின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

அண்மையில், கர்நாடகாவின் ஒரு பள்ளியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கியது. அப்பொழுது தடையை மீறி பள்ளிக்குள் வர முயன்ற மாணவியை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்துடன் இந்துத்துவா அமைப்பின் மாணவர்கள் தடுக்க நினைத்தபொழுது, ‘அல்லாஹு அக்பர்’ என்ற முழக்கத்துடன் அம்மாணவி பள்ளிக்குள் நுழைந்தார்.

மாணவியால் முழங்கப்பட்ட ‘அல்லாஹு அக்பர்’ என்ற சொல் பலரிடையேயும் கவனம் பெற்று நாடாளுமன்றம் வரை மொழியப்பட்டது.

‘அல்லாஹு அக்பர்’ என்ற சொல்லுக்கு தமிழில் ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்று பொருள். இதையடுத்து அச்சம்பவத்தின் தாக்கம் காரணமாகக் கூட இத்தலைப்பை அமீர் தேர்வு செய்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. எதுவாயினும், அமீர், வெற்றிமாறன், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பிற்கு குறைவில்லை என்பதே நிதர்சனம்.


samanta,shaakuntalam,shakuntala,cinemaupdate
சினிமா,முதன்மை செய்தி

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘சாகுந்தலம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சமந்தா.

தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் நடிகை சமந்தா. இவர் நடனமாடி அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஒ சொல்றியா மாமா’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவி ஹிட்டடித்தது.

நாகசைதன்யாவுடனான விவாகரத்துக்குப்பின் சற்றே மனக்கவலையில் இருந்த சமந்தா, தற்சமயம் முழுவீச்சில் படங்களில் நடித்துவருகிறார். இவர் நடிப்பில் தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் தயாராகி வெளியீடுக்காகக் காத்திருக்கிறது. மேலும் தெலுங்கில் தயாராகும் புதிய படம் ஒன்றிலும் அவர் அடுத்ததாக நடிக்கிறார்.

இந்நிலையில், சமந்தா நடிப்பில், இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சாகுந்தலம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

காளிதாஸரின் நாடக நூலான சாகுந்தலம் நூலை கதையமைப்பாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நாடகத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களாக சகுந்தலா மற்றும் துஷ்யந்தன் ஆகியோர் நடித்திருப்பர்.

இக்கதாபாத்திரங்களில் ஒன்றான சகுந்தலா கதாபாத்திரத்தை சாகுந்தலா திரைப்படத்தில் சமந்தா ஏற்றுள்ளார். இவருடன் சேர்ந்து மோகன்பாபு, கௌதமி, அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நீலிமா குணா தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் உருவாவதாக போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேடை நாடகக் கதை என்பதால் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமாக சாகுந்தலம் இருக்கும் என்று நம்பலாம். இதையடுத்து இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


edappadi palanisamy,o panneerselvam,admk
அரசியல்,முதன்மை செய்தி

எந்தப் பொறுப்பில் இல்லாமல் போனபோதும் அம்மா துவண்டுவிடாமல் கட்சிக்காக உழைத்ததாகவும், தாங்களும் அம்மாவின் சபதத்தை ஏற்று கட்சியை அறியணையில் ஏற்றுவோம் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,  

 ‘அம்மாவின் வாழ்வும், சாதனைகளும், நம்மை எல்லா நேரங்களிலும் வழிநடத்தும் ஆற்றல் கொண்ட திசைமானி என்றால் அது மிகையல்ல.எத்தனை சோதனைகள் வாழ்வில் வந்த போதும் அவற்றை எளிதில் முறியடித்து சிந்தனையிலும், செயல் முறைகளிலும் உலகமே வியந்து நோக்கும் வகையில் வெற்றி கண்டவர் அம்மா.

 எந்தப் பணியாக இருந்தாலும், எத்தகைய சூழலில் தள்ளப்பட்டாலும், ஒப்பாரும், மிக்காரும் இல்லாத வகையில் தன் கடமைகளை கர்ம சிரத்தையுடன் செய்து முடித்தவர் அம்மா என்பதை, அவருடைய வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயமும் விளக்கிச் சொல்லும்.

 ‘ஒரு மாணவி’ என்ற வாழ்வின் தொடக்க நிலையில் அவர் நிகரில்லாத மாணவி. பாடம், படிப்பு, வகுப்பு என்பவை மட்டும் அல்ல. பள்ளிக்கூடத்தின் அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் தான் முதலிடம். எதைப் படித்தாலும் அதை முழுமையாகவும், ஆழமாகவும் படித்து, அதிலிருந்து பெற வேண்டிய பாடத்தை நூற்றுக்கு நூறு கற்றுக்கொண்டவர் என்பதை அவருடன் கலந்துரையாடியவர்கள் நன்கு அறிவார்கள். எந்தப் பொருளைப் பற்றிப் பேசினாலும் அதன் உச்சத்திற்குச் சென்று, முழுமையான அறிவுடனும், தெளிவுடனும் பேசுவார் நம் அம்மா.

 கலைத் துறைக்குள் மிகவும் இளம் வயதில் அடியெடுத்து வைத்த நாள் முதல், அந்தத்துறையில் இருந்து விடைபெறும் நாள் வரை, தனக்கென்று ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் என்று எல்லோரும் பாராட்டும் வகையில் தனது முழு மூச்சுடனும், முயற்சியுடனும், அர்ப்பணிப்புடனும், தான் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு நீதி செய்பவராக விளங்கியவர் நம் அம்மா.

 தமிழ் நாட்டு மக்களுக்கு, தான் ஆற்ற வேண்டிய மாபெரும் நன்றிக்கடனாக, அ.தி.மு.க. ஆரம்பித்த எம்.ஜி.ஆர்., தனக்குப் பின்னால் இந்த இயக்கத்தை வழி நடத்த அறிவும், ஆற்றலும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட ஒருவர் வேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுத்துத் தந்த நல்முத்து அல்லவா நம் அம்மா.

