ஓபிஎஸ், ஓபிஎஸ் சகோதரர், பாலமுருகன் மரணம், அதிமுக, OPS, OPS brother, Balamurugan death, AIADMK, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று திடீரென மரணம் அடைந்தார்.

முன்னாள் துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகன் புற்றுநோயால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து நேற்று இரவு வீடு திரும்பினார். இந்நிலையில், திடீரென்று இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஓ.பாலமுருகன், ஓ.ராஜா, ஓ.சுந்தர் என மூன்று தம்பிகள் உள்ளனர். இதில் ஏற்கெனவே அண்ணன் இறந்துவிட்டார். இவருக்கு நான்கு சகோதரர்கள் உள்ள நிலையில் தற்பொழுது இதில் இரண்டாவது தம்பியான பாலமுருகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்று காலை இயற்கை உயிரிழந்தார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தம்பியின் குடும்பத்தினருக்கு அதிமுக மற்றும் அனைத்து கட்சித்தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், “அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.பாலமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் மரணமடைந்திருப்பதை அறிந்து வேதனையுற்றேன். தகவல் அறிந்ததும் ஓ.பன்னீர் செல்வம் அவர்களை தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். பாலமுருகன் அவர்களை இழந்து வாடும் பன்னீர் செல்வம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அதிமுக ஒருங்கிணைப்பாளர் அண்ணன்  ஓ.பன்னீர்செல்வம்  அவர்களின் இளைய சகோதரர் ஓ.பாலமுருகன் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். ஓ.பாலமுருகன் அவர்களை இழந்துவாடும் அண்ணன்  திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார். 


ரஜினிமகள் செளந்தர்யா, அஜித், முதல்வர் பொது நிவாரண நிதி, கொரோனா நிதியுதவி, Rajini daughter  Soundarya Rajinikanth, Ajith, Chief Minister General Relief Fund, Corona Funding
தமிழ்நாடு,சினிமா,முதன்மை செய்தி

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா 1 கோடி ரூபாயும், நடிகர் அஜித் 25 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்றை எதிர்கொள்வதற்காக தாராளமாக நிதி அளிக்கலாம் என்று கொடையாளா்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக திரைப்பிரபலங்கள் பலர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சிவகுமார், நடிகர் அஜித் உள்ளிட்டோர் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர்.

இந்தநிலையில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் இருவரும், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கொரோனா தடுப்பு பணிக்காக ஒரு கோடி ரூபாயை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர்.

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார். வங்கி பரிவர்த்தனை மூலமாக கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ. 25 லட்சம் நிதி அனுப்பியுள்ளார்.


கொரோனா, முகக்கவசம், கொரோனா தடுப்பூசி, முதல்வர் ஸ்டாலின், கொரோனா விழிப்புணர்வு, Corona, mask, corona vaccine, CM Stalin, corona awareness
தமிழ்நாடு,முதன்மை செய்தி

கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்வதற்காக கட்டாயம் இரண்டு முகக்கவசம், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் 300ஐ தாண்டி செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் கட்டுப்பாடுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாட்டை பொதுமக்கள் கடைப்பிடிப்பதில்லை. தேவையின்றி வெளியே செல்கின்றனர். இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதோடு, தனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனாவை பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முகக்கவசம் மனிதர்களுக்கு உயிர் கவசமாக மாறியுள்ளது. அதனால் அதனை அனைவரும் அணிய வேண்டும். முடிந்தால் அதிக மக்கள் கூடும் இடங்களில் இரண்டு முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள். கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.

வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புபவர்கள் கட்டாயம் கை, கால்களை சுத்தம் செய்துகொண்டு, தனிமையில் இருந்துகொள்ளுங்கள். விழிப்புணர்வுடன் இருந்து "நம்மையும் காத்து நாட்டு மக்களையும் காப்போம்" என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கடலூர் அரசு மருத்துவமனை, வாலிபர் மரணம், சுப்பிரமணியன், முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ், Cuddalore Government Hospital, Youth Death, Subramanian, Chief Minister Stalin, EPS, tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,முதன்மை செய்தி

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இராஜா என்பவர் உயிரிழந்தது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இராஜா என்பவர் உயிரிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திட்டக்குடி ராஜா அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு போதுமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்யாமல், ஆக்சிஜன் மாஸ்க்- சிலிண்டரை அரசு மருத்துவர் ஒருவரே எடுத்துச் சென்றதனால் உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை பெறுவோர்க்கு தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளதை உறுதி செய்திடவும், இது போன்ற சம்பவங்கள் இனியும் நிகழாமல் உயிர்களை காத்திட துரித நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.

இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர், அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று சந்தேகத்தின் பேரில் இராஜா (49) என்பவர் 05.05.2021 அன்று அனுமதிக்கப்பட்டார். அவரின் நுரையீரல் பாதிப்பு 80% முதல் 90% என்று CT Chestல் தெரியவந்தது. அவருக்கு 08.05.2021 அன்று RTPCR Test எடுத்தபோது Negative என்று அறிக்கை வந்தது. நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு இருந்தமையால் அனுமதித்த நாள் முதல் NRM Mask மூலம் ஆக்சிஜன் ஒரு நிமிடத்திற்கு 10 முதல் 15 லிட்டர் வரை அவருக்கு செலுத்தப்பட்டு வந்தது.

18.05.2021 அன்று காலை நோயாளியின் ஆக்சிஜன் நுரையீரல் நிறைவின் அளவு 60% இருந்ததால் அவருக்கு HFNO முறையில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. 19.05.2021 அன்று காலை ஆக்சிஜன் தேவை அதிகமானதால் HFNO என்னும் முறைக்கு மாற்றப்பட்டார். அவ்வாறு மாற்றிய உடன் நோயாளியின் ஆக்சிஜன் அளவு 78% முதல் 80% வரை இருந்தது.

20.05.2021 அன்று நோயாளி ராஜா காலை உணவு சாப்பிடுவதற்காக ஆக்சிஜன் செலுத்தும் முக கவசத்தை தாமாகவே நீக்கிவிட்டு உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். இதே நேரத்தில் தனியார் மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட 40 வயதுடைய மணிகண்டன் என்ற நோயாளி 30% மட்டுமே ஆக்சிஜன் நுரையீரல் நிறைவின் அளவு இருந்த நிலையில் புதியதாக அனுமதிக்கப்பட்டதால் உடனே வளாகத்தில் இருந்த மருத்துவக் குழு சிகிச்சை அளிக்க விரைந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளை தயார் செய்து கொண்டிருந்தது. நோயாளி மணிகண்டனுக்கும் ஆக்சிஜன் தேவைப்பட்டதால், தரைதளத்தில் இருந்த CPAP Machine Oxygen Pin பொருத்த முயற்சி செய்யப்பட்டு அது பொருந்தாமையால் நோயாளியின் உயிர் காக்கும் பொருட்டு முதல் தளத்தில் உள்ள CPAP Machine கீழ்தளத்திற்கு பொருந்தும் என்பதால் கவலைக்கிடமான இருந்த மணிகண்டன் என்ற நோயாளியை காப்பாற்றும் பொருட்டு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக தரைதளத்தில் இருந்த CPAP Machine முதல் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நோயாளி ராஜா அருகில் இருந்த ஆக்சிஜன் பின்னை பொருத்தி தயார் நிலையில் வைத்துவிட்டு பின்பு அவர் அருகில் இருந்த CPAP Machine நோயாளி ராஜா உணவு அருந்திகொண்டிருந்ததாலும், தற்காலிகமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்ததாலும் CPAP Machine-ஐ மாற்றி கீழ்தளத்தில் இருக்கும் நோயாளி மணிகண்டனை காப்பாற்றிவிடலாம் என்று மருத்துவக் குழு விரைந்து செயல்பட்டது.

முதல் தளத்திலிருந்து கொண்டு வந்த CPAP Machine Oxygen Pin கீழ் தளத்தில் பொருந்தியதால் நோயாளி மணிகண்டனுக்கு ஆக்சிஜன் உடனே செலுத்தப்பட்டது. பின்பு அவர் உயிர் காப்பாற்றப்பட்டது. இதேவேளையில் முதல் தளத்தில் உள்ள நோயாளி ராஜாவிற்கு CPAP Machineஐ கண்காணிக்க மருத்துவர்கள் விரைந்தபோது அவர் தொடர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்.

அவருக்கான மாற்றம் செய்யப்பட்ட CPAP Machine சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையிலேயே தான் இருந்தது. தொடர்ந்து உணவு அருந்தி கொண்டிருக்கும்பொழுது திடீர் என்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. பின்பு மருத்துவர்கள் இயன்ற சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நோயாளி ராஜா உயிரிழந்தார்.

இத்தகவல் தெரிந்தவுடன் தமிழக முதல்வரின் உத்தரவின்படி இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.


கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம், Makkal Needhi Maiam, KamalHaasan, tamil news, international news, world news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
அரசியல்,முதன்மை செய்தி

"என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்" என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலின் தோல்விக்கு பிறகு, மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர், துணைத் தலைவர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கட்சியிலிருந்து விலகிய நிலையில், கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், பேசும் கமல், பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு காலம் பதில் சொல்லும். நம் மையக் கிணறு அவ்வளவு சாதாரணமாக தூர்ந்துபோய்விடாது என்பது தற்கால தாக சாந்திக்காக குடிக்க வந்தவர்களுக்கு புரியாது. கட்சியின் உள்கட்டமைப்பை தனி மனிதர்கள் தங்கள் ஆதாயத்திற்காக மாற்றி ஆடிய விளையாட்டுகள் இனி தொடராது. உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் விரைவில் காண்பார்கள்.

https://twitter.com/ikamalhaasan/status/1396783051590365185 வீடியோவை பார்க்க க்ளிக் செய்யவும்....

மக்களிடம் முக அறிமுகம் இல்லாதவர்களையும் சற்றே தெரிந்தவர்களையும் புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்னவைக்க நாம் நினைத்ததுதான் சர்வாதிகாரமாகத் தெரிகிறது. தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றிப் பாடம் கற்பது நாம் கண்ட சரித்திரம். கூட்டணி வைத்துக் கொள்வதில் நாம் காட்டிய வெளிப்படைத்தன்மை அனைவரும் அறிந்ததே. சென்றவர்கள் திரும்பி வந்தால் அவர்களை சேர்த்து கட்சியை மீண்டும் மாசுபடுத்த விடமாட்டோம். உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.


பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி, ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகள், பாலியல் வன்கொடுமை, Padma Seshadri Balabhavan School, Teacher Rajagopalan, Students, Sexual Abuse
தமிழ்நாடு,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

பத்ம சேஷாத்தி பாலபவன் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனை 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஆசிரியர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை, கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகவும், இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பழைய மாணவ, மாணவிகள் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். மாணவிகளிடம் அநாகரிகமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப்பில் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் மாணவிகள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக எம்பிகள் கனிமொழி, தயாநிதி மாறன், தங்க தமிழச்சி பாண்டியன் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியிருந்தனர். இதையடுத்து, காவல்துறையினர் பாலியல் தொல்லை தொடர்பான புகாரில் ராஜகோபாலன் நேற்று கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்க அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, தனியார் பள்ளி தாளாளர் மற்றும் பள்ளி முதல்வர் கீதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து, பள்ளி நிர்வாகம், அறிக்கையை முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை பள்ளிக்கல்வி ஆணையருக்கு முதன்மை கல்வி அலுவலர் அனுப்பி வைத்தார். இதை தொடர்ந்து கல்வி ஆணையர், தமிழக அரசிடம் அந்த அறிக்கையை சமர்ப்பித்ததாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போக்ஸோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுன் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், கடந்த 5 ஆண்டுகளாக இதே போன்று பிளஸ் ஒன் மற்றும் பிளஸ்-டூ மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மாணவிகளின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு வாட்ஸ்அப் மூலமாக அவர்களிடம் சேட் செய்வது மாணவிகளின் அந்தரங்க புகைப்படத்தை அனுப்ப நிர்பந்திப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்ததையும், தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். வணிகவியல் பாடத்தில் மேல்நிலை பள்ளி ஆசிரியராக கடந்த 27 ஆண்டுகள் பத்மா சேஷாத்திரி பள்ளியில் வேலை பார்த்து வருகிறார் ராஜகோபாலன்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் உஷாராகி, தன்னுடைய செல்போனில் உள்ள ஏராளமான மாணவிகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் அவர்களுடன் பேசிய அந்தரங்க சேட் ஆகியவற்றை டெலிட் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில ஆசிரியர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என ராஜகோபால் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் மகிளா நீதிமன்ற நீதிபதி முகமதுபரூக் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


டாடா நிறுவனம், டாடா ஸ்டீல், டாடா ஊழியர்கள், கொரோனா, ஊழியர்கள் மரணம், Tata Company, Tata Steel, Tata Employees, Corona, Tata Employees Death, tamil news, international news, world news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
இந்தியா,முதன்மை செய்தி

கொரோனாவால் உயிரிழந்த தங்களது ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதான 60 வயது வரை தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும் என்று டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

மரணம் அடைந்த ஊழியர்கள் கடைசியாக பெற்ற சம்பளம் இதற்காக கணக்கிடப்படும் என்றும் அதே போன்று இறந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ வசதிகள், வீட்டு வசதி உள்ளிட்டவையும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது டாடா ஸ்டீல் நிறுவனம்.

டாடா ஸ்டீல் நிறுவனப் பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக பணியாற்றி அவர்கள் கொரோனா பாதித்து இறந்தால் அவர்களின் பிள்ளைகளின் பட்டப்படிப்பு வரையிலான அனைத்து செலவையும் டாடா நிறுவனமே ஏற்றுக் கொள்ளும் என தெரிவித்துள்ளது.


பிஎஸ்பிபி பள்ளி, பாலியல் விவகாரம், என்று பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி, கமல்ஹாசன், PSBB School, Sexual Affairs, Padma Seshadri Bala Bhavan School, Kamalhaasan, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

``இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த மகாநதி. இன்றும் அந்த பதட்டம் குறைந்தபாடில்லை' என்று பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்தவேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் நிகழ்ந்த, நிகழும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவினை அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகளைப் போர்க்கால அவசரத்தில் விசாரிக்கவேண்டும்.

இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த மகாநதி. இன்றும் அந்த பதட்டம் குறைந்தபாடில்லை. கண்ணை இமை காப்பது போல நாம் நம் கண்மணிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். ஆன்லைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நம் பிள்ளைகள் கையாளும்போது பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் சரிபார்க்க வேண்டும். பிள்ளைகள் சொல்லும் பிரச்னைகளுக்குக் காது கொடுக்கவேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி அவர்களுக்குத் துணையாக இருக்கவேண்டும்.

இந்தப் பிரச்னையை குறுகிய கால அரசியல் ஆதாயத்துக்காக சாதிப் பிரச்னையாகத் திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன். குற்றத்தைப் பேசாமல், குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்னையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது. குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஓர் அறிவுச் சமூகமாக நாம் அனைவருமே போராடி நீதியை நிலைநாட்ட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.


லட்சத்தீவு, காஷ்மீர், மோடி, பாஜக, மத்திய அரசு, வைகோ, ஆர்எஸ்எஸ், Lakshadweep, Kashmir, Modi, BJP, Central Government, Vaiko, RSS, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
அரசியல்,முதன்மை செய்தி

"லட்சத் தீவில், பாஜக நரேந்திர மோடி அரசு மேற்கொண்டு வருகின்ற அடக்குமுறையை கண்டித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரபுல் கோடா படேலை உடனே திரும்பப் பெற வேண்டும் என, குடியரசுத் தலைவரை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் சாதி மதவெறிக் கும்பல் வழிநடத்தும், பாரதிய ஜனதா கட்சி, ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல், இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் அடிப்படையைத் தகர்த்து நொறுக்க, சம்மட்டி கொண்டு தாக்கி வருகின்றது. நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற ஏழாம் ஆண்டு நிறைவை ஒட்டி, கடந்த ஆறு மாதங்களாக தில்லி வீதிகளில் அமர்ந்து போராடிக் கொண்டு இருக்கின்ற விவசாயிகளின் அழைப்பை ஏற்று, நாடு முழுமையும் கருப்புக்கொடி அறப்போர் நடைபெற்றது. அதற்கு ஆதரவு தெரிவித்து விடுத்த அறிக்கையில், பாஜக ஆட்சியின் கொடுமைகளைச் சுட்டிக் காட்டி இருந்தேன்.

இப்போது, நமக்கு அருகில் நிகழ்கின்ற அடுத்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்து இருக்கின்றது. கேரளத்திற்கு மேற்கே, அரபிக் கடலில், 32 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கொண்ட இலட்சத்தீவு இருக்கின்றது. மக்கள் தொகை ஒரு லட்சத்திற்குள்தான். அவர்களுள் 99 விழுக்காட்டினர், பட்டியல் இனப் பழங்குடியினர். ஆனால், அவர்கள் முஸ்லிம்கள் என்பது, சங் பரிவார் கும்பலின் கண்களை உறுத்துகின்றது.

இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின்படி, காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்க முடியாது. ஆனால், பாஜக அரசு அந்தச் சட்டத்தைத் திருத்தி, காஷ்மீர் மாநிலத்தையும் இரண்டாகப் பிரித்து விட்டது. அதை எதிர்த்து மக்கள் வீதிக்கு வர முடியாதபடி, ஓராண்டுக்கும் மேலாக வீடுகளுக்கு உள்ளேயே அடைத்து வைத்துப் பட்டினி போட்டனர். அம்மாநிலத்தின் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் சிறையில் அடைத்தனர். அதேபோன்ற அடக்குமுறையை, இப்போது லட்சத்தீவில் மேற்கொள்கின்றனர்.

லட்சத்தீவுகளிலும், பிற மாநிலத்தவர் நிலம் வாங்க முடியாது. அந்த மாநில மக்கள், எளிமையான, இயற்கை வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். அங்கே மது கிடையாது. குற்ற வழக்குகள் இல்லை. விவசாயம் செய்யும் நிலப்பரப்பு இல்லை என்பதால், மீன்பிடித்தலும், தேங்காய் வணிகமும்தான் முதன்மையான தொழில். மாட்டுக்கறிதான் முதன்மை உணவு. பள்ளி மாணவர்களுக்கான பகல் உணவிலும் கூட மாட்டுக்கறியே வழங்கப்பட்டு வந்தது.

லட்சத்தீவு, இந்திய ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதி. ஆனால், துணைநிலை ஆளுநர் கிடையாது. தலைமைப் பொறுப்பில், (Administrator) தினேஷ் ஷர்மா இருந்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் இயற்கை எய்தினார். அடுத்து, பிரபுல் கோடா பட்டேல் என்பவரை, நரேந்திர மோடி அனுப்பி வைத்தார். அவர், மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அந்த மாநில உள்துறை இணை அமைச்சர் பொறுப்பு வகித்தவர்.

ஆர்எஸ்எஸ் கும்பல் பிறப்பித்த ஆணைகளை நிறைவேற்றத் தொடங்கினார். LDAR (Lakshadweep Development Authority Regulations) என்ற சட்டத்தை கொண்டு வந்தார். இதன்படி, லட்சத்தீவில் வசிக்கும் எவரையும் எந்த காரணமும் கூறாமல், நிலத்தில் இருந்து வெளியேற்றவோ அல்லது மாற்று இடத்தில் வசிக்கவோ உத்தரவிடலாம். குற்றம் புரிவோர் இல்லாத லட்சத்தீவில், PASA(Lakdhadweep Anti-Social Activity Regulations) என்ற சட்டத்தின் கீழ், எவரையும் காரணம் எதுவுமே இல்லாமல் கைது செய்து, ஓராண்டு சிறையில் அடைக்கலாம்; Draft Panchayat Notification என்ற பெயரில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் ஊர் ஆட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது;

Lakshadweep Animal Preservation Regulations என்ற பெயரில் கால்நடைகள் பாதுகாப்பு சட்டம் என்ற சட்டத்தின் திரை மறைவில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மாட்டுக்கறி வைத்து இருக்கவோ, பாதுகாக்கவோ, கொண்டு செல்லவோ கூடாது; மீறினால் மாட்டுக்கறி பறிமுதல் செய்யப்படுவதோடு, கைது செய்யப்பட்டு, 10ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்; 1 லட்சம் ரூபாயில் இருந்து 5லட்சம் ரூபாய் வரை தண்டம் கட்ட வேண்டும்; இனி பள்ளிகளில் மாட்டுக்கறி கிடையாது; பள்ளிகளில் மதிய உணவு சமைக்கும் ஊழியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் பணி நீக்கம்; 38க்கு மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகின்றன; சுற்றுலா என்ற பெயரில் சாராயக்கடைகளைத் திறக்க ஆணை. 190க்கு மேற்பட்ட சுற்றுலா துறை ஊழியர்கள் பணி நீக்கம்; கடற்கரையின் அழகு கெட்டுப்போகிறது என்ற பெயரில்,மீனவர்கள் தங்களது வலைகள் உட்பட மீன் பிடி கருவிகளை பாதுகாக்கும் கூடங்கள் (Sheds) அனைத்தையும் பிய்த்து வீசி விட்டனர்;

பவழப் பாறைகளையும், இயற்கையின் பேரழகையும் கொண்ட லட்சத்தீவின் கடற்கரையையும், நிலப்பரப்பையும், தனது நண்பர்களான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தங்கத்தட்டில் வைத்து தாரை வார்த்து கொடுக்க நரேந்திர மோடியால் அனுப்பப்பட்ட, பிரபுல் கோடா படேல், அந்த வேலையை, மின்னல் வேகத்தில் செய்து வருகின்றார். பொறுப்பு ஏற்ற நான்கே மாதங்களுக்குள், இத்தனை அத்துமீறல்கள். நீண்ட நெடுங்காலமாக, லட்சத்தீவு மக்கள் தங்களது வணிகம் நடவடிக்கைகளை, கேரள மாநிலம் பேப்பூர் துறைமுகம் வழியாகவே செய்து வருகின்றனர்; இனி, கர்நாடகத்தின் மங்களூரு துறைமுகம் வழியேதான் நடக்க வேண்டும் என்ற உத்தரவையும் போட்டுள்ளார். இலட்சத்தீவு வணிகம் அனைத்தையும், கேரளாவில் இருந்து அப்படியே பாஜக ஆளும் கர்நாடகாவுக்கு கொண்டு சென்று விட வேண்டும்; லட்சத்தீவு மக்களின் கேரள உறவையும் தொடர்புகளையும் துண்டித்து விட வேண்டும் என்பதுதான் நோக்கம்.