 அரசியல் உலகிற்குள் புகுந்தவுடன் அம்மா கண்ட சூழ்ச்சிகளும், சதிச் செயல்களும், வேதனை தரும் வார்த்தை அம்புகளும், நம்பிக்கை துரோகங்களும் கொஞ்சமா? ஆனால், கர்மயோகியான அம்மா கடமையில் தவறாத, துறவிகளுக்கே உரிய நெஞ்சுறத்தோடு ஒரு துறவியின் மனநிலையோடு எதிர்ப்புகளை முறியடித்தார்கள்; இமாலய சாதனைகள் பல படைத்தார்கள்.

 பகைவர்களை மன்னித்தார்கள். பழிச்சொல் கூறியவர்களையும், பாசத்துடன் ஏற்றுக் கொண்டார்கள். உடன் இருந்தே குழி பறித்தோரையும், கொடுஞ் செயல் செய்தோரையும் கூட, குணம் என்னும் குன்றேறி நின்று ஏற்றுக்கொண்டார்.

 ஆட்சிப் பொறுப்பில், முதல்-அமைச்சராக மட்டும் அல்ல எதிர்க்கட்சித் தலைவராகவும், எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் போன நிலை வந்த போதும், தன் வாழ்வின் இறுதி நேரத்திலும் ஏற்றுக்கொண்ட பொறுப்பிற்கு எந்தெந்த வகைகளில் உழைக்க முடியுமோ அவை அத்தனையும் முழு மனதோடும், முழு ஆற்றலோடும் செய்து முடித்தார் நம் அம்மா.

 எத்தனை பேருக்கு தன் சொந்த பொறுப்பில் கல்வி கொடுத்தார்!

எத்தனை பேரின் கண்ணீரை தன் அன்புக்கரங்களால் துடைத்தார்!

கழகத்தின் ஒன்றரை கோடித்தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல்,

தமிழ்நாட்டு மக்களுக்கே தாயாக வாழ்ந்தவர் அம்மா.

அம்மாவின் வாழ்வு அழகானது; அவரைப் போலவே.

 இன்று, அம்மா கட்டிக் காத்த இயக்கம் கழக உடன்பிறப்புகளின் அயரா முயற்சியையும், தளரா நெஞ்சுறுதியையும், தாய்க்கு மகனும், மகளும் ஆற்ற வேண்டிய நன்றிக் கடன்களையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

 ஏழை, எளிய மக்கள்; அதிகாரத்தின் ஒரு துளியை யேனும் அனுபவித்திராத மக்கள்; ஜனநாயகத்தின் மூலம் மட்டுமே பலம் பெற்று குரல் எழுப்பும் வாய்ப்பு பெற்ற மக்கள்; பிறப்பாலும், வாழ்க்கையின் சூழல்களாலும் எப்பொழுதும் சூறாவளியில் சிக்கிய சருகு போல் அல்லல்படும் பல கோடி மக்கள், இவர்கள் எல்லாம் ஏற்றம் பெற வேண்டும். மக்களாட்சியின் மகத்தான சாதனைகளில் இவர்கள் பங்கு பெற வேண்டும் என்பதற்காகத் தான் என்னுடைய காலத்திற்குப் பிறகும் அ.தி.மு.க. ஆயிரம் ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும். மக்கள் பணியாற்றும் என்று சட்டமன்றத்தில், வேறு எந்தக் கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சரும் சொல்லாத மன உறுதியோடு சபதமேற்று சூளுரைத்தார் நம் அம்மா.

 தேர்தல் வெற்றிகளும், தோல்விகளும் எல்லோரும் பார்த்தவைதான். ஆனால், துவண்டுவிடாத நெஞ்சுறத்தோடு கழகத்தைக் காப்பாற்றவும், தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்றவும், நம்மை நம்பி அம்மா விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிக்கவும், நம் அன்புத்தாயின் சபதத்தை நாமும் ஏற்போம்; கழகத்தை அரியணையில் அமரச் செய்வோம்.

 “நீடு துயில் கொள்ளும் எங்கள் அம்மாவே, உங்கள் பிள்ளைகள்,

உங்கள் நம்பிக்கையை வீண்போகச் செய்ய மாட்டோம்.

கழகத்திற்கு வெற்றியை ஈட்டி உங்கள் ஆன்மாவை மகிழ்விப்போம்”

என்பது அம்மா பிறந்த நாளில் நமது சூளுரையாக அமையட்டும்.

 இவ்வாறு அவர்கள் வெளியிட்ட செய்தியறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


director bala,bala, bala divorce,bala muthumalar divorce,prarthana
சினிமா,முதன்மை செய்தி

தமிழ்சினிமா இயக்குநர் பாலா, தனது மனைவி முத்துமலரை விவாகரத்து செய்துள்ளதை அடுத்து, விவாகரத்திற்கு காரணம் என்ன என்பது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்சினிமா உலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர், இயக்குநர் பாலா. இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்த பாலா, ‘விக்ரம்’ நடிப்பில் 1999-ஆம் ஆண்டு வெளியான ‘சேது’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

முதல் படமே பல பாராட்டுகளையும், பல்வேறு விருதுகளையும் பெற்று பாலாவை முக்கிய இயக்குநர்களின் பட்டியலில் இணைத்தது. தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி உள்ளிட்ட தரமான படங்களை இயக்கி, தமிழின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரானார்.

பரதேசி படத்திற்குப்பின் சசிகுமார், வரலட்சுமி நடிப்பில் இவர் இயக்கிய, இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான 1000-வது படமான ‘தாரை தப்பட்டை’ எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. இதைத் தொடர்ந்து இவர் இயக்கிய ‘நாச்சியார்’ படமும் அவ்வளவாக பேசப்படவில்லை.