லட்சத்தீவு மக்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் பிரபுல் படேல் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எளமரம் கரீம், ஆரிஃப் ஆகியோர், குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதி உள்ளனர். பிரபுல் கோடா படேலைத் திரும்ப அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத் தீவில், பாஜக நரேந்திர மோடி அரசு மேற்கொண்டு வருகின்ற அடக்குமுறையை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது; பிரபுல் கோடா படேலை உடனே திரும்பப் பெற வேண்டும் என, குடியரசுத் தலைவரை வலியுறுத்துகின்றோம்" என்று கூறியுள்ளார்.


கோவை, கொரோனா, கலெக்டர், அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள், Coimbatore, Corona, Collector, AIADMK, BJP MLAs, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி,கொரோனா வைரஸ்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பாஜக எம்.எல்.ஏ. வானசி சீனிவாசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை தவிர கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதில், கோவை மாவட்டத்தில் மட்டும் ஒருநாள் பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்து, சென்னை பாதிப்பை விட உச்சம் தொட்டது. இதனால், கோவையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி, கோவை மாவட்டத்தில் ஒருநாளைக்கு சராசரியாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, 70 சதவீதம் மாநகராட்சியில் உள்ள நெருக்கடிப் பகுதிகளில் இருந்து தான் தொற்று பாதிப்பு உறுதியாவதால், தொழிற்சாலைகள், மக்கள் கூடும் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறினார்.

வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளதாக என்பதை கண்டறியும் பணியில் 3 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 100 வீடுகளுக்கு ஒருவர் என சோதனை செய்வதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவத்துள்ளார். மேலும், அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.

கோவையில் நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். இருப்பினும், நோய் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற அரசின் வழிமுறைகளை, பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று, அந்த மாவட்டத்தை சேர்ந்த 10 எம்எல்ஏ-க்கள் ஆட்சியர் நாகராஜிடம் மனு அளித்தனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 9 அதிமுக எம்எல்ஏ-க்கள் மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் ஒன்றாக சென்று மனு அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, கோவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுதினார்.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சிகிச்சையை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த வேண்டும் என்றும் இதற்காக தனி அலுவலரை நியமிக்க வேண்டும் எனவும்அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.


கொரோனா, லாக்டவுன், தமிழ்நாடு, ஸ்டாலின், Corona, Lockdown, Tamil Nadu, Stalin, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,முதன்மை செய்தி,கொரோனா வைரஸ்

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜூன் மாதத்தில் ரேஷன் கடைகளில் 13 மளிகை பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழி காட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், முன்னதாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தும், ஆலோசனை மற்றும் கருத்துகளைப் பரிசீலித்தும், கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு வரும் 31-5-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 காலை 6 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

எனினும், பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும்.

மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.

இது தவிர, பொது மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


ராஜஸ்தான், ஜெய்ப்பூர், டாக்டர் தம்பதி, சுட்டுக்கொலை, crime, Doctor, Police Rajasthan, Rajasthan, RajCMO, VasundharaBJP
இந்தியா,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து டாக்டர் தம்பதிகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது குறித்த பதற வைக்கும் வீடியோ காட்சி வெளியாகி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் தம்பதிகள் சுதீப் குப்தா அவரது மனைவி சீமா குப்தா. இவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள பாரத்பூரில் காரில் சென்று கொண்டிருந்தனர். இருவரையும் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் காரை மடக்கி நிறுத்தினர். அதிலிருந்து இறங்கிய ஒருவன், சில நொடிகளில் டாக்டரையும் அவர் மனைவியையும் மிக நெருக்கத்தில் நின்று 5 முறை சுட்டான். இதில் டாகடர் தம்பதிகள் அதே இடத்தில் பலியானார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீபா தேவி என்ற 25 வயது இளம் பெண்ணையும் அவளது 6 மாத குழந்தையையும் கொலை செய்த வழக்கில் இந்த டாக்டர் தம்பதிகள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண காவல்துறையினர் முயற்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களை மிக விரைவில் கைது செய்வோம் என பரத்பூர் வட்ட அதிகாரி (நகர) சதீஷ் வர்மா கூறினார்.

 

வீடியோவை பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://twitter.com/sachinsaini14/status/1398313598682746882 


கொரோனா, பெற்றோர்கள் மரணம், குழந்தைகள், முதல்வர் ஸ்டாலின், Corona, parents death, children, Chief Minister Stalin
தமிழ்நாடு,முதன்மை செய்தி,கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா ஆயிரக்கணக்கானோரை காவு வாங்கி வருகிறது. பல மாநிலங்களில் பெற்றோரை இழந்து பல குழந்தைகள் அனாதையாகவிட்டனர். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து, பல மாநிலங்களில் ஆதரவற்றவர்களாக்கப்பட்ட குழந்தைகளின் பெயரில் வைப்பு நிதி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு தொகையாக அவர்களது வங்கிக் கணக்கில் வைக்கப்படும். அந்த குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும் போது அந்த தொகை வட்டியோடு சேர்த்து வழங்கப்படும்.

பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை அரசே ஏற்கும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு விடுதிகளில் தங்க வைக்க முன்னுரிமை வழங்கப்படும், கொரோனா தொற்றினால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.


புதுச்சேரி, கருப்பு பூஞ்சை நோய், பெண் பலி,  Puducherry, black fungus, female death, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,முதன்மை செய்தி,கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோயால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நோய்க்கு பெண் ஒருவர் பலியாகியிருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் தேவன். இவருடைய மனைவி எழிலரசி. கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை எழிலரசி உயிரிழந்தார். புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோயால் ஏற்பட்டுள்ள முதல் உயிரிழப்பு இது.

இதனிடையே கொரோனாவிற்கு மேலும் ஒரு செவிலியர் பலியாகியுள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு செவிலியர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகிறார்கள். இந்நிலையில் கோரிமேடு பிரியதர்ஷினி நகரை சேர்ந்த 45 வயதுமிக்க சசிபிரபா, ஜிப்மர் மருத்துவமனையில் செவிலிய அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இவருடைய உயிரிழப்பு செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளி, கராத்தே பயிற்சியாளர், இளம்பெண், பாலியல், கைது, Padma Seshadri Millennium School, karate coach, teenager, sex, arrested
தமிழ்நாடு,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 26 வயது இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த புகார் பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் போக்ஸோ சட்டத்தில் கைதானார். அவர் மீது ஏராளமான மாணவிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து ஆசிரியர் ராஜகோபாலனை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், சென்னை பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் என்பவரும் பாலியல் தொந்தரவு புகாரில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அண்ணாநகர் கிளையில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் என்ற கராத்தே மாஸ்டர் மீதும் 26 வயது இளம்பெண் ஒருவர் 7 ஆண்டுக்கு பிறகு பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாநகரை சேர்ந்த அந்த இளம்பெண் கடந்த 2014-ம் ஆண்டு கெபிராஜ் நடத்திய தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அப்போது, ஜூடோ போட்டிக்காக நாமக்கல் சென்றுவிட்டு திரும்பி காரில் வந்த போது அந்த இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி கெபிராஜ் பாலியல் தொந்தரவு செய்து உள்ளார். இதற்கு ஒத்துழைக்காததால் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்.

இது பற்றி அந்த பெண் தற்போது அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கராத்தே மாஸ்டர் கெபிராஜை அதிரடியாக கைது செய்தனர்.

இதேபோல் கெபிராஜ், தான் வேலை பார்த்த பத்ம சேஷாத்ரி பள்ளியிலும் பயிற்சியின் போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா? மற்றும் அவரது பயிற்சி மையத்திலும் பெண்களுக்கு தொல்லை கொடுத்தாரா என்று விசாரணை நடந்து வருகிறது. இது பற்றிய புகார்களை பாதிக்கப்பட்ட மாணவிகள், பெண்கள் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே கராத்தே மாஸ்டர் கெபிராஜின் லீலைகள் பற்றிய விவரம் தெரியவரும்.

இதற்கிடையே பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக கெபிராஜின் நண்பர்கள் 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே இதில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய கிரிக்கெட் வீரர், புவனேஷ்வர் குமார், கொரோனா, புவனேஷ்குமார் மனைவி, மீரட், Indian cricketer, Bhuvneshwar Kumar, Corona, wife of Bhuvneshwar, Meerut, tamil news, india news, india news paper, national news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
விளையாட்டு,முதன்மை செய்தி,கொரோனா வைரஸ்

கொரோனா அறிகுறியை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார்- அவரது மனைவி வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

2012-ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று வருபவர் புவனேஷ்வர் குமார். ஆனால் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்படவில்லை. காயம் காரணமாக டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. எனினும் 20 ஓவர் அணியில் புவனேஷ்வர் குமார் நிச்சயம் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் புவனேஷ்வர் குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் கொரோனா அறிகுறி இருப்பதால் மருத்துவர்கள் அறிவுரையின்படி புவனேஷ்வர் குமாரும் அவரது மனைவி நுபுருவும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டனர்.

தம்பதியினருக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மே 21 அன்று அவரது தாயாருக்கு தொற்று உறுதியானதை அடுத்து குடும்பத்தில் மற்றவர்களும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த மாதம் புவனேஷ்வரின் தந்தை கிரண் பால் சிங் கல்லீரல் புற்றுநோயால் காலமானார்.

2012 டிசம்பரில் இந்திய கிரிக்கெட் அணியில் புவனேஷ்வர் அறிமுகமானதில் இருந்து இதுவரை 21 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 48 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் மொத்தம் 246 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


மணி செய்தி

28ஆம் ஆண்டில் திருச்சி மாநகராட்சி! கல்வி, கலை, விவசாயம், தொழில், ஆன்மிகம், சுற்றுலா என பன்முக சிறப்புகளை கொண்ட திருச்சி காவேரி கரையில் தனித்துவம் பெற்றது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி சங்க காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், தற்போதைய தமிழகத்தின் முக்கியமான நான்காவது பெரிய நகரமாகவும் உள்ளது. தமிழக நிலப்பரப்பின் மையப் பகுதியில் அமைந்துள்ள காரணத்தால், பல பேரரசு படையெடுப்புகளின் தாக்கமும் இங்கு காணப்படும்! சிரா என்ற சமணத்துறவி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் தவமிருந்ததாகவும், அத்துறவியின் பள்ளி சிராப்பள்ளி என்றாகி அதுவே திருச்சிராப்பள்ளியாக மாறியது என்று சொல்வார்கள். மேலும் இவ்வூர் தென்னாட்டு கைலை மலை என்றும் கருதப்படுகிறது. கட்டிடக்கலையில் ஓர் மைல்கல்லாக அமைந்திருக்கும் கல்லணை திருச்சி மாவட்டத்தில் தான் அமைந்திருக்கிறது. சுமார் 27 லட்சம் மக்கள் வாழும் திருச்சியில் வேளாண்மை தொழில் தான் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதுமட்டுமின்றி துப்பாக்கி தொழிற்சாலை, ரயில் தொழிற்சாலை, நூலாலைகள் போன்றவைகள் இயங்குவதால் இந்தியாவின் "ஆற்றல் திறன் மற்றும் கட்டுருவாக்க தொழில் தலைநகரம் என்று அழைக்கப்படும் திருச்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நேற்றோடு 27 ஆண்டுகள் முடிவடைந்தன. இந்த நாளை தான் திருச்சி தினம் என திருச்சிக்காரர்களால் கொண்டாடப்படுகிறது.


தமிழ்நாடு, சென்னை, பெட்ரோல், டீசல், மத்திய அரசு, TamilNadu, Chennai, Petrol, Diesel, Central Government, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,முதன்மை செய்தி

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.23-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பெட்ரோல் விலை சதம் அடிக்க இருப்பதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. இதன் பின்னர், கடந்த மார்ச் மாதத்தில் விலை சற்று குறைந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்தது.

நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.95.99-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.90.12-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து 96.23 ரூபாய்க்கு, டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 90.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டுவிடும் என்பதால் இருசக்கர வாகனங்கள் வைத்திருக்கும் நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.


தென் ஆப்பிரிக்கா, குழந்தைகள், உலக சாதனை,  South African Woman, World Record, tamil news, international news, world news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
உலகம்,முதன்மை செய்தி

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் எகுர்ஹுலேனியை சேர்ந்த பெண் கோசியம் தாமாரா சித்தோல் (37). இவரது கணவர் டெபோஹோ சோட்டெட்சி. கர்ப்பமாக இருந்த சித்தோல் பிரிட்டோரியா மருத்துவமனையில் சிசேரியன் மூலம் இவர் குழந்தைகளை பெற்றெடுத்தார். இவருக்கு 10 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளது. ஏழு ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது.

இது குறித்து சோட்டெட்சி கூறுகையில், "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் உணர்ச்சிவசப்படுகிறேன். என்னால் அதிகம் பேச முடியாது. தயவுசெய்து மீண்டும் பேசலாம்" என்று கூறினார்.

சித்தோல், தனது கர்ப்பம் இயற்கையானது என்றும், அவர் கருவுறுதல் சிகிச்சை மூலம் குழந்தை பெறவில்லை என்றும் கூறி உள்ளார்.

சித்தோலின் 10 குழந்தை பிரசவம் உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. ஹலிமா சிஸ்ஸே என்ற பெண் கடந்த மாதம் மாலியாவில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

கின்னஸ் உலக சாதனை புத்தக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "சித்தோல் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற செய்தியை கின்னஸ் உலக சாதனை அறிந்திருக்கிறது. மேலும் நாங்கள் எங்கள் வாழ்த்துகளையும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளை அனுப்பி உள்ளோம். தற்போதைய நேரத்தில், தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்பதால் இதை நாங்கள் இன்னும் சரிபார்க்கவில்லை. ஒரு சிறப்பு ஆலோசகருடன் எங்கள் குழு இதைப் பற்றி ஆய்வு செய்யும்" என்று கூறினார்.


ராமதாஸ், ஸ்டாலின், தமிழக அரசு, 11ம் வகுப்பு மாணவர்கள், நுழைவுத்தேர்வு, Ramadass, Stalin, Tamil Nadu Government, 11th class students, Entrance Exam, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

11-ம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்ற பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும் 11-ஆம் வகுப்புக்கு கடந்த ஆண்டு எவ்வாறு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதோ, அதேபோல் நடப்பாண்டும் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில் சேர, அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தால், அவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி, அதில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்திருக்கிறார். இது சமூகநீதிக்கு எதிரானது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக 10 முதல் 15% மாணவர்களை சேர்க்கலாம்; அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு இணையாகவோ, அதைவிட குறைவாகவோ விண்ணப்பம் பெறப்பட்டால், நுழைவுத்தேர்வின்றி மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் பிரிவை ஒதுக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஏதேனும் ஒரு பாடப்பிரிவுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை விட அதிக மாணவர்கள் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட பாடத்தில் 50 வினாக்களைக் கொண்ட, சரியான விடையை தேர்வு செய்யும் முறையிலான, நுழைவுத் தேர்வை சம்பந்தப்பட்ட பள்ளி அளவில் நடத்தி, மாணவர்களை தேர்ந்தெடுக்கலாம் என பள்ளி நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் ஆணையிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட எந்த பட்டப்படிப்புக்கும் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படக்கூடாது என்பது தான் தங்களின் கொள்கை என்று தி.மு.க அரசு அறிவித்திருக்கிறது. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை என்றாலும் கூட, கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இரு நாட்களுக்கு முன்பு தான் அறிவித்திருந்தார். கல்லூரி மாணவர் சேர்க்கைக்கே நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று வலியுறுத்தும் திமுக அரசு, 11-ஆம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்த ஆணையிடுவது எந்த வகையில் நியாயம்? சமூகநீதிக்கு எதிரான இத்தேர்வை எப்படி ஏற்க முடியும்?

தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் 22.03.2021 அன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பில் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது மாணவர்களை ஏமாற்றும், திசை திருப்பும் செயலாகும். தமிழக அரசு சுட்டிக்காட்டும் வழக்கு என்பது 9, 10, 11 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக வெளியிடப்பட்ட அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஆகும். 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்களின் திறனை சோதிக்க பள்ளி அளவில் சிறிய தேர்வு நடத்தி, அதனடிப்படையில் தான் தேர்ச்சி வழங்கப்பட வேண்டும் என்ற தனியார் பள்ளிகளின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

அப்படியானால், 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையின் போது அவர்களின் திறனை சோதிக்க சில வினாக்களை கேட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிய போது, அதை ஆன்லைனிலோ, நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டால் நேரடியாகவோ செய்யலாம் என்று நீதிபதிகள் கூறினர். இது தனியார் பள்ளிகளுக்கு மட்டும் தான். அதையும் கூட ஓர் ஆலோசனையாகத் தான் நீதிபதிகள் கூறினரே தவிர, ஆணையாக பிறப்பிக்கவில்லை.

அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை நீதிமன்றம் எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை. அவ்வாறு இருக்கும் போது அனைத்து பள்ளிகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்த அரசு துடிப்பது தவறு. அதுவும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டால் மட்டுமே நேரடியாக வினாக்கள் எழுப்பப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள போதிலும், கடுமையான கொரோனா அச்சம் நிலவும் நிலையில் நேரடியாக நுழைவுத்தேர்வை நடத்தி, அடுத்த வாரத்திற்குள் மாணவர் சேர்க்கையை முடித்து பாட வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் கூறியிருப்பது மாணவர் நலனுக்கு எதிரானதாகும்.

11-ஆம் வகுப்புக்கு அவசர அவசரமாக நுழைவுத்தேர்வு நடத்தி, மாணவர் சேர்க்கையை முடிப்பதற்கு அரசு துடிப்பது ஏன்? எனத் தெரியவில்லை. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அவை வெளியிடப்பட்ட பிறகு, அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவது தான் சரியானதாக இருக்கும். கடந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பருவத் தேர்வுகளில் மாணவர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்களின்படி தான் 11-ஆம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. ஆனால், இப்போது பொருந்தாத ஒரு தீர்ப்பைக் காரணம் காட்டி அந்த நடைமுறையை மாற்றக்கூடாது.

எந்தப் படிப்புக்கும் நுழைவுத்தேர்வு கூடாது என்பது தான் தங்களின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் கூறுகிறார். நீட் உள்ளிட்ட எந்த நுழைவுத் தேர்வும் நடத்தக்கூடாது என்று கடந்த 5&ஆம் நாள் நான் வலியுறுத்திய நிலையில், அதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். ஒருபுறம் இவையெல்லாம் நடக்கும் நிலையில் மற்றொருபுறம் மாநில அரசு பள்ளிகளில் 11&ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிக்கிறது. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? இது தான் சமூகநீதியை பாதுகாக்கும் வழியா?

கல்லூரிப் படிப்புக்கே நுழைவுத்தேர்வு கூடாது என்ற நிலையில், பள்ளிப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தி, தவறான முன்னுதாரணத்தை தமிழக அரசு ஏற்படுத்தி விடக்கூடாது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும் 11-ஆம் வகுப்புக்கு கடந்த ஆண்டு எவ்வாறு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதோ, அதேபோல் நடப்பாண்டும் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.


அதிமுக, புகழேந்தி, ஓபிஎஸ், ஈபிஎஸ், பாமக, அன்புமணி, AIADMK, Pugazhendi, OBS, EPS, Bamaka, Anbumani, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
அரசியல்,முதன்மை செய்தி

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் புகழேந்தி நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி, கூட்டணி மூலமாக 23 தொகுதிகளைப் பெற்றுக்கொண்ட பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து தேவையற்ற கருத்துகளைக் கூறி வருகிறார். கூட்டணியில் பாமக இல்லையென்றால் 20 இடங்களில்தான் அதிமுக வெற்றி பெற்று இருக்கும் என்று அவர் கூறுகிறார். முதலில், போட்டியிட்ட 23-ல் 18 இடங்களில் தோல்வியடைந்ததை பற்றி பாமக ஆய்வு செய்ய வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட்டதால்தான், அதிமுக எம்எல்ஏக்கள் உதவியுடன் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை எம்.பி. ஆனார். எனவே, அவர் ஓபிஎஸ்-ஐ தவறாகப் பேசுவதை ஏற்க முடியாது. ஒரு கூட்டணியில் சேருவது, பின்னர் வெளியேறுவது, எங்களால்தான் எல்லாமே நடந்தது என்று கூறுவது பாமக-வுக்கு வழக்கம். ஓபிஎஸ் குறித்து பேசினால், நாங்கள் வேடிக்கைப் பார்ப்போம் என்று கருதினால், அதுமுட்டாள்தனமானது. பாமக போன்ற சிறிய கட்சி, அதிமுகவை கிண்டல் செய்வதை எப்படி வேடிக்கைப் பார்க்க முடியும்" என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் புகழேந்தி நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்த அறிவிப்பில், அதிமுக கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் புகழேந்தி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மணி செய்தி

ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) என்பது தனுஷ் யின் 40 ஆவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கி வை நொட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்தது. இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷ் , ஐஸ்வர்யா லெக்ஷ்மி,கலையரசன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


Coronavirus, Modi, India, கொரோனா, இந்தியா, மோடி, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
இந்தியா,முதன்மை செய்தி,கொரோனா வைரஸ்

பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏனெனில், கொரோனா வைரஸ் இன்னும் நம்முடன்தான் இருக்கிறது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி திட்டத்தைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பேசுகையில், பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏனெனில், கொரோனா வைரஸ் இன்னும் நம்முடன்தான் இருக்கிறது. அது உருமாற்றம் அடைய வாய்ப்புள்ளது. மத்திய அரசு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாகச் செலுத்துவதில் உறுதியாக உள்ளது.

கொரோனா 2-வது அலையில், கொரோனா வைரஸ் நம் முன்னால் என்ன மாதிரியான சவால்களைக் கொண்டு வந்திருக்கிறது என்பதைப் பார்த்தோம். இன்னும் கூடுதலான சவால்களைச் சந்திக்க தேசம் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை மனதில் வைத்துத்தான் நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் கொரோனா முன்களப் பணியாளர்களைத் தயார் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி 6 விதமான பணிகளுக்கு கொரோனா பணியாளர்களைத் தயார் செய்யும். அதாவது வீட்டு சிகிச்சை உதவி, அடிப்படை சிகிச்சை உதவி, நவீன சிகிச்சை உதவி, அவசர சிகிச்சை உதவி, மாதிரிகள் சேகரிப்பு உதவி மற்றும் மருத்துவ உபகரணங்கள் உதவி ஆகியவை இந்தப் படிப்பில் தனித்தனியாகக் கற்பிக்கப்படும்.

பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா 3.0 திட்டத்தின் மூலம் ரூ.276 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த சிறப்புப் பயிற்சியின் மூலம் மருத்துவத் துறை அல்லாத சுகாதாரத் துறை வல்லுநர்கள் உருவாக்கப்படுவார்கள். அவர்கள் மூலம் சுகாதாரத் துறைக்கு வருங்காலத்தில் தேவைப்படும் மனிதவளம் பூர்த்தி செய்யப்படும்.இதுபோன்ற 111 மையங்கள் இன்று முதல் நாடு முழுவதும் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்படுகின்றன.இதன் மூலம், அடுத்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய திறமையான சுகாதார முன்னணி பணியாளர்களை உருவாக்கும். நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆக்சிஜன் தேவையை உறுதி செய்யும் வகையில் சுமார் 1,500 ஆக்சிஜன் பிளாண்ட்டுகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.


மேகதாது, கர்நாடகா, தமிழ்நாடு, எடியூரப்பா, எடப்பாடி பழனிசாமி, Megha Dadu, Karnataka, Tamil Nadu, Eduyurappa, Edappadi Palanisamy, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

"நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இச்சூழ்நிலையில், மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதல்வரின் ஒருதலைபட்சமான அறிவிப்புக்கு, எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான மாவட்டங்களின் குடிநீர்த் தேவை மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்வது காவிரி ஆற்றின் நீர். இந்த காவிரி நீரை முறையாக பெறுவதற்கு ஜெயலலிதா மற்றும் ஜெயலலிதாவின் அரசு பல சட்டப் போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். பன்மாநில நதிநீர்த் தாவாச் சட்டம் 1956 இல் பிரிவு 5(2) இல் குறிப்பிட்டுள்ளவாறு, காவிரி நடுவர் மன்றம் இறுதி ஆணையை 5.2.2007 அன்று பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் சட்டப்போராட்டத்தினாலும், ஜெயலலிதா அரசு கொடுத்த அழுத்தத்தினாலும், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டாலும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை 19.2.2013 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழகம், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு கர்நாடக அரசு, இரு மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் 177.25 டிஎம்சி அடி நீர் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதா அரசின் சட்டப் போராட்டங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட்டது.

மேலும், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழுமையாக செயல்படுத்தவும், ஜெயலலிதா அரசு 30.11.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளின் மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டி இடைக்கால மனுவினை தாக்கல் செய்தது:

* மத்திய நீர்வளக் குழுமம் 22.11.2018 அன்று கர்நாடகாவின் காவிரி நீரவாரி நிகம் நிறுவனத்திற்கு மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கிய அனுமதிக்கு தடை விதித்தல்;

* மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நீர்வளக் குழுமத்தின் 22.11.2018-ம் தேதியிட்ட கடிதத்தை திரும்பப் பெறுதல்;

* கர்நாடகாவின் காவிரி நீரவாரி நிகம் நிறுவனம், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதை நிறுத்தி வைத்தல்;

* கர்நாடக அரசின் கீழ் செயல்படும் நிறுவனம் மற்றும் எந்தவொரு முகமையும், கர்நாடக எல்லைக்குள் காவிரி படுகையில் எந்தவொரு அணைக்கட்டுதல் போன்ற திட்டத்தை மேற்கொள்ளாமல், தற்போது உள்ள நிலையே தொடருதல்.

மேலும் நான், பிரதமரை நேரில் சந்தித்தபோது, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்ததோடு, அவ்வாறு அணை கட்டினால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறினேன்.

தொடர்ந்து, கர்நாடக அரசு 20.6.2019 அன்று சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கக் கோரி, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தை அணுகியுள்ளதை அறிந்து, பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது எனவும், கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் முற்றிலும் நிராகரித்து திருப்பி அனுப்புமாறு, ஜல்சக்தி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டேன்.

பன்மாநில நதிநீர் தாவாச் சட்டம் 1956-ன் படி, நதிநீரை தடுப்பதற்கோ அல்லது திசைதிருப்புவதற்கோ எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது என்று தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத்தில் 5.12.2018 அன்று எனது தலைமையிலான அப்போதைய தமிழக அரசு, கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற ஆணைகளை மீறி, மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரியதை அடுத்து; மத்திய நீர்வள குழுமத்தின் திட்ட மதிப்பீட்டு இயக்குநர்; கர்நாடக அரசின் நீர்வள ஆதாரத் துறைச் செயலாளர் மற்றும் பிறர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இதுசம்பந்தமான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இச்சூழ்நிலையில், மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதல்வரின் ஒருதலைபட்சமான அறிவிப்புக்கு, எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து, தமிழகத்திற்கு கிடைக்கப் பெறுகின்ற காவிரி நீரை முழுமையாகப் பெறுவதற்கும், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் போக்குக்கு, எள்முனையளவுகூட இடம் அளிக்காமல், தமிழகத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகளை முழுமையாக தொடர்ந்து எடுக்க வேண்டுமென்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


நீட் தேர்வு, நடிகர் சூர்யா, மாணவர்கள், பெற்றோர்கள், Need Exam, Actor Surya, Students, Parents, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,அரசியல்,சினிமா,முதன்மை செய்தி

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள நடிகர் சூர்யா, ‘கல்வி மாநில உரிமை’ என்ற கொள்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு அரசால் ‘நீட்’ தேர்வின் மூலம் மருத்துவ சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு பொது மக்கள் தங்களின் கருத்துகளை 5 பக்கங்களுக்கு மிகாமல் neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் நீதிபதி ஏ.கே.ராஜன் உயர்நிலைக்குழு, மருத்துவ கல்வி இயக்ககம் (3-வது தளம்), கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாக மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப்பெட்டியிலோ வருகிற 23ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகரும், அகரம் பவுண்டேஷன் நிறுவனருமான சூர்யா, இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வின் பாதிப்புகளையும், மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சந்திக்கும் துயரங்களையும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் முறையிட வேண்டும்.

அரசுப்பள்ளியில் படித்து பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம். இங்கு ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிறது. இருவேறு கல்வி வாய்ப்பு இருக்கிற சூழலில் தகுதியைத் தீர்மானிக்க ஒரே தேர்வுமுறை என்பது சமூக நீதிக்கு எதிரானது.

இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சார வேற்றுமைகள் நிறைந்த நாட்டில், கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம் என்றும் ‘கல்வி மாநில உரிமை’ என்ற கொள்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


சிறுமி, பாலியல் வன்கொடுமை, சப்-இன்ஸ்பெக்டர் கைது, Girl, sexual abuse, sub-inspector arrested, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

சென்னை மாதவரம் பால்பண்ணையில் 10 வயது சிறுமியை அந்த குழந்தையின் தாய் உதவியுடன் பாலியல் வன்கொடுமை செய்த காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மாதவரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாதவரம் பால்பண்ணையில் காவல் ஆய்வாளராக பணியாற்றிவருபவர் சதீஷ்குமார். இவர் அதேபகுதியில் நியாய விலை கடையில் பணியாற்றிவரும் பெண்ணுடன் பழகிவந்துள்ளார். இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்ற பிறகு பெண்ணின் வீட்டிற்குச் சென்றுவருவதைக் காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 10 வயதில் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமியிடமும் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார் சதீஷ்குமார்.

இந்த கொடூரத்துக்குப் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயும், பெரியம்மாவும் உடனிருந்துள்ளனர். இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருக்க பாதிப்புக்குள்ள குழந்தையின் தாய் மற்றும் பெரியம்மாவுக்கு செல்போன், பண உதவிகளைச் செய்துவந்துள்ளார் சதீஷ்குமார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி தனக்கு ஏற்பட்ட கொடுமையை தன் தந்தையிடம் ஒருகட்டத்தில் தைரியமாகக் கூறத்தொடங்கியுள்ளார். இதனையடுத்து மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சதீஷ்குமார், சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மா ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்ஸோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


அமெரிக்கா மருத்துவமனை, ரஜினிகாந்த், United States Hospital, Rajinikanth, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தமிழ்நாடு,சினிமா,முதன்மை செய்தி

அமெரிக்கா மருத்துவமனையில் பரிசோதனைகள் முடிந்து மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

நடிகர் ரஜினிகாந்த் ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றபோது அவருக்கு ரத்த அழுத்த பிரச்னைகள் ஏற்பட்டன.

இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சமீபத்தில் மீண்டும் ஹைதராபாத் சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார். தான் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து கொடுத்து விட்டு சென்னை திரும்பிய அவர் கடந்த 19ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

அமெரிக்க மருத்துவமனையில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார். அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனைகள் முடிந்து மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரஜினி அமெரிக்காவில் 3 வாரங்கள் தங்கி இருப்பார் என்று தெரிகிறது.


காதல் திருமணம், காதலி, காதலன், பஞ்சாப், Love  marriage, girlfriend, boyfriend, Punjab
இந்தியா,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஆவேசமடைந்த அவரது தந்தை, காதலினின் தந்தை உள்பட 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த அதிர்ச்சி சம்பவம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டம் சோட்டா பல்லத்வால் கிராமத்தை சேர்ந்தவர் ஹர்மன் சிங். இவர் சுக்ஜீந்தர் சிங் என்பவரின் மகளை காதலித்து வந்தார். இது குறித்து சுக்ஜீந்தர் சிங் ஏற்கெனவே ஹர்மன் சிங்கை எச்சரித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஹர்மன் சிங், சுக்ஜீந்தர் சிங்கின் மகளை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இதனால் கோபமடைந்த சுக்ஜீந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் நேற்று காலை 6.30 மணியளவில் ஹர்மன் சிங்கின் வயலுக்கு சென்றுள்ளார். அங்கு ஹர்மன் சிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வயல் வெளியில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அவர்களை நோக்கி சுக்ஜீந்தர் சிங் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு உள்ளார்.

இதில் ஹர்மனின் தாத்தா மங்கல் சிங் (65), தந்தை சுக்விந்தர் சிங் (42), மாமா ஜஸ்பீர் சிங் (40) மற்றும் உறவினர் பாபன்தீப் சிங் (18) என 4 பேர் உயிரிழந்தனர். ஹர்மன் சிங் (20), மற்றும் அவரது உறவினர் ஜஷன்பிரீத் ஆகியோர் காயமடைந்தனர். ஹர்மன் சிங்கின் குடும்பத்தினரைத் துப்பாக்கியால் சுட்ட பின் சுக்ஜிந்தர் சிங் தனது மோட்டார் சைக்கிளில் தலைமறைவாகி விட்டார்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "குற்றவாளியை தேடி வருகிறோம். 302 (கொலை), 304 (அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்துவது), ஐபிசியின் 506 (குற்றவியல் மிரட்டல்) மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்" என கூறினர்.


மத்திய அரசு, அன்புமணி, திமுக, பாமக, Central Government, Anbumani, DMK, PMK
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

"மத்திய அரசு என்றுதான் நாங்கள் அழைப்போம்" என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பேச்சு என அனைத்திலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒன்றிய அரசு வார்த்தையை பயன்படுத்த பாஜக சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், ஒன்றிய அரசு என்பதை பயன்படுத்துவது சமூக குற்றம் அல்ல எனவும், அதனை தொடர்ந்து பயன்படுத்துவோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஒன்றிய அரசு தொடர்பாக அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் பாமக நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி, ஒன்றிய அரசு தொடர்பாக கருத்து தெரிவித்தார். எங்களை பொறுத்தவரை மத்திய அரசு என்று தான் அழைப்போம், பெயரை மாற்றுவதால் ஒன்றும் ஆகப்போவது இல்லை என்று கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைப்போம் என வாக்குறுதி அளித்தனர் என்ற அன்புமணி, ஆனால் இப்போது கேட்டால் தேதி சொல்லவில்லை என கூறுகின்றனர் என்றும், அது ஆக்க பூர்வமான கருத்து இல்லை, ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் குறைக்கலாம் எனவும் கோரிக்கையை முன்வைத்தார். தமிழக அரசு பொருளாதார நிபுணர்கள் குழு அமைத்துள்ளதை வரவேற்கிறோம் என்றும் அவர் கூறினார்.


அதிமுக, சசிகலா, ஓபிஎஸ், ஈபிஎஸ், அதிமுக தொண்டர்கள், AIADMK, Sasikala, OPS, EPS, AIADMK volunteers
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

"அ.தி.மு.க. தலைமையை தொண்டர்கள் தான் நியமிக்க முடியும்" என சசிகலா தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் சசிகலா செல்போனில் பேசி வருவதோடு, ஆடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த நிலையலில் 5 பேரிடம் சசிகலா பேசிய ஆடியோக்கள் வெளியாகியுள்ளது. அதில் பேசும் சசிகலா, "தொண்டர்கள் எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொண்டர்களால் தான் கட்சி என எம்.ஜி.ஆர். கூறி சென்றார். ஜெயலலிதாவும் அதையே பின்பற்றினார். தொண்டர்கள் நம்மோடு இருக்கின்றனர். கட்சியை நல்லபடியாக கொண்டு செல்லும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை ஒரு நிமிடத்தில் வெளியேற்றினர். கட்சிக்காக அவர் அதிகம் உழைத்திருந்தார். எனவே, தனக்கு நடந்தது போல, எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என்பதால் அவர் கட்சி துவக்கிய போது சட்ட திட்ட விதிகளில், தொண்டர்கள் தான் தலைமையை நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார். சட்ட விதிகளில், இணை ஒருங்கிணைப்பாளர் கிடையாது. இவர்களாக போட்டுக் கொண்டனர். அப்படி போட முடியாது. தொண்டர்கள் துணையோடு, கட்சியை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும். பெண்கள் பங்களிப்பு தேவை.

ஜெயலலிதா வழியில் செல்வேன். எனவே, கவலைப்பட வேண்டாம். எல்லாரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் என்பதுதான் என் முடிவு. மிக விரைவில் வருவேன். ஜெயலலிதாவை பார்த்துவிட்டு வருவேன். ஊரடங்கு முடிந்ததும் எல்லா ஊருக்கும் வருகிறேன். பெண்கள் அதிகம் அரசியலுக்கு வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.


cyclone, Indian Meteorological Center, BengalBay, காற்றழுத்த தாழ்வு பகுதி, இந்திய வானிலை ஆய்வு மையம், வங்கக்கடல்
இந்தியா,முதன்மை செய்தி

``வட மேற்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது'' என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், சேலம் ,தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் ,கன்னியாகுமரி மற்றும் ஒருசில உள்ள மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்தது.

சென்னையில் நேற்று மாலை முதல் விடிய ,விடிய மழை கொட்டி தீர்த்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இந்நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால், கேரளா , கர்நாடகாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


அதிமுக, மதுசூதனன், அப்போலோ மருத்துவமனை, Madhusudhanan, ADMK, Apollo Hospital
அரசியல்,முதன்மை செய்தி

``அவைதலைவர் மதுசூதனனின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம்'' என்று அதிமுக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான மதுசூதனன் (80) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நலம் தேறினார். அதன்பின்னர் வயது முதிர்வு காரணமாக அவர் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கினார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்தார்.

எனினும் அவ்வப்போது அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் மதுசூதனன் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் மதுசூதனனின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பது தெரியவந்தது. தற்போது அவர் தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் டாக்டர்களின் நேரடி கட்டுப்பாட்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவைதலைவர் மதுசூதனனின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என்று அதிமுக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் தனது ட்விட்டரில், “கழக அவைதலைவர் மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம், தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்” என்று பதிவிட்டுள்ளது.


பெகாசஸ், அமித் ஷா, ராகுல் காந்தி, Pegasus, Amit Shah, Rahul Gandhi
அரசியல்,இந்தியா,முதன்மை செய்தி

``பெகாசஸ் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்'' என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, ரஃபேல் விசாரணையை தடுப்பதற்காகவே செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார். மேலும் சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மாவின் செல்போன் ஒட்டுக்கேட்கபட்டது ஏன் என கேள்வியெழுப்பிய ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.


டோக்யோ ஒலிம்பிக், இந்தியா, மீராபாய் சானு, Tokyo Olympics, India, Mirabai Chanu Saikhom
விளையாட்டு,முதன்மை செய்தி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல் பதக்கத்தை வென்றுள்ளது. மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். காலை 10.30 மணிக்கு மகளிர் 49 கிலோ பிரிவுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மீராபாய் சானு 84 மற்றும் 87 கிலோ எடையை முதலில் தூக்கினார்.

தொடர்ந்து 89 கிலோ எடையை தூக்க அவர் முயற்சித்தபோது, அவரால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் 115 கிலோ எடையை அவர் தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார். சீனாவின் ஹே சி ஹூய் முதல் இடம் பிடித்து தங்கபதக்கத்தை வென்றுள்ளார்.

டோக்யோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 2 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும் இருக்கிறது. ஒலிம்பிக் வரலாற்றில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் வென்றுள்ளது. கர்ணம் மல்லேஸ்வரி 2000 சிட்னி ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்றார். அவரைத்தொடர்ந்து மீராபாய் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.


ஒலிம்பிக், வில்வித்தை, டேபிள் டென்னிஸ், சரத் கமல், Cheer4India, Archery, Tokyo2020, sarath kamal
விளையாட்டு,முதன்மை செய்தி

ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதே போல் டேபிள் டென்னிஸ் ஆடவர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் சரத் கமல் வெற்றி பெற்றுள்ளார்.