இந்நிலையில், நடிகர் விக்ரம் மகன் ‘துருவ் விக்ரம்’ நடிப்பில், பாலா இயக்கியிருந்த ‘வர்மா’ திரைப்படம், மொத்த படவேலைகளும் முடிந்து ட்ரைலர் வெளியாகியிருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்நிகழ்வு தமிழ்சினிமாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இதன்பின் படங்கள் இயக்காமல் இருந்த பாலா, சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில், இயக்குநர் பாலா – முத்துமலர் தம்பதி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்துவருவதாகக் கூறப்படும் நிலையில், இருவருக்கும் சில கருத்துவேறுபாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

2018-ல் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான நாச்சியார் திரைப்படம் பெரிதாக பேசப்படாத நிலையில், பாலா இதுகுறித்த மனவுளைச்சலில் இருந்துள்ளார். அதன்பின் அவர் இயக்கிய வர்மா திரைப்படமும் நிராகரிக்கப்பட்டது பாலாவை மனதளவில் வெகுவாக பாதித்துள்ளது. வாய்ப்புகள் குறுகி பாலாவின் சினிமா வாழ்க்கை முன்பில்லாததைப்போல் மங்கியது.

இந்நிலையில்தான் இதுகுறித்த பிரச்சினைகள் பாலா – முத்துமலர் தம்பதியிடையே அவ்வப்போது பூதாகரமாகிவந்ததையடுத்து, இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவுசெய்து விவாகரத்து பெற்றுள்ளனர். இவர்களுக்கு பிரார்த்தனா என்ற பெண் குழந்தை உள்ளது.

பாலாவின் ‘விவாகரத்து’ செய்தி, அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு சூர்யாவுடன் புதிய படத்தில் இணையவிருப்பதாக வெளியான தகவலால் பெருமகிழ்ச்சியில் இருந்த பாலாவின் ரசிகர்கள், இச்செய்தியினால் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பாலா, இப்பிரச்சினைகளிலிருந்து விரைவில் மீண்டு, முன்புபோல் படவேலைகளில் ஈடுபடவேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


google kuttappa trailer,ks ravikumar,biggboss dharshan,losliya,yogi babu
சினிமா,முதன்மை செய்தி

கே.எஸ்.ரவிக்குமாரின் நடிப்பு மற்றும் தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் தர்ஷன், லாஸ்லியா, யோகிபாபு ஆகியோர் நடிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள அறிவியல் சார்ந்த படமான 'கூகுள் குட்டப்பா' பட ட்ரைலர் காணொலி இணையத்தில் வெளியானது.

 


baffoon teaser, karthik subbaraj,vaibhav,anaga
சினிமா,முதன்மை செய்தி

கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில், அவரது உதவி இயக்குநராகப் பணியாற்றிய அசோக் வீரப்பனின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் ‘பபூன்’ திரைப்படத்தின் டீசர் காணொலி இணையத்தில் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் கதாநாயகனாக வைபவ் மற்றும் கதாநாயகியாக அனகா ஆகியோர் நடித்துள்ளனர். ஜோஜு ஜார்ஜ், அந்தகுடி இளையராஜா, ஆடுகளம் நரேன், மூணார் ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தொகுப்பு வெற்றி கிருஷ்ணன், ஒளிப்பதிவு தினேஷ் புருஷோத்தமன்.


pichaikaran 2 promo video released,pichaikaran 2 trailer,Vijay Antany new movie
சினிமா,முதன்மை செய்தி


gk vasan,budget202223,tamilmanilacongress,mkstalin,ptr palanivel,dmk
அரசியல்,முதன்மை செய்தி

தமிழக அரசின் நடப்பு நிதியாண்டுக்கான (2022-23) நிதிநிலையறிக்கை, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் இன்று அறிவிக்கப்பட்டதையடுத்து, அதில் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்படியான அம்சங்கள் இடம்பெறவில்லை என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழக அரசின் நடப்பு (2022 - 23) ஆண்டுக்கான பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப முக்கிய அம்சங்கள் இடம்பெறவில்லை. பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை 7,000 கோடியாக குறைந்துள்ளது என்றால், வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளின் மூலம் வருவாயை ஈட்டுவதில் அக்கறை காட்டுவதை விட மாற்றுத் திட்டங்களின் மூலம் வருவாயை ஈட்டுவதில் அக்கறை காட்ட வேண்டும். தற்போதைய பட்ஜெட்டில் கல்விக்காக, இளைஞர்களுக்காக, மாணவர்களுக்காக, அரசு மருத்துவமனைக்காக, வெள்ளத் தடுப்புக்காக, நீர்நிலப் பாதுகாப்புக்காக, சுற்றுச்சூழலுக்காக என பலவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வழக்கமானது.

மேலும், இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும், கோயில்களை சீரமைக்கவும் ஒதுக்கிய நிதியானது முறையாக, முழுமையாகப் பயன்படுத்தப்பட்டால்தான் சரியானதாக இருக்கும். இருப்பினும் தமிழ் மொழிக்காக, அரசுப் பள்ளிகளின் தரம் உயர்வதற்காக, மருத்துவத் துறைக்காக, துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட சாலைத்திட்டத்திற்காக ஒதுக்கிய நிதியானது குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்து பயன் தர வேண்டும். ஒதுக்கிய நிதியால் அந்தந்த துறைகள் வளர்ச்சி அடைய வேண்டும், பொதுமக்கள் பயன்பெற வேண்டும்.

இந்த பட்ஜெட்டானது அனைத்து தரப்பு மக்களுக்குமான ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக அமையவில்லை. குறிப்பாக கரோனா கால பாதிப்பில் இருக்கின்ற ஏழை, எளிய, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெறவில்லை.

மிக முக்கியமாக திமுக தேர்தலுக்கு முன்பாக அறிவித்த வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் நிறைவேறுமா? என்ற சந்தேகம் நீடிக்கும் வகையில் அறிவிப்புகள் அமைந்திருக்கிறது. மொத்தத்தில் தமிழக அரசின் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக மக்களின் வருவாயைப் பெருக்குவதற்கான, மாநில வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் இல்லாத சாதாரண பட்ஜெட்டாக அமைந்திருப்பதாக த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


suriya41,bala,suriya
சினிமா,முதன்மை செய்தி

இயக்குநர் பாலாவின் இயக்கத்தில், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘SURIYA41’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களின் பட்டியலில் சந்தேகத்திற்கிடமின்றி இடம்பிடித்திருப்பவர் இயக்குநர் பாலா. சேது, நந்தா, நான் கடவுள், பரதேசி உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான படங்களைத் தமிழ்சினிமா உலகிற்குத் தந்ததன் மூலம் மக்கள் மனதில் தவறாது இடம்பித்தவர்.

பாலா இயக்கத்தில் இறுதியாக ஜி.வி.பிரகாஷ். ஜோதிகா நடித்த ‘நாச்சியார்’ திரைப்படம் வெளியானது. பின், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து இவர் இயக்கிய ‘வர்மா’ திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பாக தயாரிப்பு தரப்பால் தவிர்க்கப்பட்டு பின் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

பாலா என்னும் கலைஞனிடமிருந்து, அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான சில படைப்புகள் அவரை முழுமையாக வெளிக்கொணரவில்லையோ என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியது. அவர் மீண்டும் எப்பொழுது தன் ‘இயல்புக்கு’ வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாகவே காணப்பட்டது..

இந்நிலையில் தான் நடிகர் சூர்யா நடிக்க, பாலா இயக்கும் ‘SURIYA41’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது. நந்தா, பிதாமகன் படங்களை அடுத்து பாலாவுடன் நடிகர் சூர்யா இணையும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும்.

நடிகர் சூர்யாவின் ‘2D Entertainment’ நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


taanakkaran trailer,vikram prabhu,ms bhaskar
சினிமா,முதன்மை செய்தி

 

இயக்குநர் தமிழ் இயக்கியுள்ள 'டாணாக்காரன்' திரைப்படத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'Potential Studios LLP' சார்பில் SR பிரகாஷ் பாபு, பிரகாஷ், கோபிநாத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இசை: ஜிப்ரான், ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம், படத்தொகுப்பு: பிலோமின் ராஜ், பாடல்கள்: சந்துரு.

'டாணாக்காரன்' திரைப்படம் ஏப்ரல் 8-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 


selvaragavan,sanik kayitham teaser,keerthy suresh
சினிமா,முதன்மை செய்தி

                                                       

 

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள சாணிக் காயிதம் திரைப்படத்தின் டீசர் வெளியானது. இப்படம் மே 6-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

 


saanikkayidham trailer,selvaragavan,keerthy suresh
சினிமா,முதன்மை செய்தி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், இரத்தம் தெறிக்கும் ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்தின் ட்ரைலர் காணொலி இணையத்தில் வெளியானது!


சினிமா,முதன்மை செய்தி

மிஷ்கின் இயக்கத்தில், ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படத்தின் டீசர் காணொலி இணையத்தில் வெளியானது!

 

       


sarkaru vari,keerthy suresh,trailer,magesh babu
சினிமா,முதன்மை செய்தி

பரசுராம் பெட்லா இயக்கத்தில், மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்து தெலுங்கில் உருவாகியுள்ள ‘சர்காரு வாரி’ திரைப்படத்தின் ட்ரைலர் காணொலி இணையத்தில் வெளியானது!                                           

                                                       


avatar 2,avatar,avatar trailer,james camaron
சினிமா,முதன்மை செய்தி

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலகளவில் வசூல் சாதனை புரிந்த 'அவதார்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக 'அவதார் 2' ட்ரைலர் காணொலி இணையத்தில் வெளியானது. 'அவதார் 2' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.

                    


JD jerry,The Legend,Legend Saravana,vaadiVaasal
சினிமா,முதன்மை செய்தி

லெஜண்ட் சரவணா நடிப்பில், ஜே.டி.ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் இரண்டாம் பாடலான வாடிவாசல் இணையத்தில் வெளியானது!                           

   


veetla visesham,r j balaji,oorvasi,sathyaraaj
சினிமா,முதன்மை செய்தி

‘ஆர்.ஜே.பாலாஜி – என்.ஜே.சரவணன்’ இயக்கத்தில், ஊர்வசி, சத்யராஜ், ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள கலகலப்பூட்டும் ‘வீட்ல விசேஷம்’ பட ட்ரெய்லர் காணொலி இணையத்தில் வெளியாகியுள்ளது. பதாய் ஹோ என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படம், நடுத்தர வயதைத் தாண்டிய தம்பதியினர் குழந்தைப்பேறு அடைந்தால்  என்னென்ன இன்னல்களை அவர்கள் சந்திக்கவேண்டி இருக்கும் என்பது போன்ற கதைக்களத்துடன் நகைச்சுவை பாணியில் தயாராகியுள்ளது. 

இதில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். படத்தொகுப்பு செல்வா ஆர்.கே., இசை கிரிஷ் கோபாலகிருஷ்ணன், ஒளிப்பதிவு, கார்த்திக் முத்துகுமார். ஜூன் 17-ஆம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகிறது.


kamalhassan,lokesh kanagaraj,vikram movie,indian 2 movie,vijay sethupathy
சினிமா,முதன்மை செய்தி

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், நரேன் ஆகியோர் நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படம் ஜூன் 3-ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. விரைவில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்கும்" என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "ஜூன் 3-ல் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பதால், அன்றைய தினத்தில் விக்ரம் திரைப்படம் வெளியிடப்படுவதாக சிலர் கூறுகின்றனர். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

முதலில் மே 29-ல் தான் விக்ரம் படத்தை வெளியிடலாம் என்று இருந்தோம். ஆனால், கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் வெளியீட்டுத்தேதி தள்ளிப்போய் 'ஜூன் 3' படத்தை வெளியிட சரியான தேதியாக இருக்கும் என்று அத்தேதியை முடிவுசெய்தோம். இது தற்செயலாக அமைந்தது. சினிமாவை பொறுத்தவரை கலைஞரைப் பற்றிப் பேசுவதென்றால் ஆயிரம் பக்கங்கள் போதாது" என்று தெரிவித்தார்.