டோக்யோ ஒலிம்பிக்கில் இன்று வில்வித்தை போட்டியில் ஆண்கள் அணிக்கான எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய ஆண்கள் அணி கஜகஸ்தான் ஆண்கள் அணியை எதிர்கொண்டது. இந்திய ஆண்கள் அணியில் அதானு தாஸ், பிரவின் ஜாதவ், தரூன்தீப் ராய் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். போட்டி தொடங்கியது முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் இந்திய ஆண்கள் அணி 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தான் ஆண்கள் அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் ஆண்கள் அணி வில்வித்தை போட்டியில் காலிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. காலிறுதி சுற்றில் இந்திய ஆண்கள் அணி தென்கொரியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இதேபோல் டேபிள் டென்னிஸ் ஆடவர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் சரத் கமல் வெற்றி பெற்றுள்ளார். போர்ச்சுகல் வீரரை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.


அசாம், மிசோரம், அமித் ஷா, ராகுல் காந்தி, Assam, Mizoram, Amit Shah, Rahul Gandhi
முகப்பு,இந்தியா,முதன்மை செய்தி

``உள்துறை அமைச்சர் வெறுப்பையும், அவநம்பிக்கையையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்துவிட்டார்'' என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அசாம்-மிசோரம் எல்லையில் நடந்த மோதலில் அசாமை சேர்ந்த 6 போலீஸ்காரர்கள் பலியாகி உள்ளனர். இதனால் இரு மாநில எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இருமாநில முதல்வர்களும் ட்விட்டரில் கடும் மோதல் போக்கை காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “மிசோரம், அசாம் இடையிலான எல்லைப் பிரச்னையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களுக்காக நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.

இந்த தேசத்தின் உள்துறை அமைச்சர் வெறுப்பையும், அவநம்பிக்கையையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்துவிட்டார். இந்தியா தற்போது மோசமான விளைவுகளை அறுவடை செய்து வருகிறது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.


NEET, TNCMStalin, Tamilnadu, TN Students, MKStalin
தமிழ்நாடு,முதன்மை செய்தி

நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டுமெனக் கோரியும், 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை செயல்முறை சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களை பாதித்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கையை இணைத்து அனுப்புவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் மாற்று சேர்க்கை நடைமுறைகள், அத்தகைய மாற்றுவழிகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அத்தகைய நியாயமான மற்றும் சமமான முறைகளைச் செயல்படுத்த எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பரிந்துரைக்குமாறு அக்குழு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களது குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 'தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம், 2021' என்ற சட்டமுன்வடிவினை நிறைவேற்றியுள்ளதாகவும், அந்தச் சட்டமுன்வடிவின் நகலையும் இக்கடிதத்துடன் இணைத்து அனுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும், மாநில அரசுகளால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் அரசியலமைப்பு அதிகார சமநிலை மீறப்படுகிறது என்பதே தங்களது நிலைப்பாடாகும் என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இது தொடர்பாக, மாநில அரசுகள் உயர் கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறும் முறையைத் தீர்மானிப்பதில் தங்கள் அரசியலமைப்பு உரிமையையும், நிலைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டுமென்று தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படும் ஆவணங்களை ஆராய்ந்து, கிராமப்புறங்களில் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதில் சிரமத்திற்கு உள்ளாவதைத் தடுக்கவும், அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் தங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க மாநில முதல்வர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டு, இந்த முக்கியமான பிரச்னையில் அனைவரது ஒத்துழைப்பையும் தான் எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விளக்கி, நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையின் மொழிபெயர்ப்பு நகலை பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் சென்று வழங்கி, இப்பிரச்னை குறித்து தமிழ்நாட்டின் நிலைப்பாட்டிற்கு அந்தந்த மாநில அரசுகளின் ஆதரவைக் கோர வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார்.


Tasmac, Tamil Nadu, Ramadas, Stalin, Village Council Meeting, Village Peoples
கட்டுரை

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று மக்கள் மட்டுமல்லாது, அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை வைத்து வருகின்றன. அந்த கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய இடத்தில் இருக்கும் ஆளும்கட்சிகள் தொடர்ந்து முடிவு எடுப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றன.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், பூரண மதுவிலக்கு வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. கோரிக்கை வைத்து போராட்டமும் நடத்தியது. ஏன் பூரண மதுவிலக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் முன் முதல் அஜந்தாவே பூரண மதுவிலக்குதான். ஆனால் அப்போதைய அ.தி.மு.க. அரசு அதை நிறைவேற்றவில்லை.

தற்போது தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. அதே மதுவிலக்கு கோரிக்கை வலுத்து வருகின்றன. அதற்கு தி.மு.க. அரசு அதிகாரபூர்வமாக எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கவில்லை. ஆனால் மதுவிலக்கு குறித்து ஏதோ முடிவை தமிழக முதல்வர் எடுப்பார் என்று இயல்பாகவே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மதுவிலக்கு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக அரசுக்கு மதுவிலக்கு தொடர்பாக சில யோசனைகளை தெரிவித்து இருக்கிறார். அதன் விவரம் வருமாறு:

மதுரை மாவட்டம், பாப்பாப்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அந்த கிராம மக்களின் குறைகளைக் கேட்டு, அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருக்கிறார். கிராம சபைக் கூட்டத்தில் முதல்வரே நேரில் பங்கேற்றிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டின் வரலாற்றில் கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் ஒருவர் கலந்துகொண்டது இதுவே முதல் முறை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. காந்தியடிகளின் பிறந்த நாளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், கிராம சுயராஜ்ஜியம் குறித்தும், கிராமங்களின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்தும் பேசியிருக்கிறார்.

இதை கிராமங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நல்ல தொடக்கமாகக் கருதலாம். அதே நேரத்தில் கிராமங்களுக்கு, தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான அதிகாரமும், தேவையற்ற தீமைகளை கிராமங்களுக்குள் அனுமதிக்கவிடாமல் தடுக்கும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். அதுவே உண்மையான கிராம சுயராஜ்ஜியமாகும். ஒட்டுமொத்தத் தமிழகமும், குறிப்பாக கிராமப்புறங்கள், இன்றைய நிலையில் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய பிரச்சினை மதுதான்.

நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை

மதுவின் தீமைகள் குறித்தும், அதனால் இன்றைய தலைமுறை சீரழிந்து வருவது குறித்தும் ஆயிரமாயிரம் முறை கூறிவிட்டேன். ஆனாலும், மதுவின் தீமையிலிருந்து தமிழ்நாடு இன்னும் மீளவில்லை. அதற்கான முயற்சிகளை எடுக்க ஆட்சியாளர்கள் மனதளவில் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. மதுவால் சீரழிந்த குடும்பங்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை. கிராமங்களுக்குச் சென்றால் 10 வீடுகள் கொண்ட தெருவில் குறைந்தது 2 அல்லது 3 குடும்பங்களாவது மதுவால் பாதிக்கப்பட்டு சீரழிந்தவையாக இருக்கும். கொரோனா காலத்தில் குடும்பங்களின் வருவாய் குறைந்தாலும், குடிப்பதற்கான செலவுகள் குறையவில்லை. அதனால், பல லட்சக்கணக்கான குடும்பங்கள், குறிப்பாகக் குழந்தைகளும், பெண்களும் பசியால் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

மதுவின் தீமைகளை தினமும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் கிராமப்புறங்களில் வாழும் பெண்கள்தான். கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அரசே மது விற்பனை செய்வதாகக் கூறும் அரசு நிர்வாகங்கள், இது தொடர்பான நிலைப்பாட்டை இறுதி செய்வதற்கு முன்பாக கிராமப்புற பெண்களின் மனநிலையையும், கருத்துகளையும் அறிய வேண்டும். அதுதான் உண்மையான மக்களாட்சித் தத்துவம் ஆகும். அதற்கான மிகச்சிறந்த வாய்ப்பை தமிழக அரசுக்கு கிராம சபைகள் வழங்குகின்றன.

மராட்டிய மாநிலத்தில் ‘1949-ம் ஆண்டின் பம்பாய் மதுவிலக்குச் சட்டத்தின்'படி மது விற்பனை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, ஏதேனும் ஒரு நகர வார்டிலோ அல்லது கிராமத்திலோ மதுக்கடைகள் தேவையில்லை என அங்குள்ள பெண்களில் 25 சதவீதம் பேர் மனு அளித்தால் அதனடிப்படையில் அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். நகரப்பகுதிகளாக இருந்தால் வட்ட அளவிலும், ஊரகப் பகுதிகளாக இருந்தால் கிராம அளவிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். அதில் பங்கேற்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மதுக்கடைகளுக்கு எதிராக வாக்களித்தால், உடனடியாக அங்குள்ள மதுக்கடைகள் மூடப்படும்.

அதுமட்டுமின்றி, அந்தப் பகுதியில் மதுக்கடைகளை மீண்டும் திறக்க முடியாது. இதேபோன்ற நடைமுறையைத் தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும் என 12 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். இந்த யோசனையை சென்னை உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. மதுக்கடைகளை மூட ஆணையிட வலியுறுத்தித் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘‘மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்துவிட்டது. இனிவரும் தலைமுறைகளையாவது காப்பாற்ற வேண்டும். மதுக்கடைகளுக்கு எதிராக கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை மதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் அறிவுறுத்தினர். மக்களின் கருத்துகள் மீதும், உயர் நீதிமன்றத்தின் மீதும் மரியாதை வைத்துள்ள தமிழக அரசு இந்த யோசனையையும் மதித்துச் செயல்படுத்த முன்வர வேண்டும்.

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் போதெல்லாம், அதை முனை மழுங்கச் செய்வதற்காக அரசுத் தரப்பில் செய்யப்படும் பிரசாரம், ‘‘மதுக்கடைகளை மூடிவிட்டால் நலத்திட்டங்களுக்கான நிதி எங்கிருந்து வரும்?'' என்பதுதான். அது மிகவும் தவறு. மதுவைக் கொடுத்து குடும்பங்களைச் சீரழித்துவிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்குவதால் யாருக்கும் எந்தப் பயனும் ஏற்படாது. அதுமட்டுமின்றி, மதுக்கடைகளை மூடினால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கான மாற்றுத் திட்டங்களை பாமக தெரிவித்திருக்கிறது.

இந்த விஷயத்தில் தொடர்ந்து ஆக்கப்பூர்வ ஆலோசனை வழங்கவும் பாமக தயாராக உள்ளது. இவற்றையெல்லாம் கடந்து மக்களாட்சியில் மக்களின் விருப்பமே முக்கியமாகும். எனவே, கிராமப்பகுதிகளில் மதுக்கடைகள் வேண்டாம் என்று குறிப்பிட்ட அளவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், உடனடியாக கிராம சபைகளைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கைக்கு செவிசாயிக்கும் விதமாக முதல்வர் மதுவிலக்கு குறித்து முதல்கட்ட ஆலோசனை ஒன்றை தொடங்கி இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அது தொடர்பாக சில அதிகாரிகளை அழைத்து பேசியதோடு, அதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து ஆராயவும் முதல்வர் சொல்லி இருக்கிறார் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது. முதல்வரின் இந்த நடவடிக்கை என்பது, ராமதாஸ் சொல்வது போல, அதிக பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் கிராமத்தில் உள்ள மதுக்கடைகளை மூடலாம் என்ற முடிவுக்கு முதல்வர் வந்து இருக்கிறார் என்றே தெரிகிறது.


Puli, Tiger, Chennai highcourt, UP Women case, Ooty
நீலகிரி,சென்னை,தமிழ்நாடு,முதன்மை செய்தி

நீலகிரியில் 4 பேரை கொன்ற புலியை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் MDT23 எனப் பெயரிடப்பட்ட புலி ஒன்று மனிதர்களையும், கால்நடைகளையும் வேட்டையாடி வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்ட கால்நடைகள், 4 மனிதர்களை அந்த புலி கொன்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதையொட்டி அப்பகுதி மக்கள் தாங்கள் அச்சத்துடன் நாட்களைக் கடத்தி வருவதாகவும், புலியை உடனடியாக பிடிக்கக்கோரியும் தொடர் போராட்டங்களை நடத்தினர். எனவே ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க தமிழக தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்தார்.

புலியை சுட்டுப் பிடிக்கும் உத்தரவை எதிர்த்து உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. புலியை சுட்டுப்பிடிப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளைப் பின்பற்றவில்லை,' எனக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.


 Cancer, poison injection, Salem boy, Salem father, son killed
மாவட்டம்,சேலம்,முகப்பு,தமிழ்நாடு,முதன்மை செய்தி

புற்றுநோயால் அவதிப்பட்ட 14 வயது மகனை விஷ ஊசி போட்டு கொன்றதாக எழுந்த புகாரின் பேரில் சிறுவனின் தந்தை, ஊசி போட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள கட்சிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான பெரியசாமிக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகன் வண்ண தமிழ், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிளில் இருந்து தவறி விழுந்துள்ளான். சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த போது புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அதன்பின் சிறுவனை வீட்டுக்கு அழைத்து வந்து சிகிச்சையை தொடர்ந்துள்ளனர். கடந்த சில தினங்களாக சரிவர சாப்பிடாமல் அவதிப்பட்ட சிறுவனுக்கு படுக்கையிலேயே இயற்கை உபாதைகள் கழிக்கும் நிலை ஏற்பட்டது.

அதனால் கவலையடைந்த பெரியசாமி, உள்ளூர் மருத்துவ பணியாளர் ஒருவரை அழைத்து வந்து ஊசி போட்டதாக தெரிகிறது. மறுநாள் காலையில் பார்த்த போது சிறுவன் உயிரிழந்த நிலையில் கிடந்தான். இதனையறிந்த அப்பகுதி மக்கள், சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டதாக பேச தொடங்கினர்.

அது பற்றிய தகவல் காட்டுத்தீயாய் பரவியதால் கிராம நிர்வாக அலுவலர் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறுவனின் சடலத்தை போலீசார் கைப்பற்றி உடற்கூராய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சிறுவனின் தந்தை பெரியசாமி, விஷ ஊசி போட்ட மருத்துவ பணியாளரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், Facebook, WhatsApp, Instagram, Twitter
உலகம்,முதன்மை செய்தி

நேற்றிரவு திடீரென பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமின் சேவைகள் முடங்கியது. இதன் பின்னர் அதிகாலை 4 மணிக்குத்தான் சேவை சீரானது.

மார்க் சகர்பெர்க்கின் சமூக வலைதள நிறுவனங்களான பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் தொழில்நுட்ப கோளாறால் நேற்றிரவு முதல் சேவை முடங்கியது. இதனால் ஆதங்கமடைந்த நெட்டிசன்கள், ட்விட்டரில் பல்வேறு வகையான மீம்ஸ்களை பதிவிட்டு முடங்கிய செயலிகளை கலாய்த்தனர். பயனாளர்களின் பதிவுகள் மற்றும் மீம்ஸ்களுக்கு வலு சேர்க்கும் விதமாக ட்விட்டர் நிறுவனமும் அனைவருக்கும் வணக்கம் என்று பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமை கலாய்த்தது.

ட்விட்டரின் பதிவுக்கு வாட்ஸ்ஆப் 'ஹலோ' மற்றும் இன்ஸ்டா 'ஹாப்பி மண்டே' என்றும் ரிப்ளை செய்தனர். இவை மட்டுமின்றி மெக் டொனால்ஸ், ட்ரு காலர் என பல்வேறு நிறுவனங்களும் ட்விட்டரின் பதிவில் கமன்ட் செய்து உரையாடினர். வழக்கமாக ட்விட்டரில் ட்ரெண்ட் ஆவதை கண்ட பயனாளிகள், ஓர் இரவில் ட்விட்டரே ட்ரெண்டிங் ஆனதை கண்டனர். ஆனால் அதிக பயனாளர்கள் ஒரே நேரத்தில் ட்விட்டர் பக்கம் திரும்பியதால் அதன் சேவையும் ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டது. இதனால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் பக்கங்கள் முடங்கியதை கேலி செய்த ட்விட்டர் தளமும் முடங்கியது.

இந்த நிலையில் 6 மணி நேரத்திற்கு பிறகு காலை சுமார் 4 மணி அளவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வலைத்தளங்கள் அடுத்தடுத்து செயல்பாட்டுக்கு வரத்தொடங்கின. இது குறித்த ட்விட்டர் பதிவில், உலகெங்கும் உள்ள பயனாளர்களிடம் மன்னிப்பு கோருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. சேவைகளை முழு அளவில் மீண்டும் வழங்க கடுமையாக பணியாற்றி வருவதாகவும், தொடர்ந்து முழு அளவில் சேவை மீண்டும் வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வாடிக்கையாளர்களிடம் வருத்தம் தெரிவித்திருக்கின்றன. அதேநேரத்தில், எதன் காரணமாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சேவைகள் முடங்கியது என்பது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளிக்கவில்லை.


நீலகிரி, புலி, தமிழக அரசு, தமிழக வனத்துறை, சென்னை உயர்நீதிமன்றம், Nilgiris, Tiger, Tamil Nadu Government, Tamil Nadu Forest Department, Chennai High Court
மாவட்டம்,நீலகிரி,தமிழ்நாடு,முதன்மை செய்தி

நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியை கொல்ல வேண்டாம் என்று வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் MDT23 எனப் பெயரிடப்பட்ட புலி ஒன்று மனிதர்களையும், கால்நடைகளையும் வேட்டையாடி வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்ட கால்நடைகள், 4 மனிதர்களை அந்த புலி கொன்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதையொட்டி அப்பகுதி மக்கள் தாங்கள் அச்சத்துடன் நாட்களைக் கடத்தி வருவதாகவும், புலியை உடனடியாக பிடிக்கக்கோரியும் தொடர் போராட்டங்களை நடத்தினர்.எனவே ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க தமிழக தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்தார்.

புலியை சுட்டுப் பிடிக்கும் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடர்பட்டது. அதில், இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் பேனர்ஜி, ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த புலியை கொல்வதற்காக சுட்டுப்பிடிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் அதை உயிருடன் பிடிப்பதே நோக்கம் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி, நீலகிரியில் உலவும் புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமலும் இருக்கலாம் என்றும் எனவே புலியை கொல்ல வேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும் புலியை பிடிக்கும் பணியின் போது மற்ற விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என்றும் புலியின் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து அதை பிடித்து உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த புலியை பிடித்து சிகிச்சை அளித்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தசரா விடுமுறைக்கு பின் ஒத்திவைத்தனர்.


OPS, EPS, ADMK, TNLocalBodyElection
கட்டுரை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பல்வேறு அதிரடி நிகழ்வுகள் நடந்தன. சசிகலா தலைமை என்ற நிலை மாறி, அவர் சிறைக்கு சென்றதும், பன்னீர்செல்வமா..? எடப்பாடியா…? என்ற மோதல் வெடித்தது. ஒரு கட்டத்தில் இருவரும் சமாதானம் செய்து கொண்டு கட்சியை சேர்ந்தே வழி நடத்தலாம் என்ற உடன்படிக்கைப்படி தற்போது செயல்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில்தான் சசிகாலா சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தன. ஆனால் எதிர்பார்த்தப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் சசிகலா அதிமுகவின் தலைமையை பிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகிறார். அவரது முயற்சியை கட்சியில் உள்ள ஒரு சில சீனியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே தவிர மற்ற நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் எல்லோரும் ஆதரவு தெரிவிப்பதாகவே கூறப்படுகிறது. அதேநேரத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் என்பது இருந்து வருகிறது. அது தேர்தல் நேரத்தில் வெளிப்படையாகவே தெரிந்தது. கட்சி அலுவலகத்துக்கு இருவரும் வரும் போது அவர்களுடைய ஆதரவாளர்கள் தனித் தனியாக கோஷம் போட்டு அதை வெளிப்படுத்தினார்கள். அதற்கு இருவரும் எந்தவித பதிலும் கூறவில்லை.

அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை என்பது எங்களுக்கு பழகிப்போன ஒன்றுதான் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருப்பது கட்சியிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிருபர்களை சந்தித்த அவர், "ஊரக உள்ளாட்சி தேர்தல் என்றால் உள்ளூர் பிரச்னையை மையமாக வைத்துதான் நடக்கிறது. கட்சிகள் என்னதான் அரசியல் ரீதியாக கூட்டணி அமைத்தாலும், தலைவர்கள் மட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டாலும், அதையும் தாண்டி கீழ் மட்டத்தில் உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில வேட்பாளர்கள் போட்டியிடுவது இயற்கை. எதிர்க்கட்சி தலைவரின் ஆலோசனையின்படி போட்டி வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களை அழைத்து பேசி கிட்டத்தட்ட 100 சதவீதம் சரி செய்யப்பட்டுவிட்டது.