அரசு அதிகாரிகளின் ஊழல் குறித்து விளக்கும் வகையில் வெளியான 'இந்தியன்' படத்தின் முதல் பாகம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாகவும், கமல்ஹாசனின் முக்கியப் படங்களில் ஒன்றாகவும் அமைந்தது. இதனிடையே தான் அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவிருப்பது குறித்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், எதிர்பாராமல் நிகழ்ந்த சில தடைகள் மூலம் நிறுத்தப்பட்ட 'இந்தியன் 2' பட படப்பிடிப்பு ரசிகர்கள் பலரை கலக்கத்தில் ஆழ்த்தியது. மேலும் 'இந்தியன் 2' படம் கைவிடப்பட்டதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்நிலையில், 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்ற செய்தி கமல் ரசிகர்களை மீண்டும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


vikram movie,kamalhassan,lokesh kanagaraj,panjathanthiram,vikram promo
சினிமா,முதன்மை செய்தி

'பஞ்சதந்திரம்' திரைப்படத்தில் ஐவர் காம்போவாக நடித்து நம்மைக் கவர்ந்த நடிகர்கள் அடங்கிய காட்சிகளைக் கொண்டிருக்கும் விக்ரம் பட புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், நரேன் ஆகியோர் நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படம் ஜூன் 3-ல் திரையரங்குகளில் வெளியாகிறது. தேர்ந்த கதையமைப்பின் மூலம் சிறந்த திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்குக் கொடுத்துவரும் இயக்குநர் என்பதால், லோகேஷின் 'விக்ரம்' மீது பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு வெளியாகி ரசிக்கவைத்த 'பஞ்சதந்திரம்' படத்தில் நடித்து நம்மை வெகுவாகக் கவர்ந்த யூகி சேது, ரமேஷ் அரவிந்த், ஜெயராம், ஸ்ரீமன் ஆகிய நடிகர்கள் அடங்கிய 'விக்ரம்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது.

'பஞ்ச தந்திரம்' படத்தில் வருவதுபோன்ற நகைச்சுவையான தொலைபேசி உரையாடல் காட்சிகளும், அதில் கமல்ஹாசன் குறித்து விவாதிக்கப்படுவதுமாக ப்ரோமோ அமைந்துள்ளது. படம் குறித்த விளம்பரத்திற்காக இந்த உத்தி கையாளப்பட்டிருந்தாலும், பலரது விருப்பப் படங்களில் ஒன்றான 'பஞ்சதந்திரம்' பட பாணியில் ப்ரோமோ அமைக்கப்பட்டுள்ளது கவரும்படியாக உள்ளது. 

அந்த ப்ரோமோ காணொலி உங்கள் பார்வைக்கு...


yaanai trailer,hari,arun vijay,priya bavani sankar
சினிமா,முதன்மை செய்தி

இயக்குநர் ஹரி கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில், அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ள ‘யானை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் காணொலி இணையத்தில் வெளியானது!

டிரம் ஸ்டிக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வேடிக்காரன்பட்டி சக்திவேல் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு, அந்தோணி; ஒளிப்பதிவு, கோபிநாத். யானை திரைப்படம் ஜூன் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

       


miral,barath,vani bhojan,motion poster
சினிமா,முதன்மை செய்தி

பரத், வாணி போஜன் நடிக்கும் ‘மிரள்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர், மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியானது!

   


bommao trailer,sj surya,priya bavani shankar,radhamohan
சினிமா,முதன்மை செய்தி

ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பொம்மை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் காணொலி இணையத்தில் வெளியானது!   


சினிமா,முதன்மை செய்தி

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ள ‘அரபீ’ திரைப்படத்தின் டீசர் காணொலி இணையத்தில் வெளியானது!

 


agilan,agilan teaser,jayam ravi,priya bavani shankar
சினிமா,முதன்மை செய்தி

கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஜெயம் ரவி, ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ள ‘அகிலன்’ திரைப்படத்தின் ‘டீசர்’ வெளியானது!     

 


dulqur salman,sita ramam,teaser
சினிமா,முதன்மை செய்தி

ஹனு ராகவாபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், ராஷ்மிகா நடித்துள்ள ‘சீதாராமம்’ பட டீசர் வெளியானது!

 


paayum oli nee enakku,vikram pirabu,teaser
சினிமா,முதன்மை செய்தி

கார்த்திக் அத்வைத் இயக்கத்தில், விக்ரம் பிரபு, வாணி போஜன் நடித்துள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் மிரட்டும் டீசர் வெளியானது! 


jiivi 2,jiivi 2 teaser
சினிமா,முதன்மை செய்தி

வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில், வெற்றி, கருணாகரன், ரோகிணி நடித்துள்ள ‘ஜீவி-2’ படத்தின் டீசர் வெளியானது!

   


சினிமா,முதன்மை செய்தி

கின்ஸ்லின் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!

 


Sai pallavi,Gargi trailer,Suriya
சினிமா,முதன்மை செய்தி

கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், சாய் பல்லவி கதை நாயகியாக நடித்துள்ள ‘கார்கி’ படத்தின் ட்ரைலர் வெளியானது!

 


Ponniyin selvan,ponniyin selvan teaser,maniratnam
சினிமா,முதன்மை செய்தி

மணிரத்னத்தின் பிரம்மாண்ட தயாரிப்பான ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’-ன் மிரளவைக்கும் டீசர் வெளியானது!

 


santhanam,gulugulu teaser,rathnakumar
சினிமா,முதன்மை செய்தி

மேயாதமான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில், சந்தானம் நடித்துள்ள ‘குலுகுலு’ திரைப்படத்தின் டீசர் வெளியானது! 


kaase than kadavulada,siva,priya anand,yogi babu,trailer
சினிமா,முதன்மை செய்தி

ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா, ப்ரியா ஆனந்த், யோகி பாபு நடித்துள்ள ‘காசே தான் கடவுளடா’ படத்தின் ட்ரைலர் வெளியானது!   


ARrahman,ponniyin selvan,ponni nadhi
சினிமா,முதன்மை செய்தி

ஏ.ஆர்.ரஹ்மானின் துள்ளலான குரலில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ‘பொன்னி நதி’ பாடல் வெளியானது!