தி.மு.க ஆளும் கட்சியாக வந்த 4 மாதங்களில் தேர்தலின்போது வழங்கிய 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டது என பெருமையாக கூறுகிறது. ஆனால் அவர்கள் முக்கியமாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த நீட் தேர்வு இன்று கானல் நீராகிவிட்டது. மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிட்டது. 3 பேர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். அதே போல், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000, கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடியில் சில சட்டதிட்டங்களை புகுத்தி 40 சதவீதம் பேர்தான் பயனடையும் நிலை உள்ளது. தி.மு.க ஆட்சி ஏமாற்றம் விதமாக தாலிக்கு தங்கம் திட்டத்தில் நிபந்தனை விதித்துள்ளது. மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தி, அம்மா இருசக்கர வாகன திட்டம் தேவைப்படாது என கூறுகின்றனர். ஜெயலலிதா கொண்டு வந்த காரணத்தால் இந்த திட்டத்தை கைவிட்டனர். இப்படி 4 மாதங்களிலேயே மக்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்கள் கூட வருத்தப்படும் நிலை இன்றைக்கு இருக்கிறது. தி.மு.க ஆட்சி ஏமாற்றத்தை தந்துள்ளது. இது நிச்சயம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும்.

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறும். குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் அ.தி.மு.க 90 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்துதான் அறிக்கைகள் விடுகின்றனர். சட்டமன்றத்திலும் இணைந்துதான் பணியாற்றினர். ஒருங்கிணைப்பாளர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியால், அவர் சட்டமன்றத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. இதனால் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக இணை ஒருங்கிணைப்பாளர் முதற்கட்டமாக 9 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., அங்கிருந்தே எங்களுக்கு ஆலோசனைகள் கூறுகிறார். இரண்டு பேரும் ஒருமித்த கருத்துடன் தான் உள்ளனர். இரட்டை தலைமை என்பது எங்களுக்கு பழகிப்போன ஒன்று. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரட்டை தலைமையில்தான் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை சந்தித்துவிட்டோம். இதில் ஒருமித்த கருத்துடன் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். எந்தவித கருத்து வேறுபாடு ஏற்படவில்லை. எனவே அதில் எந்த பிரச்னையும் எழ வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் அனைவரின் கருத்துத்தும் இதுவாகவே இருக்க வாய்ப்பில்லை. ஒரு சிலர் எடப்பாடியின் ஆதரவாளராகவும், ஒரு சிலர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும் இருக்கின்றனர். தொண்டர்களோ கட்சிக்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதுதான் அ.தி.மு.க.வில் நிகழும் நிதர்சனமான உண்மை.


அதானி பள்ளி மாணவர்கள், காந்தி ஜெயந்தி விழா, அமகதாபாத், Adani School Students, Gandhi Jayanti Festival, Ahmedabad
மாவட்டம்,தமிழ்நாடு

``மகாத்மாவுக்கு வணக்கம்" என்ற தலைப்பில், அகமதாபாத்தில் உள்ள அதானி வித்யா மந்திர் பள்ளி மாணவ, மாணவிகள் காந்தி ஜெயந்தி விழாவை கொண்டாடினர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அதானி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்காக மகாத்மா காந்தியின் பெரும் பங்களிப்பை பறைசாற்றும் விதமாக சபர்மதி ஆசிரமம் திகழ்கிறது. இந்த நிலையில், காந்தியின் 152வது பிறந்தநாளை முன்னிட்டு ``மகாத்மாவுக்கு வணக்கம்" என்ற தலைப்பில் அகமதாபாத்தில் உள்ள அதானி வித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான 32 மாணவர்கள், சர்தார் வல்லபாய் பட்டேல் உள்நாட்டு விமான நிலையத்தில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் அவரது தியாகங்களை பறைசாற்றும் வகையில் நிகழ்த்தி நடத்தினர்.

மேலும், அகிம்சை மூலம் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த நமது தேசத் தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதை நோக்கமாகக் கொண்டு . அவரது வாழ்க்கையை நினைவுகூரும் மற்றும் கலைப் பாதையில் அவரது மதிப்புகளை நினைவுகூரும் ஒரு தாழ்மையான முயற்சியாக "மகாத்மாவுக்கு வணக்கம்" என்ற தலைப்பில் அதானி பள்ளி மாணவ, மாணவிகள் இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியை நடத்தினர். இது மாணவர்களை மட்டுமல்ல, விமான நிலையத்தில் உள்ள பயணிகளையும் ஊக்குவிக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு காந்திய கொள்கைகளை பிரதிபலிக்க மற்றும் நம்புவதற்கு தூண்டுகோலாக அமைந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளியின் அறங்காவலர் ஸ்ரீமதி ஷிலின் அதானி, "மாணவர்கள் இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் கலாசாரத்தை புரிந்து கொள்ளவும் பெருமை கொள்ளவும் விரும்புகிறார்கள். தனது தாய்நாடு மற்றும் மக்கள் மீதான அன்புதான் அவரை சுதந்திரத்திற்காக போராடவும் சாதி பாகுபாட்டை எதிர்த்துப் போராடவும் செய்தது. அகிம்சை, சத்தியாகிரகம், தூய்மை மற்றும் சுதேசி இயக்கம் போன்ற பல விஷயங்களை காந்தி ஊக்குவித்தார்" என்று கூறினார்.


இயற்பியல், நோபல் பரிசு, விஞ்ஞானிகள், Physics, Nobel Prize, Scientists
உலகம்,முதன்மை செய்தி

இயற்பியல் துறைக்கான இந்தாண்டின் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2021ம் ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை 3 விஞ்ஞானிகளுக்கு தேர்வுக் குழு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஸ்கியூரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹாசில்மேன், இத்தாலியின் ஜியார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு நோபல் பரிசு கூட்டாக வழங்கப்படுகிறது.

புவிவெப்பமயமாதலை நம்பகத்தன்மை உள்ள வகையில் கண்டறியும் முறைக்காக மனாபே, ஹாசில்மேன் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. சிக்கலான இயற்பியல் கட்டமைப்புகள் குறித்த விளக்கத்திற்காக ஜியார்ஜியோ பாரிசிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நோபல் விருதுடன் ரூ.8 கோடி பரிசாக வழங்கப்படுகிறது.


மருத்துவம், நீட் தேர்வு, உச்சநீதிமன்றம், Medicine, NEET Exam, Supreme Court
இந்தியா,முதன்மை செய்தி

``நாட்டில் மருத்துவப் படிப்புகள் முழுமையாக வணிகமயமாகி விட்டது'' என உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஒன்றிய அரசு கடந்த ஜூலையில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அறிக்கையை வெளியிட்டது. ஆனால், அந்த அறிக்கை வெளியிட்ட பிறகு, அத்தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைக்கப்படுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. அதாவது நீட் எஸ்எஸ் தேர்வில் 60% கேள்விகள் குறிப்பிட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு சார்ந்தவையாகவும் 40% கேள்விகள் பொது மருத்துவம் சார்ந்தவையாகவும் இருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் நீட் எஸ்எஸ் தேர்வில் 100% வினாக்களும் பொது மருத்துவம் சார்ந்ததாகவே இருக்கும் என மாற்றி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 41 முதுநிலை மருத்துவ படிப்பை முடித்த டாக்டர்கள், சுப்ரீம்கோர்ட்டில் நீட் எஸ்எஸ் பாடத்திட்ட மாற்றத்தை எதிர்த்து ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், பிவி நாகரத்னா விசாரித்து வருகின்றன. கடந்த முறை விசாரணையின் போது, புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தயார் ஆவதற்காக ஜனவரிக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11ம் தேதிகளில் நடத்தப்படும் என்றும் ஒன்றிய அரசு விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், 'நீட்-எஸ்எஸ் தேர்வை மாற்றிக் கொண்டு இருப்பது நாட்டின் மருத்துவக் கல்வி தரத்திற்கு உகந்த செயல் அல்ல. நவம்பரில் நடைபெற வேண்டிய தேர்வுக்கு ஆகஸ்ட் மாதம் பாடத் திட்டத்தை மாற்றம் செய்கிறார்கள். மாணவர்கள் மனு தாக்கல் செய்தவுடன் ஜனவரி மாதம் தேர்வை ஒத்திவைக்கிறார்கள். இவை எதுவும் நாட்டில் மருத்துவப் படிப்பிற்கு நல்லதாக தெரியவில்லை.

நாட்டில் மருத்துவப் படிப்புகள் முழுமையாக வணிகமயமாகிவிட்டது. மருத்துவக் கல்வியும் ஒழுங்காற்று விதிகளும் வணிகமயமாகிவிட்டன. மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்களை நிரப்பவே அவசரம் காட்டப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்கள் காலியாக இருந்துவிடக் கூடாது என்ற நோக்கம் தெரிகிறது. பல ஆண்டுகளாக தேர்வுக்குத் தயாராகிவரும் மருத்துவர்களுக்கு வினாத்தாள் மாற்றம் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது' என்று காட்டமாக தெரிவித்த நிலையில் வழக்கை ஒத்திவைத்தனர்.


சமையல் எரிவாயு, மத்திய அரசு, பொதுமக்கள், எண்ணெய் நிறுவனம், Cooking gas, Central government, public, oil company
இந்தியா,முதன்மை செய்தி

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக வைத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மட்டும் மாதத்தில் முதல் மற்றும் பிற்பாதியில் மாற்றியமைக்கப்படும்.

இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு , 900 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வீடுகளில் பயன் படுத்தப்படும், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.

அதன்படி, ஒரு சிலிண்டர் விலை மேலும் 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 915 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 300 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.


உள்ளாட்சித் தேர்தல், வாக்குப்பதிவு, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், Local Election, Polling, TN Election Commissioner Palanikumar
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

மழையால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட இடங்களில், சரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மஹாயாள அமாவாசை, மழை காரணமாக வாக்குப்பதிவில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 (இன்று) மற்றும் 9ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடக்கிறது. அதன் அடிப்படையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பல்வேறு பகுதிகளில் மழையையும் பொருட்படுத்தாமல் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், "காலை 9 மணி வரை 7.72% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 12,318 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 129 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு முதற்கட்ட வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது. காவலர்கள், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் என 39,408 பேர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குச்சாவடி அருகே வாக்கு சேகரித்தவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மஹாயாள அமாவாசை, மழை காரணமாக வாக்குப்பதிவில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பொன்னங்குப்பத்தில் தேர்தலை மக்கள் புறக்கணித்தனர். தனி ஊராட்சி கோரிய மக்களுடன் ஆட்சியர், காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மழையால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட இடங்களில், சரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 74 மையங்களில் எண்ணப்பட உள்ளன.

தென்காசி மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் காலை 9 மணி வரை 10.78% வாக்குகள் பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 6.90% வாக்குகள் பதிவாகியுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கிவிட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிசெய்யும் பணிகள் அக்டோபர் 17க்கு பின் தொடங்கப்படும்" என கூறினார்.


லக்கிம்பூர், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, உபி அரசு, பாஜக, காங்கிரஸ், Lakhimpur, Rahul Gandhi, Priyanka Gandhi, UP government, BJP, Congress
அரசியல்,முதன்மை செய்தி

விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் ராகுல் காந்தியும், காங்கிரசும் அரசியலாக்க முயற்சி செய்வதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில் லக்கிம்பூருக்கு செல்ல ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு உபி அரசு அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் சொந்த காரில் செல்ல காவல்துறை அனுமதி மறுத்ததால் லக்னோ ஏர்போர்ட்டில் ராகுல் காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது சாலையில் நடந்து சென்ற விவசாயிகள் கூட்டத்தில், பாஜ.வினரின் கார் தாறுமாறாக ஓடி பலர் மீது மோதியது. இதில் 4 விவசாயிகள் பலியாயினர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கி உள்ளது. விவசாயிகள் மீது மோதிய காரில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது.

அவர் உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லக்கிம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள உபி அரசு, எதிர்க்கட்சி தலைவர்கள் யாரையும் நுழைய விடாமல் தடுத்து வந்தது. இதனிடையே காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக இது குறித்து காங்கிரஸ் மீது விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜகவின் சம்பித் பத்ரா, "விவசாயிகள் இறந்த விவகாரத்தை ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உ.பி. அரசு விசாரணை தொடங்க முடிவு செய்துள்ளது. பிரேத பரிசோதனை தொடர்பாக கேள்வி எழுப்ப ராகுல் காந்தி என்ன மருத்துவரா?. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் விவசாயிகள் மீது நடந்த தடியடி பற்றி ராகுல் காந்தி ஏன் கேள்வி கேட்கவில்லை?" என்று கூறினார்.

இதனிடையே, உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் செல்ல அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுமதி அளித்துள்ள உபி அரசு, 5 பேர் மட்டும் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. உபி அரசின் அனுமதியால் லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி லக்கிம்பூர் செல்ல இருந்தார்.

இதனிடையே, நாங்கள் அனுமதிக்கும் காரில்தான் லக்கீம்யூர் செல்ல வேண்டும் என்று காவல்துறையினர் ராகுல் காந்தியிடம் நிபந்தனை விதித்தனர். இதனை ஏற்க மறுத்த ராகுல் காந்தி, எனது காரில்தான் செல்வேன் என்று கூறினார். இதனை ஏற்க காவல்துறை மறுத்துவிட்டது. இதனால் லக்னோ விமான நிலையத்தில் ராகுல் காந்தி, பஞ்சாப், சத்தீஸ்கர் மாநில முதல்வர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


பா.ஜ.க,குஷ்புவுக்கு
சென்னை,முதன்மை செய்தி

சென்னை:

பா.ஜ.க.வில்  இணைந்த பிறகு நடிகை குஷ்புவுக்கு பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் பா.ஜ.க  சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

முன்னணி நட்சத்திரமாக இருப்பதால் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த மாநில தலைவர் எல்.முருகன் மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

அதேபோல் தோல்வியை தழுவிய அண்ணாமலை கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த வரிசையில் குஷ்புக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்தநிலையில் குஷ்புக்கு புதிய பொறுப்பாக ‘சிறப்பு அழைப்பாளர்’ என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பதவி எதுவும் இல்லாமல் இருந்த எச்.ராஜாவுக்கும் சிறப்பு அழைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு அழைப்பாளர்களாக இருப்பவர்கள் கட்சியின் தேசிய அளவில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் பதவி எதுவும் இல்லாமல் இருந்தார். இல.கணேசன், டாக்டர் தமிழிசை வரிசையில் அவரும் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு கவர்னர் ஆக்கப்படலாம் என்று கருதப்பட்டது. ஆனால் பொன்.ராதாகிருஷ்ணன் கட்சி பணியில் ஈடுபடுவதையே விரும்பினார். எனவே அவருக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


கோவிஷீல்டு தடுப்பூசி, இந்தியர்கள், இங்கிலாந்து, covishield Vaccine, Indians, England
உலகம்,முதன்மை செய்தி,கொரோனா வைரஸ்

"கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு வர எந்த தடையும் இல்ல" என இங்கிலாந்து அரசு திடீரென அறிவித்துள்ளது.

உலகில் பல்வேறு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் போதும் சில தடுப்பூசிகள் மட்டுமே சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளன. அந்த வகையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து அங்கீகரித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை தங்கள் நாட்டில் அனுமதிக்க மறுத்து வந்தது.

இந்தியாவில் இருந்து வருவோர் கோவிஷீல்டு தடுப்பூசியை 2 தவணைகள் செலுத்திய போதும் தங்கள் நாட்டுக்குள் வரும் போது 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவித்தது. இது இந்திய பயணிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவிஷீல்டு உள்பட தங்கள் நாட்டால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை முழுமையாக செலுத்திக்கொண்ட இந்தியர்கள் வரும் 11ம் தேதி முதல் பிரிட்டனில் கட்டுப்பாடுகள் இன்றி அனுமதிக்கப்படுவார்கள் என இந்தியாவிற்கான இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லீஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அரசின் இந்த அறிவிப்பு இந்திய பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே உற்பத்தி அதிகரித்துள்ளதால் தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து நேபாளம், மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதேபோல் ஈரானுக்கு 10 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளை அனுப்பவும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


வீட்டு கடன், தனி நபர் கடன், ரெப்போ வட்டி, ரிசர்வ் வங்கி, சக்தி காந்ததாஸ், Shaktikanta Das, RBI, HomeLoan
வணிகம்,முதன்மை செய்தி

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் கூடும். இதன்படி, 2 நாட்கள் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் முடிவடைந்து அதன் முடிவுகளை இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த் தாஸ் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முடிவுகளின் படி, அனைவரும் கணித்தபடியே ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை. தொடர்ந்து 4 சதவீதமாக இருக்கும். இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 3.35 சதவீதம் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன் மூலம் வட்டி விகிதங்களில் எட்டாவது முறையாக மாற்றங்கள் செய்யாமல் பழைய நிலையிலேயே நீடிக்க ரிசா்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பால் வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் குறையக் கட்டாயம் வாய்ப்பு இல்லை. இதன் மூலம் கனவு வீட்டை வாங்கத் திட்டமிடுவோர் தற்போது வங்கிகளில் இருக்கும் மிகவும் குறைவான வட்டி விகிதத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதேபோல் வாகன கடன், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதமும் குறையாது.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், '2021 - 22 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது 2021-22 இரண்டாம் காலாண்டில் 7.9 சதவீதமாகவும், 3ம் காலாண்டில் 6.8 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 6.1 சதவீதமாகவும் இருக்கும். 2022- 23ம் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 17.2 சதவீதமாக இருக்கும்.2022 நிதியாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 5.3% ஆக இருக்கும். 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 5.2% ஆக இருக்கும்' என்று தெரிவித்தார்.


பாலியல் வழக்கு, கொலை வழக்கு, அரியானா,  குர்மீத் ராம் ரஹீம், சிபிஐ நீதிமன்றம், Sex case, murder case, Haryana, Gurmeet Ram Rahim, CBI court
இந்தியா,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

பாலியல் வழக்கில் 20 ஆண்டு சிறையும், பத்திரிகையாளர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும் பெற்று சிறையில் உள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீம் மற்றும் 4 பேர் மற்றொரு கொலை வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வரும் 12ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படுகிறது.

ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனிடையே கடந்த 2002ம் ஆண்டு சத்ரபதி என்ற பத்திரிகையாளர் தனது பத்திரிகையில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக புலனாய்வு செய்தி வெளியிட்டார். இதையடுத்து 2002ம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதற்கிடையில் கடந்த 2002-ம் ஆண்டு தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆசிரமத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து ‘பூரா சச்’ என்ற பெயரில் எழுதப்பட்ட கடிதம் பத்திரிகைகளில் வெளியானது. இதன் பின்னணியில் ரஞ்சித் சிங் இருந்ததால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் குர்மீத் ராம், கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா உட்பட பலர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கிலும் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், ரஞ்சித் சிங்கை கொன்ற வழக்கில் ராம் ரஹீம் மற்றும் 4 பேர் குற்றவாளி என நீதிபதி சுஷில் கார்க் தீர்ப்பளித்தார்.இவருக்கான தண்டனை விவரம் அக்டோபர் 12ம் தேதி அறிவிக்கப்படுகிறது. முன்னதாக 2 பெண் பக்தர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் 20 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.


கணவன், மனைவி, தீ விபத்து, மதுரை, Husband, wife, fire accident, Madurai
மாவட்டம்,மதுரை,தமிழ்நாடு,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

மதுரையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தூங்கி கொண்டிருந்த கணவன் - மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆனையூர் அருகேயுள்ளது எஸ்.பி.பி நகர். இந்த பகுதியில் உள்ள குடியிருப்பில் சக்தி கண்ணன் மற்றும் அவரின் மனைவி இருவரும் தங்களது 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்கள் தங்கியிருந்த வீட்டின் மாடியில் இருந்து கரும்புகை வெளியே வந்திருப்பதை பக்கத்து வீட்டில் இருப்பவர்களும் வீட்டின் கீழே படுத்து தூங்கி கொண்டிருந்த அவரின் குழந்தைகளும் பார்த்துள்ளனர்.

உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைவாக செயல்பட்டு மாடியில் உள்ள அந்த அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சக்தி கண்ணன் மற்றும் அவரின் மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கணவன், மனைவியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்தி கண்ணன் இதே பகுதியில் தொழில் செய்து வருகிறார். கணவன் மனைவி இரண்டு பேரும் தீ விபத்தில் உயிரிழந்திருப்பது இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா, அதிமுக, OPS, EPS, Sasikala, ADMK
கட்டுரை

ஓ.பி.எஸ்-சுடன் இணைந்து சசிகலா புதிய திட்டம் ஒன்றை அரங்கேற்ற இருக்கிறார். இதனால் அ.தி.மு.க.வில் கடுமையான சூறாவளி வீச போவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சிறையில் இருந்து வெளியே வந்ததும் தமிழ்நாடு அரசியலில் பெரிய புயலை கிளம்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் சசிகலா. ஆனால் ஏனோ சில காரணகளுக்காக தேர்தல் நடக்கும் நேரம் பார்த்து அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். அ.தி.மு.க.வின் வாக்குகளை சிதறடிக்க கூடாது என்பது எண்ணத்தில் இவர் இந்த முடிவை எடுத்ததாக அப்போது கூறப்பட்டது.

தேர்தலுக்கு பின்னர் மீண்டும் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்த சசிகலா, அ.தி.மு.க.வை மீட்க வேண்டும் என்று போன் கால் மூலம் நிர்வாகிகள் பலரிடம் பேசி வந்தார். அ.தி.மு.க, அமமுக நிர்வாகிகள் பலரிடமும் இவர் பேசிய ஆடியோக்களும் மீடியாக்களில் வெளிவந்தது.

அ.தி.மு.க.வை மீட்க வேண்டும், கட்சியை காக்க வேண்டும் என்று சசிகலா ஒவ்வொரு போன் காலிலும் சொன்னார். தொடக்கத்தில் வெளியான சில ஆடியோக்களை தவிர வேறு எதுவும் பெரிதாக அ.தி.மு.க. தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தவில்லை. அவரின் போன் கால் ஆடியோ எதுவும் பெரிதாக அதன்பின் கவனிக்கப்படவில்லை.

இந்தநிலையில் சசிகலாவின் ஆடியோ பேச்சுக்கள் குறித்து அ.தி.மு.க.வில் சீனியர்கள் யாரும் பெரிதுபடுத்தவில்லை. எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் போன்றவர்கள் எதிர்ப்பு காரணமாக அ.தி.மு.க.விலும் சசிகலாவுக்கு இணைய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓ.பி.எஸ் மட்டும் கொஞ்சம் சசிகலா ஆதரவு போல இருக்கிறார் என்று தகவல்கள் வந்தாலும் அவர் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆடியோ வெளியீட்டுக்கு பின்னர் அமைதியாக இருந்த சசிகலா தற்போது மீண்டும் இரண்டாவது திட்டத்தை தொடங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மரணத்தின் போது ஓ.பி.எஸ்ஸை மருத்துவமனைக்கே நேரில் சென்று சசிகலா சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த சந்திப்பு ஓ பன்னீர்செல்வம்- சசிகலா இடையே கொஞ்சம் கசப்பை மறந்து, பிணைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.வின் சில முக்கிய நிர்வாகிகள் சிலரும். சசிகலாவை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முணுமுணுத்ததாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் மட்டுமின்றி கட்சி மீது அதிருப்தியாக இருக்கும் வேறு சில நிர்வாகிகள் மத்தியிலும் சசிகலாவின் மதிப்பு உயர்ந்து உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

ஆளும் தி.மு.க. அரசோ பலரது மீது வழக்குகள் போட்டு வருகிறது. ஆனால் ஈபிஎஸ், ஓபிஎஸ் எதுவுமே செய்யவில்லை. இதுவே சசிகலா இருந்தாலாவது பெரிய அளவில் போராட்டமோ அல்லது ஆர்ப்பாட்டமோ செய்து இருப்பார் என்ற மனநிலைக்கு சில அ.தி.மு.க. தலைகள் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியை பொருத்தவரை கோடநாடு வழக்கு விவகாரத்தில் மன உளச்சலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் எங்கே நம்மை காப்பாற்ற போகிறார் என்று அ.தி.மு.க. மாஜி அமைச்சர்கள் சிலர் புலம்பி வருகிறார்களாம். இந்த சந்தர்ப்பத்தை எப்படியாவது பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருக்கிறாராம். அதற்காக ஒரு புதிய திட்டத்தை தீட்டி உள்ளாராம்.

அதேநேரத்தில் நமது எதிரி தி.மு.க.தான். நமக்குள்ளேயே சண்டை போட கூடாது என்று சசிகலா அ.தி.மு.க. தலைவர்களுக்கு தகவல் அனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டையொட்டி, இம்மாதம் 16-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா 17-ம் தேதி காலை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்கும், ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கும் சசிகலா செல்கிறார்.

அதன் தொடர்ச்சியா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் முடிவு செய்து இருக்கிறாராம். இதன் மூலம் அ.தி.மு.க. நிர்வாகிகள் கவனத்தை தன் பக்கம் திருப்பலாம் என்ற நினைப்பில் சசிகலா இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் மூலம் அ.தி.மு.க.விற்கு நுழைய மறைமுக திட்டங்கள் சிலவற்றையும் சசிகலா தீட்டி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன.

ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை சசிகலா கட்சிக்கு வருவதில் சிக்கல் இல்லை. ஆனால் அவர் மீண்டும் கட்சிக்குள் மொத்தமாக ஆதிக்கம் செலுத்த கூடாது. அவரும் ஒரு தலைவராக இருக்கலாம். அதிகார பகிர்வு இருக்கும். ஆனால் அவர் மட்டுமே அதிகாரம் பொருந்திய நபராக இருக்க முடியாது. இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டால் சசிகலா திட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஒத்து கொள்வார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

சசிகலாவை தொடக்கத்தில் கடுமையாக எதிர்த்த எடப்பாடி பழனிசாமியும் இப்போது கொஞ்சம் அமைதியாகிவிட்டார். சசிகலா விஷயம் என்று இல்லை பொதுவாகவே கடந்த சில நாட்களாக எடப்பாடி ஏனோ அமைதியாக இருக்கிறார். அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு போது இவர் முக்கிய விஷயங்களை பேசுவாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.


கடலூர், திமுக, ரமேஷ் ஸ்டாலின், Cuddalore, DMK, Ramesh, Stalin
கடலூர்,அரசியல்,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

கடலூர் திமுக எம்.பி., ரமேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யபட்டுள்ள நிலையில், அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை பாயலாம் என கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் திமுக நிர்வாகிகளுடன், கட்சித்தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கடலூர் மாவட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர், பணிக்கன் குப்பம் கிராமத்தில் திமுக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான டிவிஆர் முந்திரி தொழிற்சாலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து கோவிந்தராஜின் மகனுக்கு தொலைபேசி மூலமாக, உன் அப்பா கோவிந்தராஜ் உயிரிழந்து விட்டதாகவும் அவரது உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ரமேஷின் உதவியாளர் தெரிவித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த அவரது மகன் மற்றும் உறவினர்கள் கோவிந்ததாஜின் உடலை பார்த்துள்ளனர். அப்போது அவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மறுநாள் இது சம்பந்தமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய மனு அளித்ததோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைத்திருந்த உடலை ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் அவரது தொழிற்சாலையில் உள்ள நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதில், நாடாளுமன்ற உறுப்பினரைத் தவிர மற்ற 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ரமேஷை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக எம்.பி ரமேஷ் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தினார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.


Vaiko, Political, Durai Vaiyapuri, வைகோ, துரை வையாபுரி, அரசியல்
தென்காசி,அரசியல்,முதன்மை செய்தி

"என் மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பம் இல்லை" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் ஆகிய 5 ஊராட்சி 819 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. எனினும் மழையை பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறும், மழையில் நனைந்தவாறும் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

தென்காசி மாவட்டத்தில் கலிங்கபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை ஓட்டுப்போட்டார். அவருடன் அவரது தம்பி வை.ரவிச்சந்திரன், மகன் துரை வையாபுரி ஆகியோரும் வாக்களித்தனர்.

வாக்களித்த பின்னர் வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்த வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தற்போது 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். எனது மகன் அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை. நான் லட்சக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடைபயணமாக சென்றுள்ளேன். மக்கள் பிரச்னைகளுக்காக நிறைய முறை சிறை சென்றுள்ளேன். இதனால் என் மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பம் இல்லை. வருகிற 20ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. அதில் நிர்வாகிகள் என்ன கூறுகிறார்களோ அதன்படி முடிவு எடுக்கப்படும்" என்று கூறினார்.


பெட்ரோல், டீசல், சென்னை, Petrol, Diesel, Chennai
தமிழ்நாடு,முதன்மை செய்தி

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7வது நாளாக உயர்ந்து வருகிறது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 7 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ச்சியாக உயர்ந்து, மக்களை வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் மீதான வரியில் ரூ.3ஐ தமிழக அரசு குறைத்தது. இதனால், பெட்ரோல் விலை ரூ.100க்குள் வந்தது. ஆனால், அதன் பின்னர் தொடரும் விலை உயர்வால், மீண்டும் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக 7வது நாளாக இன்றும் , பெட்ரோல் லிட்டருக்கு 26 காசும், டீசல் லிட்டருக்கு 33 காசும் அதிகரித்தது. அந்த அடிப்படையில், சென்னையில் நேற்று பெட்ரோல் ரூ.101.53க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 26 காசு அதிகரித்து, ரூ.101.79 க்கு விற்கப்படுகிறது. மேலும், டீசல் ரூ.97.26க்கு விற்கப்பட்ட நிலையில், 33 காசு அதிகரித்து, ரூ.97.59க்கு விற்கப்படுகிறது.

தொடர் விலை உயர்வால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெட்ரோல் மீண்டும் ரூ.100ஐ கடந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். அதேபோல், டீசலும் பெரும்பாலான இடங்களில் ரூ.97ஐ தாண்டி விற்கப்பட்டு வருகிறது. இதனால் கனரக வாகன உரிமையாளர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களான தக்காளி, வெங்காயம் விலை உயர்ந்து உயர்ந்து வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்த, ஒன்றிய பாஜக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


முந்திரி தொழிலாளி கொலை வழக்கு, திமுக எம்பி ரமேஷ், கடலூர், பண்ருட்டி நீதிமன்றம், Cashew worker murder case, DMK MP Ramesh, Cuddalore, Panruti court
மாவட்டம்,கடலூர்,அரசியல்,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

முந்திரி தொழிலாளி கொலை வழக்கில் தொடர்புடைய தி.மு.க. எம்.பி. ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். "என் மீதான புகார் ஆதாரமற்றது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து வெளியே வருவேன்" என்று ரமேஷ் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தில் முந்திரி தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடலூர் எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில், பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு (55) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி கோவிந்தராசு, மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், தனது தந்தையை ரமேஷ் எம்.பி. மற்றும் முந்திரி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் அடித்துக் கொலை செய்து விட்டதாகவும், இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில் கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த மாதம் 28ம் தேதி விசாரணையை தொடங்கினர். தீவிர விசாரணை நடந்து வந்த வேளையில், கோவிந்தராசுவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையிலும் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராசு சந்தேக மரணம் என பதியப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி கடலூர் எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜ் (31), தொழிலாளர்கள் அல்லா பிச்சை (53), சுந்தர் என்கிற சுந்தர்ராஜ் (31), வினோத் (31), கந்தவேல் (49) ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத், கந்தவேல் ஆகியோரை கைது செய்தனர். அப்போது நடந்த விசாரணையின்போது எம்.பி.யின் உதவியாளர் நடராஜ் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அல்லா பிச்சை உள்ளிட்ட 4 பேர் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தி.மு.க. எம்.பி. ரமேஷிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே திமுக எம்பி ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், "என் மீதான புகார் ஆதாரமற்றது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து வெளியே வருவேன். நல்லாட்சியின் மீது வீண்பழி வீசுபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் எனக் கருதி சரணடைந்தேன்" என்று கூறியுள்ளார்.


கேரளா, உத்ரா கொலை, மனைவி கொலை, கணவன், கொல்லம் நீதிமன்றம், Kerala, Uthra murder, wife murder, husband, Kollam court
இந்தியா,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

கேரளாவை உலுக்கிய இளம்பெண் உத்ரா கொலை வழக்கில் அவரது கணவர் சூரஜ் குற்றவாளி என்று கொல்லம் அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கொல்லத்தில் 2020 மே 7-ம் தேதி கருநாகத்தை கடிக்க வைத்து மனைவி உத்ராவை கொலை செய்ததாக சூரஜ் மீது வழக்கு தொடரப்பட்டது. மனைவியின் சொத்துகளை அபகரிப்பதற்காக அவரை கொலை செய்ய திட்டமிட்டார் சூரஜ். முதலில் மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து கண்ணாடி விரியன் பாம்பை விட்டு கடிக்க வைத்தார். கண்ணாடி விரியன் பாம்பு கடித்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உத்ரா சிகிச்சைக்கு பின் பிழைத்துக் கொண்டார். 2 மாதம் கழித்து கருநாகத்தை வாங்கி வந்து 7 நாள் பட்டினி போட்டு மனைவியை கடிக்க வைத்து கொலை செய்தார் சூரஜ்.

கேரள மாநிலத்தையே உலுக்கிய உத்ரா கொலை வழக்கை அறிவியல் பூர்வமாக அணுகி விசாரணை நடத்தியது போலீஸ். சாதாரணமாக பாம்பு கடிக்கும் போது, பற்களின் இடைவெளி 1.7 செமீ அளவிற்கு உடலில் பதிந்து இருக்கும். உத்ராவை கடித்த பாம்பின் பற்களின் அகலம் அவரது உடலில் 2.8 செமீ பதிந்து இருந்ததால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். மேலும் கண்ணாடி விரியன் மரம் ஏறாது என்ற அடிப்படையில் முதல் மாடிக்கு சென்று பாம்பு கடித்ததால் போலீசாருக்கும் சந்தேகம் வலுத்தது. இந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியதால் கொலை செய்ததை சுரஜ் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் சூரஜை கைது செய்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது பெற்றோர் மற்றும் அவரது சகோதரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொல்லம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து வாதங்களுக்கும் முடிவடைந்த நிலையில், உத்ரா கொலை வழக்கில் அவரது கணவர் சூரஜ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சூரஜின் தண்டனை விவரம் வரும் 13ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.


Police Encounter, Jharkhand robber, Sriperumbudur, ஸ்ரீபெரும்புதூர், ஜார்க்கண்ட் கொள்ளையன், போலீஸ் என்கவுன்ட்டர்
மாவட்டம்,காஞ்சிபுரம்,தமிழ்நாடு,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

ஸ்ரீபெரும்புதூர் அருகே காவல்துறையினரை துப்பாக்கியால் சுட்ட ஜார்க்கண்ட் கொள்ளையன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொரு கொள்ளையனை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வயதான பெண்மணியிடம் 6 சவரன் நகையை வழிப்பறி செய்து அங்கிருந்து 2 வடமாநில இளைஞர்கள் தப்பித்து செல்ல முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடிக்க முயன்ற போது கைத்துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். தப்பியோடிய கொள்ளையர்கள் பென்னலூர் ஏரி பகுதிக்கு சென்று பதுங்கி கொண்டனர். 10 குழுவினர் அந்த ஏரி பகுதியில் முகாமிட்டு கொள்ளையர்கள் தேடி வந்தனர். ட்ரோன் கேமரா உதவியுடன் கொள்ளையர்களை பிடிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்த காரணத்தினால் துப்பாக்கியுடன் தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்று இரவு முழுவதும் தேடி வந்தனர்.

இந்நிலையில் அந்த ஏரி பகுதியில் பதுங்கி இருந்த ஒரு கொள்ளையனை பிடிக்க முயற்சிக்கும் போது அவர் தனது பாதுகாப்பிற்காக போலீசார் நோக்கி துப்பாக்கியால் சுட முயற்சித்துள்ளார். அப்போது தங்களது பாதுகாப்பிற்காக சம்மந்தப்பட்ட கொள்ளையனை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். தற்போது இறந்த கொள்ளையனின் உடலை ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையனின் பெயர் முர்தஷா என்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவன் என்றும் தெரியவந்துள்ளது. தப்பியோடிய மற்றொரு கொள்ளையன் நைம் அக்தரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவனிடம் இருந்து துப்பாக்கி, 3 கத்திகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கொள்ளையர்களுக்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது? இறந்த கொள்ளையனின் விவரங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சிலிண்டர், பால், இலங்கை, Srilanka, Cylinder, Gas cylinder, Milk
உலகம்,முதன்மை செய்தி

இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 90 சதவிகிதம் வரை அதிகரித்து, 2,657 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த 8ம் தேதி வரை வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், விலை அதிகரித்து 2,657 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் விற்பனையாகிறது. அதேபோல ஒரு லிட்டர் பால் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோதுமை மாவு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. எனினும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் சமூக வலைதளங்களில் பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவிய நிலையில், அந்நிய செலாவணியை குறைக்க, இறக்குமதி கட்டுப்பாட்டுகளை விதித்தது. இதனால் இலங்கையில் பால் பவுடர் முதல் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.


ஏகாம்பரநாதர் கோயில், கோயில் நிலம், அமைச்சர் சேகர் பாபு, பூந்தமல்லி, Ekambaranathar Temple, Temple Land, Minister Sekar Babu, Poonamallee
மாவட்டம்,திருவள்ளூர்,தமிழ்நாடு,முதன்மை செய்தி

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்பிலான நிலம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் மீட்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் இன்று அறநிலையத்துறை வசம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, 'காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் இதுவரை 132 கிரவுண்டு இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தி உள்ளது. இன்று 250 கோடி மதிப்பிலான 38 கிரவுண்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலைய துறை தன்வசபடுத்தி உள்ளது. முறையாக 78 நோட்டீஸ் கொடுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தி உள்ளோம்.

அறநிலையத்துறையில் குறைகள் பதிவேடு துறை ஆரப்பித்தோம். இணையதளம் மூலம் குறைகளை மக்கள் தெரிவிக்க கடினமாக இருந்ததால் தொலைபேசி எண்ணை அறிவித்தோம். அதன் மூலம், இதுவரை 4500 குறைகள் வந்துள்ளன, மண்டல வாரியாக பிரித்து அனுப்பி ஆய்வு செய்து வருகிறோம். விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹெச்.ராஜாவின் இந்து சமய அறநிலையத் துறை மீதான ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் இந்து சமய அறநிலைத்துறை கருத்தில் கொள்ளாது. எதையோ பார்த்து ஏதோ குறைக்கிறது என்று நினைத்துக்கொள்வோம். ஹெச்.ராஜா மத்திய அரசின் பிரதிநிதி அல்ல.

சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் வழிபாட்டிற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது விஜயதசமி அன்று கோவில் திறப்பது தொடர்பாக நீதிமன்றதில் வழக்கு நிலுவையில் உள்ளது, நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும். திருநீர் மலையில் ரோப் கார் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும். மற்ற கோயில்களில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் நடைபெறும்' என்றார்.


சென்னை வானிலை ஆய்வு மையம், வங்கக் கடல், மீனவர்கள், Chennai Meteorological Center, Bay of Bengal, Fishermen
மாவட்டம்,கிருஷ்ணகிரி,சேலம்,ஈரோடு,முதன்மை செய்தி

"அந்தமான் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது என்றும் இதனால் தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் செய்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி , கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கன மழையும், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும் ஈரோடு தேனி திண்டுக்கல் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வருகின்ற 15ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 16ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ம் தேதி ஆந்திரா, ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக் கூடும். இன்று முதல் வருகின்ற 16ம் தேதி வரை தென்கிழக்கு வங்க கடல், குமரி கடல், மன்னார் வளைகுடாப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் உள்ளிட்ட இடங்களில் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்" என அலர்ட் செய்யப்பட்டுள்ளது.


ஊராட்சித் தலைவர், பஞ்சாயத்து தலைவர், உள்ளாட்சித் தேர்தல், திருநெல்வேலி, சிவந்திப்பட்டி, Panchayat Leader, TN Local Election, Tirunelveli, Sivanthipatti
மாவட்டம்,திருநெல்வேலி,அரசியல்,முதன்மை செய்தி

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் அசத்தல் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது.இந்த இருகட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தல் முடிவுகளின்படி, பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 21 வயது பெண் சாருலதா என்பவர் வெற்றி பெற்றார். இவர், ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்று கொண்டார்.

அதே போல, திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தேர்தலில் 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட்டை இழக்கச் செய்து 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொண்டார்.


உள்ளாட்சித் தேர்தல், அதிமுக, ஓபிஎஸ், ஈபிஎஸ், TN Local bady Election, ADMK, OPS, EPS
கட்டுரை

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய தோல்வியை அ.தி.மு.க. எதிர்கொண்டிருக்கிறது. இந்த தோல்வியானது கட்சிக்கு இரட்டை தலைமை இருப்பதுதான் காரணமா? என்ற கோணத்தில் நிர்வாகிகள் மத்தியில் கடும் குழப்பம் நிலவுகிறதாம்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தொடுக்கப்பட்டார். அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதும், அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்றனர். அ.தி.மு.க வரலாற்றில் முதல் முறையாக இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது.