Seeman,Naam tamilar katchi,DMK,dravidian model
அரசியல்,முதன்மை செய்தி

மாட்டிறைச்சியின் பெயரால் பாஜக அரசு செய்யும் அற்பத்தனமான அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், திமுகவினுடையது திராவிட மாடலா? இல்லை, ஆரிய மாடலா? என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"சேலம், தாதகாப்பட்டி, சண்முக நகர் பகுதியிலிருந்த தம்பி பாதுஷா மைதீனுக்குச் சொந்தமான மாட்டிறைச்சி உணவுக்கடையானது திமுக அரசின் நிர்வாக அமைப்பினால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பல வருடங்களாக அப்பகுதியில் நடத்தி வரப்பட்ட மாட்டிறைச்சி உணவுக்கடையை, இந்து முன்னணி போன்ற மதவாத அமைப்புகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி, திடீரென மூட உத்தரவிட்டிருக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரச்செயல்பாடு வெட்கக்கேடானது.

ஏற்கனவே, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிரியாணி உணவுத்திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது பேசுபொருளாகி எதிர்ப்புக்கு உள்ளான நிலையில், உணவுத்திருவிழாவையே மொத்தமாக ரத்துசெய்து மதவாத அமைப்புகளை நிறைவடையச்செய்த திமுக அரசு, இப்போது மாட்டிறைச்சி உணவுக்கடைக்கு அனுமதி மறுத்து மூடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அப்பகுதியிலிருக்கும் கோயிலைக் காரணமாகக் காட்டி, சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதெனக்கூறி, மாட்டிறைச்சி கடையை மூடியதை நியாயப்படுத்த முனையும் மாவட்ட நிர்வாகம், கோழி, ஆடு இறைச்சிகளைக் கொண்ட உணவுக்கடைகளுக்கு மட்டும் அப்பகுதியில் அனுமதி வழங்கியதேன்? மாட்டிறைச்சி உணவுக்கு மட்டும் எதற்கு இந்தத் தீண்டாமைக்கோட்பாடு?

கோயிலுக்கருகே மாட்டிறைச்சி உணவுக்கடை வைக்கக்கூடாதென யார் சொன்னது? ‘ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே’ எனப்பாடி, ‘மாட்டிறைச்சி உண்டாலென்ன? அவர் கொண்டிருக்கிற அன்பினால் சிவபெருமானால் ஏற்கப்படுவார்’ என சைவ சமயக்குரவர் அப்பரே உரைக்கிறபோது இவர்களுக்கென்ன சிக்கல்? பட்டினப்பிரவேசமும், பசு மடமும்கூட ஏற்பாக இருக்கும் திமுக அரசுக்கு மாட்டிறைச்சி உணவு மட்டும் உவர்ப்பாக இருப்பதேன்? அங்கு மாட்டிறைச்சி உணவுக்கடை இருந்தால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் மனம் புண்படுமெனும் மழுப்பல் வாதம் எதற்கு?

திருச்சி, திருவரங்கம் கோயிலுக்கு எதிரேயுள்ள ஐயா பெரியார் அவர்களது சிலையினால் பக்தர்களின் மனம் புண்படுகிறதெனக்கூறி, சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படுமென மதவாத அமைப்புகள் எச்சரித்தால், அச்சுறுத்தலுக்குப் பயந்து ஐயா பெரியாரது சிலையையும் இதேபோல அகற்றிவிடுவார்களா? என்ன கேலிக்கூத்து இது? மாட்டிறைச்சி உணவின் பெயரால் பாஜக அரசும், அதன் ஆட்சியாளர்களும், செய்யும் அற்பத்தனமான அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடல் அரசா? இல்லை! ஆரிய மாடல் அரசா? என்பதை தமிழக அரசு தெளிவுப்படுத்த முன்வர வேண்டும்.

ஆகவே, சேலத்தில் மூடப்பட்ட மாட்டிறைச்சி உணவுக்கடையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க வேண்டுமெனும், உணவுரிமையில் தலையிடும் பிற்போக்குத்தனத்தை இனியும் செய்யக்கூடாதெனவும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" இவ்வாறு தெரிவித்துள்ளார். 


suriya 42,suriya,siruthai siva,cinema news
சினிமா,முதன்மை செய்தி

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘SURIYA 42’ படத்தின் Motion Poster காணொலி வெளியானது!

     


தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

மின் கட்டண உயர்வை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "தமிழ்நாட்டில் இன்று முதல் மின்சார கட்டணம் ரூ.55 முதல் ரூ.1130 வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 6 சதவிகிதம் என்ற அளவில் மின் கட்டண உயர்வு இருக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துகிற நடைமுறை ஏழை, எளிய, நடுத்தர மக்களது வாழ்வையும், சிறு-குறு தொழில்கள், சிறிய நடுத்தர வியாபாரிகள் வாழ்வினையும் மோசமாக்கி விடும் என்பதை தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துகிற நடைமுறை இதுவரை இல்லாதது என்பதையும் கவனப்படுத்துகிறோம். அரிசி, கோதுமை உள்ளிட்டு அனைத்து உணவுப் பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வரலாறு காணாத அளவில் விலைகள் உயர்ந்துள்ளன.

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு ஆகியவை சங்கிலித் தொடர் போன்று அனைத்து பொருட்களின் விலை உயர்வையும் வேகப்படுத்திவிட்டது. மோடி அரசின் இத்தகைய நாசகர பொருளாதாரக் கொள்கையை கண்டிக்கும் தமிழ்நாடு அரசு, தன் பங்கிற்கு மின் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்ற செயலாகும்.

உத்தேசித்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யும், பொதுமக்களும், சிறு-குறு தொழில் முனைவோர்களும் கருத்து கேட்பு கூட்டங்களில் கலந்து கொண்டும், பல்லாயிரக்கணக்கான மனுக்கள் அளித்தும் வலியுறுத்தினர்.