இரு தலைமை உருவாக்கப்பட்ட நாள் முதல் இரு தலைவர்களுக்கான ஆதரவாளர்கள் என சூழலும் அதிகரிக்க தொடங்கியது. மேலும் இந்த இரட்டை தலைமையின் காரணமாக அ.தி.மு.க. ஒவ்வொரு பிரச்சனையிலும் உட்கட்சி மோதல்களால் திணறித்தான் வருகின்றன.

அ.தி.மு.க. இரட்டை தலைமையுடன் செயல்பட்டாலும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்ற அதிகாரத்துடன் இருந்ததால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவர் பக்கமே இருந்தனர். இதை பயன்படுத்தி கடந்த சட்டமன்ற தேர்தலில் தான் முதல்வர் வேட்பாளராக களம் இறங்கினார்.

வேட்பாளர்கள் தேர்விலும் ஒருங்கிணைப்பாளர் என்கிற வகையில் தமது கை ஓங்கி இருக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அப்போது ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததால் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாம் நினைத்ததையே சாதித்தார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஆதவாளர்கள் கடும் அதிருப்திக்கு ஆளானார்கள்.

சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதும் இருவரும் இணைந்து செயல்படாமல் மோதல் போக்கை கடைபிடித்தனர். இதனால் தொடர் வெற்றியைப் பெற்ற அதிமுக தோல்வியைத்தான் சந்திக்க முடிந்தது. ஆட்சி அதிகாரத்தை திமுகவிடம் பறிகொடுத்தது. ஆனாலும் ஒரு கவுரமான இடங்களை எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது அ.தி.மு.க.

சட்டசபை தேர்தல் முடிந்த பின்னரும் இரட்டை தலைமையின் அதிகார சண்டை ஓயவில்லை. யார் எதிர்க்கட்சித் தலைவர் என இருவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியாக அதிலும் எடப்பாடி பழனிசாமிதான் வென்றார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்கெனவே முடியாது என்கிற மனநிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார்.

சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின்னர் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து பேச்சு எழுந்தது. அப்போதும்கூட எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியது. ஒருகட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பேச வேண்டிய நிலையையும் உருவாக்கினார் எடப்பாடி பழனிசாமி.

இத்தனை குமுறல்களையும் மனதில் வைத்திருந்த ஓ.பன்னீர்செல்வம், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போது பகிரங்கமாகவே சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து பேசினார். தேர்தலின் போது தலைவர்கள் மேற்கொண்ட வியூகங்களால்தான் அதிமுக தோற்றது என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

அத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான அடுத்தடுத்த ஊழல்கள், கோடநாடு கொலை-கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் தொடர்பு குறித்த விவாதங்கள் என உள்ளாட்சித் தேர்தல் களம் அத்தனையும் அதிமுகவுக்கு எதிராகவே இருந்தன. இதனைத்தான் தற்போதைய தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்தி இருக்கின்றன.

அதிமுக ஆளும் கட்சியாக இருந்த போது 2019-ல் நடத்திய உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு இணையான இடங்களைப் பெற்றது. ஆனால் இப்போது அதிமுக தலைவர்களே கனவிலும் நினைக்காத பெருந்தோல்வியை சந்தித்துள்ளனர். 140 மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெறும் 2 இடங்கள்தான் அதிமுகவுக்கு என்பதெல்லாம் சரித்திரம் காணாத தோல்விதான்.

அதேபோல் ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 990 இடங்களில் திமுக வெற்றி பெற்ற நிலையில், 200 இடங்களுக்கே அதிமுக போராடுவதும் அக்கட்சியின் தொண்டர்களுக்கு மிகப் பெரும் துயர செய்திதான். அதிகாரத்தில் இருந்த போது பெருமிதத்துடன் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொன்ன இரட்டை தலைமை என்பது அதிமுகவுக்கு எப்படியான தேர்தல் முடிவுகளை தந்திருக்கிறது என்பது சுய பரிசோதனைக்குரியதாகவே அவர்கள் பார்த்தாக வேண்டும் என்று கட்சியினர் சீனியர்களின் குமுறலாக இருக்கிறதாம்.


Suraj, Kerala, Uthracase, கேரளா, கொல்லம் நீதிமன்றம், ஆயுள் தண்டனை
இந்தியா,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

கேரள மாநிலம் கொல்லம் அருகே பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற வழக்கில் குற்றவாளியான கணவர் சூரஜுக்கு கொல்லம் மாவட்ட நீதிமன்றம் 4 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம், கொல்லம் அருகே அஞ்சல் பகுதியை சேந்தவர் விஜயசேனன். அவரது மகள் உத்ரா (25). இவருக்கும் பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் பகுதியை சேர்ந்த சூரஜ் (27) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த வருடம் மே 7ம் தேதி உத்ராவை பாம்பு கடித்ததாக கூறி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் உத்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறி அவரது தந்தை விஜயசேனன் அப்போதைய கொல்லம் எஸ்பி ஹரிசங்கரிடம் புகார் அளித்தார். இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் சூரஜ் தான் சொத்துகாக உத்ராவை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சூரஜ் மீது கொலை செய்தல், துன்புறுத்துதல், வனவிலங்கு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், சொத்துகாக உத்ராவை கொலை செய்ததாகவும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் இருந்து பாம்பை வாங்கி வீட்டில் வைத்திருந்ததாகவும் கூறினார். இதையடுத்து சுரேசையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணை கொல்லம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ் தீர்ப்பு அளித்தார். அதில், உத்ரா கொல்லப்பட்ட வழக்கில் கணவர் சூரஜ்க்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் குற்றவாளியாவார்,' எனத் தீர்ப்பளித்தார். இந்த நிலையில் இன்று குற்றவாளி சூரஜுக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி மனோஜ் தீர்ப்பளித்துள்ளார். 4 ஆயுள் தண்டனையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி, சூரஜுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தார்.


சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு, மழை, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, Chennai Meteorological Center, Tamil Nadu, Rain, Nilgiris, Coimbatore, Erode, Salem, Cuddalore, Kallakurichi, Villupuram, Ranipettai
மாவட்டம்,நீலகிரி,கோயம்புத்தூர்,கடலூர்,சேலம்,ராணிப்பேட்டை,முதன்மை செய்தி

நாளை முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனையொட்டிய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 15ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

16ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

17ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரை நோக்கி நகரும். இன்று முதல் 16ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல் , மன்னார் வளைகுடா பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் , கேரளா, லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்" என கூறப்பட்டுள்ளது.


விஜயபாஸ்கர், அதிமுக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ், Vijayabaskar, AIADMK, Anti Corruption Police
மாவட்டம்,புதுக்கோட்டை,அரசியல்,முதன்மை செய்தி

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் அதிரடி சோதனை நடைபெறுகிறது.


விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மாமனார், தங்கை, தம்பி  உள்ளிட்ட உறவினர்களின் வீடுகளிலும் காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து மார்ச் 31 வரை 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 22,56,736 ரூபாய் சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனைவி ரம்யா, மகள்கள் பெயரில் விஜயபாஸ்கர் சொத்துகள் வாங்கி குவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச பணத்தின் மூலம் அறக்கட்டளை தொடங்கி கல்வி நிறுவனங்களையும் சி.விஜயபாஸ்கர் நடத்தி வந்துள்ளார். அறக்கட்டளை மூலம் பள்ளி, பொறியியல், செவிலியர், கல்லூரி என 14 கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

பதவிக்காலத்தில் ரூ.6.6 லட்சத்துக்கு டிப்பர் லாரிகள், சிமெண்ட் கலவை இயந்திரங்கள், ஜே.சி.பி. வாங்கி இருக்கிறார். அமைச்சராக இருந்த போது ரூ.53 லட்சத்துக்கு பி.எம்.டபிள்யூ. கார் வாங்கி இருக்கிறார். ரூ.40 லட்சம் மதிப்பிலான 85 சவரன் நகைகளும் வாங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சிலாவட்டம், மொரப்பாக்கத்தில் சுமார் ரூ.4 கோடிக்கு விவசாய  நிலங்களை வாங்கியுள்ளார். லஞ்ச பணத்தில் சென்னை தியாகராயர் நகரில் ரூ.15 கோடிக்கு வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார். அமைச்சராக இருந்த போது பல நிறுவன பங்குகளை ரூ. 28 கோடிக்கு வாங்கி இருக்கிறார். அமைச்சராக இருந்த போது தான் மற்றும் மனைவி, 2 மகள்கள் பெயரில் ரூ.58 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.

வருமான வரித்துறை கணக்கின் படி 5 ஆண்டில் சி.விஜயபாஸ்கர் வருமானம் ரூ.58.65 கோடி என காட்டப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் வங்கிக்கடன், காப்பீட்டுத்தொகை என ரூ.34.5 கோடி செலவு செய்துள்ளார். சி.விஜயபாஸ்கரும் ரம்யாவும் 5 ஆண்டுகளில் செலவு போக ரூ.24 கோடி மட்டுமே சேமித்து இருக்க முடியும். வருமானத்தை மீறி ரூ.27.22 கோடி சொத்து சேர்த்துள்ளதாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


முல்லை பெரியாறு அணை, உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசு, கேரளா, Mullaiperiyar Dam, Supreme Court, Union Government, Kerala
தமிழ்நாடு,முதன்மை செய்தி

முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதால் இனி அணையின் பாதுகாப்பு பற்றி பேச எதுவும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணையின் நீர்மட்டத்தை குறைப்பதோடு அணையின் பாதுகாப்பு தன்மையை ஆய்வு செய்ய சர்வேதேச நிபுணர் குழு அமைக்க வேண்டும் என கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரசூல் ராய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஒன்றிய அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், "முல்லைப் பெரியாறு அணையின் மதகுகள், கதவுகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள பழுதுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்டது. இன்னும் எஞ்சிய சில பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும். முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதால் இனி அணையின் பாதுகாப்பு பற்றி பேச எதுவும் இல்லை" என தெரிவித்துள்ளது. இந்த வழக்கு வருகின்ற 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.


ராமதாஸ், பாமக, உள்ளாட்சித் தேர்தல், அன்புமணி, Ramadoss, PMK, TN Local Election, Anbumani
கட்டுரை

உள்ளாட்சித் தேர்தலில் வடமாவட்டங்களில் கனிசமான இடங்களில் வெற்றி பெறும் கனவில் தனித்து களம் இறங்கியது பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால் 25 சதவீத வெற்றிக்கூட கிடைக்கவில்லை என்று கட்சியின் தலைமை கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 12ம் தேதி எண்ணப்பட்டது. இதில் ஆளும் தி.மு.க. அமோக வெற்றிபெற்றது. அ.தி.மு.க. படுதோல்வியை தழுவியது. அந்த கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பா.ம.க. 47 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவியை கைப்பற்றியது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வடமாவட்டங்களில்தான் அதிகம் நடைபெற்றது.  இந்த தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுவதால் அதிக இடங்களை கைப்பற்றும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தனர். பா.ம.க. தலைமையும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றி பா.ம.க.வுக்கு கிடைக்கவில்லை. இதனால் கட்சியின் தலைமை கடும் அதிருப்திக்கு ஆளானது.

இந்தநிலையில், பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது. கூட்டத்துக்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட லர் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், இனி பா.ம.க. செயல்பாடுகள், எதிர்கால செயல் திட்டம், கூட்டணி நிலைப்பாடுகள் போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் பேசிய கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடும் கோபத்துக்கு ஆளாகிவிட்டாராம்.

"கட்சிக்கு யாரும் விசுவாசமாக வேலை செய்யவில்லை. அதனால்தான் வட மாவட்டங்களில் கூட நாம் எதிர்பார்த்த வெற்றியை நம்மால் பெற முடியவில்லை. இந்த தோல்வினால் நமக்கு இருந்த செல்வாக்கு குறைந்துவிட்டதாக தெரிகிறது. நமக்கு செல்வாக்கு உள்ள இடத்தையை நாம் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்" என்று நிர்வாகிகளை கடுமையாக சாடியிருக்கிறார் ராமதாஸ்.

"இனிமேல் கூட்டணி கிடையாது. யாராவது வேறு கட்சிக்கு மாற வேண்டும் என்று நினைத்தால் இப்போதே போய்விடுங்கள். இருப்பவர்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்.  அடுத்து வரக்கூடிய மாநகராட்சித் தேர்தல்களில் கடுமையாக உழைத்து வெற்றிபெற வேண்டும். இதை மனதில் வைத்து பணியாற்றுங்கள்" என்று மீண்டும் கோபத்தில் பேசினாராம் ராமதாஸ்.

விரைவில் எல்லா நிர்வாகிகளும் கிராம் கிராமமாக சென்று மக்கள் பணியாற்றி கட்சியை உறுதியாக நிலை நிறுத்துங்கள். அதற்கு விசுவாசமாகவும், கடுமையாகவும் உழைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவையும் ராமதாஸ் பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


தமிழ்நாடு, மழை, சென்னை வானிலை ஆய்வு மையம், கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர் ,சேலம், தர்மபுரி ,வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, Tamil Nadu, Rain, Chennai Meteorological Center, Coimbatore, Erode, Tiruppur, Salem, Dharmapuri, Vellore, Ranipettai, Villupuram, Kallakurichi
மாவட்டம்,கோயம்புத்தூர்,ராமநாதபுரம்,திருப்பூர்,ஈரோடு,முதன்மை செய்தி

வெப்ப சலனம் காரணமாக இன்று கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர் ,சேலம், தர்மபுரி ,வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் , வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 20-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

21ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி,கோவை, திருப்பூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வரும் 22ம் தேதி சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிக கனமழையும்,  அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும்  பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.  இன்று கேரள கடலோர பகுதி,  லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால்,  மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், தமிழக அரசு, ஐபிஎஸ், டிஜிபி, Shankar Jiwal, AK Viswanathan, TamilNadu Government, IPS, DGP
தமிழ்நாடு,முதன்மை செய்தி

சென்னை போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால், முன்னாள் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர ஆணையர் பதவியில் இதுவரை ஏடிஜிபி அந்தஸ்துள்ளவர்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் டிஜிபி அந்தஸ்துள்ளவர்கள் வகிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல காவலர் வீட்டுவசதி வாரிய தலைவர் ஏ.கே.விஸ்வநாதன், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு கூடுதல் டிஜிபி ஆபாஷ் குமார், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சீமா அகர்வால் ஆகியோருக்கும் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது வகித்து வரும் பதவியில் டிஜிபி அந்தஸ்தில் தொடர்வார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அயலகப் பணியில் டெல்லி உளவுப் பிரிவு இணை இயக்குநராக உள்ள டி.வி.ரவிச்சந்திரனுக்கும் டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை தலைமையிடத்து கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர், நிர்வாகப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன், காவல் துறை தலைமையக கூடுதல் டிஜிபியாகவும், தொழில்நுட்பப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த அம்ரேஷ் புஜாரி சைபர் க்ரைம் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலுக்கு, அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


கேரளா, மழை, நிலச்சரிவு, கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா, Kerala, Rain, Landslide, Kottayam, Idukki, Pathanamthitta
இந்தியா,முதன்மை செய்தி

கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ள நிலையில், நாளை முதல் மீண்டும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிககனமழை கொட்டி தீர்த்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். கேரளாவின் மலைப்பகுதி மாவட்டங்களான கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கி அதிகம் பேர் பலியாகினர். கோட்டயம் மாவட்டம் முண்டக்கயத்தில் மணிமலையார் நதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் வீடு ஒன்று முழுமையாக அடித்து செல்லப்பட்டது.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் உடமைகளை அடித்து சென்றது. வயல்வெளிகள், வாழைத்தோட்டங்கள் என கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகள், முகாம்கள் போன்றவற்றில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் 24 மணி நேரமும் செயல்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா 4 லட்சம் ரூபாய் உதவி தொகை வழங்கும் என தெரிவித்துள்ளார். இதனிடையே கேரளாவில் நாளை முதல் மீண்டும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்தி, தமிழ், சொமேட்டோ, கனிமொழி, Hindi, Tamil, Zomato, Kanimozhi
தமிழ்நாடு,முதன்மை செய்தி

இந்தியர்கள் அனைவரும் இந்தி மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என வாடிக்கையாளருக்கு, உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ அறிவுரை கூறி இருப்பதற்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியரை பணியில் இருந்து நீக்கியுள்ள அந்த நிறுவனம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்பவர், சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்த உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் சொமேட்டோவின் வாடிக்கையாளர் மையத்தை அணுகி பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது மொழி பிரச்னை இருப்பதாக சொமோட்டோ நிறுவனம் கூற, தமிழ்நாட்டில் சேவை வழங்கும் நீங்கள் தமிழ் மொழி தெரிந்தவர்களை பணிக்கு அமர்த்தி இருக்க வேண்டும் என விகாஷ் கூறியுள்ளார். அதற்கு, இந்தி நாட்டின் தேசிய மொழி. இந்தியர்கள் அனைவரும் இந்தி மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என சொமேட்டோ நிறுவனம் பதில் அளித்துள்ளது. இதனை படமாக எடுத்து விகாஷ் சமூகவலைதளங்களில் பதிவிட, சொமேட்டோவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி, ''குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டு வருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை'' என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

பலரும் சொமேட்டோவின் இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சொமோட்டோ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ''வணக்கம்‌ தமிழ்நாடு! எங்கள்‌ வாடிக்கையாளர்‌ சேவை முகவரின்‌ நடத்தைக்கு வருந்துகிறோம்‌. வேற்றுமையில்‌ ஒற்றுமை என்ற நம்‌ தேசத்தின்‌ மாறுபட்ட கலாச்சாரத்தின்‌ மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம்‌ காட்டிய ஊழியரை பணிநீக்கம்‌ செய்துள்ளோம்‌. பணிநீக்கம்‌ என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம்‌. மேலும்‌ மக்களின்‌ உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப்‌ பகிரக்கூடாது எனத்‌ தெளிவாக நாங்கள்‌ எங்கள்‌ முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்‌.

இந்த வாடிக்கையாளர்‌ சேவை முகவரின்‌ அறிக்கைகள்‌ மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின்‌ நிலைப்பாட்டைக்‌ குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக, நாங்கள்‌ முழு பயன்பாட்டிற்காக தமிழ்‌ செயலியை உருவாக்குகிறோம்‌. நாங்கள்‌ ஏற்கெனவே மாநிலத்திற்கான தமிழில்‌ சந்தைப்படுத்தல்‌ முயற்சிகளை உள்ளூர் மயமாக்கியுள்ளோம்‌.

எ.கா. நாங்கள்‌ மாநிலத்திற்கான உள்ளூர்‌ பிராண்ட்‌ அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம்‌. மேலும்‌ கோயம்புத்தூரில்‌ ஒரு உள்ளூர்‌ தமிழர்‌ கால்‌ சென்டர்‌ / சர்வீஸ்‌ சென்டரை உருவாக்கும்‌ பணியில்‌ உள்ளோம்‌. உணவு மற்றும்‌ மொழி ஒவ்வொரு மாநிலத்தின்‌, கலாச்சாரத்தின்‌ இரண்டு அடித்தளங்கள்‌ என்பதை நாங்கள்‌ புரிந்துள்ளோம்‌. அவை இரண்டையும்‌ நாங்கள்‌ முழுமையாக உணர்ந்துள்ளோம்‌ என மீண்டும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌'' என்று விளக்கம் அளித்துள்ளது.


இலங்கை கடற்படை, தமிழக மீனவர்கள், கோட்டைப்பட்டினம், புதுக்கோட்டை, Sri Lanka Navy, Tamil Nadu Fishermen, Kottaipattinam, Pudukottai
புதுக்கோட்டை,தமிழ்நாடு,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகு நொறுங்கியது. இதில் புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார். 2 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் வளத்தை அழைப்பதாகக் கூறி இலங்கை வடக்குப் பகுதியில் மீனவர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று இலங்கையின் முல்லைத்தீவு முதல் பருத்தித்துறை வரை கடலில் போராட்டங்கள் நடத்திய நிலையில் எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை பிடிக்க இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டனத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற சில படகுகள் இலங்கை காரைநகர் கோவலம் கடற்பகுதிக்குள் வந்ததாக கூறி அந்த படகுகளை விரட்டி சென்ற போது இலங்கை கடற்படையின் கப்பல் தமிழக மீனவரின் விசைப்படகு மீது மோதியது. இதில் மீனவர்களின் படகு நொறுங்கி கடலில் மூழ்கியது. அப்போது படகில் இருந்த 3 மீனவர்களில் 2 மீனவர்கள் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட நிலையில் மீனவர் ராஜ்கிரண் கடலில் மாயமானார். அவரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மாயமான மீனவர் ராஜ்கிரண் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

இலங்கை கடற்படை கப்பல் தமிழக மீனவரின் படகு மீது மோதி மீனவர் உயிரிழந்த செய்தி மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுக, சசிகலா, எம்ஜிஆர், ஜெயலலிதா, ADMK, Sasikala, MGR, Jayalalithaa
அரசியல்,முதன்மை செய்தி

"அதிமுக நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது, வெற்றிப் பயணத்தை தொடருவோம்" என அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா திடீரென கடிதம் எழுதியுள்ளார்.

டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழில், ‘அம்மா வழிநின்று கழகம் காப்போம் கரம் கோர்ப்போம், பகை வெல்வோம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா என குறிப்பிட்டு தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நிறை அன்புடைய சகோதர.. சகோதரிகளே! கழகத்தின் பேரன்புத் தொண்டர்களே அனைவருக்கும் மகிழ் வணக்கம். இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கமாகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நம் நற்பணிகளால் தமிழ்ச் சமூகம் மீள் உயிர் பெறட்டும், இதற்கான வெற்றி இலக்கு நோக்கி நாம் கழகத்தை இயக்குவோம்.

அண்ணா கண்ட வழியில்..., புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். கொண்ட கொள்கைகளைப் பின்பற்றி ஆளுமையால், ஆட்சி சிறப்பால் மக்கள் மனம் வென்ற நம் புரட்சித்தலைவி அம்மா பயணித்த நீண்ட பாதையை நெஞ்சில் கொண்டு கழகம் காப்போம். கரம் கோர்ப்போம், பகை வெல்வோம். ஒற்றுமை பூக்களை ஒன்றாய் குவிப்போம். தமிழச் சமூகத்தின் ஏற்றம் ஒன்றே நம் எண்ணமென்று மக்களுக்கு உரைப்போம்.

புறப்படுங்கள் புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? பொறுத்தல் தகுமா?, மக்கள் தந்த மாபெரும் வெற்றியால் அஇஅதிமுக நாடாண்டதையும், அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும். நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால் எதிரிக்கு இடம் கொடுத்துவிட்டோமே... சிந்தியுங்கள், ‘காலத்திற்காய் காத்திருப்பவன் ஏமாளி, காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி’ .

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இது நாம் அறிந்ததுதானே. வெல்வோம் சகோதரர்களே, நானிருக்கிறேன் என்பதைவிட நாமிருக்கிறோம்” .
“ஒன்றுபடுவோம்...
வென்று காட்டுவோம்..
தலைவர் புகழ் ஓங்கட்டும்...
தலைவி புகழ் நிலைக்கட்டும்...”
பொன்விழா பிறக்கும் இந்த நாள் கழகத்தின் வரலாற்றில் புது நாளாகட்டும். தலைவரின் எத்தனை எத்தனை திட்டங்களால் சமூகம் எழுச்சி கண்டது?தலைவியின் எத்தனை எத்தனை செயல்பாடுகள் மக்கள் வாழ்வை மாற்றிக் காட்டின? தலைவர்கள் காட்டிய பாதையில் தொய்வில்லாமல் மக்களுக்காக பயணிப்போம். சங்கமிப்போம், சாதிப்போம்.

கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது. தொடர்வோம் வெற்றிப் பயணத்தை தொண்டர்களின் துணையோடும் மக்களின் பேராதரவோடும். மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம். புரட்சித் தலைவர் நாமம் வாழ்க... புரட்சித் தலைவி அம்மா நாமம் வாழ்க... நன்றி வணக்கம்" என்று கூறியுள்ளார்.


பெட்ரோல், டீசல், மத்திய அரசு, பொதுமக்கள், Petrol, Diesel, Central Government, Public
தமிழ்நாடு,முதன்மை செய்தி

பெட்ரோல், டீசல் விலை நடப்பு மாதத்தில் 17 நாட்கள் அதிகரித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கொந்தளிப்பில் மக்கள் இருக்கின்றனர்.

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது. நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றனர். இதனால், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் ரூ.106க்கு அதிகமாகவும், டீசல் ரூ.100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது. நடப்பு மாதத்தில் (அக்டோபர்) கடந்த 1ம் தேதியில் இருந்து இன்று வரையிலான 20 நாட்களில், 3 நாட்களை தவிர மற்ற 17 நாட்களும் விலையேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.103.31க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை ரூ.98.92ல் இருந்து 34 காசுகள் உயர்ந்து ரூ.99.26க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசலின் தொடர் விலையேற்றத்தால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை பொதுமக்களும், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கண்கொள்ளவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான வேதனையில் இருக்கின்றனர். வாக்களித்த மக்களை மத்திய அரசு வாட்டி வதைப்பதாக கொந்தளிக்கின்றனர்.


கோயில் அர்ச்சகர்கள், தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றம், Temple Priests, TamilNadu Government, Chennai High Court
தமிழ்நாடு,முதன்மை செய்தி

கோயில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலைய துறையின் புதிய விதிகளுக்கு எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணி புதிய விதிகள் 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதில், 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் மூன்று ஆண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்றும் விதிகள் உள்ளன. இந்த விதிகளை எதிர்த்து, டிஆர்.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயிலில் உள்ள பரம்பரை அறங்காவலர்கள் மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க அதிகாரம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது. பரம்பரை அறங்காவலர்களை நியமித்து அவர்களை கொண்டுதான் அர்ச்சகர்கள் நியமிக்க முடியும். மேலும் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு விதமான ஆகம விதிகள் உள்ளன. அந்த ஆகம விதிகளுக்கு உட்பட்டு அர்ச்சகர் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆகம விதிகளை மீறி அர்ச்சகர்களை நியமிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், அர்ச்சகர் பணி நியமனங்கள் உயர்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்றும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆகம விதிகளை மீறி நியமனங்கள் மேற்கொள்ள வேண்டாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 7 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.


சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஈபிஎஸ், அதிமுக, Sasikala, Edappadi Palanisamy, EPS, AIADMK
அரசியல்,முதன்மை செய்தி

அதிமுக பொது செயலாளர் என்று சசிகலா கூறி கொள்வது பற்றி எடப்பாடி பழனிசாமி உச்சபட்ச கோபத்தில் விமர்சித்துள்ளார்.

தமிழக ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக பொது செயலாளர் என சசிகலா கூறி கொள்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பழனிசாமி, சசிகலாவிற்கும் அதிமுகவிற்கும் சம்பந்தம் இல்லை. இதை பலமுறை சொல்லிவிட்டேன். கட்சியில் இல்லாத அவரை பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்.

சூரியனை பார்த்து... (சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்கு தான் பாதிப்பு). அத நான் ஓபனா சொல்ல முடியாது. அதிமுகவின் கொடியை பயன்படுத்தியதற்காக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. பொய்யான கல்வெட்டு வைத்த சசிகலா மீது அதிமுக நடவடிக்கை எடுக்கும்.

சசிகலா பொதுச் செயலாளர் என சொல்லி கொள்வதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தேர்தல் ஆணையம், நீதிமன்றம் அனைத்தும் நாங்களே அதிமுக என்று உறுதிப்படுத்திவிட்டது. பொழுது போகவில்லை என்பதற்காக சசிகலா ஏதோ செய்து கொண்டு இருக்கிறார்" என்று கிண்டல் செய்தார்.

அதிமுக பொது செயலாளர் என குறிப்பிட்டு தனது பெயர் பொறித்த கல்வெட்டை சசிகலா திறந்து வைத்தது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் சசிகலா அந்த கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்று எழுதினார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.


தமிழ்நாடு மின்வாரியம், அண்ணாமலை, செந்தில் பாலாஜி, பாஜக, Tamil Nadu Electricity Board, Annamalai, Senthil Balaji, BJP
அரசியல்,முதன்மை செய்தி

மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதற்கான ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கெடு விதித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என பொதுமக்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் 84 டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செய்யக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. அதிக விலைக்கு மது விற்பனை செய்த 134 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 1,599 பார்கள் விதிகளை மீறி செயல்பட்டன. அவற்றில் 933 பார்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் புகார்கள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. நோய் தொற்று படிப்படியாக குறைந்து வரும் சூழலில் பார்கள் திறப்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியபின் அறிவிப்பு வெளியிடுவார். இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்யப்படவில்லை. நாங்கள் ஆய்வுக்கூட்டத்தில் கூட இது குறித்து பேசுவதில்லை. இனிவரும் காலங்களிலும் இலக்கு நிர்ணயம் இருக்காது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகவிலைக்கு விற்பனை செய்யும் கடைகளின் மீது நடவடிக்கைகள் எடுக்க 38 மாவட்டங்களிலும் மாவட்ட மேலாளர்கள், பத்திரிகையாளர்களை உள்ளிடக்கிய வாட்ஸ் அப் குழுவினை தொடங்கப்படவில்லை. அந்த குழுவில் அமைச்சரும் இடம்பெற உள்ளதால் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு உள்ளது. பல மாநிலங்களில் மின் தடை ஏற்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மின்தடை இல்லாத வகையில் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் மின்சந்தையில் இதுவரை 1.04%தான் நாம் மொத்த தேவையில் கொள்முதல் செய்கிறோம். அதுவும் நிலக்கரி பற்றாக்குறையினால்தான். குஜராத்தான் அதிகம் வெளிச்சந்தையில் மின் கொள்முதல் செய்துள்ளது, அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளது. கடந்த கால ஆட்சியின் தவறுகளை சரிசெய்யும் வண்ணம்தான் தற்போது மின்வாரியத்தின் செயல்பாடுகள் உள்ளது.

மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது குறித்து தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எப்போது எங்கு வெளியிட்டாலும் அங்கு நான் வர தயார். தன்னிடம் உள்ள ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும், அப்படி இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும். தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள இது போன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள். ஆதாரம் இருந்தால் வழக்கு தொடுங்கள். அதையும் சந்திக்க தயார்” என்று கூறியுள்ளார்.


பெட்ரோல், டீசல், சென்னை, Petrol, Diesel, Chennai
தமிழ்நாடு,வணிகம்,முதன்மை செய்தி

ஜெட் வேகத்தில் எரிபொருள் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை கடந்த 21 நாட்களில் 18வது முறையாக அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றனர். இதனால், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் ரூ.106க்கு அதிகமாகவும், டீசல் ரூ.100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது.

இம்மாதத்தில் 4, 18, 19 தேதிகளில் தவிர 18வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசும், டீசல் 33 காசும் அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் பெட்ரோல் ரூ.103.61க்கும், டீசல் ரூ.99.59க்கும் விற்பனையாகிறது. சேலத்தில் டீசல் விலை வரலாற்றில் முதன் முறையாக ரூ.100யை தாண்டியது. பெட்ரோல், டீசலின் தொடர் விலையேற்றத்தால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


சீனா, இந்தியா, சீன ராணுவம், இந்திய ராணுவம், China, India, Chinese Army, Indian Army
இந்தியா,முதன்மை செய்தி

சீனாவை ஒட்டிய எல்லை பகுதியில் உள்ள மலைகளில் விமானங்களை வீழ்த்தக்கூடிய அதிநவீன எல்70 ரக சிறு ஏவுகணைகளை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.

இந்திய- சீன படைகளிடையே கடந்த ஆண்டு லடாக் பகுதியில் மோதல் ஏற்பட்டதில் இருந்து எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. சீனாவும் எல்லையில் தனது படைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் ராணுவத்தினரை பயிற்சியிலும் ஈடுபடுத்தி வருகிறது.

இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தில் சீனாவை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள மலைகளில் எல்70 ரக அதிநவீன விமான எதிர்ப்பு சிறு ஏவுகணைகளை இந்தியா நிறுத்தி வைத்திருக்கிறது. ஏற்கெனவே எம்777 ரக சிறு ஏவுகணைகள் போபர்ஸ் பீரங்கிகளை இந்தியா நிறுத்தி இருக்கும் நிலையில் அவற்றுடன் தற்போது எல்70 ஏவுகணைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

எல்லையில் படைகளின் தயார்நிலை குறித்து ராணுவ மற்றும் விமான படை தளபதிகள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக எல்லையில் படைபலம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.


ஐஸ்கிரீம், கோவை, மா.சுப்பிரமணியன், Rolling Dough Cafe, Ice Cream, Coimbatore, Ma. Subramanian
கோயம்புத்தூர்,தமிழ்நாடு,முதன்மை செய்தி

கோவையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் கடை தகவல் கிடைத்தவுடன் ஆய்வு செய்து கடைக்கு சீல் வைக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

கோவையில் பி.என்.பாளையம், அவிநாசி சாலையில் Rolling Dough Cafe எனும் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக, 20-10-2021 அன்று மதியம் 12.30 மணியளவில் புகார் பெறப்பட்டது. இதையடுத்து, கோவை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, உணவு தயார் செய்யும் இடத்தில் 2 மதுபாட்டில்கள் காணப்பட்டது. காலாவாதியான உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. ஆய்வின்போது உணவு கையாளுபவர்கள் உரிய மருத்துவ தகுதி சான்று பெறப்படவில்லை. உணவு தயார் செய்யும் இடத்தில் ஈக்கள் அதிகளவில் காணப்பட்டது. முறையான பூச்சி தொற்று நீக்கம் செய்து அதற்கான பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை.

உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் முறையாக ஆய்வு செய்து அறிக்கை பெறப்படவில்லை. உணவு கையாள்பவர்கள் முறையான முகக்கவசம், தலைஉறை மற்றும் கையுறை அணிந்து பணிபுரியவில்லை. உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமின்றி இருந்தது கண்டறியப்பட்டது. உணவுப் பாதுகாப்பு துறையின் கீழ் பெறப்பட்ட உரிமம் பிரதான இடத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை என்பது போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

இந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் இத்தகைய குறைபாடுகள் இருக்கும் காரணத்தினால் அந்த Rolling Dough Cafe எனும் ஐஸ்கிரீம் கடைக்கு உரிய உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


கொரோனா தடுப்பூசி, முககவசம், மாஸ்க், ராதாகிருஷ்ணன், Corona vaccine, mask, Radhakrishnan
தமிழ்நாடு,முதன்மை செய்தி,கொரோனா வைரஸ்

"குறைந்தபட்சம் பிப்ரவரி வரையாவது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்" என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா 100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. இதற்கு ஒவ்வொரு மாநிலமும் தனது பங்கை செலுத்தி உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 5.4 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளில் 5.14 கோடி அரசு மூலமாகமும், 26 லட்சம் டோஸ் தடுப்பூசி தனியார் மருத்துவமனை மூலமாக செலுத்தப்பட்டுள்ளது. தற்போது நம்மிடம் 53.84 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். இதை கடமையுடன் கூடிய தளர்வுகள் என மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் பிப்ரவரி வரையாவது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்`` என தெரிவித்தார்.


ஈபிஎஸ், கூட்டுறவு வங்கி, இளங்கோவன், லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு, EPS, Cooperative Bank, Elangovan, Anti Corruption Raid
சேலம்,அரசியல்,முதன்மை செய்தி,க்ரைம் செய்தி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமாக இருக்கும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் அதிமுகவின் ஜெ.பேரவை புறநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார் இளங்கோவன். இந்த நிலையில், சேலத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் உள்ள 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்று வருகிறது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவர் இளங்கோவன். திருச்சியில் முசிறியில் இளங்கோவனுக்கு சொந்தமான பாலிடெக்னிக், கல்லூரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சேலத்தில் சேலம் மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் குபேந்திரன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சேலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் துணை தலைவராகவும் குபேந்திரன் உள்ளார்.

சேலம் இளங்கோவன், அவரது மகன் பிரவீன் குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 -2020 வரை வருமானத்துக்கு பொருந்தாத வகையில், ரூ.3.78 கோடி சொத்துகளை குவித்ததாக இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


அன்புமணி, சிபிஎஸ்இ, தமிழ் மொழி, Anbumani, CBSE, Tamil Language
தமிழ்நாடு,அரசியல்,முதன்மை செய்தி

"தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை சிறுமைப்படுத்த சிபிஎஸ்இ முயல்கிறது" என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நவம்பர் 17ம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வில் இந்தி & ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்கள் முதன்மைப் பாடங்களாகவும் (Major Subjects), தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்கள் முக்கியத்துவம் இல்லாத (Minor Subjects) பாடங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வுக்கான பாடங்களை முதன்மைப் பாடங்கள், முக்கியத்துவம் இல்லாத பாடங்கள் என பிரித்திருப்பது இதுவே முதல்முறையாகும். இவ்வாறு வகைப்படுத்துவதன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை சிறுமைப்படுத்த சிபிஎஸ்இ முயல்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை முக்கியத்துவமற்ற பாடங்களாக அறிவிப்பதன் மூலம் அவற்றை மாணவர்கள் விரும்பிப் படிக்காத நிலை உருவாகி விடும். அந்த வகையில் இது மாநில மொழிப் பாடங்களுக்கு எதிரான செயல் தான். இதை சி.பி.எஸ்.இ கைவிட வேண்டும்!

முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களுக்கானத் தேர்வை சி.பி.எஸ்.இ அமைப்பே நேரடியாக நடத்தி மதிப்பெண் வழங்குமாம். முக்கியத்துவம் இல்லாத பாடங்களுக்கானத் தேர்வுகளை அந்தந்த பள்ளிகளே நடத்தி மதிப்பெண் வழங்கிக் கொள்ளலாமாம். இது நியாயமல்ல" என்று கூறியுள்ளார்.


செந்தில் பாலாஜி, அண்ணாமலை, பாஜக, மின்சார வாரியம், Annamalai, BJP, Minister Senthil Balaji
அரசியல்,முதன்மை செய்தி

"பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயார்" என்று மின்சாரத்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில்பாலாஜி சவால் விடுத்தார்.

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதில், கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் உற்பத்தி செலவை விட 5 மடங்கு இது கூடுதலான விலை என்றும் அதற்கான ஆதாரயத்தை வெளியிட தயார் என்று கூறி இருந்தார்.

அவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை ஆதாரம் உள்ளது என்று கூறுகிறார். எப்போது எங்கே அவர் அதை வெளியிட்டாலும் நான் வர தயார். ஆதாரங்களை வெளியிடவில்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "மின்சார விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்" என்று கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, சமூக வலைத்தளங்களில் போகிற போக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேலையில்லாதவர்கள் சுமத்த கூடாது. அதுவும் பொதுவெளியில் அண்ணாமலை போன்றோர் குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி சுமத்தக்கூடாது. அரசின் மீது அவதூறு பரப்புவதை நாங்கள் சும்மா பார்த்து கொண்டு இருக்க மாட்டோம்.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இருக்கிறேன். அரசின் மீது ஆதாரத்துடன் குற்றம் சுமத்தினால் நாங்கள் விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம். மின்துறையில் அனைத்து திட்ட பணிகளையும் வெளிப்படை தன்மையுடன் அரசு நிறைவேற்றி வருகிறது என்று கூறினார்.


செல்லூர் ராஜூ, அதிமுக, Sellur raju, ADMK
மதுரை,தமிழ்நாடு,முதன்மை செய்தி

``அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் நாங்கள் டபுள் டாக்டர்ரேட் முடித்து விட்டோம்.” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜு தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வரும் 24ம் தேதி மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு ஓ.பி.எஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர். 30ம் தேதி பசும்பொன் செல்லும் முன் கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் சிலைக்கு மாலை மரியாதை செய்ய உள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனைகள் குறித்து அதிமுகவினர் கவலைப்படவில்லை. கருணாநிதி காலத்திலேயே சோதனைகளை சந்தித்து உள்ளோம். எல்.கே.ஜி படிக்கும் போதே அச்சுறுத்தலை சந்தித்தோம், இப்போது அச்சுறுத்தலில் டபுள் டாக்டர்ரேட் முடித்து விட்டோம்” என்று கூறினார்.


சென்னை, பெட்ரோல், டீசல், Chennai. Petrol, Diesel
முகப்பு,தமிழ்நாடு,முதன்மை செய்தி

தொடரும் உச்சமாக, சென்னையில் டீசல் விலை சதம் அடித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.22க்கும் டீசல் ஒரு லிட்டர் ரூ.100.25க்கும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தில் ஒவ்வொரு நாளும் முத்திரை பதித்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்துக்கு பிறகு விலை குறைந்து வந்த நிலையில், பெட்ரோல் கடந்த மாதம் 28ம் தேதி முதல் அதிரடியாக உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 16ம் தேதி வரலாறு காணாத புதிய உயர்வை எட்டியது. அதேபோல், டீசலும் கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து கிடுகிடு வென உயரத் தொடங்கி, தினமும் உச்சத்தை தொட்டு கொண்டே இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 31 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 103 ரூபாய் 92 காசுக்கு விற்பனை ஆனது. டீசலை பொறுத்தவரையில் லிட்டருக்கு 33 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 99 ரூபாய் 92 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே தினமும் பெட்ரோல் 33 காசும், டீசல் 31 காசும் உயர்ந்து கொண்டே வருகிறது.

அந்தவகையில் இன்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.104.22 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ.100.25 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.