ஆனால் அவைகளை புறந்தள்ளி ஏற்கனவே உத்தேசித்த மின் கட்டண விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதி படி, மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையும் நடைமுறைப்படுத்தாமல் மீண்டும் பழைய முறையிலேயே 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் கட்டணம் கணக்கிடப்படும் என்ற அறிவிப்பும் செய்துள்ளது.

மின்வாரிய நெருக்கடியை சமாளிக்க அரசியல் கட்சிகள், துறைசார்ந்த நிபுணர்கள், செயல்பாட்டாளர்கள் முன்வைத்துள்ள ஆக்கப்பூர்வமான மாற்று ஆலோசனைகளை செயல்படுத்துவதற்கு மாறாக மக்கள் தலையில் சுமையை ஏற்றுவது அரசுக்கு அவப்பெயரையே உருவாக்கும் என சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே, ஏழை, எளிய உழைக்கும் மக்களையும், நடுத்தர மக்களையும், சிறுகுறு தொழில்களையும் கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துவதோடு மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறையை அமல்படுத்த வேண்டுமென்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறது" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 


neeya naana,gopinath,vijay tv,lyricist thamarai
சினிமா,முதன்மை செய்தி,வைரல் வீடியோ

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான 'தந்தை - மகள்' குறித்த நீயா நானா நிகழ்ச்சி காணொலி வைரலாகிவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இவர்போன்ற பெண்கள் பேசத்தெரியாமல் பேசி மாட்டிக்கொள்வதாக திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.

'கணவனை விட அதிக சம்பளத்தில் வேலைபார்க்கும் மனைவி' என்ற தலைப்பில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் அண்மையில் நடைபெற்ற 'நீயா நானா' நிகழ்ச்சியின் காணொலி இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.

அதில், படிக்கத்தெரியாத தனது கணவர் தனது மகளின் ப்ராக்ரஸ் கார்டை புரியாவிட்டாலும் வெகுநேரம் பார்த்து கையெழுத்திடுவதாகவும், தான் அதில் கையெழுத்திட்டால் கோபித்துக்கொள்வதாகவும் அவரை குறைகூறிப் பேசியிருப்பார்.

அதைத்தொடர்ந்து பேசும் கணவர் தான் படிக்கவில்லையென்றாலும், தனது மகள் நன்றாக படிக்கவேண்டும் என்று ஆசைப்படுவதாகவும், அதனாலேயே அவ்வாறு செய்வதாகவும் கூறியிருப்பார். இதன் காரணமாக நிகழ்ச்சியின் இறுதியில் கொடுக்கும் பரிசை நிகழ்ச்சியின் இடையிலேயே அவருக்கும், அவரது மகளுக்கும் வழங்கி கௌரவப்படுத்தியிருப்பார் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத்.

இந்நிலையில், வைரலாகிவரும் இக்காணொலியில் இடம்பெறும் அந்தப் பெண்மணி கேலிகளையும், தந்தை மற்றும் மகள் பொதுமக்களின் அன்பையும் வரவேற்பையும் பெற்றுவருகின்றனர். இதைத்தொடர்ந்து, திரைப்பட பாடலாசிரியர் தாமரை இச்சம்பவம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள முகநூல் பதிவில், "அம்மாக்கள் இல்லையென்றால் குழந்தைகள் பள்ளிப் படிப்பைக் கூடத் தாண்டா என்று சில ஆண்டுகளுக்கு முன் எழுதினேன் (சொந்த அனுபவம்). படித்த தாயார் தன் குழந்தையைப் படிக்க வைக்க, கண்டிப்பாகத்தான் இருப்பார் - வீட்டிலுள்ள அனைவரிடமும்!

அதையெல்லாம் பொதுவில், ஒரு கணத்தில் பார்த்து விட்டு பெண்களே இப்படித்தான் என்று எடை போடுவது தவறு! பெரும்பாலான பெண்கள் வீட்டுவேலையும் செய்து, படித்த படிப்புக்கு வெளிவேலையும் செய்து குழந்தை வளர்ப்பும் செய்து, இன்னும் பல செய்துகள். கடுமையும் விரைவுபடுத்தலும் இருந்தே தீரும். உண்மையில் இத்தகைய பெண்களால்தான் அந்தந்தக் குடும்பங்கள் ஒரு காலகட்டத்துக்குப் பிறகு தலைநிமிரும்.

அப்போதுதான் குழந்தைகளுக்கும் வீட்டில் மற்றவர்களுக்கும் அருமை தெரியும். இந்தப் பெண்களெல்லாம் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்து பேசத் தெரியாமல் பேசி தங்களுக்குத் தாங்களே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள். கோபிநாத் இங்கே நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும்போது, அவரது மனைவி அங்கே குழந்தைக்குப் படிப்புச் சொல்லிக் கொடுத்து 'பிராக்ரஸ் ரிப்போர்ட்'டில் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கக் கூடும்" இவ்வாறு பதிவிட்டுள்ளார். 


ponniyin selvan part 1,ar rahman,ratchasa mama song,ratchasa mama lyrical video
சினிமா,முதன்மை செய்தி


election commision of india,t rajendar,ilatchiya dmk
அரசியல்,முதன்மை செய்தி

தமிழ்நாட்டில் தேர்தலில் தொடர்ந்து போட்டியிடாமல் இருந்த கட்சிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு, பீகார், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகள் அடிப்படையில் 253 அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கட்சிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் அல்லது நோட்டீசுக்கு பதில் அளிக்காதது, 2014, 2019 ஆண்டுகளில் சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் எதிலும் போட்டியிடாதது ஆகிய காரணங்களால் இவை செயல்படாதவை என அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு அரசியல் கட்சி தொடர்ந்து 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அது பதிவு செய்த கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும். இதன்படி, ஏற்கனவே 86 கட்சிகளின் பெயர்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், தமிழ்நாட்டில் கொங்குநாடு ஜனநாயக கட்சி, மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி, தேசபக்தி, புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காயிதே மில்லத் கழகம், தமிழர் கழகம் ஆகிய 7 கட்சிகளின் அங்கீகாரத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட தமிழர் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மாநில திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்த் தேசியக் கட்சி, சமூக சமத்துவ படை, சக்தி பாரத தேசம், தேசிய நலக் கட்சி, நமது திராவிட இயக்கம், மாநில கொங்கு பேரவை, லெனின் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், காமராஜர் ஆதித்தனார் கழகம், இந்துஸ்தான் தேசிய கட்சி, விஜய டி.ராஜேந்தரின் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 22 கட்சிகள் செயலற்ற கட்சிகளாகத்தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.


ks alagiri,tribe people,sparrowhawk,annamalai,congress,bjp
அரசியல்,முதன்மை செய்தி

நரிக்குறவர் இன மக்களை பழங்குடினர் இன பட்டியலில் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைக் கொண்டாட பாஜகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்கார சமுதாயத்தைப் பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் என்பது உலகறிந்த உண்மை.

தமிழகத்தில் கல்வியறிவின்மை, சுகாதார சவால்கள், வேலையின்மை காரணமாக போராடுகிற 30000-க்கும் மேற்பட்ட நரிக்குறவர், குருவிக்கார சமூகங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்கிறேன்.

ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் 2013-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட பழங்குடியின திருத்த மசோதா கடந்த 8 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டது. தாங்கள் தான் இந்த சாதனையை செய்ததாக சுயதம்பட்டம் அடித்துக் கொள்ள பா.ஜ.க.வினருக்கு தகுதியே கிடையாது" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


naane varuven,naane varuven teaser,dhanush,selvaragavan,seithi.com,seithinews
சினிமா,முதன்மை செய்தி

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது.   

 


ponniyin selvan part 1,ponniyin selvan,alai kadal song,ar rahman,maniratnam
சினிமா,முதன்மை செய்தி

'பொன்னியின் செல்வன்' பாகம் 1 திரைப்படத்தின் அலை கடல் பாடலின் Lyriv Video இணையத்தில் வெளியானது!

 


ramarajan,samaniyan teaser,rahesh,tamil cinema
சினிமா,முதன்மை செய்தி

ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப்பின் கதாநாயகனாக நடிக்கும் சாமானியன் திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது.

   


RRR movie,oscar awards,brammastra,cello show,gujarati movie,iravin nizhal
சினிமா,முதன்மை செய்தி

2023-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் தேர்வில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குஜராத்தி திரைப்படமான செலோ ஷோ தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

95-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகர டோலி திரையரங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த விழாவிற்கான திரைப்படங்கள் தேர்வு நடைபெற்றுவந்தது. இதன் பட்டியலில் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர்., விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் ஃபைல்ஸ், பதாய் ஹோ, மாதவனின் ராக்கெட்ரி, பிரம்மாஸ்த்ரா, இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல் உள்ளிட்ட முக்கிய திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.  

இதில் குஜராத்தி மொழி திரைப்படமான செலோ ஷோ திரைப்படமும் இடம்பெற்றிருந்தது. பான் நாலின் என்பவர் இயக்கியுள்ள இப்படம் நாடு முழுவதும் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் பவேஷ் ஸ்ரீமாலி, பவின் ரபாரி, ரிச்சா மீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சித்தார்த் ராய் கபூர் ஃபில்ம்ஸ், ஜுகத் மோஷன் பிக்சர்ஸ், மான்சூன் ஃப்லிம்ஸ், மற்றும் மார் டுலே நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

ஒரு சிறுவனுக்கு சினிமா மீது ஏற்படும் ஈர்ப்பும், அதனால் அவன் வாழ்வில் நிகழும் மாற்றங்களுமாக நீளும் இத்திரைப்படம், பரிந்துரைக்கப்பட்ட இந்தியப் படங்களிலிருந்து ஆஸ்கர் விருது விழாவில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை இந்தியத் திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் நாகபர்ணா தெரிவித்துள்ளார்.

பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குஜராத்தி படமான செலோ ஷோ இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சினிமா ரசிகர்களிடையே அப்படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 


pagasuren,siva sivayam,sam cs,mohang,selvaragavan,மோகன்ஜி,செல்வராகவன்,பகாசூரன்,சிவா சிவாயம்
சினிமா,முதன்மை செய்தி

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடித்துள்ள ‘பகாசூரன்’ படத்தின் ‘சிவ சிவாயம்’ பாடலின் Lyrical Video இணையத்தில் வெளியானது!


கமல்ஹாசன்,இந்தியன் 2,ஷங்கர்,காஜல் அகர்வால்,indian 2,kamalhassan,shankar,kajal agarwal
சினிமா,முதன்மை செய்தி

'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்து 1996-ல் வெளியான திரைப்படம் 'இந்தியன்'. ஊழலால் திளைக்கும் அரசு அதிகாரிகளும், அவர்களைக் களையெடுக்கும் 'இந்தியன் தாத்தா' முதியவருமான கதையம்சத்தில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இயக்குநர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் திரைப்பயணத்தின் முக்கியப்படமாகவும் அமைந்தது.

இந்நிலையில், கிட்டத்தட்ட 24 வருடங்களுக்குப்பிறகு இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு தொடங்கியது. ஷங்கர் இயக்க, லைகா தயாரிக்கவிருந்த 'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், விவேக் உள்ளிட்ட நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தான் படப்பிடிப்பின்போது நிகழ்ந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது. மேலும் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் தொடர்ந்து படப்பிடிப்பு தாமதமாகிவந்தது. தொடர் தாமதம் காரணமாக ஒருபக்கம் தெலுங்கில் ராம் சரண், கியாரா அத்வானி ஆகியோரை வைத்து 'RC15' பட இயக்க வேலைகளில் இறங்கிவிட்டிருந்தார் ஷங்கர்.

இதனால் 'இந்தியன் 2' படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று படக்குழுவிலிருந்து தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், ரசிகர்கள் மகிழ்ச்சியுறும் வகையில், 'இந்தியன் 2' படப்பிடிப்பு இன்று முதல் துவங்குவதாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 


கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்